Author: admin

சிவகாசி: ஜூலை 9-ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் பங்கேற்பது என உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பொதுச்செயலாளர் சுரேஷ் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் உயர்மட்டக் குழுக் கூட்டம் மாநிலத்தலைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் தலைமையில் இணைய வழியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர், செயலர்கள் மற்றும் ஜே.ஏ.சி உறுபினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொதுச்செயலர் சோ.சுரேஷ் கூறியதாவது: நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தேசியக் கல்விக் கொள்கை – 2020-ஐ திரும்பப் பெறுதல், 8-வது ஊதியக் குழுவை உடனடியாக அமைத்தல், தொகுப்பூதிய முறையை ரத்து செய்து, நிரந்தர பணி நியமனங்கள் மேற்கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள்,…

Read More

மதுரை: தனிப்படை போலீஸார் தாக்கியதில் கொலையான மடப்புரம் பத்திரகாளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமார் (29) மீது கோயிலுக்கு காரில் வந்த பக்தர் நிகிதா தனது காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகை திருட்டு தொடர்பாக திருப்புவனம் போலீஸில் புகார் அளித்தார். அன்றைய தினம் திருப்புவனம் போலீஸார் சிஎஸ்ஐ பதிவு செய்து அடுத்தநாள் விசாரணைக்கு வருமாறு அஜித்குமாரை அனுப்பிவைத்தனர். இதற்கிடையில், தங்க நகை காணாமல் போனது தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் ஜூன் 28-ம் தேதி அதிகாலையில் மடப்புரம் கிராமத்திற்கு சென்று காவலாளி அஜித்குமார், அவரது சகோதரர் நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண் ஆகியோரிடம் விசாரித்தனர். இதில் அஜித்குமாரையும், நவீன்குமாரையும் போலீஸார் அடித்து தாக்கினர். பின்னர் நவீன்குமாரையும், அருண் என்பவரையும்…

Read More

பயணத்தைத் திட்டமிடும்போது இன்று பயணிகள் அழகான காட்சிகளை விட அதிகமாக தேடுகிறார்கள். அவர்கள் அர்த்தமுள்ள இடங்களைப் பார்வையிட விரும்புகிறார்கள், அங்கு கடந்த கால கதைகள் இன்னும் நினைவில் வைக்கப்படுகின்றன, இலங்கை மகத்தான கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு நாடு.நாட்டில் ராமாயணத்தின் தடயங்கள் உள்ளன, மேலும் பல இடங்கள் உங்களை சரியான நேரத்தில் அழைத்துச் செல்கின்றன. ராமாயணத்தின் பெரும்பாலான பகுதிகள் பண்டைய இந்தியாவில் நடைபெறினாலும், லங்காவில் சீதாவின் நேரத்தின் கதைகளையும், ராமருக்கும் ராவணனுக்கும் இடையிலான போரை விவரிக்கும் இறுதிக் கதை, லங்காவில் இங்கு நடந்ததாக நம்பப்படுகிறது. காலப்போக்கில், தீவு முழுவதும் பல இடங்கள் காவியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. உறுதியான வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை, ஆனால் இந்த இடங்கள் கதைகள், உள்ளூர் மரபுகள் மற்றும் நம்பிக்கை மூலம் நினைவில் வைக்கப்படுகின்றன. இலங்கையில் ஏழு இடங்கள் இங்கே உள்ளன, மக்கள் இன்னும் ராமாயணத்துடன் இணைக்கிறார்கள், தலைமுறை தலைமுறை கதைசொல்லல் மூலமாக இருந்தாலும் கூட.

Read More

பாட்னா: வாக்களிக்க தேவையான 11 ஆவணங்களில் ஒன்றையும் வாக்காளர்களால் வழங்க முடியாவிட்டால், உள்ளூர் விசாரணை அல்லது பிற ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் பதிவு அதிகாரி சரிபார்த்து முடிவெடுக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் சில மாதங்களில் பிஹார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) கொண்டுவந்துள்ளது. இதன்படி 2003ம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை அல்லது ஆணைகள், நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டு ஒதுக்கீட்டுச் சான்றிதழ், 1967 க்கு முன்பு பல்வேறு பொது அதிகாரிகளால் வழங்கப்பட்ட பிற ஆவணங்கள் ஆகிய 11 ஆவணங்கள் சரிபார்ப்புக்கு…

Read More

சென்னை: கிராமப்புறங்களில் எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தின்மூலம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்க திமுக அரசு முயல்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘ஆட்சியில் அமர்வது மக்களுக்கு நன்மை செய்வதற்கு என்ற நிலை மாறி, லஞ்ச லாவண்யத்தில் திளைத்து, தங்களை வளப்படுத்துவதற்காகவே என்ற நோக்கோடு விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தங்களது 4 ஆண்டு கால அலங்கோல ஆட்சியினை மூடி மறைக்க, தங்களது ஒவ்வொரு செய்கையையும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு வெற்று விளம்பரங்கள் செய்து வருகிறது. அதன்படி, லேட்டஸ்டாக விடியா திமுக அரசு, தனது வெற்று விளம்பரங்களை தமிழகம் முழுவதும் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,620 ஊராட்சிகளிலும் வெளியிட வேண்டும் என்று, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மூன்று நிறுவனங்களின்…

Read More

கொட்டைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செலினியம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற தாதுக்கள் உள்ளன, அவை உயிரணு பழுதுபார்ப்பதற்கும் வீக்கத்தை குறைப்பதற்கும் உதவுகின்றன. அக்ரூட் பருப்புகள், ஒமேகா -3 கள் மற்றும் பாலிபினால்களுக்கு கூடுதலாக, புற்றுநோய் உயிரணு வளர்ச்சியைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. பாதாம் ஹார்மோன்களை சமன் செய்து ஃபைபர் வழங்குதல். தினசரி சில கலப்பு கொட்டைகள் நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான எளிதான, மகிழ்ச்சியான முறையாகும். அவை மூளை, தோல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கின்றன, இது எல்லா வழிகளிலும் வெற்றி பெறுகிறது.

Read More

சென்னை: குழந்தை பிறந்த பிறகு அளித்த தவறான சிகிச்சையால் தாய் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில், ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் (இலக்கியா) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தவறான மருத்துவச் சிகிச்சையால் அவர் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. மருத்துவர்களின் கவனக் குறைவால் ஒரு உயிர் போனது என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் மாரிமுத்து என்பவருக்கு வலது கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த அளவிற்கு அரசு மருத்துவமனைகளில் கவனக் குறைவாகச் செயல்படுவதால் உயிரிழப்புகளும், உறுப்பு இழப்புகளும் நடக்கின்ற ஒரு அவலம் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருக்கின்றது. எனவே மருத்துவத்துறை அமைச்சரும் தமிழக…

Read More

புதுடெல்லி: சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பக்கத்தில் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறியுள்ளதாவது: “ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை இந்தியாவில் முடக்குமாறு அரசு தரப்பில் இப்போது எந்தவித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காண எக்ஸ் தளத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என அவர் கூறியுள்ளார். கடந்த மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் போது சில எக்ஸ் தள கணக்குகளை முடக்குமாறு அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு சட்ட ரீதியாக கோரி உள்ளது. அதன்படி அப்போது சில எக்ஸ் தள கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கலாம். அதில் ராய்ட்டர்ஸ் நிறுவனமும் ஒன்றாக இருந்திருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில், தற்போது அந்த கோரிக்கைக்கு எக்ஸ் தளம் நடவடிக்கை எடுத்தது இதற்கு…

Read More

பர்மிங்காம்: இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் 608 ரன்கள் இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி. 5-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 536 ரன்கள் எடுத்தால் இதில் வெற்றி பெறலாம். அந்த அணி தற்போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜோ ரூட் ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர். இந்திய அணி இதில் வெற்றி பெற இந்தப் போட்டியின் கடைசி நாளான இன்று இங்கிலாந்தின் வசம் உள்ள 7 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும். இந்நிலையில், மழை காரணமாக 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என வானிலை அறிக்கைகள் தெரிவித்தன. அதன்படி தற்போது போட்டி நடைபெறும் பர்மிங்காம் – எட்ஜ்பாஸ்டன் மைதானம் மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில் மழை…

Read More

சென்னை: சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர் ஆகியோர் பங்கேற்றனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி (06-07-2025) இன்று காலை 05.30 மணியளலில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது, இப்போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ‘சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்’ மினி மாரத்தானில் பங்கேற்றவர்கள், சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கி வெற்றி போர் நினைவுச்சின்னம், அண்ணா சதுக்கம், விவேகானந்தர் இல்லம் வரை சென்று மீண்டும் அதே பாதையில் தீவுத்திடல் வந்தடைந்தனர், இதில் 18 வயது முதல் 40 வயது உடையவர்கள், மேலும் 40 வயது முதல் அதற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக 2000 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டானர். ஆண்கள் பிரிவில்…

Read More