சென்னை: பட்டாசு ஆலைகளில் விபத்து தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்தாத அதிகாரிகளை கைது செய்தால்தான் சிவகாசி பகுதிகளில் தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய பட்டாசு தீப்பெட்டி ஆலைகள் செயல்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பணிபுரிகின்றார்கள்; பட்டாசு தொழிலில் ஆபத்தான வெடி மருந்து பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் பல கட்டுப்பாடுகள் உண்டு. பொதுவாக பத்துக்கு பத்து அறையில் 4 வாசல்கள் அமைத்து 4 பேர் மட்டுமே பணி புரிய வேண்டும். இந்த சிறிய அறைகளை 10 லட்சம் வரையில் குத்தகைக்கு எடுத்து தொழில் செய்யும் சிறிய தொழில் முனைவோரால் குத்தகைக்கு கொடுத்த பத்து லட்சத்தை எப்படியாவது திரும்ப எடுத்தாக வேண்டும் என்பதால் விதிமுறைகளை மீறி பயிற்சி…
Author: admin
அபிமான மற்றும் புத்திசாலித்தனமான ஒரு நாயைத் தேடுகிறீர்களா? இங்கே நாம் 10 அழகான இனங்களை பட்டியலிடுகிறோம், அவை இதயங்களை அவற்றின் தோற்றத்துடன் வென்று அவற்றின் கூர்மையான மனதுடன் ஆச்சரியப்படுகிறோம்!
மும்பை: ‘நாங்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை. பள்ளிகளில் இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்’ என சிவ சேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அம்மாநில அரசு அறிவித்தது. அதில் இந்தி மொழி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அந்த மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த அறிவிப்பை ஆளும் பாஜக தலைமையிலான அரசு திரும்பப் பெற்றது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவ நிர்மான் சேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசாங்கம் எங்கள் மீது இந்தியை திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் கூறினர். இதற்கு பெரும் ஆதரவு திரண்டதை அடுத்து, மாநில அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெற்றது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மும்பையில்…
சென்னை: காலிப் பணியிடங்களை நிரப்பி மூடப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் இல்லாத பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள், பணியாளர்கள் இல்லாத அரசு அலுவலகங்கள் என்ற வரிசையில் ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்கள் தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. ஏழை, எளிய குழந்தைகளிடையே ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், 50,000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூலம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 50 மாத கால திமுக ஆட்சியில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததோடு, 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு மூடு விழா நடத்தியுள்ளது திராவிட மாடல் திமுக அரசு. “ஆக்குவது கடினம், அழிப்பது சுலபம்” என்று சொல்வார்கள்.…
இந்த கட்டுரை கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கக்கூடிய ஐந்து மூலிகைகள் -பார்லிக், இஞ்சி, மஞ்சள், லைகோரைஸ் மற்றும் கிரீன் டீ – எடுத்துக்காட்டுகிறது. இந்த மூலிகைகள் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன, அவை நச்சு நீக்குவதற்கு உதவுகின்றன, கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கின்றன, கல்லீரல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. இந்த மூலிகைகள் கல்லீரல் நொதி அளவை மேம்படுத்தலாம் மற்றும் NAFLD போன்ற நிலைமைகளைக் கொண்ட நபர்களில் கல்லீரல் கொழுப்பைக் குறைக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மில்லியன் கணக்கான மக்கள் உலகளவில் கல்லீரல் நோயுடன் போராடுகிறார்கள். கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பு ஆகும், இது நச்சுத்தன்மை, வளர்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து சேமிப்பு உள்ளிட்ட முக்கியமான செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும். உடலில் அதன் முக்கிய பங்கு இருந்தபோதிலும், பிரச்சினைகள் ஏற்படும் வரை மக்கள் பெரும்பாலும் கல்லீரல் ஆரோக்கியத்தை கவனிக்க மாட்டார்கள். கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கக்கூடிய ஐந்து மூலிகைகள் இங்கே. பூண்டுஅழற்சி எதிர்ப்பு…
விஜய்யை அனைத்து நாயகர்களும் பின்பற்ற வேண்டும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார். தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜு. விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தை தயாரித்தது இவர் தான். சமீபத்தில் அளித்த பேட்டியில் படப்பிடிப்பு நாட்கள் தொடர்பாக விஜய்யை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தில் ராஜு, “விஜய் சார் படப்பிடிப்பு நாட்களின் எண்ணிக்கையை விதியாகவே நேரடியாக கொடுத்துவிடுகிறார். அவருடைய கொள்கைபடி 6 மாதங்கள், ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் படப்பிடிப்புக்கு என்று கொடுக்கிறார். இதனை மற்ற நாயகர்களும் பின்பற்றினால் தயாரிப்பாளர்களுக்கு பொன்னான வாய்ப்பாக இருக்கும். தெலுங்கு திரையுலகில் இப்படியொரு முறை கிடையாது” என்று தெரிவித்துள்ளார். விஜய் குறித்து தில் ராஜு பேசியிருக்கும் இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் விஜய், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு உள்ளிட்ட பலர்…
சென்னை: பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்துவதில்லை என்று தமாகா(மூ) தலைவர் ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழதாயில்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. கீழதாயில்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. சுமார் 50 அறைகள் கொண்ட பட்டாசு ஆலையில் 15 அறைகள் சேதமடைந்து, பக்கத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கும் தீ பரவி அங்குள்ள பட்டாசுகளும் வெடித்துச் சிதறியது. இந்த பயங்கர வெடிவிபத்தில் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து அவர்கள்…
கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை, ஆனால் அவற்றை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதுதான். காலப்போக்கில், நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பான இடமாக மாறினால், கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்படுவதற்கான வழியைக் காணலாம். எல்லா தவறான புரிதல்களும் போர் அளவிலான தீவிரத்துடன் உரையாற்றப்பட வேண்டியதில்லை-சில நேரங்களில் நகைச்சுவை நிலைமையை ஒளிரச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும், சில சமயங்களில் உணர்ச்சிபூர்வமான ஆதரவு மேலதிகமாக எடுக்கும். ஆனால் நீங்கள் அதை உரையாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சாத்தியமான சண்டைக்கு பயந்து, அதை முதலில் புறக்கணிக்காதீர்கள். வலுவான திருமணங்களில், சண்டைகள் வெல்வது அல்லது இழப்பது பற்றியது அல்ல – அவை புரிந்துகொள்வது மற்றும் சமரசம் பற்றி. தம்பதிகள் மரியாதை, கேட்பது மற்றும் பொதுவான இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான விருப்பத்துடன் மோதல்களுக்கு செல்ல கற்றுக்கொள்கிறார்கள், இது அவர்களின் கூட்டாட்சியை மேலும் நெகிழ வைக்கும். நினைவில் கொள்ளுங்கள், இந்த உலகில் எந்த சண்டையும் அதைத் தீர்க்க விருப்பம் இல்லாமல் தீர்க்க முடியாது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே கடந்த மாதம் கருத்து முரண் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை தற்போது எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். “அமெரிக்க மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சியை இன்று தொடங்கி உள்ளோம். நமது தேசத்தை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவால் செய்கின்றனர். இதை பார்க்கும்போது நாம் ஜனநாயக ஆட்சி முறையின் கீழ் இல்லாமல் ஒரு கட்சி முறையின் கீழ் தான் வாழ்கிறோம் என்பது தெரிகிறது” என தனது எக்ஸ் தளத்தில் மஸ்க் கூறியுள்ளார். முன்னதாக, எக்ஸ் தளத்தில் அமெரிக்க சுதந்திர தினத்தன்று (ஜூலை 4) ‘அமெரிக்க கட்சி’ என்ற புதிய கட்சி தொடங்குவது குறித்து மஸ்க் கேள்வி எழுப்பி இருந்தார். ‘யெஸ்’ அல்லது ‘நோ’ பாணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வேயில் சுமார் 12 லட்சத்துக்கும் மேலானவர்கள் பங்கேற்றனர். அதில் 65 சதவீதம்…
சென்னை: முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி மகளிர் பயன் பெற்றுள்ளதாகவும், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 14,45,109 வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வையுடன் எண்ணற்ற திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார். முதல்வரின் தனித்தன்மை வாய்ந்த இத்திட்டங்கள், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், ஊரகம், நகர்ப்புர வளர்ச்சி, சமூக நீதி ஆகிய 7 முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து அவற்றின் முன்னேற்றம், திட்டமிடப்பட்ட இலக்கினை அடைவதை உறுதி செய்வதன் மூலம், அவற்றை உரிய காலத்திற்குள் மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர ஆவன செய்வதே இந்தச் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறையின் முக்கியப்…
