சென்னை: குழந்தை பிறந்த பிறகு அளித்த தவறான சிகிச்சையால் தாய் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில், ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் (இலக்கியா) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தவறான மருத்துவச் சிகிச்சையால் அவர் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. மருத்துவர்களின் கவனக் குறைவால் ஒரு உயிர் போனது என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் மாரிமுத்து என்பவருக்கு வலது கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த அளவிற்கு அரசு மருத்துவமனைகளில் கவனக் குறைவாகச் செயல்படுவதால் உயிரிழப்புகளும், உறுப்பு இழப்புகளும் நடக்கின்ற ஒரு அவலம் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருக்கின்றது. எனவே மருத்துவத்துறை அமைச்சரும் தமிழக…
Author: admin
புதுடெல்லி: சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பக்கத்தில் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறியுள்ளதாவது: “ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை இந்தியாவில் முடக்குமாறு அரசு தரப்பில் இப்போது எந்தவித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காண எக்ஸ் தளத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என அவர் கூறியுள்ளார். கடந்த மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் போது சில எக்ஸ் தள கணக்குகளை முடக்குமாறு அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு சட்ட ரீதியாக கோரி உள்ளது. அதன்படி அப்போது சில எக்ஸ் தள கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கலாம். அதில் ராய்ட்டர்ஸ் நிறுவனமும் ஒன்றாக இருந்திருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில், தற்போது அந்த கோரிக்கைக்கு எக்ஸ் தளம் நடவடிக்கை எடுத்தது இதற்கு…
பர்மிங்காம்: இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் 608 ரன்கள் இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி. 5-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 536 ரன்கள் எடுத்தால் இதில் வெற்றி பெறலாம். அந்த அணி தற்போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜோ ரூட் ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர். இந்திய அணி இதில் வெற்றி பெற இந்தப் போட்டியின் கடைசி நாளான இன்று இங்கிலாந்தின் வசம் உள்ள 7 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும். இந்நிலையில், மழை காரணமாக 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என வானிலை அறிக்கைகள் தெரிவித்தன. அதன்படி தற்போது போட்டி நடைபெறும் பர்மிங்காம் – எட்ஜ்பாஸ்டன் மைதானம் மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில் மழை…
சென்னை: சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர் ஆகியோர் பங்கேற்றனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி (06-07-2025) இன்று காலை 05.30 மணியளலில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது, இப்போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ‘சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்’ மினி மாரத்தானில் பங்கேற்றவர்கள், சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கி வெற்றி போர் நினைவுச்சின்னம், அண்ணா சதுக்கம், விவேகானந்தர் இல்லம் வரை சென்று மீண்டும் அதே பாதையில் தீவுத்திடல் வந்தடைந்தனர், இதில் 18 வயது முதல் 40 வயது உடையவர்கள், மேலும் 40 வயது முதல் அதற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக 2000 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டானர். ஆண்கள் பிரிவில்…
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, சர்வதேச பயணம் பெரும்பாலும் நீண்ட விசா செயல்முறைகளுடன் வருகிறது. உங்களிடம் ஏற்கனவே செல்லுபடியாகும் இங்கிலாந்து பல நுழைவு விசா இருந்தால், நீங்கள் ஐக்கிய இராச்சியத்தை விட அதிகமாக திறந்தீர்கள். ஒரு சில நாடுகள் இப்போது விசாவை வருகை (VOA) அல்லது எளிமைப்படுத்தப்பட்ட நுழைவை அனுமதிக்கின்றன, இங்கிலாந்து விசாவின் நம்பகத்தன்மைக்கு நன்றி. இதன் பொருள் நீங்கள் தூதரகங்கள், படிவங்கள் மற்றும் சந்திப்புகளைத் தவிர்த்து விடலாம் – மேலும் செல்லுங்கள்.வருகை நாடுகளில் விசாவைப் பாருங்கள், இந்திய பயணிகள் இங்கிலாந்து விசாவுடன் நுழையலாம், தங்குமிடங்கள் மற்றும் முக்கிய நிலைமைகளுடன்.ஆன்டிகுவா மற்றும் பார்புடாசெல்லுபடியாகும் இங்கிலாந்தின் பல நுழைவு விசாவை வைத்திருக்கும் இந்திய பயணிகள் 30 நாட்கள் வரை அனுமதிக்கப்பட்ட நிலையில், விசாவில் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவை அணுகலாம். இந்த கரீபியன் வெளியேறுதல் அதன் வெயிலில் நனைத்த கடற்கரைகள், அமைதியான டர்க்கைஸ் நீர் மற்றும் தீவு அதிர்வுக்கு ஏற்றது. உங்கள் பாஸ்போர்ட்டில் இங்கிலாந்து விசா…
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வசித்து வரும், தலைமை நீதிபதிக்கான அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த சூழலில், தான் அரசு பங்களாவை காலி செய்யாததற்கான காரணத்தை சந்திரசூட் விளக்கியுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை, முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் காலி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்ற நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில், இந்திய தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்து உச்ச நீதிமன்றத்தின் வீட்டுவசதி தொகுப்புக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த பங்களாவில் முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி தங்கியுள்ளார்…
சென்னை: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் நலம் விசாரித்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (06.07.2025) ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ‘இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48’ திட்டத்தில், 4 இலட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் 2021 டிசம்பர் திங்கள் 18ஆம் தேதி தொடங்கி வைத்தார். உலக அளவில் ஒரு புகழ் பெற்ற திட்டமாக இது பயன்பெற்று வருகிறது. சாலை விபத்துகளில் சிக்குபவர்களை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டில் உள்ள 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியார் மருத்துவமனைகள் என்று 723 மருத்துவமனைகளில் உடனடியாக சேர்த்து, சேர்க்கப்பட்ட முதல் 48…
டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் உலகத்தை பாதுகாப்பாக செல்ல பெற்றோர்கள் குழந்தைகளை சித்தப்படுத்த வேண்டும். ஆன்லைனில் அனைவரும் உண்மையானவர்கள் அல்ல என்பதை உரையாடல்கள் வலியுறுத்த வேண்டும், இது டிஜிட்டல் கால்தடங்களின் முக்கியத்துவத்தையும் ஆன்லைன் தயவையும் எடுத்துக்காட்டுகிறது. நம்பிக்கையற்றதாக உணரக்கூடிய போது உதவியை நாடுவதற்கு குழந்தைகளை வளர்ப்பது ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது ஆன்லைன் பாதுகாப்பிற்கு முக்கியமானது. பெற்றோர்ஹுட் ஒருபோதும் எளிதானது அல்ல, குறிப்பாக இந்த டிஜிட்டல் சகாப்தத்தில். இந்த இணைய சகாப்தத்தில் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள், எனவே அவர்களை அதிலிருந்து விலக்கி வைப்பது உண்மையில் சரியான விஷயம் அல்ல. அதற்கு பதிலாக, பெற்றோர்களாகிய, ஒருவர் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் செல்லவும் தயார் செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகள் டிஜிட்டல் இருப்பை உருவாக்கவிருந்தால், அவர்களுடன் நீங்கள் வைத்திருக்க வேண்டிய ஐந்து உரையாடல்கள் இங்கே. எல்லோரும் அவர்கள் யார் என்று சொல்லவில்லைஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் அந்நியர்கள் உள்ளனர் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கவும். இணைய…
புதுடெல்லி: வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வருமான சமத்துவத்துக்கான கினி (Gini Index) குறியீட்டில் இந்தியா 25.5 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ஸ்லோவாக் குடியரசு 24.1 மதிப்பெண்களும், ஸ்லோவேனியா 24.3 மதிப்பெண்களும், பெலாரஸ் 24.4 மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ளன. 2011-12 மற்றும் 2022-23 க்கு இடையில் இந்தியாவில் வருமான சமத்துவமின்மை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் உலகளவில் நான்காவது வருமான சமத்துவம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் பெரிய அளவில் குறைந்ததே, வருமான சமத்துவமின்மை குறைய காரணமாகியுள்ளது. இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் 2011-12ல் 16.2% லிருந்து 2022-23 இல் 2.3% ஆகக் குறைந்துள்ளது என்று உலக வங்கியின் தரவுகள் தெரிவித்துள்ளன. சமத்துவத்தின் அளவீடான சிறந்த கினி குறியீட்டு மதிப்பெண்களில், சீனா, அமெரிக்கா மற்றும்…
ராமேசுவரம்: முஸ்லிம்களின் நீத்தார் நினைவு நாளான மொகரம் பண்டிகையை முன்னிட்டு, சமய நல்லிணகத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் இந்துக்கள் தீ மிதித்து மொகரம் பண்டிகையை கடைப்பிடித்தனர். கர்பாலா என்ற இடத்தில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் உசைன் குடும்பத்தினர் இஸ்லாமிய மத கட்டளையைப் பாதுகாக்கும் பொருட்டு போரில் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகம் புரிந்த நாளை மொகரமாக முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் கடைப்பிடிக்கின்றனர். முஸ்லிம்கள் மட்டுமே கொண்டாடுவதாக அறியப்பட்ட இந்த பண்டிகையை ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் உள்ள இந்துக்களும் காலம் காலமாக கடைபிடிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியில் ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற குறுநில ஜமீன்தார் வாழ்ந்து வந்துள்ளார். இவர் இப்பகுதியில் நீர்நிலைகளை உருவாக்கி, விவசாய நிலங்களை தானமாக வழங்கியுள்ளார். அவரது மறைவிற்கு பிறகு அவர் நினைவாக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகை பூக்குழி திருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முக்காடு போட்டுக்கொண்டு தங்கள் தலையில் தீ…
