பர்மிங்காம்: பர்மிங்காமில் இங்கிலாந்து அணியை 336 ரன்களில் வீழ்த்தி அசத்தி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா இப்போது சமன் செய்துள்ளது. இந்த தொடரில் இன்னும் 3 போட்டிகள் விளையாட வேண்டி உள்ளது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 2-ம் தேதி இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் எடுத்து ஆல் அவுட் ஆகின. இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் எடுத்து இந்தியா டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் பெற்ற 180 ரன்கள் முன்னிலை உடன் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றிக்கான இலக்காக இந்தியா நிர்ணயித்தது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை…
Author: admin
‘துரந்தர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் ‘தெய்வத் திருமகள்’ சாரா அர்ஜுன். ரன்வீர் சிங் பிறந்த நாளை முன்னிட்டு ‘துரந்தர்’ படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதை தமிழகத்தில் பார்த்த பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏனென்றால், ‘தெய்வத்திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சாரா அர்ஜுன், இதில் ரன்வீர் சிங்கிற்கு நாயகியாக நடித்திருக்கிறார். ரன்வீர் சிங்குடன் அவர் வரும் காட்சிகளை வைத்து இணையத்தில் பலரும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகிறார்கள். இயக்குநர் ஆதித்யா தர் (உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) இயக்கத்தில் உருவாகி வரும் ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். மர்மம், துணிச்சல், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்தவையாக ‘துரந்தர்’ படத்தின் டீஸர் அமைந்திருக்கிறது. ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை பி62 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதி தேஷ் பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோர்…
திருப்புவனம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதைப்போல் காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, தற்போது இதயமும் கெட்டுவிட்டது என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திருப்புவனத்தில் பேசினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தனிப்படை போலீஸாரால் கொலை செய்யப்பட்ட மடப்புரம் காளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமாரின் படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலாளர் ஏ. ஆர். மோகன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.அர்ச்சுணன், என்.பாண்டி, எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்று பேசியதாவது: “அஜித்குமார் கொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் தனது கருத்தில், ஒருவரை கொலை செய்யும் நோக்கம் கொண்டவர்கள் கூட இந்தளவுக்கு தாக்கமாட்டார்கள். மாநில அரசு ஒரு குடிமகனை கொலை செய்துள்ளது என தெரிவித்துள்ளார். அந்தளவுக்கு காவல்துறையினர் கொடூரமாக காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான…
தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திப் படத்தை முடித்துவிட்டு, ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது உருவாகவுள்ளது. தனுஷ் உடன் நடிக்கும் இதர நடிகர்கள் ஒப்பந்தமாகிவிட்டாலும், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. விக்னேஷ் ராஜா படத்தினை முடித்துவிட்டு, மாரி செல்வராஜ் படத்தை தொடங்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். இதனையும் வேல்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ‘விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், திருத்தங்கல், பனையடிபட்டி தெருவைச் சேர்ந்த பாலகுருசாமி (வயது 50) த/பெ.மூக்கையா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவகாசி வட்டம், தாயில்பட்டி, லட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் (வயது 50) மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் சாத்தூர் வட்டம், படந்தால், நடுத்தெருவைச்…
சிறுநீர் பாதை நோய்த்தொற்று என்பது சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாயை பாதிக்கும் ஒரு வகை தொற்று ஆகும். அதன் அறிகுறிகளில் சிறுநீர் கழிப்பதற்கான ஒரு தொடர்ச்சியான வேண்டுகோள், சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு, சிறுநீர் மேகமூட்டமாக இருக்கும் அல்லது அதில் இரத்தம் மற்றும் இடுப்பு வலி ஆகியவை அடங்கும். யுடிஐக்கள் சில நேரங்களில் காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியவற்றுடன் சேர்ந்து, மற்ற நிலைமைகளுக்கு தவறாக இருக்கலாம். அவர்கள் முக்கியமாக பெண்களை பாதிக்கிறார்கள் மற்றும் அதிகப்படியான மறுநிகழ்வு விகிதத்தைக் கொண்டுள்ளனர், 25 முதல் 30 சதவீத பெண்கள் ஆறு மாதங்களுக்குள் மறுசீரமைப்பை அனுபவிக்கிறார்கள்.
கார் ரேஸை மையப்படுத்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இவரது அணி பெல்ஜியம், துபாய், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்று வெற்றி பெற்றது. தற்போது ‘24ஹெச்’ என்ற ரேஸில் அஜித் அணி கலந்து கொண்டுள்ளது. இதனை முன்னிட்டு அஜித் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் ‘எஃப்1’ படத்தில் பிராட் பிட் நடித்தது போல் கார் ரேஸ் சம்பந்தப்பட்ட படங்களில் உங்களை காண முடியுமா என்ற கேள்விக்கு, “ஏன் முடியாது? நான் நடிக்கும் படங்களின் சண்டைக் காட்சிகளில் நானேதான் நடிக்கிறேன். அப்படியான வாய்ப்புகள் வரும்போது ஏன் நடிக்க மாட்டேன் என கூறப் போகிறேன். ‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’, ‘எஃப் 1’ படங்களின் அடுத்த பாகங்களில் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என்று பதிலளித்துள்ளார் அஜித். ‘குட் பேட் அக்லி’…
நாமக்கல்: கீழடி விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பாங்கோடு நடந்து கொண்டு வரலாற்றை மறைப்பதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ எனும் நூல் வெளியீட்டு விழா நாமக்கல் அருகே லத்துவாடியில் நடைபெற்றது. இதில் சகாயம் கலந்து கொண்டு பேசினார். விழாவைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற லாக்கப் மரணம் எந்த சூழலிலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது. காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மக்களை பாதுகாக்கத்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். இதில் தமிழக முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காவல் துறையினர் அத்துமீறிய செயலை மட்டுப்படுத்த வேண்டும். இதில் கவனம் செலுத்தவில்லையெனில் ஆட்சிக்கு பெரிய அவப்பெயர் வந்துவிடும். தமிழ் மொழி உலகில் உள்ள மூத்த மொழிகளில் ஒன்று. வட மொழிக்கு அளிக்கும்…
சென்னை: மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் எனும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை நாளை (திங்கள் கிழமை) தொடங்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ரத்தத்தின் ரத்தமே வா என அழைத்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடித விவரம்: எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களே, அம்மாவின் உயிருக்கு உயிரான விசுவாசிகளே, எனது உணர்வுகளில் கலந்திருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தின் இரண்டு கோடிக்கும் அதிகமான தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் எனது இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் அன்பார்ந்த வணக்கம்! எனது ஆழ்மனதில் உங்கள் அனைவரோடும் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். நானும் நீங்களும் நினைப்பது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் ‘இன்னும் 100 ஆண்டு காலம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் இயக்கம், மக்கள் தொண்டாற்ற நீடித்து நிலைத்து இருக்க வேண்டும். அதன்மூலம் தமிழக மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து, செம்மாந்து திகழ்ந்து சிறப்பு…
ஆளுமை சோதனைகள் எப்போதுமே மக்களைக் கவர்ந்தன, ஏனெனில் அவை ஒருவரின் மறைக்கப்பட்ட பண்புகள் மற்றும் மயக்கமற்ற நடத்தை பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன. பாரம்பரிய சோதனைகள் ஒருவரின் தன்மையை மதிப்பிடுவதற்கு கேள்விகளைப் பயன்படுத்தினாலும், நவீன உளவியல் ஒருவரின் உடல் மொழி, குறிப்பாக உட்கார்ந்த தோரணை, ஒரு நபரின் உண்மையான இயல்பு பற்றி நிறைய வெளிப்படுத்த முடியும் என்று அறிவுறுத்துகிறது. நிதானமாக அல்லது தெரியாதபோது நீங்கள் எப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள் என்பது பெரும்பாலும் உங்கள் உள் மனநிலையின் வெளிப்பாடாகும். எடுத்துக்காட்டாக, குறுக்கு-கால் அமர்ந்திருக்கும் ஒருவர் தரையில் உறுதியாக இரு கால்களிலும் உறுதியாக அமர்ந்திருக்கும் மற்றொரு நபருடன் ஒப்பிடுகையில் சில மேலாதிக்க பண்புகளைக் கொண்டிருக்கலாம். முன்னோக்கி அல்லது பின்தங்கிய சாய்வது கூட உறுதிப்பாடு அல்லது உள்நோக்கத்தைக் குறிக்கலாம். இந்த நுட்பமான குறிப்புகள் பெரும்பாலும் தன்னிச்சையாக இருக்கின்றன, அவை அவற்றின் ஆளுமையின் சக்திவாய்ந்த குறிகாட்டிகளாக அமைகின்றன. இதனால்தான் பல ஆப்டிகல் மாயைகள் மற்றும் தோரணை அடிப்படையிலான சோதனைகள் இந்த…
