வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா,ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் எலான் மஸ்க். இதையடுத்து, ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசு செயல் திறன்துறை (டிஓஜிஇ) தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உள்நாட்டு செலவினம், வரி குறைப்பு தொடர்பான மசோதாவை ட்ரம்ப் கொண்டு வந்ததால்,இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, புதிய கட்சி தொடங்குவது குறித்து மக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த நிலையில், ‘அமெரிக்கா பார்ட்டி’ எனும் புதிய கட்சியை எலான் மஸ்க் 5-ம் தேதி தொடங்கியுள்ளார். ‘2 கட்சி மட்டுமே அமெரிக்காவை ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப் போக்கை முறியடிப்போம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
Author: admin
ராமேசுவரம்: சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் சுவாமிகள் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் செய்து, சுவாமி தரிசனம் செய்தார். தூளி பாத பூஜை: தமிழகத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் சுவாமிகள் நேற்று முன்தினம் மாலை ராமேசுவரம் வந்தார். ராமேசுவரம் சிருங்கேரி மடத்தில் தூளி பாத பூஜை செய்த சிருங்கேரி சுவாமிகள், இரவு ராமநாத சுவாமி கோயில் 3-ம் பிரகாரத்தில் ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வர பூஜையை நடத்தினார். நேற்று காலை ராமநாத சுவாமி கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் செய்த சிருங்கேரி சுவாமிகள், ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். பின்னர் தனுஷ்கோடி சென்ற சிருங்கேரி சுவாமிகள், மணலில் வரையப்பட்ட ராம தனுஷ் உருவத்துக்கு பூஜை செய்து, தனுஷ்கோடி கடலில் சேது ஸ்நானம் செய்தார். இந்த நிகழ்வுகளில் திரளான…
ஜூலை 18-ம் தேதி ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் திரையரங்குகளில் பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும், ஓடிடி தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்த வரவேற்பை முன்வைத்து அடுத்த படத்தையும் முடித்துவிட்டார்கள். ’ஜென்ம நட்சத்திரம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. விரைவில் ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு. ஹாரர் த்ரில்லர் கதையாக ‘ஜென்ம நட்சத்திரம்’ உருவாகி இருக்கிறது. இதனை அமோஹம் ஸ்டூடியோஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளராக கே.ஜி, இசையமைப்பாளராக சஞ்சய் மாணிக்கம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தினை உலகமெங்கும்…
திருப்பூர்: இளம்பெண் ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கணவன் குடும்பத்தார் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் வீட்டுக்கு நேற்று சென்ற முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனக்கும் ரிதன்யாவின் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரிதன்யா கடைசியாக அவரது தந்தைக்கு அனுப்பிய ஆடியோவை கேட்ட பின்புதான், அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமென தனிப்பட்ட முறையில் நான் இங்கு வந்துள்ளேன். ரிதன்யா உயிரிழப்புக்கு முன்பு அனுப்பிய ஆடியோ மிகவும் முக்கியமான சாட்சியாக உள்ளது. ரிதன்யா தரப்பு வழக்கறிஞரிடம் பேசினேன். முதல் தகவல் அறிக்கையையும் படித்தேன். இளம்பெண் ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும். மன ரீதியாக, உடல் ரீதியாக யார், யார் துன்புறுத்தினர் என அதில் கூறியுள்ளார். ரிதன்யாவின் செல்போன் நீதிமன்றத்தில்…
சென்னை: தமிழகத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் களப்பணிமாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான பள்ளி செல்லாத குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காண்பதற்கான கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடங்கவுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியில் மண்டல மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட உள்ளனர். இந்த களப்பணியின்போது பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அதற்கான காரணம் பதிவு செய்யப்பட வேண்டும். அதன்பின் அவர்களை அருகே உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கவும், இதுசார்ந்து பெற்றோர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இந்தக்…
விஜய் கார்த்திகேயா அடுத்து இயக்கவுள்ள படத்திலும் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கிச்சா சுதீப் நாயகனாக நடிக்கும் 47-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தினை விஜய் கார்த்திகேயா இயக்கவுள்ளார். இவர் கிச்சா சுதீப் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘மேக்ஸ்’ படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. தாணு தயாரிப்பில் வெளியான படம் ‘மேக்ஸ்’. பலரும் ‘கைதி’ பட பாணியில் உருவாக்கி இருக்கிறார்கள் என்று கூறினாலும், விறுவிறுப்பான திரைக்கதையினால் வரவேற்பைப் பெற்றது. இதனால் மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் கிச்சா சுதீப். தற்போது கிச்சா சுதீப் உடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘கே 47’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக சேகர் சந்திரா, இசையமைப்பாளராக அஜ்னிஷ் லோக்நாத், எடிட்டராக கணேஷ் பாபு ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு…
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 58,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 51,401 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 40,500 கனஅடியாகவும், மாலை 50,500 கனஅடியாகவும் பதிவானது. அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ள நிலையில், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை 10 மணிக்கு விநாடிக்கு 50,000 கனஅடியாகவும், மாலை 5 மணிக்கு 58,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 57 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. கபினி அணையில் இருந்து வரும் நீரின் அளவு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு…
தெலுங்கில் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹாய்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது ‘ஜெய ஜெய ஜெயஹே’. மலையாளத்தில் பேசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’. விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தருண் பாஸ்கர், இஷா ரெப்பா ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹாய்’ என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 1-ல் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. விரைவில் டீஸர், ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்த உள்ளது படக்குழு. அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.சஜீவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ருஜன் யாரபோலு, ஆதித்யா பிட்டி, அனுப் சந்திரசேகரன், சாதிக் சைக், நவீன் சனிவரப்பு உள்ளிட்ட பலர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
‘வார் 2’ படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறார் நாக வம்சி. இவர் ஜூனியர் என்.டி.ஆருக்கு நெருங்கிய நண்பர் ஆவார். இந்த உரிமையை சுமார் 90 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாக வம்சி வாங்கியிருப்பதால் தெலுங்கில் பிரம்மாண்ட வெளியீடு உறுதி என்று ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள். இந்தியில் ஜூனியர் என்.டி.ஆர் அறிமுகமாகும் படம் ‘வார் 2’. இதில் ஹ்ரித்திக் ரோஷன், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹ்ரித்திக் ரோஷன் – ஜூனியர் என்.டி.ஆர் இருவருக்கும் இடையே ஆன காட்சிகள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றன. அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. ஆந்திராவில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் விநியோக உரிமையை ஏசியன் சினிமாஸ், தில் ராஜு மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து கைப்பற்றி இருக்கிறார்கள். ஆனால், ‘வார் 2’ உரிமையினை நாக…
சென்னை: ‘அதிமுகவுக்கு பாஜக சுமையாக இருக்கக் கூடாது; நமது இலக்கு 2026 அல்ல; 2029 நாடாளுமன்ற தேர்தல்தான்’ என பூத் கமிட்டி கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜக பூத் கமிட்டியை வலிமைப்படுத்துவது தொடர்பாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்பட மூத்த நிர்வாகிகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 2026…
