Author: admin

சாத்தூர்: ​விருதுநகர் மாவட்​டம் சாத்​தூர் அருகே பட்​டாசு ஆலை​யில் நேற்று காலை ஏற்​பட்ட பயங்கர வெடி​ விபத்​தில், ஆலையின் 16 அறைகள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் தொழிலாளி ஒரு​வர் உயி​ரிழந்​தார். சிவ​காசி அருகே திருத்​தங்​கலை சேர்ந்​தவர் கணேசன். இவருக்​கு சொந்​த​மான பட்​டாசு ஆலை சாத்​தூர் அருகே உள்ள கீழத்​தா​யில்​பட்​டி​யில் நாக்​பூர் மத்​திய வெடிபொருள் கட்​டுப்​பாட்​டு துறை​யின் உரிமம் பெற்று இயங்​கு​கிறது. இங்கு பேன்ஸி ரக பட்​டாசுகள் தயாரிக்​கப்​படு​கின்​றன. 50-க்​கும் மேற்​பட்ட அறை​களில் 150-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் பணிபுரி​கின்​றனர். இவர்​களில் பலர் வெளி மாநிலத்​தினர். இவர்​கள் ஆலை வளாகத்​திலேயே தங்கி பணி​யாற்​றுகின்​றனர். விடு​முறை தின​மான நேற்​றும் இந்த ஆலை​யில் பட்​டாசு தயாரிக்​கும் பணி நடந்​தது. ஓர் அறை​யில் பேன்சி பட்டாசுகளுக்கான மருந்தை செலுத்​தும்​போது உராய்வு ஏற்​பட்டு திடீரென வெடி விபத்து ஏற்​பட்​டது. அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்ததில், 16 அறை​கள் வெடித்​து சிதறி தரைமட்​ட​மாகின. இந்த விபத்​தில் பனையடிப்​பட்​டியை சேர்ந்த பால​குரு​சாமி (47) உயி​ரிழந்​தார்.…

Read More

சென்னை: ஐசிஎஃப் ஆலை​யில் இந்த நிதி​யாண்​டுக்​குள் 15 அம்​ரித் பாரத் ரயில்​களை தயாரித்து முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதுத​விர, ஏசி மின்​சார ரயில்​கள் தயாரிப்பு பணி​யும் தீவிர​மாக நடை​பெற்று வரு​கி​றது. சென்னை ஐசிஎஃப்​-ல் (இணைப்பு பெட்டி தொழிற்​சாலை) பல்​வேறு வகை​களில் 73 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான ரயில் பெட்​டிகள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. அதி​லும், தற்​போது வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்​பில் அதிக கவனம் செலுத்​தப்​படு​கிறது. தற்​போது வரை 88 வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்​துள்​ளது. இதற்​கிடை​யில் அனைத்து தரப்பு மக்​களும் பயணிக்​கும் வகை​யில், அம்​ரித் பாரத் ரயில் (சா​தாரண வந்தே பாரத் ரயில்) தயாரிக்க முயற்சி எடுக்​கப்​பட்​டது. அதாவது நீண்ட தூர பயணத்​துக்கு பொது​வான வசதி​களு​டன் ஏசி அல்​லாத அம்​ரித் பாரத் ரயில் தயாரிக்க முடிவு செய்​யப்​பட்​டது. அதன்​படி 2 அம்​ரித் பாரத் ரயில்​கள் தயாரித்​து,கடந்த 2023-ம் ஆண்டு நவம்​பரில் ரயில்வே வாரி​யத்​திடம்…

Read More

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், 12-ம் தேதி சில இடங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். தமிழகத்​தில் இன்று முதல் 9-ம் தேதி வரை சில இடங்​களில் அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் அதி​க​மாக இருக்​கக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசான அல்​லது மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 102 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 84 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவில் இருக்​கும்.…

Read More

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்​டி, 25 தொகு​தி​களில் தனி கவனம் செலுத்தி பணி​களை மேற்​கொள்​ளு​மாறு கட்சி நிர்​வாகி​களுக்கு மதி​முக தலைமை உத்​தர​விட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்ளது. வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்தலில் கடந்த முறையை​விட கூடு​தல் தொகு​தி​களை கேட்​போம் என திமுக கூட்​டணி கட்​சிகள் தொடர்ந்து கூறிவரு​வது திமுக தலை​மை​யிடம் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதனால், ‘கூட்​டணி கட்​சி​யில் இருந்து விலகிவருபவர்​களை திமுக​வில் சேர்ப்​ப​தில்​லை’ என்ற கொள்​கை​யில் இருந்து வில​கி, மதி​முக நிர்​வாகி​களை சமீபத்​தில் சேர்த்​துக் கொண்​டது திமுக. இது மதி​முக​வுக்கு மட்​டுமின்றி மற்ற கூட்​டணி கட்​சிகளுக்​கும் அதிர்ச்​சியை கொடுத்​துள்ளது. ஏற்​கெனவே, வைகோவுக்கு மாநிலங்​களவை உறுப்​பினர் பதவி வழங்​கப்​ப​டாத நிலை​யில், திமுக​வின் இந்த நடவடிக்கை மதி​முக தொண்​டர்​களிடம் கடும் எதிர்ப்புஅலைகளை ஏற்​படுத்​தி​யது. பொதுக்​குழு உள்​ளிட்ட ஆலோசனை கூட்​டங்​களில் நிர்​வாகி​கள் இதை காட்​ட​மாகவே வெளிப்​படுத்​தினர். எனினும், ‘தி​முக​வுடன் கூட்​டணி தொடரும்’ என திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்த வைகோ, தொண்​டர்​களை​யும் சமா​தானம் செய்து வரு​கிறார். இதற்​கிடையே, மதி​முக முதன்மை செய​லா​ளர்…

Read More

சென்னை: தமிழகத்தில் வரும் 2026-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக, தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை ஜூலை 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து 3-ம் தேதி முதல் வீடுவீடாகச் சென்று புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரிலான திமுக உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை யில் வீடு, வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் முதல் கட்சி உறுப்பினர்கள் வரை அனைவரும் அவரவர் வாக்குச்சாவடிகளில் இருக்கும் வீடுகளுக்குச் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொலைபேசி வாயிலாகப் பேசினார். அப்போது அவர்களிடம் உறுப்பினர்…

Read More

சென்னை: இலவச கட்​டாய கல்வி திட்​டத்​தில் சேர்க்கை பெற்ற ஏழை குழந்​தைகளை கல்வி கட்​ட​ணம் செலுத்​து​மாறு பல தனி​யார் பள்​ளி​கள் கட்​டாயப்​படுத்​து​வ​தாக புகார் எழுந்​துள்​ளது. இலவச கட்​டாய கல்வி உரிமை சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ) தனி​யார் பள்​ளி​களில் ஏழை குழந்​தைகளுக்கு 25 சதவீத இடங்​கள் வழங்​கப்​படும். அந்த வகை​யில், தமிழகம் முழு​வதும் உள்ள 8 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தனி​யார் பள்​ளி​களில் சுமார் 1.10 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இந்த திட்​டத்​தில் எல்​கேஜி அல்​லது 1-ம் வகுப்​பில் சேரும் குழந்​தைகள் 8-ம் வகுப்பு வரை இலவச​மாக படிக்​கலாம். அவர்​களுக்​கான கட்​ட​ணத்தை மத்​திய, மாநில அரசுகள் இணைந்து தனி​யார் பள்​ளி​களுக்கு வழங்​கும். தமிழகத்​தில் கடந்த 2013-ல் அமல்​படுத்​தப்​பட்ட ஆர்​டிஇ திட்​டத்​தின்​கீழ் இது​வரை சுமார் 4 லட்​சம் குழந்​தைகள் தனி​யார் பள்​ளி​களில் சேர்ந்து படித்து வரு​கின்​றனர். இதற்​கிடையே, புதிய தேசிய கல்விக் கொள்​கையை தமிழகம் ஏற்க மறுப்​ப​தால், பள்​ளிக்​கல்வி திட்​டங்​களுக்​கான நிதியை மத்​திய அரசு நிறுத்தி வைத்​துள்​ளது.…

Read More

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். முன்​ன​தாக, விமான நிலையத்தில் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்டு மோடிக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். பிரிக்ஸ் கூட்​டமைப்பு 2009-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இதில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசியா ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 2 நாள் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்​ப​தற்​காக அங்கு சென்​றுள்ள பிரதமர் மோடிக்கு, ரியோ டி ஜெனிரோ விமான நிலை​யத்​தில் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்​டு, உற்​சாக வரவேற்பு அளித்​தனர். உச்சி மாநாட்​டின் முதல் நாளான நேற்று ‘சர்​வ​தேச அமை​தி, பாது​காப்​பு, சீர்​திருத்​தம், நிர்​வாகம்’ குறித்த சிறப்பு கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பிரதமர்…

Read More

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​ல் மகா கும்​பாபிஷேகம் இன்று (7-ம் தேதி) நடை​பெறுகிறது. இதையொட்​டி, தமிழகம் முழு​வதும் இருந்து பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர். அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் திருப்​பணி​கள் நிறைவு​பெற்​று, கும்​பாபிஷேக விழா ஜூன் 26-ம் தேதி கணபதி பூஜை​யுடன் தொடங்​கியது. கடந்த 1-ம் தேதி மாலை​யாக​சாலை பூஜைகள் தொடங்​கின. கரிய​மாணிக்க விநாயகர், பார்​வதி அம்​மன், மூல​வர், வள்​ளி, தெய்​வானைக்கு கோயில் உள்​புறம் தந்​திரி சுப்​பிரமணி​யரு தலை​மை​யிலும், சுவாமி சண்​முகர் மற்​றும் பரி​வாரமூர்த்​தி​களுக்கு ராஜகோபுரத்​தின் கீழ் உள்ள பிரம்​மாண்ட யாக​சாலை​யில் 71 ஹோம குண்​டங்​கள் அமைத்​து, 700 கும்​பங்​கள் வைக்​கப்​பட்​டு. 96 மூலிகைகள் இடப்​பட்டு பிச்சை சிவாச்​சா​ரி​யார் தலை​மை​யிலும் பூஜைகள் நடை​பெற்​றன. திருக்​கல்​யாண மண்​டபத்​தில் நேற்று முன்​தினம் மாலை முதல் பெரு​மாளுக்கு தனி​யாக 5 ஹோம குண்​டங்​கள் வைத்​து, பட்​டாச்​சா​ரி​யார்​கள் தலை​மை​யில் யாக​சாலை பூஜை தொடங்​கியது. இன்று (ஜூலை 7) அதி​காலை 4…

Read More

மதுரை: உள்​ளாட்​சிகள் முதல் நாடாளு​மன்​றம் வரை சிறு​பான்​மை​யினரின் பிர​தி​நி​தித்​து​வத்தை உறுதி செய்ய வேண்​டும், வக்பு வாரிய திருத்​தச் சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் ஆகிய கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, மதுரை​யில் மனித நேய மக்​கள் கட்சி மாநாடு நேற்று நடை​பெற்​றது. கட்​சித் தலை​வர் ஜவாஹிருல்லா தலைமை வகித்​தார். மாநிலப் பொருளாளர் உமர் வரவேற்​றார். கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ரும், எம்​எல்​ஏவு​மான அப்​துல்​சமது பேசும்​போது, “நாட்​டில் படிப்​படி​யாக முஸ்​லிம்​களின் பிர​தி​நி​தித்​து​வத்​தைக் குறைக்​கும் சதி நடக்​கிறது. உள்​ளாட்சி அமைப்​பு​களில் சதி செய்து பிரதிநி​தித்​து​வம் குறைக்​கப்​படு​கிறது. நாட்​டில் அடுத்த 10 ஆண்​டு​களில் முஸ்​லிம்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் கொண்டு வரப்பட வேண்​டும்” என்​றார். மாநாட்​டில், தமிழ் மையம் நிறு​வனர் ஜெகத் கஸ்​பர்​ராஜ், ஜோதி​மலை இறைப்​பணி திருக்​கூடம் நிறு​வனர் திரு​வடிக்​குடில் சுவாமிகள் ஆகியோர் பேசினர். பேராசிரியர் அருணன், வழக்​கறிஞர் ஹென்​றி​திபேன், முன்​னாள் எம்​எல்ஏ முரு​கவேல்​ராஜன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். முன்​ன​தாக, மதுரை பாண்​டிகோ​யில் சந்​திப்பு பகு​தியி​லிருந்து மாநாட்​டுத் திடல் வரை பேரணி நடை​பெற்​றது.…

Read More

சென்னை: இளநிலை பொறி​யியல் படிப்​பு​களுக்​கான சிறப்​புப் பிரிவு கலந்​தாய்வு இணைய வழி​யில் இன்று (ஜூலை 7) தொடங்குகிறது. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 417 பொறி​யியல் கல்​லூரி​களில் இளநிலை படிப்​பு​களுக்கு நடப்​பாண்டில் 2 லட்​சத்து 41,641 மாணவர்​கள் கலந்​தாய்​வில் பங்​கேற்க தகு​திபெற்​றனர். இவர்​களுக்​கான தரவரிசை பட்​டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளி​யானது. அதைத் தொடர்ந்து பொறி​யியல் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்வு இன்று (ஜூலை 7) தொடங்​கு​கிறது. முதலில் மாற்​றுத்​திற​னாளி​கள், முன்​னாள் ராணுவ வீரர்​களின் குழந்​தைகள், விளை​யாட்​டுப் பிரிவு மாணவர்​கள் ஆகியோ​ருக்​கான சிறப்​புப் பிரிவு கலந்​தாய்வு நடை​பெற உள்​ளது. இதில் அரசுப் பள்​ளி​களில் படித்து 7.5 சதவீத ஒதுக்​கீட்​டில் விண்​ணப்​பித்​தவர்​களில் சிறப்​புப் பிரி​வில் வரும் மாணவர்​களுக்கு கலந்​தாய்வு இன்​றும், நாளை​யும் நடத்​தப்பட உள்​ளது. இதில் முன்​னாள் ராணுவத்​தினரின் வாரிசுகள் 9 பேரும், மாற்​றுத்​திற​னாளி​கள் பிரி​வில் 128 பேரும், விளை​யாட்டு பிரி​வில் 356 பேரும் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். ஜூலை 14 முதல் பொதுப்பிரிவு: மாணவர்​கள் இன்று…

Read More