உலகெங்கிலும் உள்ள சிறு குழந்தைகளிடையே தற்செயலான மரணத்திற்கு மூழ்குவது மிக உயர்ந்த காரணங்களில் ஒன்றாகும். எந்தவொரு பாடமும் ஆபத்தை முற்றிலுமாக அகற்ற முடியாது என்றாலும், நீச்சல் பாடங்கள் சோகத்தின் வாய்ப்புகளை வியத்தகு முறையில் குறைக்கின்றன. மிதக்கும், தண்ணீரை மிதித்தல், மேற்பரப்பை அடைவது, பாதுகாப்பிற்கு நீந்துவது போன்ற அடிப்படை மற்றும் முக்கியமான உயிர்வாழும் திறன்களுடன் குழந்தைகள் நன்கு கற்பிக்கப்பட வேண்டும். ஹார்வர்ட் ஹெல்த் கட்டுரையில் கவனம் செலுத்தியபடி, “நீச்சல் பாடங்கள் உயிர்களைக் காப்பாற்றுகின்றன: பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது”, ஆரம்பகால நீச்சல் அறிவுறுத்தல் தண்ணீரைச் சுற்றியுள்ள குழந்தைகளைப் பாதுகாப்பதில் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும்.ஏன் 4 வயது நீச்சல் பாடங்களைத் தொடங்க சரியான நேரம்இந்த வயதில், பெரும்பாலான குழந்தைகள் கட்டமைக்கப்பட்ட கற்றலுக்குத் தேவையான அறிவாற்றல் மற்றும் உடல் திறன்களை உருவாக்கியுள்ளனர். அவர்கள் அறிவுறுத்தல்களைக் கேட்கவும், தொடர்ந்து அவற்றைப் பின்தொடரவும், அவர்கள் கற்பித்ததை நினைவில் கொள்ளவும் முடியும். சில குழந்தைகள் சற்று முன்னதாகவே தயார்நிலையின்…
Author: admin
நீடித்த திரை நேரம் டிஜிட்டல் கண் திரிபுக்கு வழிவகுக்கிறது, இதனால் வறண்ட கண்கள், மங்கலான பார்வை மற்றும் தலைவலி ஏற்படுகிறது. வல்லுநர்கள் 10-10-10 விதியை பரிந்துரைக்கின்றனர்: ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும், குறைந்தது 10 அடி தூரத்தில் ஒரு பொருளின் மீது கவனம் செலுத்த 10 வினாடிகள் இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நடைமுறை கண்கள் ஓய்வெடுக்கவும் கவனம் செலுத்தவும் உதவுகிறது, நீல ஒளியின் விளைவுகளை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் சிமிட்டும் குறைவு. அதை ஏற்றுக்கொள்வோம். நம்மில் பெரும்பாலோர் கேஜெட்களுக்காக மணிநேரம் செலவிடுகிறோம். மொபைல், மடிக்கணினி அல்லது தொலைக்காட்சித் திரைகளை நாம் நினைத்ததை விட நீண்ட நேரம் முறைத்துப் பார்க்கிறோம். சிலருக்கு, இது ஒரு தொழில் அபாயமாக இருக்கலாம், மற்றவர்களுக்கு, சலிப்பிலிருந்து விடுபட மற்றொரு வழிமுறையாக இருக்கலாம். எந்த வழியில், நாம் அனைவரும் திரைகளில் ஒட்டப்பட்டிருக்கிறோம். டிஜிட்டல் சாதனங்களுக்கு நீண்டகால வெளிப்பாடு டிஜிட்டல் கண் திரிபுக்கு வழிவகுக்கும், இது கணினி பார்வை நோய்க்குறி…
சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு மற்றும் சென்னையில் இருந்து வெளிவரும் இந்து தமிழ் திசை நாளிதழ் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சிங்கப்பூரில் தொடர்ந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசின் 90-ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6), ‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, தமிழ் முரசு நாளிதழை வெளியிடும் ‘எஸ்பிஎச் மீடியா’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழை வெளியிடும் ‘கேஎஸ்எல் மீடியா’ ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ‘எஸ்பிஎச் மீடியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சான் யெங் கிட், ‘கேஎஸ்எல் மீடியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில், தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் த.ராஜசேகரும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின்…
சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் காலியாகவுள்ள செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்பநர்கள் பணியிடங்களை, மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு,தேசிய நலவாழ்வுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநர் மருத்துவர் அருண் தம்புராஜ், அனைத்து சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை (டிபிஎச்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்), மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) ஆகிய இயக்குநரகங்களில் காலியாகவுள்ள செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்பநர் (3-ம் நிலை) பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, கடந்த மே 21 மற்றும் ஜூன் 23-ம் தேதிகளில் துறைசார் கலந்தாய்வு கூட்டத்தை துறையின் செயலாளர் நடத்தினார். முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. காலியாகவுள்ள பணியிடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அதில் முக்கியமான…
சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 8) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். நாளை முதல் 13-ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 5 டிகிரி உயரும்: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்குஉயர வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான…
சென்னை: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளின் தமிழாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதல்கட்டமாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இச்சட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளிலும், தமிழ் மொழியை கட்டாய பாடமாகக் கற்பிக்க வகை செய்கிறது. இந்நிலையில், தமிழ் கற்றல் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையிலும், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர வாரியங்களின் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழை எளிமையாகவும், விருப்பமாகவும் படிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் பணிபுரியும் 6 ஆயிரம் தமிழாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில், முதல்கட்டமாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்…
வாஷிங்டன்: தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரிவிதிப்பு வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அனுப்பிய கடிதங்களின் நகல்களையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ட்ரம்ப் கூறியிருப்பதாவது: “வரும் ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜப்பான் / கொரியா ஆகிய நாடுகளின் அனைத்து வகையான பொருட்களுக்கும் தனித்தனியாக 25 சதவீத வரி விதிக்க உள்ளோம். உங்கள் நாடுகளுடன் எங்களுக்கு உள்ள வர்த்தக பற்றாக்குறை ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு இந்த 25% வரி என்பது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏதேனும் காரணத்துக்காக உங்கள் வரிகளை உயர்த்த நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் உயர்த்தத் தேர்வுசெய்தாலும், அது நாங்கள் வசூலிக்கும்…
சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனிமேல் ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவையில் கடந்த ஏப்.29-ம் தேதி நான் பேசும்போது, “இந்த மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் தீண்டாமைக்கான குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறியிருப்பதால், அந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று குறிப்பிட்டேன். இதை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து, “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள சாதி பெயரில் இறுதி எழுத்தில் முடிவடையும் ‘N’ மற்றும் ‘A’ என்பதற்கு பதிலாக ‘R’ என பெயர் மாற்றம் செய்து உரிய மரியாதையை கிடைக்க வழிசெய்யும் வண்ணம் உரிய சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என வலியுறுத்தினேன். கடந்த ஜூன்…
சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. 512 மாணவர்கள் பங்கேற்று, விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு பிஇ, பிடெக் இடங்களில் சேர 2.49 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, கடந்த ஜூன் 27-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 12 பேர், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 137 பேர், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 363 பேர் என மொத்தம் 512 பேர் நேற்று கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். முதல்நாள் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான இடங்களைதேர்வு செய்தனர். அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு…
ரியோ டி ஜெனிரோ: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் உலக அமைதி, பாதுகாப்பு குறித்த சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் சர்வதேச சீர்திருத்தம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பு கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் மிகப்பெரிய சவாலாக தீவிரவாதம் உருவெடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி இந்தியாவின் பஹல்காமில் தீவிரவாதிகள் கோழைத்தனமான தாக்குதலை நடத்தினர். இது இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பஹல்காம் தாக்குதலை கண்டித்த பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாத அமைப்புகள் மீது பொருளாதார…
