பெங்களூரு: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள கோயிலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட பல பெண்களின் உடல்களை தானே புதைத்ததாக முன்னாள் ஊழியர் போலீஸிஸிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அது தொடர்பாக யாரும் புகார் அளிக்காததால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதுகுறித்து மங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் சச்சின் தேஷ்பாண்டே கூறுகையில், “தர்மஸ்தலா கோயிலில் 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தூய்மைப் பணியாளராக பணியாற்றிய 52 வயதான நபர் தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், அவர் தர்மஸ்தலா கோயிலில் பணியாற்றியபோது பல பெண்கள்…
Author: admin
அடுத்த ஆண்டு ‘ராட்சசன் 2’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். ராம்குமார் – விஷ்ணு விஷால் கூட்டணி இணைந்து ‘இரண்டு வானம்’ என்னும் படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இருவரும் இணைந்து ‘ராட்சசன் 2’ படத்தில் அடுத்த ஆண்டு பணிபுரிய இருப்பதை விஷ்ணு விஷால் உறுதிப்படுத்தி இருக்கிறார்.கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது. சைகலாஜிக்கல் – த்ரில்லர் படமான இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். முன்னதாக, ராம்குமார் – விஷ்ணு விஷால் இருவரும் இணைந்த முதல் படமான ‘முண்டாசுப்பட்டி’ படமும் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவரது தம்பி ருத்ரா நடித்த ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தினை தயாரித்து, அதில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தைத்…
திருப்புவனம்: காவல் நிலைய மரணங்களை தடுக்க தமிழக காவல் துறையில் சீர்திருத்தம் தேவை. அதற்கு ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் காலனியாதிக்க மனப்பான்மையிலிருந்து மாற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் பத்திரகாளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமாரின் தாயார் மாலதியை இன்று (செவ்வாய்க்கிழமை) சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அஜித்குமார் கொலை ஒரு கொடூரமான கொலை. இதற்கு காரணம் காவல் துறையின் கலாச்சாரம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட காவல் படை எப்படி மக்களை அடக்க வேண்டும், ஒடுக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு செயல்பட்டார்களோ, அதே காலனியாதிக்க மனப்பான்மையில் தான் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாக இன்னும் காவல்துறை இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய நிலை மாற வேண்டும் என்றால் ஒட்டுமொத்த போலீஸாருக்கும் ஒரு…
புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையே மினி வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முழு அளவிலான ஒப்பந்தம், கூடுதல் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஆண்டின் இறுதியில் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, உலகின் பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாகக் கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பதிலுக்கு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும் என அறிவித்தார். 30%, 40% என கூடுதல் வரி விகிதத்தை அவர் அறிவித்ததை அடுத்து பல நாடுகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தன. இதனால், அடிப்படை கூடுதல் வரி விகிதமாக 10%-ஐ அறிவித்த டொனால்டு ட்ரம்ப், 90 நாட்களில் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பல நாடுகள் அமெரிக்காவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், பிரிட்டன் மற்றும் வியட்நாம் ஆகிய இரு…
இளைஞர்களைப் பொறுத்தவரை, பள்ளி, வீட்டுப்பாடம் மற்றும் திரைகள் நிறைந்த பிஸியான வார நாள் கால அட்டவணையில் தியாகம் செய்யப்படும் முதல் விஷயம் தூங்குவதாகும். ஆனால் புதிய ஆராய்ச்சி அவர்களின் மன நல்வாழ்வை சீர்குலைக்காமல், குறைந்தபட்சம் கொஞ்சம் கொஞ்சமாக-பிடிக்க ஒரு வழி இருக்கலாம் என்று கூறுகிறது.ஓரிகான் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உளவியலில் முனைவர் பட்டம் பெற்ற சோஜியோங் கிம் தலைமையிலான சமீபத்திய ஆய்வில், வார இறுதி தூக்கத்திற்கும் டீன் ஏஜ் கவலைக்கும் இடையிலான தொடர்பு குறித்த புதிய நுண்ணறிவை வழங்குகிறது. ஸ்லீப் 2025 மாநாட்டில் வழங்கப்பட்ட கண்டுபிடிப்புகள், வார இறுதி நாட்களில் மிதமான பிடிப்பு தூக்கம்-குறிப்பாக வழக்கத்தை விட இரண்டு மணி நேரத்திற்கும் குறைவானது-இளம் பருவத்தினரில் கவலை அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால் அதிகப்படியான தூக்கம், அல்லது எதுவுமில்லை, உண்மையில் நல்லதை விட அதிக தீங்கு செய்யக்கூடும்.டீன் ஏஜ் மன ஆரோக்கியத்திற்கு ஒரு தூக்கம் “இனிமையான இடம்”அமெரிக்கா முழுவதும் 12 முதல்…
பெங்களூரு: கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த கர்நாடக மாநிலத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, இதுபோன்ற விஷயங்களை கட்சி மேலிடம்தான் எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் விரைவில் பொறுப்பேற்பார் என அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் கடந்த சில வாரங்களாக முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. டி.கே.சிவக்குமார் டெல்லியில் உள்ள நிலையில், சித்தராமையா நாளை டெல்லி செல்ல இருக்கிறார். இந்நிலையில், கர்நாடக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்திக்கும் நோக்கில் சுர்ஜேவாலா பெங்களூருக்கு விரைந்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சுர்ஜேவாலா, “முதல்வர் மற்றும் துணை முதல்வரின் டெல்லி பயணம் என்பது மத்திய அரசு தொடர்பானது. மாநிலத்தின் கோரிக்கைகளை முன்வைக்கவும், மத்திய அரசு பாகுபாடு காட்டக் கூடாது என்பதை வலியுறுத்தவுமே அவர்கள் செல்கிறார்கள். தலைமை மாற்றம் தொடர்பாக என்ன சொல்ல வேண்டுமோ அதனை நான் கடந்த…
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மைசூருவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு மைசூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பரிசும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் மைசூருவில் அங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 10 மற்றும் 12ம் வகுப்பின் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும், தமிழ் குடும்பத்தினருக்கு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. மைசூரு தமிழ்ச் சங்க தலைவர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பூர் தமிழ் இலக்கிய சங்கத்தின் தலைவர் அனிதா கிருஷ்ண மூர்த்தி, சாம் ராஜ் நகர காவல் ஆய்வாளர் சாகர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மைசூருவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதுதவிர தமிழ்க் குடும்பங்களை சேர்ந்த 57 மாணவர்களுக்கு சான்றிதழும்,…
ஆம்பூர்: ஆம்பூரில் 4 துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த வழக்கில் 3 பேரை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மாநில செயலாளர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: “ஆம்பூரில் 4 துப்பாக்கிகள், கத்திகள் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த ஆசிஃப் மற்றும் அவரது சகோதரி ஆஜிரா, தந்தை சையத் பீர் (51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காவல் துறையினர் இந்த வழக்கில் பல விவரங்களை மூடி மறைக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக எந்த விவரங்களையும் காவல் துறையினர் வெளிப்படையாக கூறவில்லை. தான் ஏற்கெனவே பணிபுரிந்த தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் கிடைத்த துப்பாக்கிகளை ஆசிஃப் வீட்டுக்கு கொண்டு சென்றதாகவும், மேலும், இது குறித்து எதுவுமே தனக்கு தெரியாது, நான் அப்பாவி என்று அவர்…
புதுடெல்லி: பரிவர்த்தனை இல்லாத பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குகளை மூடுமாறு வங்கிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையானது பரிவர்த்தனை இல்லாத பிரதமரின் ஜன் தன் வங்கி கணக்குகளை முடுமாறு வங்கிகளை கேட்டுக் கொண்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. அதுபோன்று, கணக்குகளை மூடுவதற்காக வங்கிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஜன் தன் வங்கி கணக்கு திட்டம், ஆயுள் காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களை வலுவாக செயல்படுத்த நாடு முழுவதும் நிதி சேவைகள் துறை ஜூலை 1 முதல் மூன்று மாத பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் போது வங்கிகள் நிலுவையில் உள்ள கணக்குதாரர்களின் சுய சரிபார்ப்பு விவரங்களை மீண்டும் (re-KYC) கோருகிறது. பரிவர்த்தனையில் இல்லாத பிரதமரின் ஜன்…
ஒரு நபர் 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கும்போது, அவர்களின் உடல் உணவு உட்கொள்ளல் பற்றாக்குறைக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்படுகிறது. எடை இழப்பு மற்றும் மேம்பட்ட இன்சுலின் உணர்திறன் உள்ளிட்ட பல்வேறு விளைவுகளை உண்ணாவிரதம் ஏற்படுத்தும். உடல் ஆரம்பத்தில் ஆற்றலுக்காக சேமிக்கப்பட்ட குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது, பின்னர் எரிபொருளுக்காக கிளைகோஜன் மற்றும் கொழுப்பை உடைக்கிறது. சேதமடைந்த செல்கள் மற்றும் புரதங்களை மறுசுழற்சி செய்யும் ஒரு செயல்முறையான தன்னியக்கத்தைத் தூண்டலாம். இருப்பினும், இது நீரிழப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் பிற சுகாதார பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் போன்ற சில நபர்கள், அவர்களின் சுகாதார வழங்குநரை உண்ணாவிரதத்திற்கு முன் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சாத்தியமான அபாயங்களைக் குறைப்பதற்கும் கலந்தாலோசிக்க வேண்டும்.உடலின் பதிலைப் புரிந்துகொள்வது 24 மணி நேர உண்ணாவிரதம்ஒரு நபர் 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கும்போது, அவர்களின் உடல் உணவு உட்கொள்ளல் பற்றாக்குறைக்கு ஏற்ப பல…
