சென்னை: தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் மாநில நிதி தணிக்கை அறிக்கை, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. தமிழக அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை மாநில ஆளுநருக்கு அளிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 151(2)- வகை செய்கிறது. இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, 2023-24 நிதி ஆண்டுக்கான தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் மாநில நிதி தணிக்கை அறிக்கை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டதாக முதன்மை தலைமை கணக்காளர் டி. ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Author: admin
திருப்பூர்: வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்தினரை இன்று ( ஜூலை 8) நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ரிதன்யா வழக்கில், குற்றவாளிகளுக்கு தாமதிக்காமல் தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை அம்பிகா வலியுறுத்தியுள்ளார். வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்தினரை இன்று (ஜூலை 8) நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, பேசிய நடிகை அம்பிகா, “தற்கொலை சம்பவம் நிகழ்ந்து 11 நாட்கள் ஆகிவிட்டது. செய்திகளில் பார்த்ததை என்னால் தாங்க முடியவில்லை. என் வீட்டில் இப்படி ஒருவருக்கு நடந்து இருந்தால் என்ன செய்திருப்பேன்? என்று எண்ணும் போது என் மனம் தாங்கவில்லை. அதனால்தான் உங்களை சந்திக்க வந்தேன்.” என்று அவர்களிடம் கூறினார். அதற்கு ரிதன்யாவின் தாய் ஜெயசுதா, ”என் மகள்…
கோவை: மின்கட்டணம் குறைப்பு, மூலப்பொருட்கள் பிரச்சினைக்கு தீர்வு என கோவை தொழில் வளர்ச்சி மற்றும் விமான நிலைய விரிவாக்க திட்ட பணிகளை துரிதப்படுத்த அதிமுக ஆட்சி அமைந்த பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தை மேட்டுப்பாளையத்தில் திங்கட்கிழமை தொடங்கிய நிலையில், இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் இன்று அவர் கலந்து கொண்டார். கோவை பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் தொழில்துறையினர், விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோருடன் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும்போது, “கோவை மாவட்டத்திற்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை, ஐந்து ஆண்டுகளில் முதல்வராக இருந்துபோது பழனிசாமி வழங்கினார். கோவைக்கு அத்திக்கடவு – அவிநாசி திட்டம், ஏர்போர்ட் விரிவாக்கம், மெட்ரோ ரயில் அறிவிப்பு வெளியிட்டு…
மகிழ்ச்சியான உறவுகளில் எடை அதிகரிப்பு பெரும்பாலும் உயிரியல், உளவியல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் ஏற்படுகிறது என்று டாக்டர் ரோஹினி பாட்டீல் விளக்குகிறார். ‘கூடு சிண்ட்ரோம்’ சாத்தியமான கர்ப்பத்திற்கு உடலைத் தயாரிக்கிறது, பசி மற்றும் கலோரி தக்கவைப்பு அதிகரிக்கிறது. பகிரப்பட்ட உணவு, தளர்வான உணவுப் பழக்கம், பிறப்புக் கட்டுப்பாட்டிலிருந்து ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தோற்றத்தை பராமரிப்பதற்கான குறைக்கப்பட்ட அழுத்தம் ஆகியவை இந்த பொதுவான நிகழ்வுக்கு பங்களிக்கின்றன, இது நேர்மறையான உறவைக் குறிக்கிறது.
சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான பால வெங்கட சுப்பிரமணியன் என்ற ஆர்.பி.வி.எஸ்.மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார். இதனடிப்படையில் மணியன் மீது வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மாம்பலம் காவல் துறையினர், கைது செய்த நிலையில், அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து த,ன்னை விடுவிக்கக் கோரி…
சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி இருவரும் சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல் குமார் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், நடிகர் கிருஷ்ணா தரப்பில் வழக்கறிஞர் இன்பண்ட் தினேஷ் ஆகியோர் ஆஜராகி, “தங்களது மனுதாரர்களிடமிருந்து எந்த போதைப் பொருளும் கைப்பற்றப்படவில்லை. மருத்துவ பரிசோதனையிலும் போதைப் பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை என்பதால், இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டனர். அரசுத் தரப்பில்…
சென்னை: கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக அரசியல்வாதிகளின் எல்லையற்ற பேச்சுகளை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு காரணமாக, அவர் தனது அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது.இதையடுத்து, பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து, அதை விசாரிக்குமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். அதன்படி, இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “பிஎன்எஸ் சட்டத்தின்படி ஒருவருக்கு எதிராக அளிக்கப்படும் புகார்கள் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தும் போலீஸார், அதில் வழக்குப் பதிய…
சென்னை: நாடுதழுவிய வகையில் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்துக்கு தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், அரசு சேவைகள், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய- மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அளவில் இன்று பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தில் ஆளும் திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதுதவிர ஜாக்டோ – ஜியோ, வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாநில மையம், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு…
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜூலை 9) இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலை 100-102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84.2-86 டிகிரி பாரன்ஹீட் அளவில்இருக்கும் என்று வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கானகடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது. நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) பிஎட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல்,வரலாறு உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 18-ம் தேதி தரவரிசை பட்டியல்: கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, பிஎட் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று (9-ம் தேதி) ஆகும். இதைத் தொடர்ந்து, மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு, பிடித்தமான கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு வரும் 21 முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்.…
