புதுச்சேரி: மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா கடந்த 8-ம் தேதி தொடங்கி வரும் 11-ம் தேதி வரை நடக்கிறது. பக்தர்கள் மாம்பழங்களை பொழியும் மங்களகரமான மாங்கனி திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. துணைநிலை ஆளுநர் ஒப்புதலுடன், காரைக்கால் அம்மையாளர் கோயில் மாங்கனி திருவிழாவை கொண்டாட காரைக்கால் பகுதிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இந்த விடுமுறைக்கு ஈடாக 19-ம் தேதி சனிக்கிழமை செயல்படும் என தெரிவித்துள்ளார்.
Author: admin
மில்லினியல்கள் வளர்க்கப்பட்ட விதத்தில் இருந்து வெகு தொலைவில், இன்றைய குழந்தைகள் எல்லாவற்றையும் ஒரு தட்டில் வைத்திருக்கிறார்கள். மிகவும் உயரடுக்கு பள்ளிகளிலிருந்து, மிகவும் விலையுயர்ந்த கேஜெட்டுகள் மற்றும் சமீபத்திய பொம்மைகள் வரை, அவர்கள் “கனவு வாழ்க்கை” வாழ்கின்றனர்.”இருப்பினும், இந்த வசதிகளை வழங்கும் பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளுக்கு ஒரு” சரியான “குழந்தைப் பருவத்தை உருவாக்க நிறைய தொப்பிகளைக் கையாளுகிறார்கள், சில சமயங்களில் தங்களை இழந்துவிடுகிறார்கள். இருப்பினும், சமூக ஊடகங்களின் உலகில்,” எல்லாவற்றையும் சரியாகச் செய்யுங்கள் “என்ற ஆசை இணையற்றது. பெற்றோர்கள் அவர்களுடன் செல்லும்போது என்ன நேர்ந்தது, தவறுகளைச் செய்வது (அல்லது இரண்டு) சரியான பெற்றோர், ஆனால் சரியானது? ஆழமாக தோண்டுவோம் ..முழுமை ஒரு மாயைமனிதர்கள் இயல்பாகவே அபூரணர்கள், அதில் பெற்றோர்களும் குழந்தைகளும் அடங்குவர். . இது சாத்தியமில்லை, மேலும் பெற்றோர் மற்றும் குழந்தை இருவருக்கும் தேவையற்ற அழுத்தத்தை உருவாக்குகிறது. இங்கே எப்படி …சமூக ஊடக அச்சுறுத்தல்: இவை பெரும்பாலும் நல்ல பிட்களை மட்டுமே காண்பிக்கும்,…
புதுச்சேரி: மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் இன்று (ஜூலை 9) பந்த் துவங்கியது. கடைகள் அடைக்கப்பட்டு, தனியார் பேருந்து ஆட்டோ டெம்போக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடபட்டுள்ளது. அதே நேரத்தில், விடுமுறை எடுக்க அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை கண்டித்தும், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதனையடுத்து புதுச்சேரியில் பந்த் அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை பந்த் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக புதுச்சேரியில் தனியார் பேருந்து ஆட்டோ டெம்போக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திரையரங்குகள், மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. சிறிய கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை மூடப்பட்டுள்ளன. பந்த் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என அறிவுறுத்தியுள்ள தலைமைச் செயலகம், காலை 11 மணிக்குள் அனைத்து துறைகளிலும் வராதவர்கள் பெயர்…
நாங்கள் மளிகை கடைக்குச் செல்லும்போதெல்லாம், புதியதாகவும் ஆரோக்கியமாகவும் தோன்றும் ஒன்றைத் தேடுகிறோம். அழுகிய மற்றும் கிட்டத்தட்ட கெட்டுப்போன காய்கறிகளை ஷாப்பிங் செய்ய யாரும் விரும்புவதில்லை. உறைந்த காய்கறிகள் அல்லது பிற புதிய காய்கறிகள் சிறப்பாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறதுபதில் உங்கள் வாழ்க்கை முறை, விருப்பத்தேர்வுகள் மற்றும் உணவுத் தேவைகளைப் பொறுத்தது. புதிய மற்றும் உறைந்த உற்பத்திகள் இரண்டும் அவற்றின் நன்மைகளையும் தீமைகளையும் கொண்டுள்ளன. புதிய தயாரிப்புகள் சிற்றுண்டி, சாலடுகள் மற்றும் சமையலுக்கு ஏற்றவை, ஆனால் அது விலை உயர்ந்தது மற்றும் விரைவாக கெட்டுப்போகிறது. உறைந்த விளைபொருள்கள், மறுபுறம், வசதியானவை, மலிவு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தவை, ஆனால் பொருட்கள் மற்றும் அமைப்பு மாற்றங்களைச் சேர்த்திருக்கலாம். ஒவ்வொன்றின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் தயாரிப்பு தேர்வுகள் குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்கலாம்.புதிய உணவின் நன்மைகள்புதிய உணவு பெரும்பாலும் அதன் இயற்கையான நன்மை, சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்கு மதிப்பிடப்படுகிறது. நன்மைகளைப்…
குழந்தைகளின் ஆங்கிலத்திறனை மேம்படுத்த, புதுச்சேரி இளங்கோ அடிகள் அரசு பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை இனியா ஸ்ரீ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தரையார்பாளையத்தில் உள்ளது இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு, தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் மொழித் திறன்களில் ஆங்கில மொழித் திறனை வலுப்படுத்தும் நோக்கில், ‘இனியா ஸ்ரீ’ என பெயரிடப்பட்ட பேசும் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை பொம்மையை பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார். இந்த பொம்மையில் ‘ராஸ்பெர்ரி பை 3’ போன்ற சிறிய கணினி அமைப்புகள், ஸ்பீக்கர், மைக்ரோபோன் மற்றும் இணைய வசதி பயன்படுத்தப் பட்டு, தற்போது 5 ஆயிரம் ஆங்கில சொற்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் கடினமான ஆங்கில சொற்களின் அர்த்தங்களை, இந்த செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரிய பொம்மை இனியா ஸ்ரீயிடம் கேட்டவுடன், அழகான ஆங்கில உச்சரிப்பில் பதில் தருகிறது. மாணவர்கள்…
சென்னை: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக காவிரியில் திறக்கப்பட்டு அதிகளவில் கடலில் கலக்கிறது. இப்படி நடவாது தடுத்தால் மட்டுமே 85 ஏரிகளும், குளங்களும், நீர் நிலைகளும் காப்பாற்றப்படும். இதில் தமிழக அரசு உரிய தீர்வு காண பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி – பூதலூர் பகுதிகளில் வறண்டு நிற்கும் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, விவசாயிகள் ‘மினியன்’ ஏரியில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். விவசாயி ஜீவகுமார், ஏரி மேம்பாட்டுக்குழு சார்பில் ரவிச்சந்திரன், மேனாள் பஞ்சாயத்து தலைவர் கமலதாசன் உள்ளிட்டோர் தலைமையில் விவசாயிகளும், ஊர் பொதுமக்களும் இங்கே ஓரணியாய் போராடியுள்ளனர்.கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் சென்று கடலில் வீணாய் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டியே அனைவரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் செங்கிப்பட்டி – பூதலூர், புதிய கட்டளைமேட்டு வாய்க்கால் மூலம் 61 ஏரிகளும், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம்…
மோரிங்கா மற்றும் சியா விதைகள் இரும்பு, துத்தநாகம், ஒமேகா -3 கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, அவை முடி வளர்ச்சியைத் தூண்டவும் வேர்களிலிருந்து முடியை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
பிரேசிலியா: பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள அந்நாட்டு அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடமான அல்வோரடா மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு நல்கப்பட்டது. 144 குதிரைகள் அணிவகுக்க, இந்திய இசையுடன் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடவே பிரேசிலின் பாரம்பரிய நடனமான சம்பா நடனத்தையும் அந்நாட்டுக் கலைஞர்கள் ஆடி பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். முன்னதாக, ரியோ டி ஜெனிரோவில் இருந்து அவர் நேற்று முன்தினம் இரவு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு சென்றார். அங்கு விமான நிலையத்தில் பிரேசில் பெண் கலைஞர்கள் ட்ரம்ஸ் இசைத்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஏராளமான இந்தியர்கள் திரண்டு வந்து அவரை வாழ்த்தி வரவேற்றனர். அதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரேசிலியாவில் இந்திய…
ஷுப்மன் கில் எட்ஜ்பாஸ்டன் வெற்றியில் நாயகனாக உயர்ந்தெழுந்து நிற்கிறார். 430 ரன்களைக் குவித்ததோடு மட்டுமல்லாமல் அருமையான கேப்டன்சியில் இங்கிலாந்தை வெற்றி கொள்ளவும் செய்தார் என்பது செய்தி, ஆனால் இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் ராம்பிரகாஷ் கூறுவது என்னவெனில் ஷுப்மன் கில் வெறுமனே ரன்களை மட்டும் குவிக்கவில்லை, இங்கிலாந்து அணியைக் களைப்படையச் செய்து சிதைத்துவிட்டார் என்று கூறியுள்ளார். ‘தி கார்டியன்’ இதழுக்கு அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது: ஷுப்மன் கில் ஒரு அரிய இன்னிங்ஸை ஆடிவிட்டார். வெறுமனே ரன்களை மட்டும் குவிக்கவில்லை, மாறாக இங்கிலாந்து அணியை களத்தில் நீண்ட நேரம் பந்து வீச வைத்து, பீல்டிங் செய்ய வைத்துக் களைப்படையச் செய்துவிட்டார். களைப்பினால் இங்கிலாந்து பேட்டர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் போனது, எந்தப் பந்தை ஆடுவது, எந்தப் பந்தை விடுவது என்பதில் தெரிவுகளே இல்லாமல் ஏனோ தானோவென்று ஆட நேரிட்டது. இதோடு கிரீசில் அவர்களது இயக்கமும் கால்நகர்த்தல்களையுமே கில்லின் இன்னிங்ஸ் பாதிக்கச் செய்தது.…
சென்னை: இணையதளங்களில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உத்தரவு பிறப்பிக்கும்போது உணர்ச்சிவசப்பட்டது, நீதிமன்ற அறையில் இருந்தவர்களை கலங்கச் செய்தது. கல்லூரியில் படித்த போது, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார் அந்த மாணவி. படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வரும் அவரது நண்பர்கள், அவரது வீடியோ ஒன்று இணையதளங்களிலும், ஆபாச வலைதளங்களிலும் வலம் வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோக்களை முடக்கி, நீக்கவும், எதிர்காலத்தில் அது பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு புகார் அளித்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், அந்தக் காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள அந்த…
