Author: admin

பொதுத்​ துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக் ​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப் ​பெற வேண்​டும், பொதுத் ​துறை நிறு​வனங்​களில் காலிப்​ பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய – மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் கொண்​டுவர வேண்​டும் என்​பன உள்​ளிட்ட 17 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் இன்று (ஜூலை 9) நாடு முழுவதும் பரவலாக பாரத் பந்த் நடைபெற்றது. 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் நடந்த பாரத் பந்த் காரணமாக நாடு முழுவதும் பரவலாக சாலை, ரயில் மறியல்கள், கண்டனப் பேரணிகள், இருசக்கர வாகனப் பேரணிகள் நடைபெற்றன. கேரளாவில் பாரத் பந்த் தாக்கம் பரவலாக உணரப்பட்டது. அங்கே பொது, தனியார் போக்குவரத்து வாகனங்கள் பெரும்பாலும் இயங்கவில்லை. குறிப்பாக, தொலைதூரங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலுமாகவே இயங்கவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். வெறிசோடிய திருவனந்தபுரம் …

Read More

‘காடன்’ படத்துக்குப் பின் பிரபு சாலமனிடம் பேசவில்லை என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தனது தம்பி ருத்ராவை ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளார் விஷ்ணு விஷால். இதனை அவரே தயாரித்து கவுரவ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்து வருகிறது படக்குழு. இதற்காக அளித்த பேட்டி ஒன்றில் ‘காடன்’ படம் குறித்து பேசியிருக்கிறார் விஷ்ணு விஷால். அதில், “பலரைப் பற்றி என்னால் பேச முடியும். ஆனால், அதனை விரும்பவில்லை. ‘காடன்’ படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை இருப்பேன். ராணா தான் இறப்பதாக காட்சி இருந்தது. நான் தான் கடைசியில் காட்டை பாதுகாப்பவனாக இருந்தேன். ஆனால், பட வெளியீட்டுக்கு 5 நாட்களுக்கு முன்பு இடைவேளை உடன் எனது காட்சிகள் முடிந்துவிட்டதை அறிந்தேன். ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பின், ‘காடன்’ படத்துக்கான பேட்டிகள் அளித்துக் கொண்டிருக்கும்போது இது தெரிய வருகிறது. அப்படியிருந்தும் 5…

Read More

சென்னை: திருத்தணி தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி தொகுதியில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாததால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையில், 4 அடுக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழுமை பெறாத நிலையில், கடந்த ஏப்.18-ம் தேதி அவசர கதியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுவரை இம்மருத்துவமனை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு வரவில்லை. மின் இணைப்பு இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. மேலும், ஸ்கேன் எடுக்கும் அறைகள் சிறிய சிறிய அறைகளாகக் கட்டப்பட்டுள்ளதால், அவை இடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகின்றன. மொத்தத்தில், மக்கள் வரிப்…

Read More

பொங்கல் பண்டிகையின்போது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால், 1 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 மாத வேலையிழப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது அரசு சார்பில். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. வரும் 2026 ஜனவரி பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதற்காக வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை கடந்த ஏப்ரலில் வெளியானது. மேலும், வேட்டி உற்பத்திக்கான நூல் விசைத் தறியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து உற்பத்தி பணியை விசைத்தறியாளர்கள் தொடங்கியுள்ளனர். சேலைக்கான நூல் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. இதனிடையே, கடந்தாண்டை விட இந்தாண்டு குறைவான எண்ணிக்கையில் வேட்டி, சேலை உற்பத்திக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசைத்தறி உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 248 விசைத் தறி கூட்டுறவு…

Read More

இது ஒரு ஒளியியல் மாயை, இது உங்கள் கண்களை தவறாக வழிநடத்துவதையும், உங்கள் மூளைக்கு சவால் விடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நீங்கள் அதை முதன்முறையாகப் பார்க்கும்போது, ​​படம் ரோர் என்ற வார்த்தையின் கட்டமாகத் தெரிகிறது, இது மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. ஆனால் இந்த மறுபடியும் மறுபடியும் அமைதியாக அமைந்திருப்பது சரியாக உச்சரிக்கப்பட்ட சொல் கர்ஜனை – நீங்கள் அதைத் தேட வேண்டும். எளிதாகத் தெரிகிறது? ஒரு பிடிப்பு உள்ளது: அவ்வாறு செய்ய உங்களுக்கு 7 வினாடிகள் மட்டுமே உள்ளன!இது போன்ற மாயைகள் உங்கள் செறிவு, காட்சி திறன் மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்த ஒரு சிறந்த வழியாகும். நம் மூளை மீண்டும் மீண்டும் வடிவங்களைக் கையாளும் விதத்தை அவை பயன்படுத்திக் கொள்கின்றன, இதனால் சிறிய மாற்றங்கள் தவறவிடுகின்றன. எனவே உங்கள் பார்வையை வளர்த்து, பயணம் செய்யுங்கள். முதல் முயற்சியில் பெரும்பான்மையான மக்கள் அதை தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் the இப்போதே அதைப்…

Read More

கோவை: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நடப்புக் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கல்விப் பிரிவு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு, தொழிற்கல்விப் பிரிவு இடஒதுக்கீட்டுக்கான இணையவழிக் கலந்தாய்வு தொடங்கியது. வரும் 15-ம் தேதி வரை நடக்கிறது. இது தொடர்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு 2025-26 கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கும் (வேளாண்மைப்பிரிவு) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மறுமதிப்பீடு, மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி மாற்றம் அவற்றுக்கான சரிபார்ப்புப் பணிகள் கடந்த 26-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களின் இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு நேரடி கலந்தாய்வு வரும் 14-ம் தேதி நடைபெறும். அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை…

Read More

‘கில்’ ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். ‘பைசன்’ படத்தைத் தொடர்ந்து, ‘கில்’ தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக ரமேஷ் வர்மா “துருவ் விக்ரம் உடன் இணைந்து பணிபுரிய இருப்பது ‘கில்’ ரீமேக் அல்ல. அடுத்த ஆண்டு காதல் கதை ஒன்றில் அவரோடு பணிபுரிய உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ‘கில்’ தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவில்லை என்பது உறுதியாகிறது. இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் லக்‌ஷயா, ராகவ் ஜுயல், தன்யா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்த பாலிவுட் படம் ‘கில்’. இந்தப் படத்துக்கு விக்ரம் மாண்ட்ரோஸ், ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்திருந்தனர். கரண் ஜோஹர், குனீத் மோங்கா இணைந்து தயாரித்தனர். இப்படம் கடந்த ஆண்டு ஜுலை 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘கில்’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் கொண்டாடப்பட்டு, படமும் பெரும் வரவேற்பைப்…

Read More

சென்னை: கடலூர் ரயில் விபத்தை திமுகவினர் மொழி பிரச்சினையாக்குகின்றனர் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நடந்த ரயில் விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அந்தப் பகுதி ரயில்வே கேட் கீப்பரின் தவறினால் நடந்துள்ளது. அந்த நபர் உறுதியாக தண்டிக்கப்பட வேண்டும். அதில் எந்த மாற்று கருத்துமில்லை. இது போன்ற விபத்துகளை தடுப்பதற்காக தான், ரயில்வே கேட் இருக்கும் பகுதிகளில் சுரங்கப்பாதையை ரயில்வே துறை அமைத்து வருகிறது. இந்நிலையில், செம்மங்குப்பத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே துறை சார்பில் நிதி ஒதுக்கி ஒப்புதல் அளிக்கப்பட்டு ஒரு ஆண்டாகியும், அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர் வழங்கவில்லை என்பது குரூரமான உண்மை. அதை பற்றி தமிழக அரசு ஏன் வாய் திறக்க மறுக்கிறது. இதற்கிடையில் திமுகவினர் சிலர், அந்த விபத்துக்கு காரணம் கேட்…

Read More

புதுடெல்லி: நாணயங்களை விட அன்றாட பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதையே பொதுமக்கள் விரும்புவதால், 50 ரூபாய் நாணயத்தை சந்தையில் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கெடுப்பின்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்புள்ள நாணயங்களை விடவும், ரூபாய் நோட்டுகளுக்கே பொதுமக்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். எனவே, 50 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் துறையின் பரிசீலனையில் இல்லை. இந்த கணக்கெடுப்பின்போது, எடை மற்றும் அளவு போன்றவை நாணயங்களின் பயன்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க தடைகளாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு உடையோருக்கான பயன்பாட்டை எளிதாக்குவதற்காக 50 ரூபாய் நாணயங்களை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ரோஹித் தண்ட்ரியால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…

Read More

கார்டியோ இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, அது போதும். கார்டியோ மட்டும் தசை வெகுஜனத்தை பாதுகாக்காது; அதற்கு எதிர்ப்பும் தேவை.படிக்கட்டுகளில் ஏறுவது ஏற்கனவே சிறந்தது, ஆனால் எதையாவது சுமந்து செல்வது, மளிகைப் பொருட்கள், ஒரு பையுடனும், ஒரு தண்ணீர் பாட்டில் கூட, அதை ஏற்றப்பட்ட கேரியாக மாற்றுகிறது, இது கோர், கால்கள் மற்றும் தோள்களில் ஈடுபடுவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஒரு பத்திரிகையின் கூற்றுப்படி, ஏற்றப்பட்டவை செயல்பாட்டு வலிமையை ஊக்குவிக்கிறது மற்றும் மெலிந்த தசை திசுக்களை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.இந்த தினசரி செயல், வழக்கமாக கவனிக்கப்படாதது, தொடர்ந்து செய்யும்போது ஒரு ரகசிய வலிமை பில்டராக இருக்கலாம்.

Read More