Author: admin

சென்னை: வல்​லக்​கோட்டை முரு​கன் கோயி​லில் நடந்​தது வன்​கொடுமை அல்ல பெண் கொடுமை என தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை குற்​றம்​சாட்டி உள்​ளார். காஞ்​சிபுரம் மாவட்​டம் வல்​லக்​கோட்டை முரு​கன் கோயில் கும்​பாபிஷேக விழா​வில் பங்​கேற்க ‘‘தனக்கு அனு​மதி மறுக்​கப்​பட்​ட​தாக​வும், அதற்கு சாதிய ஒடுக்​கு​முறையே காரணம். அதை ஒரே நாளில் தீர்த்​து​விட முடி​யாது’’ என்று காங்​கிரஸ் மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை குற்​றம்​சாட்​டி​யிருந்​தார். மேலும், ‘‘வழி​பாட்​டுத் தீண்​டா​மையை ஒழிக்க வேண்​டும். செல்​வப்​பெருந்​தகையை சாதி அடிப்​படை​யில் தடுத்து நிறுத்​தி​னார்​களா?’’ என்​பதை விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என விசிக எம்​.பி. ரவிக்​கு​மார் தெரி​வித்​திருந்​தார். மேலும், மார்க்​சிஸ்ட் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்​சி​யினரும் கண்​டனம் தெரி​வித்​திருந்​தனர். இந்​நிலை​யில், வல்​லக்​கோட்டை கோயி​லில் நடந்​தது வன்​கொடுமை அல்ல பெண் கொடுமை என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை குற்​றம்​சாட்டி உள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: திருச்​செந்​தூரில் நடை​பெற்ற கும்​பாபிஷேக விழா​வில் முரு​கனை தரிசிக்க நினைத்​தேன். இறை…

Read More

சென்னை: சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை புகாரின் அடிப்​படை​யில் நடிகை அருணா வீட்​டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். தமிழ் சினி​மா​வில் 1980-களில் முன்​னணி நடிகை​யாக வலம் வந்​தவர் அருணா. இயக்​குநர் பார​தி​ராஜா இயக்கிய கள்​ளுக்​குள் ஈரம் படத்​தின் மூலம் இவர் தமிழ் சினி​மா​வில் அறி​முக​மா​னார். தொடர்ந்து மகரந்​தம், சிவப்பு மல்​லி, நீதி பிழைத்​தது, நாடோடி ராஜா, டார்​லிங் டார்​லிங் டார்​லிங் உட்பட தமிழ், தெலுங்கு உள்​ளிட்ட பல்​வேறு மொழி திரைப்​படங்​களில் நடத்துள்​ளார். ஆந்​தி​ராவைச் சேர்ந்த இவர், தொழில​திப​ரான மோகன் குப்தா என்​பவரை திரு​மணம் செய்து கொண்​டு, குடும்​பத்​துடன் சென்னை நீலாங்​கரை கபாலீஸ்​வரர் நகரில் வசித்து வரு​கிறார். வீடு, பங்​களா​வில் உட்​கட்​டமைப்பு அலங்​கார பணி​களை மேற்​கொள்​ளும் நிறு​வனத்தை மோகன் குப்தா நடத்தி வரு​கிறார். இந்​நிலை​யில், மோகன் குப்​தா​வின் நீலாங்​கரை​யில் உள்ள வீட்​டில் நேற்று காலை 5 பேர் கொண்ட அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் காலை 7 மணி முதல் சோதனை நடத்​தினர். மோகன் குப்தா…

Read More

சில சர்கோமாக்கள் உடலுக்குள் ஆழமாக உருவாகின்றன, அதாவது வயிறு அல்லது மார்பு போன்றவை. இவை நீங்கள் உணரக்கூடிய கட்டிகளை ஏற்படுத்தாது, ஆனால் போன்ற பிற அறிகுறிகளை ஏற்படுத்தும்:வயிற்று வலி அல்லது முழுமையின் உணர்வுமலச்சிக்கல் அல்லது இரத்தக்களரி மலம் போன்ற குடல் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள்சர்கோமா நுரையீரலுக்கு அருகில் இருந்தால் மூச்சு அல்லது மார்பு வலியின் குறைவுஇந்த அறிகுறிகள் பல நிபந்தனைகளால் ஏற்படக்கூடும் என்பதால், சர்கோமா முதல் சந்தேகமாக இருக்காது. இருப்பினும், தொடர்ச்சியான அல்லது அசாதாரண அறிகுறிகள் ஒரு மருத்துவரால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.மறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால் எப்போதும் மருத்துவ நிபுணரை அணுகவும்

Read More

விண்ட்ஹோக்: நமீபியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன்னை வரவேற்க வந்திருந்த கலைஞர்களுடன் இணைந்து பழங்கால இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார். 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி நேற்று நமீபியா சென்றடைந்தார். அவருக்கு தலைநகர் விண்ட்ஹோக்கிலுள்ள விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான இசைக் கலைஞர்கள் குவிந்திருந்தனர். ஒரு பக்கத்தில் மேளம் போன்ற பழங்கால தோல் கருவியை வாசித்தபடி கலைஞர்கள் இருந்தனர். அப்போது அங்கு சென்ற பிரதமர் மோடி, கலைஞர்களுடன் இணைந்து தனது கைகளால் தோல் இசைக் கருவியை வாசித்து மகிழ்ந்தார். பிரதமர் மோடி உற்சாகமுடன் இசைக்கருவியை வாசிப்பதைக் கண்ட அந்தக் கலைஞர்கள் கூடுதல் உற்சாகத்துடன் கருவியை இசைத்து மகிழ்ந்தனர்.

Read More

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பேரவை துணைத் தலைவரிடம் நேரு எம்எல்ஏ ராஜினாமா கடிதம் அளித்தார். புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ நேரு. இவர் ஆளும் என்.ஆர்.காங்கிரஸுக்கு தனது ஆதரவை அளித்து வந்தார். இதனிடையே சுயேச்சை எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்தி, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கினார். இதைத் தொடர்ந்து சமூக அமைப்புகளுடன் சென்று டெல்லியில் அவர் போராட்டம் நடத்தினார். இந்நிலையில் ஆளுநர், முதல்வர் அதிகார மோதலால் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி இன்று காலையில் சட்டப் பேரவைக்கு வந்த நேரு அங்குள்ள படிக்கட்டில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையில் பட்டியலின மக்களுக்கு இடமில்லாத அமைச்சரவை எதற்கு ? உடனடியாக புதுச்சேரி சட்டப்பேரவையை கலைக்க வேண்டும்.…

Read More

சென்னை: வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த செட்-ஆப் பாக்ஸ்களுக்கு பதிலாக ரூ.500 மதிப்பிலான புதிய செட்-ஆப் பாக்ஸ்களை பொருத்த நிர்பந்திப்பதாக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் நடைபெற்று வரும் சீர்கேடுகளை முதல்வரின் கவனதுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தின் மாநில தலைவர் சுப.வெள்ளைச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகத்தை சந்தித்து இன்று கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகம் முழுவதும் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் 85 லட்சம் பேர் உள்ளனர். இதில் அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் 11 லட்சம் பேர். இந்தியாவில் வேறு எங்கும் அரசு கேபிள் டிவி கிடையாது. தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் ஒளிபரப்பை எடுத்து நடத்தி வரும் கேபிள் ஆபரேட்டர்களுக்கு முறையான உரிமம் மத்திய அரசால்…

Read More

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க விரும்புகிறீர்களா? உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வரைபட சூத்திரம் முக்கியமாகும் என்று ஒரு சிறந்த மருத்துவர் கூறுகிறார். உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம், உலகளவில் இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முக்கியமானது. மும்பையைச் சேர்ந்த டாக்டர் பிரமோத் திரிபாதி தனது வரைபட சூத்திரத்தைப் பயன்படுத்தி உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த முப்பரிமாண முறை உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான இயற்கையான வழியாகும். அவரது அணுகுமுறை உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான வாழ்க்கை முறை அடிப்படையிலான தலையீடுகள் ஆகும். வரைபட சூத்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். மெக்னீசியத்திற்கு மீவரைபடத்தில் உள்ள ‘எம்’ என்பது மெக்னீசியம் என்ற கனிமத்தைக் குறிக்கிறது, இது இரத்த…

Read More

ஈஸ்ட் ரூதர்போர்ட்: நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி. இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள ஈஸ்ட் ரூதர்போர்ட் நகர வட்டத்தில் இந்த அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே பிஎஸ்ஜி அணி துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் முதல் 25 நிமிடங்களுக்குள் 3 கோல்களை பிஎஸ்ஜி பதிவு செய்து முன்னிலை பெற்றது. இதில் பிஎஸ்ஜி அணியின் பேபியன் ருய்ஸ் ஆட்டத்தின் 6 மற்றும் 24-வது நிமிடங்களில் இரண்டு கோல்களை பதிவு செய்தார். ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் டெம்பெல்லே ஒரு கோல் பதிவு செய்தார். முதல் பாதி ஆட்டத்துக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணி களத்தில் சில முக்கிய மாற்றங்களை செய்தது. இருப்பினும் அதன் பலனை அந்த அணியால் அறுவடை செய்ய முடியவில்லை.…

Read More

திருப்புவனம்: காவல் நிலைய மரணங்களை மூடி மறைக்க திமுகவினர் பேரம் பேசுகின்றனர் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தனிப்படை போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது தாயார் அன்னம்மாளுடன் வந்து சந்தித்து ஆறுதல் கூறினார். ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “ஒரு இளைஞனை போலீஸார் அடித்தே கொலை செய்துள்ளனர். புகார் அளித்த நிகிதா மீது பல மோசடி புகார்கள் இருந்தும் ஏன் அவரை கைது செய்யவில்லை. நிகிதா தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார். உத்தரவு பிறப்பித்த அந்த உயர் அதிகாரி யார்? அவர் மீது விசாரணை நடத்தப்படவில்லை. மாநில சுயாட்சி, மாநில உரிமை பேசும் தமிழக முதல்வர், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ-க்கு ஏன் வழக்கை மாற்றினார். முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள…

Read More

சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 10) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். ஓரிரு இடங்களில் 15-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். இத்தகவல்களை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read More