ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த இந்தப் படம் மூலம் தனுஷ் இந்தியில் அறிமுகமாகி இருந்தார். இந்தப் படம் 2013 -ம் ஆண்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. இதை இப்போது அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் ஆக.1-ம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்கிறது. ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் ஒரு தலைக்காதலைச் சொல்லும் படமான இது புதிய கிளைமாக்ஸ் காட்சியுடன் 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன் வெளியாக இருக்கிறது.
Author: admin
விழுப்புரம்: பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. இதில், அன்புமணியை விமர்சித்து பலரும் பேசினர். மேலும், பாமகவில் கூட்டணி உட்பட அனைத்து நிலையிலும் முடிவெடுக்கும் அதிகாரம் நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸூக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. பதவிக்காலம் முடிவடைந்தது: இதற்கிடையே, பாமக…
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் 2 பெண்கள் உள்ளிட்ட 12 நக்சலைட்கள், போலீஸ், சிஆர்பிஎப் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். இவர்களில் ரூ.28.50 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட 9 பேரும் அடங்குவர். அரசின் ‘உங்கள் வீடு, கிராமத்துக்கு திரும்பு’ பிரச்சாரத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 1,005 நக்சலைட்கள் சரண் அடைந்துள்ளனர். இந்த சாதனை அரசின் தொலைநோக்கு கொள்கைகள், பாதுகாப்புப் படைகளின் தொடர் நடவடிக்கை மற்றும் உள்ளூர் சமூகங்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மாவோயிஸ்ட்களின் வெற்று சித்தாந்தத்தால் வழிதவறிச் சென்ற இளைஞர்கள் மீண்டும் நல்வழிக்கு திரும்பியுள்ளனர்.
திருவாரூர்: திருவாரூரில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 4 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக நேற்று பிற்பகல் திருவாரூர் வந்தார். காட்டூர் கலைஞர் கோட்டத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், பின்னர் அங்குள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, பவித்திர மாணிக்கம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து திருவாரூர் துர்க்காலயா சாலை, தெற்கு வீதி, பனகல் சாலை வழியாக 4 கி.மீதூரம் நடந்து சென்று பொதுமக் களை சந்தித்தார். அப்போது, வழி நெடுகிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு கட்சித் தொண்டர்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின். மேலும், பொதுமக்கள் பலர் மனுக்களையும்…
ஆரோக்கியமான உணவுகளுடன் கூட, சில சமயங்களில் அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால் நம் உடலை எரிபொருளாகக் குறைப்போம். இதற்காக, ஆற்றலை அதிகரிக்க, எடை இழப்பு இலக்குகளை ஆதரிக்க, கூடுதல் உதவிகளை நாங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும், எல்லா சப்ளிமெண்டுகளும் பாதுகாப்பானவை அல்ல, சில உண்மையில் உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும். இந்த கவலைக்குரிய இந்த உண்மையைப் பார்ப்போம் …உணவு சப்ளிமெண்ட்ஸ் என்றால் என்னவைட்டமின்கள், தாதுக்கள், மூலிகைகள், அமினோ அமிலங்கள் மற்றும் பிற பொருட்களுக்கு நாம் எடுக்கும் ஒன்று உணவு சப்ளிமெண்ட்ஸ். வெறும் உணவு மூலம் நமது ஊட்டச்சத்து இலக்குகளை அடைய முடியாவிட்டால் கூடுதல் கைக்குள் வரும் என்று கூறப்படுகிறது. அவை மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், பொடிகள் மற்றும் திரவங்கள் போன்ற வடிவங்களில் வருகின்றன. வைட்டமின் டி, கால்சியம், கிரீன் டீ சாறு, மஞ்சள் மற்றும் உடற்கட்டமைப்பு சப்ளிமெண்ட்ஸ் ஆகியவை பொதுவான எடுத்துக்காட்டுகளில் அடங்கும்.பல சப்ளிமெண்ட்ஸ் உண்மையில் உதவியாக இருந்தாலும், சில கல்லீரலுக்கு தீங்கு…
வடோதரா: குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் வடோதரா மாவட் டம் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் (மஹி) ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கம்பீரா – முஜிப்புர் பகுதிகளை இணைக்கும் பாலம் இருந்தது. வழக்கம்போல நேற்று காலை வாகனங்களில் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைக்கும் சென்று கொண்டிருந்தனர். திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்ற பலர் வாகனங்களுடன் ஆற்றில் விழுந்தனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றில் நீந்திச்சென்று பலரை மீட்டனர். தகவலறிந்துவிரைந்துவந்த போலீஸார், தீயணைப்புப் படையினர், மாநில மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த பாலம் ஆனந்த் மாவட்டத்தையும், வடோதரா மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. பாலம் இடிந்து விழுந்தது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த 2…
புதுடெல்லி: பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் நாடுகளில் பயணத்தை முடித்துள்ள பிரதமர் மோடி தற்போது நமீபியாவுக்கு சென்றுள்ளார். முன்னதாக, பிரேசிலில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கடந்த 6, 7-ம் தேதிகளில் உலக தலைவர்களுடன் கலந்துகொண்டு மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து நேற்று நமீபியாவுக்கு அவர் வந்துள்ளார். நமீபியா நாட்டின் விண்ட்ஹோக் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா நேரில் வந்து வரவேற்று மகிழ்ந்தார். விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி கலைஞர்கள் வரவேற்பு அளித்த நிலையில், அவர்கள் வைத்திருந்த டிரம்ஸை வாசித்து பிரதமர் மோடி மகிழ்ந்தார். நமீபியா அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும்…
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 5 கிராமங்களைச் சேர்ந்த 19 பேரின் 17.52 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 19 கிராமங்களில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க 2023 அக்டோபர் 31-ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அதன்படி நில மதிப்பு மறு நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் ஜூன் 25-ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தொடர்ந்து, பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கம்மாபுரம் கிராமங்களைச் சேர்ந்த 19 பேரிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களது 17.52 ஏக்கர் நிலத்தை வழங்க அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். மேலும், ரூ.9.22 கோடி மதிப்பிலான நிலத்தை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு பதிவு செய்து கொடுத்தனர். நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை…
புதுடெல்லி: மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நேற்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு தொழிலாளர் அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் பணி நாட்கள் மற்றும் ஊதியத்தை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு, வங்கி. இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. பெரும்பாலான மாநிலங்களில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தொழிலாளர் களிடையே அமோக ஆதரவு காணப்பட்டது. இதனால், பொது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு…
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கடந்த 2 நாள் பயணத்தில் எழுச்சியுடன் திரண்ட மக்களே அதற்கு சாட்சி என்று பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற உயரிய லட்சியத்துடன் எனது எழுச்சிப் பயணத்தை கோவையில் கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கினேன். இந்த பயணத்தின்போது மக்கள் என்னிடம் சொல்லிய விஷயங்கள், கவலைகள், வேதனைகள், அவர்கள் படும் அல்லல்கள், சோகங்கள் சொல்லொண்ணாதவை. உங்களின் (முதல்வர் ஸ்டாலின்) காட்டாட்சியும், கொடுங்கோல் ஆட்சி பற்றியும் விவசாயிகள், நெசவாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், செங்கல் சூளை உற்பத்தியாளர்கள், நகைத் தொழில் செய்பவர்கள், சிறு குறு தொழில் நிறுவனத்தினர், பஞ்சாலை உரிமையாளர்கள் என்று பலதரப்பட்ட மக்கள்படும் கஷ்டங்களை சந்தித்தபோது எனது நெஞ்சம் கலங்கியது. மனவேதனை அடைந்தேன். ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஆளும் உங்கள் அரசின் மீது கடுங்கோபத்தில் இருக்கின்றன. மின்கட்டணம்,…
