ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ராஜ ஆண்டனி நடித்து கடந்த 4-ம் தேதி வெளியான படம் பறந்து போ. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. கிரேஸ் ஆண்டனி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர். இயக்குநர் ராம் பேசும்போது, “நிறைவான மகிழ்ச்சியான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இந்தப் படம் திரைக்கு வர வேண்டும் என்பதில் என்னைவிட என் உதவி இயக்குநர்கள்தான் ஆர்வமாக இருந்தார்கள். சினிமா என்பது கணிக்க முடியாத விளையாட்டு. சமகால தலைமுறையினருடன் இந்தப் படம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் என்னுடைய படக்குழுவினர் அனைவருக்கும், என் மீது நம்பிக்கை வைத்து படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் ராகுலுக்கும் நன்றி” என்றார்.
Author: admin
Last Updated : 10 Jul, 2025 05:19 AM Published : 10 Jul 2025 05:19 AM Last Updated : 10 Jul 2025 05:19 AM சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கோவை மாவட்டம் வடவள்ளியில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது, “தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா, இல்லையா என்ற முகவரியே இல்லை’’ என்று விமர்சித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சொந்தமாக சிந்தித்து அரசியல் முழக்கங்களை உருவாக்க முடியாமல், கடந்த 2021-ம் ஆண்டுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற அரசியல் முழக்கத்தை, இன்றைக்கு காலப் பொருத்தம் இல்லாமல் பேசி…
பாரம்பரியமாக, மருந்துகள் எப்போதுமே உணவுடன் அல்லது உணவு இல்லாமல் தண்ணீருடன் எடுக்கப்படுகின்றன. சிலர் தங்கள் மருந்துகளை பாலுடன் எடுக்க விரும்புகிறார்கள், ஏனெனில் இது சுவைக்குப் பிறகு கசப்பை ஓரளவு மறைக்கிறது. பின்னர் தங்கள் காலை காபி அல்லது தேநீர் மூலம் தங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ள விரும்புவோர் உள்ளனர், முதன்மையாக வசதிக்காக, மற்றும் காபி/தேநீருக்குப் பிறகு நேராக தண்ணீர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இருப்பினும், சில நேரங்களில் சில மருந்துகள் தேநீர்/காபிக்கு வலுவாக செயல்படலாம் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் அல்லது பக்க விளைவுகளைத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தேநீர் அல்லது காபியுடன் நீங்கள் எடுக்கக் கூடாத 7 மருந்துகள் இங்கே.தைராய்டு மருந்துகள்ஹைப்போ தராக்ஸைன் போன்ற தைராய்டு மருந்துகள் ஹைப்போ தைராய்டிசத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன, இது உங்கள் உடல் போதுமான தைராய்டு ஹார்மோனை உருவாக்காத ஒரு நிலை. உங்கள் தைராய்டு மருந்துடன் விரைவில் அல்லது தேநீர் குடிப்பது உங்கள் உடலுக்கு மருந்தை உறிஞ்சுவதை…
சீன உதவித்தொகை திட்டத்துடன் உறவுகளை குறைக்க ஏழு அமெரிக்க பல்கலைக்கழகங்களை ஹவுஸ் குடியரசுக் கட்சியினர் கேட்டுள்ளனர், இது சட்டமியற்றுபவர்கள் சீன அரசாங்கத்திற்கான தொழில்நுட்பத்தைத் திருடுவதை நோக்கமாகக் கொண்ட “மோசமான வழிமுறை” என்று மேற்கோள் காட்டுகின்றன.சட்டமியற்றுபவர்கள் செவ்வாயன்று டார்ட்மவுத் கல்லூரி, நோட்ரே டேம் பல்கலைக்கழகம் மற்றும் ஐந்து பள்ளிகளுக்கு கடிதங்களை அனுப்பினர், சீனா உதவித்தொகை கவுன்சில் (சிஎஸ்சி) உடனான கூட்டாண்மை குறித்து எச்சரிக்கின்றன. சி.எஸ்.சி என்பது சீன அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு ஆய்வு-வெளிநாட்டு திட்டமாகும், இது ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க நூற்றுக்கணக்கான சீன பட்டதாரி மாணவர்களுக்கு பணம் செலுத்துகிறது. பட்டம் பெற்ற பிறகு, இந்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் சீனாவுக்கு திரும்ப வேண்டும்.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஹவுஸ் தேர்வுக் குழுவின் தலைவரான குடியரசுக் கட்சியின் பிரதிநிதி ஜான் மூலேனர், இந்த திட்டத்தை அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தினார். சி.எஸ்.சி ஒரு கல்வி கூட்டாண்மை என்று கூறுகிறது என்று அவர் எழுதினார்,…
புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் முதன்முறையாக மதுபானத் தொழிலுக்கான மெகா முதலீட்டு மாநாடு இன்று (ஜுலை 10) நடைபெற உள்ளது. இதில், ரூ.5,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி.யில் பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க முதலீட்டு மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதன்முறையாக மது உற்பத்தியை ஊக்குவிக்கும் முதலீட்டு மாநாடும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை லக்னோவின் இந்திரா காந்தி பிரதிஷ்டானில் மாநில கலால் துறை நடத்துகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் எனவும் சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி.யில் பிற தொழில்களுடன் இணைந்து மதுபான தயாரிப்புக்கும் கடந்த ஆண்டுகளில் முதலீட்டு திட்டங்கள் கையெழுத்தாகின. அவற்றில் சில தற்போது செயல்பாட்டில் உள்ளன. இச்சூழலில், உ.பி.யில் மதுபான உற்பத்தி அதிகரித்தால் அரசுக்கு கலால் வரி வருமானம் அதிகரிக்கும் என்பதால் மதுபானத் தொழிலுக்கு என தனி மாநாடு நடைபெறுகிறது.…
லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (10-ம் தேதி) தொடங்குகிறது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் லீட்ஸில் நடை பெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. எட்ஜ்பாஸ்டன் போட்டியில் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறைக்கு இந்திய அணி பதிலடி கொடுத்து வெற்றி கண்டிருந்தது. பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் 269…
மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடித்த ‘ஒரு நொடி’ படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம், ‘ஜென்ம நட்சத்திரம்’. இதில் மால்வி மல்கோத்ரா, காளி வெங்கட், முனீஷ்காந்த், தலைவாசல் விஜய், வேல.ராமமூர்த்தி என பலர் நடித்துள்ளனர். கேஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அமோகம் ஸ்டூடியோஸ், வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், ஜூலை 18-ல் வெளியிடுகிறார். இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தமன், “இந்தப் படம், ஹாலிவுட்டில் வெளியான சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லரான ‘ஓமன்’ படம் போல இருக்கும். ‘ஒரு நொடி’ படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு எப்படி அதிர்ச்சியானதாக இருந்ததோ அதேபோல இதன் கிளைமாக்ஸும் கணிக்க முடியாததாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இதில் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன். ‘ஒரு நொடி’ படத்தை விட இது இன்னும் மேம்பட்டதாக இருக்கும்” என்றார்.
சென்னை: அதிமுகவை தோழமை கட்சியாக கருதியே அவர்களது கூட்டணி குறித்து விமர்சிக்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் இருந்து நான் வெளியேறியபோது, ‘‘தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க’’ என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை வாழ்த்தினார். அவருக்கு தம்பியாக களத்தில் நான் பணியாற்றியது அதிமுக தலைவர்களுக்கு தெரியும். பாஜகவால் அதிமுகவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பழனிசாமி அறியாமல் இருக்கிறார். அதிமுக – பாஜக இடையே இணக்கமான உறவு ஏற்பட வேண்டும் என நான் எங்கேயும் சொல்லவில்லை. அது என் ஆசையும் இல்லை. திராவிட இயக்கமாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் அதிமுக, பாஜகவால் பாதிக்கப்படக் கூடாது, செல்வாக்கை இழக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் விமர்சிக்கிறோம். அதிமுக வலுவாக இருந்தால் பாஜகவால் காலூன்ற முடியாது. பாஜக காலூன்றினால் விசிகவுக்கோ, திருமாவளவனுக்கோ பாதிப்பு என்ற எண்ணம் அல்ல. ஒட்டு மொத்தமாக தமிழ் சமூகம் பாதிக்கும்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கலப்பட கள் குடித்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹைதராபாத் கூகட்பல்லியில் நேற்று அதிகாலை கலப்பட கள் குடித்த 19 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தனர். இவர்களில் சிலர் தனியார் மருத்துவமனைக்கும், சிலர் செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், தெலங்கானா மாநில கலால் துறை அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர். கலப்பட கள் விவகாரத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி…
துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 161 ரன்களும் விளாசிய இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் 15 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசையில் ஷுப்மன் கில் டாப் 10-க்குள் இடம் பெறுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் அவர், அதிகபட்சமாக 2023-ம் ஆண்டு செப்டம்பரில் 14-வது இடம் பிடித்திருந்தார். இங்கிலாந்தின் ஹாரி புரூக் (886), சகநாட்டைச் சேர்ந்த ஜோ ரூட்டை (868) 2-வது இடத்துக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் (867) 3-வது இடத்திலும், இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (858) 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (813) 5-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடத்தில் தொடர்கிறார். முகமது சிராஜ் 6 இடங்கள் முன்னேறி 22-வது இடத்தில்…
