இதய பிரச்சனையின் மிகவும் பொதுவான மற்றும் நன்கு அறியப்பட்ட அறிகுறி மார்பு வலி அல்லது அச om கரியம். இந்த வலி பெரும்பாலும் மார்பின் நடுத்தர அல்லது இடது பக்கத்தில் அழுத்தம், இறுக்கம், அழுத்துதல் அல்லது கனமானதாக விவரிக்கப்படுகிறது. யாரோ உங்கள் மார்பில் அழுத்துவது அல்லது உட்கார்ந்திருப்பது போல் உணரலாம். சில நேரங்களில், வலி கூர்மையானது அல்லது எரியும். பெரும்பாலும் எந்த வலியும் இல்லை, ஆனால் “ஒரு யானை மார்பில் அமர்ந்திருப்பது” போல் உணர்கிறது. இந்த அச om கரியம் பல நிமிடங்கள் நீடிக்கும் அல்லது வந்து அலைகளில் செல்லலாம். இது உங்கள் கைகள் (குறிப்பாக இடது கை), கழுத்து, தாடை, முதுகு அல்லது உங்கள் வயிறு போன்ற உங்கள் மேல் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இந்த வகையான வலியை நீங்கள் கவனித்தால், குறிப்பாக ஓய்வு அல்லது ஒளி செயல்பாட்டின் போது, உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம், ஏனெனில்…
Author: admin
சித்தூர்: மாம்பழ விவசாயிகளிடம் குறைகளை கேட்க நேற்று சித்தூர் மாவட்டம் வந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க போலீஸ் நிபந்தனைகளை மீறி ஆயிரக்கணக்கான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் குவிந்ததால், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகமானதால், மாங்காய் மண்டிகளில் மாங்காய்களை மிக குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்க நேரிட்டது. கிலோவுக்கு ரூ.4 மானியம் கொடுப்பதாக ஆந்திர அரசு அறிவித்தும் அறுப்பு கூலி கூட கட்டுப்படியாகாததால், சித்தூர், திருப்பதி, மதனபல்லி, நெல்லூர், ஓங்கோல், கர்னூல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மாங்காய்களை சாலைகளில் கொட்டி அழித்து வருகின்றனர். இதனால் மா விவசாயிகளின் பிரச்சினைகளை தெலுங்கு தேசம் கட்சி, மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி வருகை: இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மா விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிய முடிவு செய்து, நேற்று மா விளைச்சல்…
சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2,530 இடங்கள் இருக்கின்றன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 16-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வரை விண்ணப்பித்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 14-ம் தேதியுடன் முடிவடையும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் ஜூலை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் /www.tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறியலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
நடிகர் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கி இருக்கிறார். பிளேஸ்மித் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். ஆக.1-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி அறிமுக இயக்குநர் டி.ராஜவேல் கூறும்போது, “ஹீரோ தர்ஷன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குகிறார். அங்கு சென்ற பிறகு அதிர்ச்சியான ஒரு விஷயம் தெரிய வருகிறது. அவரைப் போல காளி வெங்கட் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்று கதை செல்லும். பல ஹாரர் படங்கள் வந்திருந்தாலும் இது தமிழ் சினிமாவுக்குப் புதிதாக இருக்கும். வழக்கமாக ‘ரூம் மேட்ஸ்’ என்றுதான் கேள்விப்பட்டிருப்போம். ‘ஹவுஸ் மேட்ஸ்’ என்ற தலைப்பு ஏன் எனக் கேட்கிறார்கள். படம் பார்க்கும்போது அதற்கான விடை புரியும். முக்கியமான காட்சிகள் வீட்டில்தான் நடக்கிறது என்பதால் அதை செட்…
சென்னை: இணையவழி நிதி மோசடியை முற்றிலும் தடுக்க சைபர் க்ரைம் போலீஸார்- வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாநில அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ‘சைபர் குற்றவாளிகள்’ பொது மக்களின் கோடிக் கணக்கான பணத்தை சுருட்டி விடுகின்றனர். இதுபோன்ற இணையவழி நிதி மோசடி மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் சைபர் க்ரைம் போலீஸார் மற்றும் வங்கி அதிகாரிகளிடையே நேற்று நடைபெற்றது. சென்னை அசோக் நகரில் உள்ள மாநில சைபர் க்ரைம் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் தலைமை தாங்கினார். இந்தியா முழுவதிலும் இருந்து 34 முக்கிய வங்கிகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான கணக்குகளை முடக்கு வதில் சரியான நேரத்தில் உதவுவதற்காக சைபர் க்ரைம் தலைமையத்தில் வங்கி பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும், விசாரணைக்கு உதவுவதற்காக வங்கிகளின் தரவுகளை மேம்படுத்த…
புதுடெல்லி: இறக்குமதி-ஏற்றுமதி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகள் அமெரிக்காவில் தலைமறைவாக இருந்த பொருளாதார குற்றவாளி மோனிகா கபூர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதற்கான அனுமதியை நியூயார்க் நகர நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, அவரை சிபிஐ காவலில் எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘‘மோனிகா ஓவர்சீஸ்’’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மோனிகா கபூர். இவர் தனது இரண்டு சகோதரர்களான ராஜன் கன்னா மற்றும் ராஜீவ் கன்னாவுடன் சேர்ந்து நகை வணிகத்திற்கான வங்கி போலி ஆவணங்களை தயார் செய்து வரி இல்லாமல் மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசிடமிருந்து உரிமங்களைப் பெற்றார். இதன் மூலம் அவர் ரூ.2.36 கோடி மதிப்புள்ள தங்கத்தை இறக்குமதி செய்தனர். அதன்பின்னர் இந்த உரிமங்களைஅகமதாபாத்தை சேர்ந்த டீப் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் அதிக விலைக்கு விற்றுள்ளனர். அந்த நிறுவனம் இந்த அரசின் உரிமத்தை பயன்படுத்தி வரி இல்லாத தங்கத்தை கோடிக்கணக்கில் இறக்குமதி செய்தது. இந்த மோசடியால் இந்திய கருவூலத்திற்கு 6,79,000…
தமிழில் சினிமா தொடங்கிய காலகட்டங்களில் இலங்கை தயாரிப்பாளர்கள் பலர் சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்கள் திரைப்படங்களைத் தயாரித்தனர். முதல் சிங்களப் படமான ‘கடவுனு பொருண்டுவா’ தென்னிந்தியாவில்தான் தயாரிக்கப்பட்டது. இலங்கை திரைப்படத்துறையின் முன்னோடியான எஸ்.எம்.நாயகம் அதைத் தயாரித்தார். அவர் சித்ரகலா மூவிடோன் என்ற சினிமா ஸ்டூடியோவை மதுரையில் நிறுவி படங்களைத் தயாரித்து வந்தார். அவரைப் போலவே இலங்கையைச் சேர்ந்த எம்.ஹெச்.எம்.மூனாஸ் சில வருடங்கள் சென்னையில் வசித்து வந்தார். அவர் தயாரிப்பில் உருவான படம், உலகம். வசனம், பாடல்களை அவரே எழுதினார். 1950-க்கு முன் நடித்துக் கொண்டிருந்த பெரும்பாலான நடிகர்கள் இதில் நடித்தனர். வி.நாகையா, எம்.வி.ராஜம்மா ஜோடியாக நடித்தனர். வரதன், பி.கே.சரஸ்வதி, பி.எஸ்.வீரப்பா, டி.கே.பகவதி, எம்.எஸ்.திரவுபதி, டி.ஆர்.ரஜனி, எஸ்.எம்.குமரேசன், ‘புளிமூட்டை’ ராமசாமி, எம்.ஆர்.சாமிநாதன், டி.ஆர்.சுவாமிநாதன், குஞ்சிதபாதம், வி.டி.கல்யாணம், டி.வி.சேதுராமன், ‘அப்பா’ கே.துரைசாமி, எம். லட்சுமி பிரபா, சி.கே.சரஸ்வதி, கே.எஸ். அங்கமுத்து, கே.அரங்கநாயகி, என்.ஆர்.சகுந்தலா, ஜி.சரோஜா, ‘பேபி’ லட்சுமி குமாரி, நடனக்…
சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக மெரினா நீச்சல் குளம் நாளை முதல் ஜூலை 31 வரை இயங்காது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் நீச்சல்குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டண அடிப்படையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம் தங்கு தடையின்றி இயங்க ஏதுவாக, 135 மீ குழாய் அமைத்தல், 1.80 மீ. விட்டம் கொண்ட 9 ஊறு குழிகள் பொருத்துதல், சோதனை வெள்ளோட்டம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்காக மெரினா நீச்சல் குளம் நாளை (ஜூலை 11) முதல் 31-ம் தேதி வரை இயங்காது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் வீடியோவில், இந்த சூப்பர்ஃபுட்கள் பல மாதங்கள் மற்றும் ஆண்டுகளாக சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்க அவருக்கு எவ்வாறு உதவியது என்பதை அவர் விளக்கினார். இந்த சூப்பர்ஃபுட்களைப் பற்றி படிக்க கீழே உருட்டவும், அவை எவ்வாறு உதவுகின்றன.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 45 வயதுக்குட்பட்ட 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தனர். இதேபோல கதக் மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக கர்நாடக அரசு 10 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. மருத்துவ நிபுணர் குழு சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அதனை பெற்றுக்கொண்ட பின்னர், தினேஷ் குண்டு ராவ் கூறியதாவது: கரோனா தொற்று பரவலுக்கு பிறகு மாரடைப்புகள் சற்று உயர்ந்துள்ளதை அறிக்கை உறுதி செய்துள்ளது. அதேவேளையில் கரோனா தடுப்பூசியால் இந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு ஆளான நபர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்த நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. திடீர் மாரடைப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இளம்வயது மாரடைப்பு மரணங்களை தடுக்க மருத்துவமனை தவிர பிற இடங்களில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தால் கட்டாயம்…
