பாட்னா: மகாராஷ்டிராவைப் போல் பிஹாரிலும் வாக்குகளை திருட பாஜக முயற்சி செய்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மகாகத்பந்தன் கூட்டணி சார்பில் பிஹார் முழுவதும் நேற்று போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து பாட்னாவில் உள்ள மாநில வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து பேரணியாகச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது:…
Author: admin
அரியலூர்: கோயில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிசாமி, வெள்ளை வேட்டிக்குப் பதிலாக காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பேருந்து சேவை நீட்டிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் நிலுவைத்தொகை வைத்துள்ளதால், ஜூலை 10-ம் தேதி (இன்று) முதல் அந்த சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் அமைக்கப்பட்டதுதான் இந்து சமய அறநிலையத் துறை. அந்த துறை பணத்தில் கல்லூரி கட்டுவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்கிறார். நீதிக்கட்சி வழியில் வந்த திராவிட இயக்கத்தின் வழியில் ஆட்சி…
உங்கள் தரையை இறுதி வரை வைத்திருக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய 10 உளவியல் ஆதரவு நுட்பங்கள் இங்கே.
புதுடெல்லி: ஹரியானாவின் ஜாஜ்ஜர் மாவட்டத்துக்கு அருகே இன்று காலையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ஹரியானாவின் ஜாஜ்ஜருக்கு வடகிழக்கே 3 கிமீ தொலைவிலும், டெல்லிக்கு மேற்கே 51 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில், இன்று காலை கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டது, இதனால் மின்விசிறிகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் குலுங்கியதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நொய்டா பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஹரியானாவில், குருகிராம், ரோஹ்தக், தாத்ரி, ஃபரிதாபாத், சோனிபட் மற்றும் பகதூர்கர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜாஜ்ஜரில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் மேற்கு…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் மோட்டோரோலா ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இப்போது அறிமுகமாகி உள்ளது. ஸ்மார்ட் வாட்டர் டச் மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சங்கள் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஏஐ அம்சங்களும் இதில் உள்ளது. மிட்-செக்மென்ட் விலையில் போனை வாங்க விரும்பும் ஸ்மார்ட்போன் பயனர்களை இது ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜி96 சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.67 இன்ச் FHD+ pOLED 3டி டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 2 ப்ராசஸர் ஆண்ட்ராய்டு…
லண்டன்: இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த். ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 சமனில் உள்ளது. இன்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த தொடரின் 3-வது போட்டி தொடங்குகிறது. இந்நிலையில், டியூக்ஸ் பந்துகள் தரம் குறித்து ரிஷப் பந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த தொடரில் இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளின் போதும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் பந்து தொடர்பாக கள நடுவர்களை அணுகி பேசியதை அனைவரும் கவனித்திருக்க வாய்ப்புள்ளது. முதல் போட்டியின் போது பந்து குறித்து நடுவர் உடன் ரிஷப் பந்த நீண்ட நேரம் விவாதம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.…
சென்னை: மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எஸ்ஆர்எம்யு, டிஆர்இயு, எஸ்ஆர்இஎஸ் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார்மயமாக்கல், பெரு (கார்ப்பரேட்) நிறுவனங்களுக்கு ஆதரவான மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய வேலை நிறுத்தம் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) சார்பில், தெற்கு ரயில்வேயில் கிளைகள் வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தொழிலாளர் விரோத, 4 சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறுவது, ரயில்வேயை தனியார்மயமாக்குவதை கைவிடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ரயில்வே கோட்டத்தில் எழும்பூர், சென்ட்ரல் உட்பட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஆர்எம்யு துணை பொதுச்செயலாளரும், சென்னை கோட்ட தலைவருமான பால்…
நடுத்தர அல்லது முதுமையின் கவலையாகக் கருதப்பட்டால், முழங்கால் சேதம் இப்போது 30 களின் முற்பகுதியில் பெரியவர்களிடையே பொதுவானதாகி வருகிறது. பின்லாந்தில் உள்ள ஓலு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான சமீபத்திய ஆய்வின்படி, ஆச்சரியமான எண்ணிக்கையிலான 30-சிலவற்றில் ஏற்கனவே முழங்கால் மூட்டுகளில் கட்டமைப்பு சேதத்தின் அறிகுறிகளைக் காட்டுகிறது-பெரும்பாலும் குறிப்பிடத்தக்க வலி இல்லாமல். எம்.ஆர்.ஐ ஸ்கேன்களைப் பயன்படுத்தி, 33 வயதிற்குட்பட்ட பங்கேற்பாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு குருத்தெலும்பு சேதம் அல்லது முழங்கால்களில் எலும்பு வளர்ச்சியைக் கொண்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமன், இரத்த அழுத்தம் மற்றும் மரபியல் போன்ற காரணிகளால் இந்த அமைதியான சரிவு பல ஆண்டுகளாக உருவாகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். வாழ்க்கையில் முந்தைய பிரச்சினைகள் வெளிவரத் தொடங்குகையில், அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தடுப்பு படிகளைப் புரிந்துகொள்வது முன்னெப்போதையும் விட முக்கியமானது.அறிகுறிகள் ஆரம்ப முழங்கால் சேதம்ஆரம்ப கட்டங்களில் பலர் வலியை உணரவில்லை என்றாலும், பின்வரும் நுட்பமான அறிகுறிகள் கூட்டு சிக்கல்களின் தொடக்கத்தைக் குறிக்கலாம்:செயலற்ற தன்மைக்குப்…
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கேன்டீனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதில் அவருக்கு அறையில் கொண்டுவந்து தரப்பட்ட உணவு கெட்டுப்போய் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கெய்க்வாட், கேன்டீன் சென்று ஊழியர் ஒருவரை சரமாரியாக தாக்கினார். கேன்டீன் ஊழியரை கெய்க்வாட் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சைகளுக்கு புதியவரல்ல. கடந்த ஆண்டு இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்தால் ஆத்திரமடைந்த கெய்க்வாட், ராகுல் காந்தியின் நாக்கை துண்டிப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். கெய்க்வாட்டின் காரை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கழுவும் வீடியோ ஒன்றும் கடந்த ஆண்டு வைரலானது. இதற்கு ‘‘அந்த கான்ஸ்டபிள் எனது காரில் வாந்தியெடுத்து விட்டதால் தாமாக முன்வந்து…
சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவி்ததுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. இதற்கான கடைசி நாள் ஜூலை 9 (நேற்று) முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி பிஎட் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே, பிஎட் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி வருகிற 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்படும். விரும்பும் கல்லூரியை தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும்.…
