நகைச்சுவை நடிகர் கிங் காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தமிழில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் கிங் காங். 80கள் தொடங்கி கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என பல்வேறு நகைச்சுவை நடிகர்களுடன் நடித்துள்ளார். ‘போக்கிரி, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ உள்ளிட்ட படங்களில் வடிவேலு உடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் பிரபலம். இவர் தனது மகளின் திருமணத்துக்காக கடந்த சில நாட்களாக தமிழின் முன்னணி நடிகர்கள் தொடங்கி துணை நடிகர்கள் வரை பலருக்கும் அழைப்பிதழ் வைத்தார். இது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்தார். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 10) சென்னையில் நடைபெற்ற கிங் காங் மகள் திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். உடன் சுகாதாரத்…
Author: admin
விருதுநகர்: சாத்தூரில் நடந்த மதிமுக கூட்டத்தில் காலி இருக்கைகளை படம் பிடித்த ஊடகத்தினரை “கேமராவை பிடுங்கி உடைத்துப் போடுங்கள்” என ஆவேசத்துடன் வைகோ உத்தரவிட்டார். தொடர்ந்து ஊடகத்தினரை கட்சியினர் தாக்கினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மதிமுக நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் துரை வைகோ எம்.பி. பேசி முடித்ததும், சென்னை செல்ல அவசரமாகப் புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து கூட்டத்திலிருந்த பலரும் அரங்கிலிருந்து வெளியேறினர். தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போதும், அரங்கிலிருந்த ஏராளமானோர் வெளியேறினர். இதனால் ஆவேசமடைந்த வைகோ “உள்ளே வந்து உட்காருங்கள், இல்லையெனில் வீட்டுக்குப் போங்கள்” என கடிந்துகொண்டார். அப்போது, அரங்கில் காலியாக இருந்த இருக்கைகளை ஊடகத்தினர் சிலர் வீடியோவில் பதிவுசெய்ததை கவனித்த வைகோ கோபமடைந்து, “காலி சேரை காலிப் பயலுங்கதான் படமெடுப்பாங்க, அவங்க கேமராவை பிடுங்கி…
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது. சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதேபோல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, உத்தரவை அமல்படுத்ததாததற்காக சென்னை…
திருவாரூர்: பாஜகவுக்கு டப்பிங் வாய்ஸ் போல பேசிய பழனிசாமி, தற்போது ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே பேச தொடங்கியுள்ளார் என திருவாரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்து பேசினார். திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் முதல்வர் ஸ்டாலின், இன்று 846.47 கோடிக்கு 1234 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும் , 2423 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 67,181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் ஸ்டாலின், பேசியதாவது: மத்திய ஆட்சியின் இடையூறுகளையும் சமாளித்து, திராவிட மாடல் திமுக அரசு செய்து வருகின்ற சாதனைகளை சகித்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு என்று பெயர் சொல்வதைக் கூட தவிர்த்துக் கொள்பவர்களுடன் அதிமுகவை தற்போது சேர்த்துவிட்டார். அவர் தமிழகத்தை மீட்போம் எனக் கூறி ஒரு பயணத்தை தொடங்கி இருக்கிறார். முதலில் அதிமுகவையே மீட்க முடியாதவர் . தமிழகத்தை மீட்க போகிறேன் என்கிறார்.…
காபி, தேநீர் மற்றும் பல ஆற்றல் பானம் சூத்திரங்களுக்குள் காஃபின் இயற்கையாகவே காணப்படுகிறது. எடை இழப்பு மற்றும் ஆதரவு உடற்பயிற்சிகளை ஊக்குவிக்கும் சில சப்ளிமெண்ட்ஸ் காஃபின் ஒரு மூலப்பொருளாக உள்ளது. காஃபின் மிதமான பயன்பாடு பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பாக உள்ளது, ஆனால் அதிகப்படியான நுகர்வு தற்காலிகமாக இரத்த அழுத்த அளவை உயர்த்தும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காஃபின் சப்ளிமெண்ட்ஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் அவை இரத்த அழுத்த உயர்வு மற்றும் இதய துடிப்பு அதிகரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன, அவை அவர்களின் மருத்துவ நிலையை மோசமாக்கும். நோயாளிகள் அனைத்து தயாரிப்புகளிலும் தங்கள் காஃபின் உட்கொள்ளலைக் கண்காணிக்க வேண்டும். ஆதாரங்கள்:ஹெல்த்லைன்வெப்எம்டிமயோ கிளினிக்ஈட்டிவெல்மறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால் எப்போதும் மருத்துவ நிபுணரை அணுகவும்
கும்பகோணம்: ‘என் பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக்கூடாது. வேண்டுமானால் என் இனிஷியலைப் போட்டுக் கொள்ளலாம்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார் கும்பகோணத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி – வன்னியர் சங்க தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பொதுச் செயலாளர் முரளி சங்கர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ், “5 வயது குழந்தை போல் உள்ளீர்கள் என ஒருவர் சொன்னார். அந்தக் குழந்தைதான் 3 ஆண்டுக்கு முன்பு அந்த ஒருவரை தலைவராக்கியது. நான் இப்போது சொல்கிறேன். என் பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக் கூடாது. வேண்டுமானால் என் இனிஷியலை போட்டுக் கொள்ளலாம். தந்தை சொல் மிக்க…
பிறந்தநாள் விழாக்கள், வார இறுதி பயணங்கள் அல்லது செய்தபின் வடிகட்டப்பட்ட புகைப்படங்களுடன் ஒரு வலுவான குடும்பம் கட்டப்படவில்லை. இது உண்மை, நம்பிக்கை, பகிரப்பட்ட முயற்சி மற்றும் உண்மையில் முக்கியமானது பற்றிய ஆழமான புரிதலுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த குடும்ப மதிப்புகள் சில சுவரில் தொங்கவிடப்பட்டவை அல்ல, ஆனால் அமைதியாக சாப்பாட்டு மேசையில், வாதங்களின் நடுவில் அல்லது ம .ன தருணங்களில் பின்பற்றப்படுகின்றன.இங்கே 10 மிருகத்தனமான நேர்மையான குடும்ப விதிகள் உள்ளன, அவை “பின்பற்றுவது நல்லது”, ஆனால் குடும்பம் ஒன்றாக வளர வேண்டுமானால் அவசியம்.
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: “பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே 60 சதவீதம் பேராசிரியர்கள் பற்றாக்குறையுடன் இயங்கி வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், தற்போது பணியில் இருக்கும் பேராசிரியர்களையும் மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் வகையில் தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குநர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை கடும் கண்டனத்துக்குரியது. பாடப் புத்தகங்களை தயாரித்து விநியோகிப்பது, விடைத்தாள் திருத்துவது, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுவது என பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பேராசியர்களை இடமாற்றம் செய்வது, அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்…
மதுரை: “கோவை குண்டுவெடிப்பு, அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள இஸ்லாமிய கைதிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தை சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பண்ணா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் இந்து இயக்க பிரமுகர்களை படுகொலை செய்த வழக்கிலும், பாஜக தேசியத் தலைவர் அத்வானி சென்ற பாதையில் குண்டு வைத்த வழக்கிலும் கைது செய்யப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இந்த மூவரையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகள் என்றும், சிறையில் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், அவர்களை…
ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் அருகே வலைகளை வெட்டி விரட்டியடித்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். நள்ளிரவில் மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்தாகக் கூறி 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்து வலைகளை கடலுக்குள் வெட்டி எறிந்தனர். இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் அச்சமடைந்த 50-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் விசைப்படகுகளுடன் மீனவர்கள் மீன்பாடு இல்லாமலும், சிலர் மீன்பிடிக்காமலும் நஷ்டத்துடன் வியாழக்கிழமை கரை திரும்பினர்.
