புதுடெல்லி: வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா மற்றும் உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,066.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியதாவது: நிலச்சரிவு, வெள்ளம், மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. அந்த வகையில் 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிதியின் கீழ் ரூ.1,066.80 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. ரூ.8,000 கோடிக்கு மேல்.. நிதி உதவியை தவிர, மாநிலங்களுக்கு தேவையான பேரிடர் மீட்புப் படை, ராணுவம், விமானப்படையை அனுப்புவது உட்பட அனைத்து தளவாட உதவிகளையும் வழங்குவது அரசின் முன்னுரிமையாக உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில், அசாமுக்கு ரூ.375.60 கோடி, மணிப்பூருக்கு ரூ.29.20 கோடி, மேகாலயாவுக்கு ரூ.30.40 கோடி, மிசோரமுக்கு…
Author: admin
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உருவப் படம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் நேற்று திறக்கப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த படம். ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் என்பவரால் வரையப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த படம் அதன் பின்னர் பெவிலியனுக்கு மாற்றப்படும். ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் இதற்கு முன்னர் கபில் தேவ், பிஷன் சிங் பேடி, திலிப் வெங்சர்க்கார் ஆகியோரின் படங்களை வரைந்துள்ளார். உருவப்பட திறப்பு விழாவில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “இது மிகப்பெரிய கவுரவம். 1983-ம் ஆண்டு, இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது, அதுதான் லார்ட்ஸுடனான எனது முதல் அறிமுகமாக இருந்தது. கபில்தேவ் கோப்பையை கைகளில் ஏந்தி உயர்த்துவதை பார்த்தேன். அந்த தருணமே எனது கிரிக்கெட் பயணத்தை தூண்டியது. இன்று, பெவிலியன் உள்ளே எனது உருவப்படம் செல்ல இருக்கிறது. கிரிக்கெட் வாழ்க்கை முழுமை…
சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை தாண்டி வெற்றியை நோக்கி பயணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுக உறுப்பினர் சேர்க்கை பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜூலை 1-ம் தேதி தொடங்கி வைத்தார். வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 45 நாட்கள் வீடு வீடாகச் சென்று, 30 சதவீதம் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியை மேற்கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இந்த உறுப்பினர் சேர்க்கை பணிகள் ஜூலை 3-ம் தேதி தீவிரமடைந்துள்ளது. அந்தவகையில், கடந்த 7 நாட்களில் தமிழகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “ஐம்பது லட்சம் உறுப்பினர்களைக் கடந்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ மாபெரும் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்று (நேற்று) காலை திருவாரூரில் தலைவர் கருணாநிதி வாழ்ந்த சந்நிதி தெருவில் நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்.…
ஆய்வகங்கள் மற்றும் கோல்டன் ரெட்ரீவர்ஸ் இருவரும் மென்மையானவர்கள், நட்பு மற்றும் மக்கள் மகிழ்வார்கள்-இது முதல் முறையாக நாய் உரிமையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. ஆனால் ஆய்வகங்கள் பொதுவாக கோல்டன் ரெட்ரீவர்ஸுடன் ஒப்பிடும்போது அதிக ஆற்றல் மிக்கவை, உற்சாகமானவை, விளையாட்டுத்தனமாக இருக்கின்றன, ஏனெனில் பிந்தையது அதிக உணர்திறன், பாசம் மற்றும் அமைதியானது. எனவே, நீங்கள் மிகவும் எளிதான கையாளுதலை விரும்பினால், கோல்டன் ரெட்ரீவர்ஸ் உங்களுக்கு மிகவும் பொருத்தமானது. மாறாக, உங்களிடம் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை அல்லது தோழர்கள் விளையாட விரும்பும் குழந்தைகள் இருந்தால்- லாப்ரடோர் ரெட்ரீவர்ஸ் உங்களுக்கு சிறந்த தேர்வாகும்.
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் விஷ்வ இந்து ரக் ஷா பரிஷத் சார்பில் முஸ்லிமாக மதம் மாறிய 12 பேர் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, பல்ராம்பூரை சேர்ந்த ஜுங்கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்றும் நெருங்கிய நண்பர் நீத்து நவீன் ரொஹரா(எ) நஸ்ரின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஏடிஎஸ் படையினர் 14 பேரை தேடி வருகின்றனர். ஜுங்கூர் பாபாவால் மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களிடம் ஏடிஎஸ் படையினர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் ஒரு பிரபல தர்காவுக்கு வெளியே ஜுங்கூர் பாபா, மோதிரங்களை விற்று வந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மதம் மாற்றத்துக்கு நிதி அளிக்கும் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் உதவியால் ஜுங்கூர் பாபா, மகாராஷ்டிராவில் மதம் மாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு உ.பி.யின் பல்ராம்பூரில்…
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன்முறையாக டி20 கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சோபியா டங்க்லி 22, டாமி பியூமாண்ட் 20, ஆலிஸ் கேப்ஸி 18 ரன்கள் சேர்த்தனர். பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் ஸ்ரீ சாரணி, ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 127 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 32, ஷபாலி வர்மா 31, கேப்டன்…
சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூலை மாதத்துக்கான மாதாந்திர பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை (ஜூலை 12) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச் சான்று உள்ளிட்ட பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொதுவிநியோகக் கடைகளின் செயல்பாடுகள், குறைபாடுகள் குறித்த புகார்களை தெரிவித்து தீர்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீனா குப்தா ஒரு வெள்ளை சங்கனேரி சேலையில் விம்பிள்டனில் கலந்து கொண்டார். அவள் அதை ஒரு ஹால்டர்-கழுத்து ரவிக்கை மற்றும் சன்கிளாஸுடன் ஜோடி செய்தாள். அவளுடைய தோற்றம் எளிமையானது மற்றும் நேர்த்தியானது. பாரம்பரிய இந்திய உடையை ரசிகர்கள் விரும்பினர். இந்திய பாணியை பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக பலர் அவளைப் பாராட்டினர். அவள் கைத்தறி செட்களில் கூட்டத்தில் இருந்து தனித்து நின்றாள். பாணிக்கு எல்லைகள் இல்லை என்பதை அவளுடைய தோற்றம் நிரூபித்தது. விம்பிள்டனில் ஒரு பாணி தருணத்தை வழங்க நீங்கள் பிளேஸர் அல்லது போலோ ஆடை அணிய வேண்டும் என்று யார் கூறுகிறார்கள்? விஷயங்களைச் செய்வதற்கான இறுதி ராணியான நீனா குப்தா, அனைவருக்கும் உலகளாவிய மேடையில் தேசி பாணியில் ஒரு மாஸ்டர் கிளாஸைக் கொடுத்தார், அதற்காக WEA இங்கே உள்ளது.நீதிமன்றத்தில் தனது நாளிலிருந்து பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படக் குப்பையில், நீனா முற்றிலும் கதிரியக்கமாகத் தெரிந்தார், லண்டன் சூரியனின் கீழ் தனது கையொப்பம் கிரேஸுடன் காட்டிக்கொண்டார்.…
புதுடெல்லி: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின் முடிவில் நிமிஷா பிரியாவுக்கு 2020-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது இறுதி மேல்முறையீடும் 2023-ல் நிராகரிக்கப்பட்டது. தற்போது ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16-ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில் அவருக்கு சட்டப்பூர்வமாக உதவ சர்வதேச நடவடிக்கை கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் உச்ச நீதி மன்றத்தில் நேற்று ஆஜரானார். அப்போது, நிமிஷா பிரியாவை காப்பாற்றுவதற்கான ராஜதந்திர வழிகளை மத்திய அரசு விரைந்து ஆராய வேண் டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜாய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு…
புதுடெல்லி: சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ஆடவர் கால்பந்து அணி 6 இடங்களை இழந்து 133-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவை இந்திய அணி சந்தித்துள்ளது. இதற்கு காரணம் ஜூன் மாதத்தில் நடைபெற்ற 2 ஆட்டங்களில் இந்திய அணி தோல்விகளை சந்தித்ததுதான். கடந்த ஜூன் 4-ம் தேதி தாய்லாந்து அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தாய்லாந்திடம் தோல்வி கண்டிருந்தது. இதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தகுதி சுற்றில் 0-1 என்ற கோல் கணக்கில் தன்னை விட தரவரிசையில் மிகவும் பின்தங்கிய ஹாங்காங் அணியிடம் இந்தியா வீழ்ந்திருந்தது. இந்த தோல்விகளால் பயிற்சியாளராக இருந்த ஸ்பெயினை சேர்ந்த மனோலோ மார்க்வெஸ் பதவியில் இருந்து விலகியிருந்தார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் 7-ல்…
