காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சர்மா திராவிட்டுக்கு சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் ஏப். 30-ம் தேதி (நாளை) அதிகாலையில் சந்நியாஸ்ரம தீட்சை வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு காஞ்சி மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏப்.30-ம் தேதி அட்சய திருதியை தினத்தில் (நாளை) அதிகாலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சந்நியாஸ்ரம தீட்சை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக நேற்று ஸ்ரீ விஜயேந்திர சர்ஸவதி சுவாமிகள் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். சந்நியாஸ்ரம தீட்சை வழங்கும் நிகழ்ச்சி மகா சக்தி பீடங்களில் ஒன்றான…
Author: admin
புதுடெல்லி: கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என பாலிவுட் சினிமா நடிகர் அனுபம் கெர் கூறியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். “பஹல்காமில் இந்து மக்கள் ஒவ்வொருவராக சுட்டு கொல்லப்பட்டது ஆழ்ந்த துயரத்தை தருகிறது. இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் மீது கடும் கோபமும் உள்ளது. காஷ்மீரில் காஷ்மீர் வாழ் இந்துக்கள் மீது இது மாதிரியான தாக்குதலை என் வாழ்நாள் முழுவதும் நான் பார்த்துள்ளேன். அதோடு ஒப்பிடும்போது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் கதை வெறும் முன்னோட்டம் தான். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து காஷ்மீரில் தங்கள் விடுமுறையைக் செலவிட வரும் மக்களின் மத ரீதியாக அடையாளம் காணப்படுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் மீதான தாக்குதல் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் கொள்ளப்படுகிறார்கள். இந்த…
சென்னை: வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க பரிசீலிக்கப்படும் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.வேல்முருகன் எம்எல்ஏ பேசும்போது, “வெளிமாநிலத் தொழிலாளர்களால் தமிழகத்தில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதனால் அவர்கள் என்ன பணிக்காக வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள், எந்த நிறுவனத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள், எப்போது மாநிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, வெளிமாநிலத்தவர் வருகையை கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்” என்றார். அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் பேசும்போது, “வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தார். இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அளித்த பதில்: ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் வருகையை பதிவு செய்வதற்கான போர்ட்டல்கள் உள்ளன. அதன் வழியாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்…
பாகிஸ்தானில் பிறந்து, 7 வயதில் இந்தியா வந்த ஒரு பெண், 19 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் புட்டபர்த்திலேயே வசித்து வருகிறார். தற்போது பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லுமாறு ஆந்திர போலீஸார் அவரை வலியுறுத்தி உள்ளனர். கர்நாடக மாநிலம், பெல்லாரியை சேர்ந்த மகபூப் பீரான், நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார். அங்கேயே திருமணம் செய்து கொண்டு, 2 மகன்கள் மற்றும் 2 மகளுக்கு தந்தையானார். தனது இளைய மகள் ஜீனத் பீரானை ஆந்திர மாநிலம், தர்மாவரம் பகுதியில் வசிக்கும் தனது தங்கையின் மகன் ரஃபீக் அகமதுவுக்கு கடந்த 1989-ல் திருமணம் செய்து வைத்தார். இந்த தம்பதியினருக்கு முதல் குழந்தை தர்மாவரத்தில் பிறந்தது. இந்நிலையில் 1998-ல் ஜீனத் 2-வது முறையாக கர்ப்பம் தரித்தார். அப்போது, பாகிஸ்தானில் வசிக்கும் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜீனத் பாகிஸ்தான் சென்றார். அந்த நேரத்தில் கார்கில் போர் தொடங்கியதால் இவர் பாகிஸ்தானிலேயே தங்க நேரிட்டது. இந்த…
சென்னை: “இதழியலுக்கு செயற்கை நுண்ணறிவு துணை புரியலாம். ஆனால், என்றும் அவை பத்திரிகையாளர்களின் செய்தியளிக்கும் ஆற்றலுக்கு மாற்றாக வரமுடியாது” என்றார் Deutsche Welle நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் லிம்போர்க். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து மாணவர்களிடையே ஜெர்மனி அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான DW-இன் இயக்குநர் பீட்டர் லிம்போர்க் உரையாற்றினார். ‘மேற்கத்திய ஊடகங்களுக்கு சவாலாக விளங்கும் உலக சூழ்நிலைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில், பேசிய அவர், சர்வதேச ஊடகங்களின் பொறுப்பு மற்றும் இன்றைய காலகட்டத்தில், அவை எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் குறித்து விவரித்தார். அவர் தனது உரையில், “எங்கள் நிறுவனம் கற்பிப்பதையும், விழிப்புணர்வு ஊட்டுவதையும் மட்டுமே செய்யாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. எங்களுக்கு நண்பர்கள் இல்லை, குறிப்பாக அரசுகளிடம் சுமுக உறவு இல்லை. சில பிராந்தியங்களில், எங்கள் தகவல் ஒளிபரப்பு தடுக்கப்படுவதுடன், எங்கள் இருப்பை வரவேற்பதில்லை. சமூக…
சென்னை: இந்தியாவின் அடிமட்டப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்காக ஜிரோ லேப்ஸ், பிரவர்த்தக் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான உயர் சிறப்பு மையத்தை (AI Centre of Excellence) சென்னை ஐஐடி நிறுவ உள்ளது. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இந்தியாவின் அடிமட்ட சவால்களைத் தீர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு உயர்சிறப்பு மையத்தை நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்காக கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜிரோ லேப்ஸ், ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இக்கல்வி நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளது. CPU, எட்ஜ் டிவைஸ் இண்டர்பியரன்சிங் ஆகியவற்றில் நடைமுறைக்கு ஏற்ற, வலிமையான செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்குவதில் இந்த உயர்சிறப்பு மையம் கவனம் செலுத்தும். ஏஐ மாதிரிகள் மூலம் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவும் முக்கிய நடவடிக்கையாக ஜிரோ லேப்ஸ் ‘Kompact AI’ன் முதல் பதிப்பை சென்னை ஐஐடி-ல் இன்று (ஏப்ரல் 9, 2025)…
புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் சேர்த்தனர். அபிஷேக் போரெல் 28, டு பிளெஸ்ஸிஸ் 22 ரன்கள் சேர்த்தனர். ஆர்சிபி அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3, ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கிருணல் பாண்டியா 4 ஓவர்களை வீசி 28 ரன்களை மட்டும் வழங்கி ஒரு விக்கெட் கைப்பற்றினார். 163 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து…
2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா. விசா கெடுபிடிகளை தளர்த்தியதோடு, “மேலும் பல இந்திய நண்பர்களை சீனாவுக்கு வரவேற்கிறோம். பாதுகாப்பான, வெளிப்படையான, நேர்மையான, துடிப்புமிகு, நட்பான சீனாவை அனுபவியுங்கள்.” என்று இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் வரவேற்றுள்ளார். ட்ரம்ப் கெடுபிடியின் விளைவாக.. அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளி சீனா. அதுமட்டுமல்ல பொருளாதார போட்டியாளரும் கூட. இந்தச் சூழலில் தான் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் பரஸ்பர வரியை அறிவித்தார். அதற்கு சீனாவும் பதில் வரி விதிக்க மற்ற நாடுகளுக்கு சலுகை அறிவித்து 90 நாட்களுக்கு தற்காலிகமாக வரியை நிறுத்திவைத்த ட்ரம்ப், சீனாவுக்கு மட்டும் 145% வரியை விதித்துள்ளது. இருப்பினும் சற்றும் தளராத சீனா தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து வருகிறது. மேலும், வளரும் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவை வரி விதிப்பை இணைந்தே எதிர்கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கு சீனா…
பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.5) காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.11-ம் தேதி நடைபெற உள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று (ஏப்.5) காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. மூலவர், உற்சவர், விநாயகர், மயில், துவார பாலகர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, மூலவர், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி பட்டக்காரர் மடத்திற்கு எழுந்தருளல் நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் பழநி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, திரளான பக்தர்கள்…
‘ஸ்டார்’ இயக்குநர் இளன் தனது அடுத்த படத்தினை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். ‘ஸ்டார்’ படத்தினை தொடர்ந்து தனுஷ் படத்தினை இயக்கவுள்ளார் இளன் என்று செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது தனுஷ் பல்வேறு படங்களை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவருடைய தேதிகள் இருக்காது என்பது உறுதியாகிவிட்டது. இதனை முன்னிட்டு புதிய முடிவொன்றை எடுத்துள்ளார் இளன். தனது அடுத்த படத்தில், தானே நாயகனாக நடிக்க முடிவு எடுத்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை முடிவுற்று, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது. இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முழுக்க காதலை மையமாக வைத்து இக்கதையினை உருவாக்கி இருக்கிறார் இளன். முன்னதாக, ‘லவ் டுடே’ படத்தின் மூலம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நடிகராக அறிமுகப்படுத்தியது ஏஜிஎஸ் நிறுவனம். தற்போது அவர் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். அந்த பாணியில் இளனையும் நாயகனாக்க முடிவு செய்திருக்கிறது ஏஜிஸ் நிறுவனம்.