மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி இன்று இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு ஜூலை 14-ம் தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனையொட்டி, கோயில் வளாகத்திலுள்ள வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் 75 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 200 சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. அதனையொட்டி, நேற்று மாலையில் முதல் கால யாக பூஜை தொடங்கியது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று காலையில் இரண்டாம் கால யாக பூஜை நடைபெறறது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வேத சிவாகமத்துடன் 64 ஓதுவார்கள் மூலம் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ்…
Author: admin
திருநெல்வேலி: “மாநில ஆளுநர்களின் அதிகாரங்களில் முதல்வர்களின் தலையீடு இருக்கக் கூடாது” என்று மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 268-வது குருபூஜையை விழாவையொட்டி அவரது சிலைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பாஜக நிர்வாகிகள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியது: “சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் 68 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மக்களுக்குத் தெரிய வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தபால் தலை வெளியிட்டு அவர்களை கவுரப்படுத்தி வருகிறார். தேசத்துக்குப் போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் குருபூஜை விழாவில் கவுரவம் செய்யவே திருநெல்வேலிக்கு வருகை தந்தேன். பல்கலைக்கழகங்களில் காவி புகுத்தப்படவில்லை. காவி என்பது இந்த மண்ணுக்குச் சொந்தமானது. இப்போது மட்டுமல்ல, வாஜ்பாய் காலத்தில் இருந்தே காவி பல்கலைக்கழகத்தில் புகுத்தப்படுவதாக அரசியல் கட்சியினர் பேசி…
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பதாக இருந்தால், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக கார்டியோ -விழிப்புணர்வு, ஓடுதல், நீச்சல் -நன்மைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் வலிமை பயிற்சி (பளு தூக்குதல்) ஒரு உண்மையான விளையாட்டு மாற்றியாக உருவாகி வருகிறது. 2023 சீரற்ற ஆய்வில் (ஸ்ட்ராங்-டி) சாதாரண எடை வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் ஏரோபிக் உடற்பயிற்சிகளை மட்டுமே செய்தவர்களை விட தங்கள் HBA1C (நீண்ட கால இரத்த சர்க்கரை) ஐ மேம்படுத்தினர். ஆயினும்கூட, இரண்டு உடற்பயிற்சி வகைகளையும் இணைப்பது சிறந்த வளர்சிதை மாற்ற விளைவுகளை வழங்குகிறதுவகை 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கான கூடுதல் நன்மைகளை வலிமை பயிற்சி வழங்குகிறதுஇரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஆதரிப்பதற்காக நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டாலும், வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு வலிமை பயிற்சி என்பது…
புவனேஸ்வர்: நாட்டில் காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களை மோடி அரசாங்கம் விற்றுவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, “மத்தியிலும் ஒடிசாவிலும் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, இங்கு பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. என்டிபிசி, நால்கோ, பாரதீப் துறைமுகம், ஹிராகுட் அணை, ரூர்கேலா எஃகு ஆலை, சில்கா கடற்படை அகாடமி, மஞ்சேஸ்வரில் ரயில் பெட்டி தொழிற்சாலை ஆகியவை காங்கிரஸ் அரசு ஒடிசாவுக்குச் செய்த திட்டங்களில் முக்கியமானவை. நேரு பிரதமராக இருந்தபோதுதான், புவனேஸ்வர் தலைநகராக மாற்றப்பட்டது. ஒடிசா மக்களுக்கு நரேந்திர மோடி என்ன செய்துள்ளார்? ஒடிசாவுக்கு பாஜகவின் பங்களிப்பு பூஜ்ஜியம். காங்கிரஸ் ஒடிசா மக்களுக்காக உழைத்தது. அதனால்தான் இன்று பல பெரிய பொதுத் துறை நிறுவனங்கள் ஒடிசாவுக்கு கிடைத்துள்ளன. ஆனால், நரேந்திர மோடி எதையும் செய்யவில்லை. மாறாக, காங்கிரஸ்…
சென்னை: திரைப்படங்களை பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டனர் என்று இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் இது குறித்து கூறியது: “தமிழ் சினிமாவில் எதிர்மறையான விமர்சனங்கள் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அது நாளுக்கு நாள், வாரா வாரம் மோசமாகி வருகிறது. முன்பு நம்மிடையே விமர்சகர்கள் இருந்தனர். இப்போது நம்மிடம் இருப்பவர்கள் விமர்சகர்கள் அல்ல. அவர்களின் இலக்கு வேறு. அவர்கள் பயன்படுத்தும் மொழி, அவர்கள் பேசும் விதம் மற்றும் அவர்கள் குறிவைப்பது மிகவும் நாகரிகமற்ற முறையில் உள்ளது. அவர்களுக்கு ஒரு அஜெண்டா உள்ளது. அவர்கள் முதல் வார வசூலை குறிவைக்கின்றனர். அப்படி செய்தால் அடுத்த முறை தயாரிப்பாளர்கள் அவர்களிடம் வருவார்கள் என்று அவர்களுக்கு தெரியும். பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்கள் இப்போது 90 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டனர். நேர்மையான விமர்சகர்களுக்கு ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யும்…
காரைக்குடி: பழனிசாமி முதல்வரான பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியையே சந்தித்துள்ளது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவினர் ஒவ்வொரு அமைப்பையும் காவி மயமாக்க முயற்சித்து வருகின்றனர். இந்தி, இந்துத்துவாவை திணிக்க வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம். அது தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் 2026-ம் ஆண்டு தேர்தலில் எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வெற்றி பெறும். கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு வங்கி வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் சித்தாந்த பற்றுள்ள கம்யூ., கட்சி தமிழகத்தில் உயிரோட்டமாக தான் உள்ளது. தேர்தலை மையமாக வைத்து இயங்கும் இயக்கமாக கம்யூ. கிடையாது. மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் இயக்கமாக தான் உள்ளது. பழனிசாமி தேர்தலில் முதல்வர் பதவிக்கு நின்று வெற்றி பெற்று முதல்வர் ஆகவில்லை. சரித்திர விபத்தால் முதல்வரானவர். அவர் முதல்வரான பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தகளிலும் அதிமுக தோல்வியையே…
முதுகுவலி பொதுவாக தசை புண் அல்லது தசை இழுப்பதற்கு வழக்குத் தொடரப்படுகிறது, எனவே இது உங்கள் தோரணை அல்லது உடல் அசைவுகளைப் பொறுத்து மோசமடையலாம் அல்லது மேம்படுத்தலாம், வளைத்தல், உட்கார்ந்து அல்லது படுத்துக் கொள்வது போன்றவை. இதற்கிடையில், நடைபயிற்சி அல்லது ஓய்வறை பயன்படுத்திய பிறகு வாயு வலியைக் குறைக்கலாம். ஆனால் வலி சிறுநீரக கற்களால் ஏற்பட்டால், அது பொதுவாக இயக்கம் அல்லது ஓய்வுடன் மேம்படாது. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் நிலைகளை தொடர்ந்து வேகப்படுத்துகிறார்கள் அல்லது மாற்றுகிறார்கள், நிவாரணம் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் அதில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. இந்த தொடர்ச்சியான, கூர்மையான மற்றும் படப்பிடிப்பு வலி சிறுநீரக கல் வலியின் உன்னதமான அறிகுறியாகும்.இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சையை மாற்றாது.
புதுடெல்லி: ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணங்களாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கியது. ஜூலை 25-ம் தேதிக்குள் திருத்தப் பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புதிய நடைமுறையின்படி 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்று, பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்த…
தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்துக்கு ‘மார்ஷல்’ என தலைப்பிட்டுள்ளனர். ‘சர்தார் 2’ படத்தை முடித்துவிட்டு, தமிழ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. இது பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் என்பதால் இதன் படப்பிடிப்புக்கான பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. மேலும், 1960-களில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக இது உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டன. இதற்கு ‘மார்ஷல்’ என தலைப்பிடப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. 1960-களில் நடக்கும் கதை என்பதால், படத்தின் பூஜையையும் அந்தக் காலகட்டத்தின் அரங்குகளை அமைத்து நடத்தியிருக்கிறது படக்குழு. ‘மார்ஷல்’ படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக சாய் அபயங்கர், எடிட்டராக பிலோமின் ராஜ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளராக அருண் வெஞ்சரமூடு ஆகியோர்…
வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்காமல், 6 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட வேண்டும் என திமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 2021 சட்டப்பேரவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் விராலிமலையில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. மீதமுள்ள புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம் ஆகிய தொகுதிகளில் திமுகவும், கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணியில் முறையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. தற்போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. புதுக்கோட்டையில் திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் தனித்தனியாக அண்மையில் நடைபெற்றது. அதில், தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலங்குடி, திருமயம் மற்றும் அறந்தாங்கி ஆகிய 3 தொகுதிகளுக்கான கூட்டத்தில், அறந்தாங்கி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காமல், திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என முன்னாள்…
