இந்த அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தாலும், சோதனை எடுக்க நீங்கள் தவறவிட்ட காலத்தின் முதல் நாள் வரை காத்திருக்க வேண்டும். . இரத்த பரிசோதனைகள் மிகவும் நம்பகமானவை என்றாலும், அவர்களும் நேர்மறையான முடிவைக் கொடுக்க ஒரு குறிப்பிட்ட அளவிலான HCG ஐக் கண்டறிய வேண்டும்.ஆதாரங்கள்ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவம்இன்று மருத்துவ செய்திஹெல்த்லைன்மறுப்பு: இந்த கட்டுரை தகவலுக்கு மட்டுமே, இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை
Author: admin
சென்னை: பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னுடைய கல்லூரி காலத்தில் பெண் வழக்கறிஞர் ஆண் நண்பருடம் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப் படங்கள் இணைய தளங்களில் பரப்பட்டிருந்தன. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றக் கோரி, சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள அந்தக் காட்சிகளை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், விடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க இயலாது என மத்திய அரசு தரப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையீடு செய்யப்பட்டது. மேலும், பெண் வழக்கறிஞர் தொடர்பான வீடியோ காட்சிகளை நீக்க சமூக வலைதளங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை…
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரம் முகாம்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நகர்புறப் பகுதிகளில் 3,768, ஊரகப் பகுதிகளில் 6,232 என 10 ஆயிரம் முகாம்கள் நடைபெற உள்ளன. அத்துடன் முகாம்களுக்கு வருகைதரும் பொதுமக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 7-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டுக்கும்…
சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஜூலை 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழா மற்றும் பெரம்பலூர், தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேகமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜகவும் உறுதியாக உள்ளது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார். அதன்பிறகு, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வந்தார். அப்போது, கூட்டணி கட்சிகளுடன் பாஜக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து, கடந்த மாதம் மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்…
சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அங்கிருந்து தமிழகம் வரும் 20 சாலை வழிகளிலும் கண்காணிப்பை பொது சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. கேரளாவின் மலப்புரம், பாலக்காடு பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வருவோருக்கு காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யவும், தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறியதாவது: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உள்ளது. பொதுவாகவே விதிமுறைகளின்படி, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோவை…
சென்னை: ‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு, ஜூலை 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் தரவேண்டும்’ என தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீதான ஆரம்பக்கட்ட விசாரணையை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்: பழனிசாமி தரப்பு: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி 2 மாதங்கள் நிறைவடைந்த பின்னரும், இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற வழக்குகளில் 3…
சென்னை: உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, சுகாதாரத் துறை சார்பில் பேரணி, விழிப்புணர்வு போட்டி, கருத்தரங்கம் நடைபெற்றன. 39-வது உலக மக்கள்தொகை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, செம்மொழி பூங்காவில் விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது. பின்னர், அமைச்சர் தலைமையில்அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து கருத்தரங்கம் நடந்தது. இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நல கையேடு, குடும்பநல விளக்க கையேடுகளை வெளியிட்ட அமைச்சர், விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற செவிலிய மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்களை வழங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:‘ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப் பேறு, திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம்’ என்பதே இந்த ஆண்டின் மக்கள்தொகை தின கருப் பொருள். தமிழக சுகாதாரத் துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், பேறு காலத்தில் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் 39.4 சதவீதம் அளவுக்குகுறைந்துள்ளது. சிசு உயிரிழப்பு விகிதம் 1,000-க்கு…
சென்னை: பெற்றோரால் கைவிடப்படும், ஒப்படைக்கப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட நிலையில் கண்டறியப்படும் குழந்தைகள், மற்றவர்களால் கொண்டு வந்து ஒப்படைக்கப்படும் குழந்தைகள் குறித்து சட்டவிதிகளின்படி தகவல்கள் அளிக்கப்படுவதில்லை. அந்த குழந்தைகளை உரிய விதிகளுக்கு உட்படாமல் தத்தெடுக்கும் சம்பவங்கள் நடக்கிறது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. எந்த ஒரு தனி நபருக்கோ, நிறுவனத்துக்கோ, மருத்துவமனைக்கோ கைவிடப்பட்ட நிலையில் ஆதரவற்ற குழந்தைகள் இருப்பது தெரியவந்தால், அதுகுறித்து குழந்தைகள் உதவி மையம் (1098), குழந்தைகள் நலக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது கட்டாயம் ஆகும். அதேபோல், தங்களது குழந்தையை வளர்க்க இயலாமல், ஒப்படைக்க பெற்றோர் முன்வந்தால், அதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள்…
யோக பாரம்பரியத்தில், நீங்கள் எதையும் சமைத்தால், அது சமைத்த 1.5 மணி நேரத்திற்குள் நுகரப்பட வேண்டும். இல்லையென்றால், அதிகபட்சம் 4 மணிநேரம், சம்பந்தப்பட்ட உருப்படிகள் மற்றும் சமையல் முறையைப் பொறுத்து. அதையும் மீறி, அதைத் தொடக்கூடாது, ஏனென்றால் அது வயிற்றில் வாயுக்களை மட்டுமே உருவாக்கும், மேலும் அமைதியற்ற தன்மை மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இது சுவாச ஆரோக்கியம், மன ஆரோக்கியம், வாசனை உணர்வு மற்றும் பசியையும் பாதிக்கிறது என்று சத்குரு கூறுகிறார். எல்லா படங்களும் மரியாதை: இஸ்டாக்
Last Updated : 12 Jul, 2025 12:39 AM Published : 12 Jul 2025 12:39 AM Last Updated : 12 Jul 2025 12:39 AM கோப்புப் படம் சென்னை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித் துறையில் வரும் மாவட்ட கல்வி அலுவலர் பதவியில் மொத்தம் 60 காலிபணியிடங்கள் உள்ளன. பதவி உயர்வு, பணியிட மாறுதல் மூலம் அவற்றை நிரப்ப தகுதியான தலைமை ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் 2 பேர் பணி ஓய்வு பெற்றனர். எஞ்சிய 34 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. இதேபோல, 24 மாவட்டகல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை…
