புதுடெல்லி: லைப் பாய், பியர்ஸ், டவ், லக்ஸ், பாண்ட்ஸ், குளோஸ் அப், பெப்சோடென்ட், சர்ப் எக்செல், ரின், விம், புரூ காபி, புரூக் பாண்ட் தேநீர், அழகு சாதனங்கள் உட்பட பல்வேறு நுகர்வோர் பொருட்களை இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (எம்.டி.) மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) ரோஹித் ஜாவா பதவி வகிக்கிறார். இவர் வரும் 31-ம் தேதியுடன் அப்பதவியில் இருந்து விலகுகிறார். இதையடுத்து பிரியா நாயரை அந்தப் பதவிகளுக்கு இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் நியமித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் முதல் பெண் எம்.டி, சிஇஓ என்ற பெருமையை பிரியா நாயர் பெறுகிறார். அத்துடன் நிறுவனத்தின் போர்டு, தலைமை நிர்வாக உறுப்பினராகவும் இனிமேல் இருப்பார். தற்போது பிரியா நாயர் வீட்டு பராமரிப்பு, அழகு, நல்வாழ்வு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பணிகளின் விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் பொறுப்புகளை வகித்து வருகிறார். இதுகுறித்து இந்துஸ்தான் யுனிலீவர் தலைவர்…
Author: admin
புதுடெல்லி: அந்தமான் அருகே கடல் கொந்தளிப்பு காரணமாக பாய்மரப் படகில் தத்தளித்த 2 அமெரிக்கர்களை, இந்திய கடலோர காவல் படையினர் நேற்று மீட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் ‘சீ ஏஞ்சல்’ என்ற நவீன பாய்மரப் படகில் பல நாடுகளுக்கு செல்லும் சாகச பயணத்தில் ஈடுபட்டனர். அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே நேற்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பலத்த காற்று வீசியதில் படகின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாய்கள் எல்லாம் கிழிந்தன. இதனால் அந்த படகு பயணத்தை தொடர முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தது. இத்தகவல் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்திய கடலோர காவல் படையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இந்திய கடலோர காவல் படையின் ராஜ்வீர் கப்பல் மீட்பு பணிக்கு சென்றது. அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு தெற்கே 53 மைல் தொலைவில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 அமெரிக்கர்களையும் இந்திய கடலோர காவல்படையினர்…
திருநெல்வேலி: மாநில ஆளுநர்களின் அதிகாரங்களில், முதல்வர்கள் தலையீடு இருக்கக் கூடாது என்று மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார். பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268-வது குருபூஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மாநில முதல்வர்களுக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளன. அதைவைத்து மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதைவிடுத்து, ஆளுநருக்கு இருக்கும் சில அதிகாரங்களில் முதல்வர்கள் தலையிடக் கூடாது. மாநிலத்தின் முதல் பிரஜையாக ஆளுநர்தான் உள்ளார். நான் 4 மாநிலங்களில் ஆளுநராக இருந்திருக்கிறேன். 2 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்தான். ஆனால், இதுபோன்ற எந்தப் பிரச்சினைகளும் அங்கு ஏற்படவில்லை. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (AP படம்) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (உள்ளூர் நேரம்) எதிர்ப்பாளர்களைப் பார்த்து, பனி அதிகாரிகள் மீது பாறைகள் மற்றும் செங்கற்களை எறிந்ததாகக் கூறப்படுகிறது, அவர்களை “ஸ்லிம்பால்ஸ்” என்று அழைத்து உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.ட்ரூத் சோஷியல் குறித்த ஒரு வலுவான வார்த்தையில், டெக்சாஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருகை தந்தபோது தான் இந்த சம்பவத்தைக் கண்டதாக டிரம்ப் கூறினார்.”நான் டெக்சாஸிலிருந்து திரும்பி வருகிறேன், குண்டர்கள் தங்கள் கார் மற்றும்/அல்லது உத்தியோகபூர்வ வாகனத்தில் ஒரு சாலைவழியில் நகர்ந்து கொண்டிருந்தபோது, குண்டர்கள் பனி அதிகாரிகள் மீது பாறைகள் மற்றும் செங்கற்களை வன்முறையில் எறிந்து கொண்டிருந்ததால் அவநம்பிக்கையுடன் பார்த்தேன்,” என்று அவர் எழுதினார்.உண்மை சமூக இடுகை எதிர்ப்பாளர்கள் புத்தம் புதிய அரசாங்க வாகனங்களுக்கு “மிகப்பெரிய சேதத்தை” ஏற்படுத்தியதாகவும், சட்ட அமலாக்கத்தில் காட்டப்பட்ட அவமதிப்பு குறித்து கவலை தெரிவித்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நொய்ம் மற்றும்…
விழுப்புரம்: 2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தை நேற்று மேற்கொண்ட பழனிசாமி,வானூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பேசியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் 575 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். அதில் 10 சதவீதத்தைகூட நிறை வேற்றவில்லை. 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக தவறான தகவல்களைத் தெரிவிக்கின்றனர். மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு, சிலிண்டருக்கு ரூ.100, கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதிமுகவின் அழுத்தத்தால்தான் மகளிருக்கு உரிமைத்தொகை கிடைக்கிறது. தேர்தல் வர உள்ளதால் 30 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்க விதிகளை தளர்த்தியுள்ளனர். தேர்தலுக்குப் பிறகு, தகுதி இல்லை என்று கூறி உரிமைத்தொகையை நிறுத்திவிடுவார்கள். வரி, கட்டண உயர்வால் மக்களை பரிதவிக்கச் செய்துள்ளனர். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி…
கடலூர் / மயிலாடுதுறை: எனது வீட்டில் அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராமதாஸ் பேசியதாவது: மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் 2,700 பேர் கலந்துகொண்டனர். என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோருக்காக பாமக தொடர்ந்து போராடியும், என்எல்சி நிறுவனம் செவிசாய்க்கவில்லை. எங்கள் போராட்டம் தொடரும். 10.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற, உங்களிடம் உள்ள விலைமதிப்பற்ற ஆயுதமான வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கு வாக்களித்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். நம்மிடம் 40 எம்எல்ஏக்கள், 5 எம்.பி.க்கள் இருந்திருந்தால் என்எல்சி நிறுவனம் பயந்திருக்கும். எனவே, சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இம்முறை பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார். கூட்டத்தில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது…
விழுப்புரம்: 2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம் பலம் கூட்ரோட்டில் நடைபெற்ற பிரச்சார பயணத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும், “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பழிபோடுவது ஸ்டாலினின் தந்திரம்” என்று அவர் சாடியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று (ஜூலை 11) மாலை மேற்கொண்டார். வானூர் சட்டப்பேரவைத் தொகுதி திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அவர் பேசியது: ”திமுக தேர்தல் அறிக்கையில் 575 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், திமுகவினரும் சொல்லி வருகின்றனர். 100 நாள் வேலையை 150 நாட்களுக்கு வழங்குவோம், கூலி தொகையை உயர்த்துவோம் என்றார்கள். 100 நாள் வேலை 50 நாட்களாக குறைந்துவிட்டது. மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு, சிலிண்டருக்கு ரூ.100,…
இந்த அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தாலும், சோதனை எடுக்க நீங்கள் தவறவிட்ட காலத்தின் முதல் நாள் வரை காத்திருக்க வேண்டும். . இரத்த பரிசோதனைகள் மிகவும் நம்பகமானவை என்றாலும், அவர்களும் நேர்மறையான முடிவைக் கொடுக்க ஒரு குறிப்பிட்ட அளவிலான HCG ஐக் கண்டறிய வேண்டும்.ஆதாரங்கள்ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவம்இன்று மருத்துவ செய்திஹெல்த்லைன்மறுப்பு: இந்த கட்டுரை தகவலுக்கு மட்டுமே, இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை
சென்னை: பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னுடைய கல்லூரி காலத்தில் பெண் வழக்கறிஞர் ஆண் நண்பருடம் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப் படங்கள் இணைய தளங்களில் பரப்பட்டிருந்தன. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றக் கோரி, சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள அந்தக் காட்சிகளை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், விடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க இயலாது என மத்திய அரசு தரப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையீடு செய்யப்பட்டது. மேலும், பெண் வழக்கறிஞர் தொடர்பான வீடியோ காட்சிகளை நீக்க சமூக வலைதளங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை…
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரம் முகாம்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நகர்புறப் பகுதிகளில் 3,768, ஊரகப் பகுதிகளில் 6,232 என 10 ஆயிரம் முகாம்கள் நடைபெற உள்ளன. அத்துடன் முகாம்களுக்கு வருகைதரும் பொதுமக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 7-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டுக்கும்…
