சென்னை: திருமலா பால் நிறுவன மேலாளர் மர்ம மரணம் விவகாரத்தில் மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், கொளத்தூர் துணை ஆணையர் அன்றாட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி (37). திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னை மாதவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்னியம்மன்மேட்டில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அண்மையில் திருமலா பால் நிறுவனம் அவர்களது நிறுவன வரவு- செலவு கணக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்துள்ளது. அப்போது, ரூ.40 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்ததாகவும், அந்த பணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரின் வங்கி கணக்குக்கு மாற்றி…
Author: admin
இது ஒரு யுடிஐ அல்லது சில நீரிழப்பாக இருக்கலாம்.ஆய்வக சோதனைகள் எந்த நோய்த்தொற்றையும் காட்டாதபோது, சிறுநீர்ப்பை இன்னும் அழிவின் போது வீக்கமடைந்து, எரிச்சலடைந்த அல்லது தீக்காயங்களை உணரும்போது, அது கடந்து செல்லும் பிரச்சினையாக இருக்காது. தொற்று இல்லாமல் இந்த எரிச்சல் சில நேரங்களில் சிறுநீர்ப்பை புறணியில் வளரும் புற்றுநோய் உயிரணுக்களுக்கு உடலின் எதிர்வினை ஆகும்.சிறுநீர்ப்பை புற்றுநோய் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை (யுடிஐ) பிரதிபலிக்கும் என்று பொருள் குறித்த ஒரு கட்டுரை சுட்டிக்காட்டுகிறது, இது தவறான நோயறிதல் பொதுவானது, குறிப்பாக பெண்களில். நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு பதிலளிக்காத யுடிஐ ஒரு யுடிஐ ஆக இருக்காது.[This article is meant for informational purposes only and should not be used as a substitute for professional medical advice. If any of these symptoms persist or cause concern, a qualified healthcare provider should be consulted…
புதுடெல்லி: ஏர் இந்தியா விமான விபத்துக்கு டிசிஎம்ஏ கோளாறு காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க நிபுணர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இந்த விமானம் அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி மீது மோதியதால் 29 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் இந்திய விமானப் படையின் மூத்த விமானிகள், அமெரிக்க தேசிய பாதுகாப்பு வாரியத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐ.நா. சபையின் சர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் வல்லுநர்கள்…
சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு இன்று (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 13 லட்சத்து 89,738 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 8 லட்சத்து 63,068 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வனக்காப்பாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 3,935 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் 25-ம் தேதி வெளியிட்டது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மே மாதம் 24-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன. கல்வித் தகுதி 10-ம் வகுப்பு: குருப்-4 தேர்வுக்கான அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என்ற போதிலும் இத்தேர்வுக்கு பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் பொறியியல் பட்டதாரிகள் என உயர் கல்வித்தகுதி உடையவர்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர். தேர்வுக்கு…
சரத்குமார், அசோக் செல்வன் நடித்த ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா, அடுத்து இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்வி பாண்டியராஜன் உள்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடாவிட்டால் நாம் தமிழர் கட்சி விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பரந்தூரில் 2-வது பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான திட்டத்தை 1000 நாட்களுக்கு மேலாக ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்த்து வருகின்றனர். அதை துளியும் மதிக்காமல் தமிழக அரசு இத்திட்டத்தை நிறை வேற்றியே தீருவேன் என்னும் முனைப்பில் பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்தி வருகிறது. அதன்படி கடந்த மாதம் வரையறுக்கப்பட்ட நிலங்களுக்கான மதிப்பீட்டுத் தொகைகள் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து ஏகனாபுரத்தில் சுற்றியுள்ள கிராமங்களில் நிலங்களை வைத்திருக்கும் வெளியூரை சேர்ந்த நில உரிமையாளர்களை அணுகி அவர்களுக்கு மதிப்பீட்டுத் தொகையை வழங்கி, நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் 5750 ஏக்கர் திட்ட அளவில் வெறும் 17.5 ஏக்கர் சொற்ப இடங்களை மட்டுமே பெற்றுவிட்டு, பொதுமக்கள் அவற்றை தாமாகவே முன்வந்து வழங்கியது போல…
மும்பை: மகாராஷ்டிரா சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள ஆகாஷ்வானி எம்எல்ஏ கேன்டீனில் வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதாக சிவ சேனா கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அங்கு பிளாஸ்டிக் பாக்கெட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை முகர்ந்து பார்த்தார். கேன்டீன் ஒப்பந்ததாரரை அழைத்து உணவுப் பொருட்களின் பாக்கெட்டை முகர்ந்து பார்க்கும் படி கூறினார். பின் அவரை கன்னத்தில் அறைந்து தாக்கினார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து அரசியல் கட்சியினர் பலர், சிவசேனா எம்எல்ஏ கெய்க்வாட்டின் செயலை கண்டித்தனர். கெய்க்வாட் மீது யாரும் புகார் கொடுக்காததால் அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க முடியாது என மாநில உள்துறை இணையமைச்சர் யோகேஷ் கடம் கூறினார். இந்நிலையில் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், ‘‘கேன்டீன் ஊழியரை எம்எல்ஏ தாக்கியது அதிகார துஷ்பிரயோகம். புகார் கொடுத்தால்தான் விசாரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. போலீஸார் தாமாக…
லார்ட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஜோ ரூட் சதம் விளாசினார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் கிராவ்லி 18, பென் டக்கெட் 23, ஆலி போப் 44. ஹாரி புரூக் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோரூட் 99, பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஜஸ்பிரீத் பும்ரா வீசிய முதல் பந்தை கல்லி திசையில் பவுண்டரி அடித்த ஜோ ரூட் தனது 37-வது சதத்தை நிறைவு செய்தார். 192 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் அவர், இந்த சதத்தை கடந்தார். அவருக்கு…
இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வந்து சேரும் ஈழத் தமிழர்கள் அங்குள்ள ஏதிலிகள் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். அந்த நேரத்தில் ராஜீவ் காந்தி படுகொலை நடக்கிறது. குற்றவாளிகள் என அடையாளம் காணப்படும் சிவராசன், சுபா ஆகியோரைத் தேடத் தொடங்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, ஏதிலிகள் பலரை, வேலூர் கோட்டை தடுப்புக் காவல் சிறையில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரால் துன்புறுத்துகிறது. அப்படி அங்கு அழைத்துச் செல்லப்பட்ட மாறன் (சசிகுமார்), ராமேஸ்வரம் முகாமில் இருக்கும் தனது மனைவி (லிஜோ மோள்) மற்றும் மகளைப் பார்க்க முடியாமல் சித்ரவதைகளை அனுபவிக்கிறார். ஆண்டுகள் நகர, மாறனும் அவருடன் வேலூர் முகாமில் இருப்பவர்களும் சுரங்கம் தோண்டித் தப்பிக்கத் திட்டமிடுகின்றனர். அவர்களால் முடிந்ததா என்பது கதை. கடந்த 1995, ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று வேலூர் தடுப்புக் காவல் சிறையிலிருந்து 45 பேர் தப்பிச்சென்ற நிகழ்வைக் கதைக்களமாக்கி, தேவையான அளவுக்குக் கற்பனைச் சித்தரிப்புகளையும் புகுத்தி, த்ரில்லர் படமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்…
சென்னை: கோவை குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 3 தீவிரவாதிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது: தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சிக்கினர். இவர்களுடன் தொடர்புடைய தீவிரவாதி நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்கை காவல்துறையினர் தேடி வந்தனர். முன்னதாக இவர், 2012-ல் வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு மற்றும் 2013-ல் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்கு உட்பட மேலும் பல வழக்குகளில் முக்கியப் பங்காற்றினார். அவர் மீது தமிழகத்தில் 5 வழக்குகளும், கேரளாவில் 2 வழக்குகளும், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு வழக்குகளும் உள்ளன. இதனால், அபுபக்கர் சித்திக்கை அம்மாநில போலீஸாரும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் 30 ஆண்டுகளாகத் தேடி வந்தன. இவர்…
