சென்னை: உங்களுக்காக நான் இருக்கிறேன். எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம் என்று தொண்டர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாமக 16-ம் தேதி 37-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இம் மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்பிய ராமதாஸுக்கு வணக்கங்களையும், உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள். 36 ஆண்டுகள் ஆகியும் நம்மால் இன்னும் ஆட்சியை பிடிக்க முடியாமல் இருப்பது பெரும் குறையாகவும், வருத்தமாகவும் இருந்தாலும்கூட தமிழக மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும் நாம் ஆற்றிய பணிகள் மனதுக்கு நிறைவைத் தருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பாமகாவால் தமிழகத்துக்க கொண்டு…
Author: admin
விம்பிள்டன் 2025 என்பது ஸ்ட்ராபெர்ரி, புல் நீதிமன்றங்கள் மற்றும் ஆடம்பரமான கூட்டங்களைப் பற்றியது அல்ல – இது டென்னிஸ் ஜயண்ட்ஸ், அதாவது மற்றும் அடையாளப்பூர்வமாக அலைகளை உருவாக்கியது. இறுதி மோதலில் ஜானிக் சின்னர் மற்றும் கார்லோஸ் அல்கராஸின் எரியும் வேகமும் நேர்த்தியும் இடம்பெற்றிருந்தாலும், ரசிகர்கள் உதவ முடியவில்லை, ஆனால் விளையாட்டின் உயர்ந்த டைட்டான்கள் நவீன டென்னிஸை எவ்வாறு வடிவமைத்தன என்பதை கவனிக்க முடியவில்லை. ரெய்லி ஓபல்கா (6’11 “) மற்றும் ஜான் இஸ்னர் (6’10”) போன்ற வீரர்கள் இந்த ஆண்டின் இறுதி வெட்டு செய்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர்களின் அசுரன் சேவை மற்றும் நிகர இருப்பு எப்போதும் விளையாட்டை மாற்றிவிட்டது.டென்னிஸின் இந்த வானளாவிய கட்டிடங்கள் – ஓபெல்கா, ஐவோ கார்லோவிக், கெவின் ஆண்டர்சன் மற்றும் பல – நீதிமன்றத்தில் அதிகாரம் என்ன என்பதை மறுவரையறை செய்துள்ளது. ஒரு சிறிய விமானத்தைத் தடுக்கக்கூடிய 150 மைல் மைல் மற்றும் விங்ஸ்பான்களை முதலிடம் வகிப்பதன்…
சிம்லா: இமாச்சலில் கடந்த 4 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் இமாச்சலின் பங்க்லூயட் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அந்த கிராமத்திலிருந்து 150 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஜுவாலப்பூர் என்ற இடத்தில் 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் அடித்துச் செல்லப்பட்டு 10 நாட்களான நிலையில் நேற்று சடலங்கள் மீட்கப்பட்டன. 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரில் தற்போது கெம் லதா (23) என்பவர் மட்டும் உயிருடன் உள்ளார். அவரது தாய் தேவகி, அண்ணன் ஜாபர், 9 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. கெம் லதாவின் பாட்டி, தந்தை பத்மா சிங், மைத்துனி பார்வதி, 7 வயது சிறுவன் உள்ளிட்டோரின் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவர்களின் உடல்களை தேடும் பணி நீடிக்கிறது.
புதுப் புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தக் கூடிய கதையாக ‘வேள்பாரி’ இருக்கும் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார். சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் ஷங்கர் பேசும்போது: “முதலில் எனது கனவுப் படமாக இருந்தது ‘எந்திரன்’. தற்போது என்னுடைய கனவுப் படம் ‘வேள்பாரி’. எப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தை எடுக்கிறோமோ அதை ‘சந்திரலேகா’ போல பிரம்மாண்டமாக இருப்பதாக சொல்வார்கள். ஆனால் ‘சந்திரலேகா’வை விட ஒரு படிமேலாக ‘வேள்பாரி’ வரும் என்று நம்புகிறேன். இப்படத்தில் ஆக்ஷன், இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், பாடல் வரிகள், வசனம், கிராபிக்ஸ் என நிறைய ஸ்கோப் இருக்கிறது. மேலும் புதுப் புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தக் கூடிய கதையாக ‘வேள்பாரி’…
தனது குடும்பத்துப் பெண்கள் அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லி வந்த மருத்துவர் ராமதாஸ் இப்போது வேறு வழியில்லாமல், மகனைச் சமாளிக்க மகள் ஸ்ரீகாந்தியை அரசியல் மேடைக்குக் கொண்டு வந்திருக்கிறார். தன் பாட்டுக்கு எதிர்ப்பாட்டுப் பாடும் மகன் அன்புமணியை ஒரேயடியாக ஓரங்கட்டத் துணிந்துவிட்ட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியின் தலைவர் பதவி காலாவதியாகி விட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். மேலும், நிர்வாகக் குழு மற்றும் மாநில செயற்குழு தீர்மானங்கள் மூலமாக கட்சியில் அனைத்து அதிகாரங்களும் தனக்கு மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார் ராமதாஸ். இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, மகனின் குடைச்சல்களை சமாளிக்க தனது அடுத்த அரசியல் வாரிசாக மூத்த மகள் ஸ்ரீகாந்தியை முன்னிலைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார் ராமதாஸ். அதற்கேற்ப, கட்சியின் அனைத்து அசைவுகளும் இப்போது ஸ்ரீகாந்தியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அண்மையில் ஓமந்தூரில் நடைபெற்ற மாநில செயற்குழுக்…
ராயகடா: ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் கஞ்சமஜ்ஹிரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது சொந்த அத்தை மகனை (தந்தையின் சகோதரி மகன்) காதலித்து திருமணம் செய்துள்ளார். ஒடிசா வழக்கப்படி அத்தை மகன், மகளை திருமணம் செய்வது சமூக வழக்கத்துக்கு எதிரானது. இதனால் அவர்களுக்கு தண்டனை வழங்க கிராமத்தினர் முடிவு செய்தனர். காதல் ஜோடியை வயலுக்கு அழைத்துச் சென்ற கிராமத்தினர், அவர்களை மாடு போல் ஏரில் பூட்டி நிலத்தை உழச் செய்தனர். அவர்களை ஒருவர் பிரம்பால் அடித்தபடி நிலத்தை உழச் செய்தார். அதன்பின் அவர்கள் கிராம கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாவத்தை போக்குவதற்கான சடங்குகளை செய்ய வைத்தனர். இந்த வீடியோ வைரலாக பரவியதால் கண்டனம் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்வாதி குமார் விசாரணை நடத்தி வருகிறார். நூதன தண்டனை வழங்கிய கிராமத்தினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யவுள்ளனர்.
சென்னை: அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு இத்தாலி அணி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஐரோப்பிய அணிகளுக்கான தகுதி சுற்றில் இத்தாலி விளையாடியது. இதில் ஸ்காட்லாந்து மற்றும் குயெர்ன்சி அணிகளை இத்தாலி வீழ்த்தியது. நெதர்லாந்து அணி உடன் தோல்வியை தழுவியது. Jersey உடனான ஆட்டம் கைவிடப்பட்டது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது இத்தாலி. 2 வெற்றி 1 தோல்வி உடன் 5 புள்ளிகளை பெற்று ரன் ரேட் அடிப்படையில் டி20 உலகக் கோப்பைக்கு முதல் முறையாக இத்தாலி தகுதி பெற்றுள்ளது. அந்த அணியை ஆஸ்திரேலிய அணிக்காக முன்பு விளையாடிய ஜோ பர்ன்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இத்தாலி என்றாலே பலருக்கும் அந்நாட்டின் கால்பந்து அணிதான் நினைவுக்கு வர வாய்ப்புள்ளது. சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் அந்த அணி…
ராஜ்கபூர், மாலா சின்ஹா நடித்து 1958-ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படம், ‘பர்வாரிஷ்’. இந்தப் படத்தின் பாதிப்பில் தமிழில் ‘பெற்றால் தான் பிள்ளையா?’ என்ற தலைப்பில் நாடகம் ஒன்று நடத்தப்பட்டு வந்தது. அதன் கதையில் சின்ன மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட திரைப்படம், ‘பார் மகளே பார்’. இயக்குநர் பீம்சிங், சிவாஜி கணேசன் காம்போ-வின் ‘ப’ வரிசை படங்களில் ஒன்று, இது. சிவாஜி கணேசனுடன் சவுகார் ஜானகி, முத்துராமன், விஜயகுமாரி, ஏ.வி.எம் ராஜன், புஷ்பலதா, குமாரி ருக்மணி, வி.கே.ராமசாமி, எம்.ஆர்.ராதா, சோ, மனோரமா என பலர் நடித்தனர். கதைப்படி ஜமீன்தாரான சிவாஜி கணேசனுக்கும் அவர் மனைவி சவுகார் ஜானகிக்கும் நீண்ட காலத்துக்குப் பிறகு பெண் குழந்தை பிறக்கிறது. குடும்ப கவுரவத்துக்கும் பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஜமீன்தார், குழந்தை பிறக்கும் நேரத்தில் ஊரில் இல்லை. ஜமீன்தார் மனைவிக்கு குழந்தை பிறக்கும் அதே நேரத்தில் இன்னொரு பெண்ணுக்கும் குழந்தை பிறக்கிறது. இரண்டு குழந்தைகளையும் கிளீன் பண்ணுவதற்காக…
மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலை வர்கள், 2 நிலைக்குழு தலைவர்களை திமுக தலைமை அதிரடியாக ராஜினாமா செய்ய வைத்திருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தை அலறவிட்டுக் கொண்டிருக்கிறது. மதுரை மாநகராட்சியில் வணிகக் கட்டிடங் களுக்கு வரிவிதிப்பு செய்ததில் 2023-24-ம் ஆண்டுகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. இதைக் கண்டுபிடித்த அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார், இது தொடர்பாக 5 பில்கலெக்டர்களை அப்போதே சஸ்பெண்ட் செய்தார். இந்த விவகாரத்தில் கமிஷனர், துணை கமிஷனரின் பாஸ்வேர்டுகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்த சைபர் க்ரைம் போலீஸார், இது தொடர்பாக 8 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணை யில், திமுக-வைச் சேர்ந்த மண்டலத் தலைவர் களுக்கும் இந்த முறைகேட்டில் பங்கிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த விவகாரம் வெளியில் கசிந்து அதிமுக தரப்பில் சிபிஐ விசாரணை நடத்தக் கேட்டு போராட்டம் அறிவித்த நிலையில், அவசர அவசரமாக கடந்த 7-ம் தேதி 2,3,4,5, ஆகிய மண்டலத் தலைவர்…
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 12) பவுனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.160 என தங்கம் விலை உயர்ந்தது. நேற்று பவுனுக்கு ரூ.440 என விலை உயர்ந்திருந்தது. இந்தச் சூழலில் சென்னையில் இன்று (சனிக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,140-க்கு விற்பனையாகிறது. அதேபோல பவுனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.73,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
