Author: admin

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படங்களின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ‘மதராஸி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருந்தார். இதனை ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்குவதாக இருந்தது. தற்போது இதில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. அடுத்ததாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் விநாயக் கதையில் அப்பா கதாபாத்திரத்துக்கு மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள். அவரும் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போதைக்கு மோகன்லால் தேதிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மோகன்லால் தேதிகளை கணக்கில் கொண்டு, அடுத்து வெங்கட்பிரபு கதையில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதனை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என…

Read More

புதுச்சேரி: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற அமித் ஷாவின் கருத்தை திட்டவட்டமாக மறுக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் அதிமுகவும் பாஜகவும் இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். இது அதிமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமித் ஷாவின் ‘கூட்டணி ஆட்சி’ என்ற நிலைப்பாடு குறித்து புதுச்சேரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “தமிழகத்தில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று மட்டும் ஒரே வரியில் கூறிவிட்டு, எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்றார். இதன்மூலம், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி வெற்றி பெற்றால், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்ற…

Read More

சென்னை: பள்​ளி​களில் காம​ராஜர் பிறந்​த​நாள் விழா கொண்​டாடு​வது மற்​றும் சிறந்த பள்​ளி​களை தேர்வு செய்​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக்​கல்வி துறை வெளி​யிட்​டுள்​ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்வி துறை இயக்​குநர் கண்​ணப்​பன், தொடக்க கல்வி இயக்​குநர் நரேஷ் ஆகியோர் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: தமிழகத்​தில் முன்​னாள் முதல்​வர் காம​ராஜர் பிறந்​த​நாளான ஜூலை 15-ம் தேதி ஆண்​டு​தோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்​டி, சிறந்த பள்​ளி​களை தேர்வு செய்து நிதி வழங்​கப்​படும். இந்த பள்​ளி​கள் மாணவர்​களை அதிக அளவில் சேர்த்​திருக்க வேண்​டும். மாணவர்​கள் இடைநிற்​றலை தவிர்த்​ததுடன், ஆசிரியர்​களின் கற்​பித்​தல் திறன் சிறப்​பாக இருக்க வேண்​டும். கலை, இலக்​கி​யம், நாடகம் போன்ற துறை​களில் மாணவர்​களை நன்கு ஊக்​கப்​படுத்தி இருக்க வேண்​டும். பெற்​றோர் ஆசிரியர் கழகம், எஸ்​எம்சி குழு ஆகியவை சிறப்​பாக செயல்​பட்​டிருக்க வேண்​டும். புர​வலர்​களை​யும் அதிக அளவில் சேர்த்​திருக்க வேண்​டும். இந்த திட்​டம் மூலம் பெறும் நிதியை கொண்டு பள்​ளி​களில் குடிநீர், கழிப்​பறை​கள்,…

Read More

அட்லி இயக்கவுள்ள படத்தில் 4 கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. எந்தவொரு தகவலோ, புகைப்படமோ கசியக் கூடாது என்பதில் கடும் எச்சரிக்கையுடன் படக்குழு பணிபுரிந்து வருகிறது. தற்போது இப்படத்தில் 4 கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தாத்தா, பையன், 2 மகன்கள் என 4 கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுனே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நாயகியாக தீபிகா படுகோன் நடிப்பதை மட்டுமே படக்குழு உறுதி செய்திருக்கிறது. அவரை தவிர்த்து ஜான்வி கபூர், மிருணாள் தாகூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் அல்லு அர்ஜுனுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ராஷ்மிகா மந்தனா கதாபாத்திரம் முழுக்கவே வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் முழுக்கவே ஹாலிவுட்படங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிய இருக்கிறார்கள். இதன் பொருட்செலவு என்ன…

Read More

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் ராணுவ தளங்களாக இருந்த 12 கோட்டைகளில் ஒன்று தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை. இந்த கோட்டையை யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜெகாம்ஸ் கடந்த 2024 செப்டம்பர் மாதம் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார். இதை தொடர்ந்து, செஞ்சி கோட்டை உள்ளிட்ட 12 கோட்டைகளையும் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ இணைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் 47-வது அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை 3 குன்றுகளில் அமைந்துள்ளது. இது 13-ம் நூற்றாண்டில் உருவானது. தமிழக மன்னர்களின் பங்களிப்புடன், அவ்வப்போது பொலிவு பெற்று வந்துள்ளது. கோயில்கள், அகழி, படைவீடுகள், வெடிமருந்து கிடங்கு, பீரங்கி…

Read More

புதுடெல்லி: விமான இன்ஜினுக்கான எரிபொருள் சப்ளை எதிர்பாராத வகையில் திடீரென நின்றதுதான் அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்று புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்துள்ள முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் கடந்த மாதம் 12-ம் தேதி புறப்பட்டு சென்றது. ஓடு பாதையில் இருந்து வானில் பறந்த விமானம் திடீரென கீழே இறங்கி, விமான நிலையத்தின் அருகில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், விமானிகள் இடையே நடைபெற்ற உரையாடல் பதிவுகள் ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில், 15 பக்க முதல்கட்ட…

Read More

ஆசிஷ் கவுரிகர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் ரிஷப் ஷெட்டி. ‘லகான்’, ‘ஸ்வதேஷ்’, ‘ஜோதா அக்பர்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஆசிஷ் கவுரிகர். இவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் நாயகனாக நடிக்க ரிஷப் ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இக்கதை ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் மன்னரின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிக்க ரிஷப் ஷெட்டி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ரிஷப் ஷெட்டி – ஆசிஷ் கவுரிகர் இணையும் படத்தினை பிரபல தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் தயாரிக்கவுள்ளார். இவர் என்.டி.ஆர், ஜெயலலிதா மற்றும் கபில் தேவ் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்று படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது ‘காந்தாரா 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரிஷப் ஷெட்டி. அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘ஜெய் ஹனுமன்’ படத்தில் கவனம்…

Read More

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மழை பெய்ய வாய்ப்​புள்​ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக இன்று (ஜூலை 13) முதல் வரும் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும், 16, 17, 18-ம் தேதி​களில் சில இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை​ பெய்​யக்​கூடும். நீல​கிரி மற்​றும் கோவை மாவட்​டத்​தின் மலைப் பகு​தி​களில் 15 முதல் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் இன்று சில இடங்​களில் அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 7 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயரக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும்.…

Read More

ஜூன் 27-ம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியான படம் ‘கண்ணப்பா’. இப்படம் குறித்து வெளியீட்டு முன்பு பல்வேறு கிண்டல்கள் எழுந்தன. ஆனால், பட வெளியீட்டுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. இதனை வைத்து படக்குழுவினர் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமங்களை விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தற்போது சிவபக்தர்கள் மற்றும் சுவாமிஜிக்கள் உள்ளிட்ட சிலரை ஒருங்கிணைத்து ‘கண்ணப்பா’ திரையிட்டுக் காட்டப்பட்டது. இதில் மோகன்பாபுவும் கலந்துக் கொண்டார். இந்தக் காட்சி முடிவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் மோகன்பாபு பேசினார். அப்போது “நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும் மீம்ஸ்கள், கிண்டல்களுக்கு ஆளானதே” என்று மோகன்பாபுவிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மோகன்பாபு, “இங்கு படம் பார்த்த சுவாமிஜி ஒருவர் கிண்டல்கள் தொடர்பாக ஒரு அழகான பார்வையை என்னிடம் தெரிவித்தார். கிண்டல்கள் பற்றி கவலைப்படாதீர்கள் என்றார். இந்த ஜென்மத்திலும், கடந்த கால ஜென்மத்திலும் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களைக் கிண்டல்கள் கழுவ உதவுவதாக தெரிவித்தார். கிண்டல் செய்பவர்களுக்கு நன்றி…

Read More

மதுரை: திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக உள்ள திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்தில் வரும் 14-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. கடைசியாக அதிமுக ஆட்சியில் கடந்த 2011-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து, 14 ஆண்டகளுக்கு பிறகு தற்போதுதான் கும்பாபிஷேகம் நடக்கிறது. இது குறித்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ-வும், அதிமுக அமைப்பு செயலாளருமான விவி.ராஜன் செல்லப்பா கூறியது: “சட்டமன்றத்தில் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என நான் கூறினேன். அதற்கு, முதல்வர் அனுமதி பெற்று வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். இதுவரை அவர் கூறியபடி நிதி ஒதுக்கப்படவில்லை. கும்பாபிஷேகத்துக்கு தனியார் பங்களிப்புதான் அதிகமாக உள்ளது. கும்பாபிஷேக பணிகள் குறித்து அமைச்சர்களுடைய ஆய்வுக்கு பிறகு, என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாக தெரியவில்லை. தமிழகம் முழுவதும் இருந்து திருப்பரங்குன்றம் கோயில்…

Read More