புதுச்சேரி: ‘அதிமுக குடும்ப கட்சி இல்லை, மக்களின் கட்சி. சட்டம் – ஒழுங்கில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாததால் மிக மோசமான நிலைக்கு தமிழகம் சென்றுவிட்டது’ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கடலூர் வடக்கு மாவட்ட தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர், விவசாயிகள், வியாபாரிகள், பொதுநல சங்க உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது: “தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் வறட்சி, புயல், கரோனா ஏற்பட்டது. அப்போது இருக்கும் நிதியில் சிறப்பாக மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினோம். திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதமாகிறது. அவர்கள் எந்த இயற்கை இடர்பாடையும் சந்திக்கவில்லை. ஒரே ஒருமுறை மழை, வெள்ளம் வந்தது. தமிழக அரசுக்கு பெரிய பேரிடர் நெருக்கடி ஏற்படவில்லை. இந்த ஆட்சியில் வியாபாரிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வோர்…
Author: admin
முழு வானியல் நாளுக்கு வரும்போது – கிரக பூமியின் ஒற்றை சுழற்சி, அதில் மணிநேர கை ஒரு நிலையான கடிகாரத்தைச் சுற்றி இரண்டு முறை நகர்கிறது – இந்த ஆண்டின் குறுகிய சில ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடக்கிறது. இந்த வாரம் இதுவரை ஆண்டின் குறுகிய நாட்களைக் கண்டது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின்படி அமெரிக்க கடற்படை ஆய்வகம் சர்வதேச பூமி சுழற்சி மற்றும் குறிப்பு அமைப்புகள் சேவை, புதன்கிழமை சுழற்சி சுமார் 1.34 மில்லி விநாடிகளுக்கு 24 மணி நேரத்திற்கும் குறைவாக இருந்தது. இது முற்றிலும் சாதாரணமானது அல்ல: எங்கள் உலகின் சுழல்கள் வழக்கத்தை விட வேகமாக இருந்தன. சராசரி நாள் பெரும்பாலும் கடந்த தசாப்தத்தில் குறைந்துள்ளது, கடந்த ஐந்து ஆண்டுகளில் அல்லது அதற்குள், முழு சுழற்சி ஒரு கூந்தலில் 24 மணி நேரத்திற்கும் குறைவான கூரியில் இல்லை. மாற்றத்தை இயக்கும் காரணிகள் பூமியின் மையத்தில் இயக்கங்கள், வளிமண்டல மாற்றங்கள்…
Last Updated : 13 Jul, 2025 07:00 AM Published : 13 Jul 2025 07:00 AM Last Updated : 13 Jul 2025 07:00 AM புதுடெல்லி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தேசிய சட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (NALSAR) சட்டப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பங்கேற்று பேசியதாவது: வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தாமல் கல்வி உதவித்தொகை மூலம் படிக்க வேண்டும். நமது சட்ட அமைப்பு சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று என்று நான் கருதினாலும் எனது சக குடிமக்கள் இந்த சவால்களை எதிர்கொள்வார்கள் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். விசாரணைகளில் ஏற்படும் தாமதம் சில நேரங்களில் பல ஆண்டுகள் நீடிக்கிறது. விசாரணைக் கைதியாக பல ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு ஒருவர்…
சென்னை: இன்டர்லாக்கிங் செய்யப்படாத லெவல் கிராசிங் கேட்டுகளில் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றவும், கோட்ட அளவில் குரல் பதிவை சரிபார்க்குமாறும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த ரயில்வே கேட் இன்டர்லாக்கிங் செய்யப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதன் எதிரொலியாக, ரயில்வே லெவல் கிராசிங்-ல் பின்பற்ற வேண்டிய 11 நடைமுறைகளை இந்திய ரயில்வே துறை வெளியிட்டது. மேலும், 15 நாட்களுக்கு பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது, தெற்கு ரயில்வேயில் உள்ள கோட்டங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அரக்கோணம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள திருமால்பூர் ரயில்வே கேட்டுகளில் அண்மையில் நடந்த ஆய்வின்போது, இரவுப் பணியில் தூங்கிக் கொண்டிருந்த 2 கேட் கீப்பர் கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்டர்லாக்கிங் செய்யப்படாத லெவல் கிராசிங் கேட்டுகளில் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றவும், கோட்ட அளவில்…
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 9 பெண்கள் உட்பட 23 நக்சலைட்கள் நேற்று அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தனர். இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவாண் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுக்மாவில் 3 தம்பதிகள் உட்பட 23 நக்சலைட்கள் சரண் அடைந்துள்ளனர். இவர்களை பற்றிய தகவலுக்கு அரசால் மொத்தம் ரூ.1.18 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மாவோயிஸ்ட்களின் வலிமை மிகுந்த அமைப்பான மக்கள் விடுதலை கொரில்லா படையின் (பிஎல்ஜிஏ) 1-வது படைப் பிரிவை சேர்ந்தவர்கள். வெற்று மாவோயிஸ்ட் சித்தாந்தம், அப்பாவி பழங்குடியினர் மீது நக்சலைட்கள் செய்த அட்டூழியங்கள், அமைப்புக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றால் ஏமாற்றம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். சரண் அடைந்தவர்களில் 9 பெண்களும் அடங்குவர். பிஎல்ஜிஏ நக்சலைட் அமைப்பு தொடர்ந்து பலவீனம் அடைந்து வருகிறது. சுக்மா-பீஜப்பூர் எல்லையில் தீவிர நடவடிக்கை காரணமாக தொடர்ந்து பலர் சரண் அடைந்து வருகின்றனர். சரண் அடைந்த அனைவருக்கும் தலா…
புதுடெல்லி: இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நேற்று 4 சமூக வலைதள பதிவுகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது. மேலும், இந்தியா – ஈரான் நல்லுறவை சீர்குலைக்க இந்த பதிவுகள் போலியாக வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பதிவுகள் வெளியான சமூக வலைதளங்கள் ஈரான் அரசின் அதிகாரப்பூர்வமானவை அல்ல. அவற்றுக்கும் ஈரான் அரசுக்கும் தொடர்பில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் தூதரகம் வெளியிட்ட 4 போலி சமூக வலைதள பதிவுகளில் ஒன்றில், ‘‘அமெரிக்க விமானம் இந்திய வான் பரப்பில் பறந்து செல்வதற்கு அனுமதி அளித்ததால், சபாஹர் துறைமுக ஒப்பந்தத்தை ஈரான் மறுபரிசீலனை செய்து வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போலி செய்தி, போலி எக்ஸ் வலைதள கணக்கு என்று ஈரான் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இந்த பதிவு பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து வெளியிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய உறவை சீர்குலைக்க சில சமூகவிரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவுடனான வர்த்தகம், ஒத்துழைப்பு, கலாச்சார…
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் வசனங்கள் தமிழில் மிகவும் புகழ்பெற்றன. ‘சாமி’ படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றளவும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. அதே போல விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில் கோட்டா சீனிவாச ராவ் ஏற்று நடித்த ’சனியன் சகடை’ என்ற கதாபாத்திரமும் பெரும் வரவேற்பை பெற்றது. வில்லன் கதாபாத்திரம் தவிர்த்து பல்வேறு குணச்சித்திர, நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருந்தார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் பெண் வேடமிட்ட சந்தானத்துடன் கோட்டா சீனிவாச ராவ் நடித்த காட்சிகளை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது.…
விழுப்புரம்: வீட்டில் ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரத்தில், தனியார் நிறுவன ஆய்வுக்குப் பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனர் ராமதாஸ், “தைலாபுரத்தில் எனது வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டுகேட்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வாங்கப்பட்ட, விலை மதிப்புமிக்க இக்கருவியை 2 நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தோம். யார் வைத்தது, எதற்காக வைத்தார்கள் என ஆய்வு நடைபெறுகிறது” என்றார். இந்நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில், ஒட்டுகேட்பு கருவியை ஆய்வு செய்தவற்காக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 5 துப்பறியும் நிபுணர்கள் நேற்று வந்தனர். இக்குழுவினர் 3 மணி நேரம் ஒட்டுகேட்பு கருவியை ஆய்வு செய்தனர். பின்னர் ராமதாஸ் கூறும்போது, “என்னை சந்திக்க பாட்டாளி சொந்தங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் நான் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எனது வீட்டில் வைக்கப்பட்ட…
ஒரு சமீபத்திய ஆய்வில், மன அழுத்தம் நினைவக குறியாக்கம் மற்றும் மீட்டெடுப்பை கணிசமாக மாற்றுகிறது, இது PTSD போன்ற நிலைமைகளை அதிகரிக்கும். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள், மன அழுத்தம் எண்டோகன்னபினாய்டுகளின் வெளியீட்டைத் தூண்டுகிறது, நினைவக பொறிகளை விரிவுபடுத்துகிறது மற்றும் பயம் பொதுமைப்படுத்தலை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடித்தனர். இந்த முன்னேற்றம் எண்டோகான்னாபினாய்டு ஏற்பிகளைத் தடுப்பதன் மூலமும், நினைவக விவரக்குறிப்பை மீட்டெடுப்பதன் மூலமும், பலவீனப்படுத்தும் PTSD அறிகுறிகளைத் தணிப்பதன் மூலமும் இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான நம்பிக்கையை வழங்குகிறது. வேலையில் காலக்கெடுவைத் துரத்துவதற்கும் தனிப்பட்ட கடமைகளை சமப்படுத்த முயற்சிப்பதற்கும் இடையில், மன அழுத்தம் பலருக்கு ஒரு நிலையான தோழராக மாறியுள்ளது. பல ஆய்வுகள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுடன் நாள்பட்ட மன அழுத்தத்தை இணைத்துள்ள நிலையில், புதிய தரவு நீங்கள் விஷயங்களை எவ்வாறு நினைவில் வைத்திருக்கிறது என்பதை கூட பாதிக்கலாம் என்று கூறுகிறது. ஆம், அது சரி. மன அழுத்தம் நாம் எப்படி உணர்கிறோம் என்பது…
புதுடெல்லி: மகாராஷ்டிராவின் 11 மராட்டிய கோட்டைகளை, உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது. உலகம் முழுவதும் பழங்கால கட்டிடங்களை ஆய்வு செய்து உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து வருகிறது. அதன்படி மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி செய்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்த 11 கோட்டைகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டை என மொத்தம் 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்திருந்திருந்தது. இந்நிலையில், பாரிஸ் நகரில் 47-வது உலக பாரம்பரிய சின்னம் தொடர்பான கமிட்டி கூடி, பல்வேறு நாடுகள் பரிந்துரைத்த சின்னங்கள் குறித்து ஆய்வு நடத்தின. முடிவில் இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்பை வெளிப்படுத்தும் 11 கோட்டைகள் மற்றும் தமிழகத்தின் செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. மகாராஷ்டிராவில் மராட்டியர்கள் ஆட்சி காலத்தில் ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் பல இடங்களில் பாதுகாப்பான கோட்டைகள்…
