திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதையடுத்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயருக்கு தங்கச் சங்கிலி, செங்கோல் மற்றும் அங்கி அணிவிக்கும் விழா நடந்தது. அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, எம்.பி. அண்ணாதுரை, ஆட்சியர் க.தர்ப்பகராஜ் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மேயர் நிர்மலா வேல்மாறனுக்கு தங்கச் சங்கிலி, வெள்ளி செங்கோல் வழங்கி, மேயருக்கான அங்கியை அணிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது: இங்கு ஆண் கவுன்சிலர்களைவிட பெண் கவுன்சிலர்கள்தான் அதிகம் உள்ளனர். மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர் அனைவரும் மக்கள் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைக்க வேண்டும். இங்குள்ள மக்களின் நீண்டநாள் கோரிக்கையை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளது. திருவண்ணாமலை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகிவிட்டது. பாதாள சாக்கடை திட்டம்: திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை முதல்வரிடம் கோரிக்கைவைத்து, அமைச்சர் எ.வ.வேலு கொண்டு வந்துள்ளார். ரூ.40…
Author: admin
சென்னை: நபார்டு வங்கியின் 44-வது ஆண்டு தொடக்க விழாவில் கிராமப்புற மக்கள் மேம்பாட்டுக்குப் பயன்படக்கூடிய வகையில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நபார்டு வங்கியின் 44-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நபார்டு தலைவர் ஸ்ரீஷாஜி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய நிதித் துறை செயலர் எம்.நாகராஜு, தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நபார்டு துணை அலுவலகத்தை மத்திய நிதித் துறை செயலர் நாகராஜு திறந்து வைத்தார். மேலும், நபார்டுக்கான வாட்ஸ்-அப் சேனல், படித்த கிராமப்புற பெண்களுக்கான வருவாய் ஈட்டும் திட்டம், கிராமப்புறங்களில் தொழில்நுட்பங்களை விரிவாக்கம் செய்யும் திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்,து நபார்டு வங்கியின் சாதனை விளக்க புத்தகங்களை தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டார். அவர் பேசும்போது, ‘‘நாட்டின் வளார்ச்சி,…
ஒரு பெரிய முன்னேற்றத்தில், டெல் அவிவ் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஃபார் உயிரியல் ஆராய்ச்சி (ஐபிஐபிஎல்) விஞ்ஞானிகள் உலகின் முதல் எம்ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர், இது ஒரு கொடிய, ஆண்டிபயாடிக்-எதிர்ப்பு பாக்டீரியத்தை எதிர்த்துப் போராடுகிறது.கோவ் -19 ஷாட்களைப் போலவே, இந்த தடுப்பூசி பாதுகாப்பை வழங்க லிப்பிட் நானோ துகள்களைப் பயன்படுத்துகிறது-மேலும் இதைப் பெறுகிறது-இது அங்குள்ள மிக மோசமான பாக்டீரியா நோய்த்தொற்றுகளில் ஒன்றான நியூமோனிக் பிளேக்கிற்கு எதிரான விலங்கு சோதனைகளில் 100% செயல்திறனைக் காட்டியது.மேம்பட்ட அறிவியல் இதழின் அட்டைப்படத்தை கூட தரையிறக்கிய இந்த ஆராய்ச்சி, பேராசிரியர் டான் பியர் மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் அவரது குழு, ஐ.ஐ.பி.ஆரின் விஞ்ஞானிகளுடன் தலைமை தாங்கியது. நட்சத்திர குழுவில் டாக்டர் எடோ கோன், டாக்டர். இன்பால் ஹசன்-ஹாலேவி, மற்றும் பிஎச்.டி மாணவர் சனி பெனாரோச்.”யெர்சினியா பூச்சிகளுக்கு எதிராக ஒரு பயனுள்ள மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை உருவாக்க பல தசாப்தங்களாக விரிவான உலகளாவிய முயற்சிகள்…
ராய்ப்பூர்: வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதன்படி சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாநிலங்களில் தீவிரவாதிகள் சரண் அடையவும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி கடந்த 2024-ம் ஆண்டு முதல் இதுவரை சத்தீஸ்கரில் 1,450 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சரண் அடைந்துள்ளனர். 1,400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பில் இணைந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டு உள்ளது. இதன்காரணமாக சரணடைந்த தீவிரவாதிகள், திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக சத்தீஸ்கர் உள்துறை அமைச்சர் விஜய் சர்மா கூறும்போது, “சரணடைந்த, கருத்தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அரசு சார்பில் உதவிகள் வழங்கப்படும்’’…
விருதுநகர்: விருதுநகரில் சங்கக் கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 44 பேரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் முத்துராமலிங்கம் தெருவில் 3,700 சதுர அடியில் கட்டிய அரசு ஊழியர் சங்கக் கட்டிடம் உள்ளது. கடந்த 2019-ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அன்பரசனுக்கும், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மாவட்டக் குழுவை மாநில குழு கலைத்தது. இதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட சங்கம் தொடர்ந்த வழக்கில், மாவட்ட குழு கலைக்கப்பட்டது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2019 முதல் விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தை மாவட்ட நிர்வாகிகளே பராமரித்து வந்தனர். 2023ல் விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துக்கு மாற்றாக, ‘தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தைமாவட்டக் குழு நிர்வாகிகள் தொடங்கினர். அதேநேரம், சங்கத்தின்…
புதுடெல்லி: மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா நிறுவனம் சுரங்க தொழிலில் கோலோச்சி வருகிறது. அந்த நிறுவனம் சார்பில் கோவா, கர்நாடகா உட்பட பல மாநிலங்கள் மற்றும் லைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சுரங்கங்கள் உள்ளன. இந்த சூழலில் 2024-25-ம் நிதியாண்டில் பல்வேறு கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடை விவரங்களை வேதாந்தா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதன்படி அந்த நிறுவனம் சார்பில் பாஜகவுக்கு ரூ.97 கோடி நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு பாஜகவுக்கு ரூ.26 கோடி மட்டுமே நன்கொடையாக வழங்கப்பட்டது. இதன்படி பாஜகவுக்கு வேதாந்தா வழங்கிய நன்கொடை 4 மடங்காக உயர்ந்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த பிரதான எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளத்துக்கு வேதாந்தா நிறுவனம் சார்பில் ரூ.25 கோடி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ரூ.20 கோடி, காங்கிரஸுக்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் காங்கிரஸுக்கு ரூ.49 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் ரூ.10 கோடி மட்டுமே…
முதல் காலத்தின் வயது எதிர்காலத்தில் இதயம், வளர்சிதை மாற்ற மற்றும் இனப்பெருக்க அபாயங்களுக்கு தடயங்களை வழங்குகிறது. வாழ்க்கையில் அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன, குறிப்பாக ஆரோக்கியத்திற்கு வரும்போது. பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் வரையறுப்பதில் மாதவிடாய் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு உண்டு. மாறிவிடும், உங்கள் முதல் காலகட்டத்தின் வயதில் வாழ்க்கையின் பிற்பகுதியில் என்ன வரப்போகிறது என்பதில் பெரும் பங்கு உண்டு. ஒரு பெண் தனது முதல் காலகட்டத்தை அனுபவிக்கும் வயது அவரது நீண்டகால ஆரோக்கியத்தைப் பற்றிய முக்கியமான தடயங்களை வழங்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் காட்டுகிறது.எண்டோ 2025 இல் வழங்கப்பட்ட புதிய பிரேசிலிய ஆய்வின்படி, கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் எண்டோகிரைன் சொசைட்டியின் வருடாந்திர கூட்டத்தில், முதல் காலகட்டத்தின் வயது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகள் போன்ற நிலைமைகளுக்கு ஒரு பெண்ணின் நீண்டகால ஆபத்து குறித்து மதிப்புமிக்க தடயங்களை வழங்க முடியும்.என்ன மெனார்ச்மெனார்ச் ஒரு பெண் இளம்…
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில், பிஹாரில் நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்கத்து நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு வரும் செப்டம்பர் 30-ம் தேதி இறுதி வாக்காளர்…
நாமக்கல்: பழநி மலையில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால், முருக பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என்று கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைப் பகுதியில் மத்திய புவியியல் துறை மூலம் மாலிப்டினம் உலோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாலிப்டினம் சுரங்கம் தோண்டி எடுத்தால் பழநி மலைப் பகுதிகள் அனைத்தும் அழிந்து போகும். பழநி மலையின் மீதும் அங்குள்ள முருகன் மீதும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் மிகுந்த பற்று வைத்துள்ளனர். மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியைப்போல, இப்பகுதியில் சமண படுகைகளும், மிகப்பெரிய பல்லுயிர் தளங்களும் உள்ளன. இங்கு சுரங்கம் தோண்டினால் பழநி மலை மற்றும் இடும்பன் மலை, ஐவர் மலை, நெய்க்காரப்பட்டி, கரடிக்குட்டம், சத்திரப்பட்டி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும். மதுரையில் முருகன் மாநாடு நடத்துபவர்கள், பழநி முருகன் கோயிலில் சுரங்கம் தோண்ட நினைப்பது…
நியூயார்க்: இரண்டு வாடிக்கையாளர்களுக்கு பார்வையிழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்ததால், 8.5 லட்சம் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை திரும்பப் பெறுவதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், ‘ஓசார்க் டிரயல் 64 ஆஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இன்சுலேட்டடு வாட்டர் பாட்டிலை’ கடந்த 2017-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க நுகர்பொருள் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் (சிபிஎஸ்சி) வெளியிட்ட அறிவிக்கையில், “வால்மார்ட்டின் ஸ்டீல் தண்ணீர் பாட்டிலில் கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் அல்லது பழச்சாறு அல்லது பால் போன்ற கெட்டுப்போகக் கூடிய பானங்களை அடைத்து வைத்துவிட்டு திறந்தபோது அதன் மூடி அதிக அழுத்தத்துடன் வெளிப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, அவ்வாறு திறந்தபோது அதன் மூடி முகத்தில் தாக்கியதில் காயமடைந்ததாக 3 வாடிக்கையாளர்கள் வால்மார்ட் நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இதில் 2 பேரின் கண்ணில் மூடி பட்டதால் பார்வை நிரந்தரமாக பறிபோய் உள்ளது. எனவே, இந்த…
