Author: admin

திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கு அகதியாக வந்த இலங்கை தமிழர் நவநாதனை, எந்த காரணமும் கூறாமல் போலீஸார் கைது செய்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர். இதற்கு எதிராக, திருச்சி சிறப்பு முகாமில் அவர் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால், அவரது உடல்நிலை சீர்கேடு அடைந்துள்ளது. இந்த பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, நவநாதனை உடனடியாக விடுவித்து, மருத்துவமனையில் அனுமதிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை, மணலி ஐ.ஓ.சி.எல்-இல் இருந்து, சரக்கு ரயில் ஒன்று, 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று (ஜூலை 13) அதிகாலை மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில், திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது, எதிர்பாராத விதமாக ரயில் என்ஜின் தடம் புரண்டது. இதனால், சுமார் 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் டேங்கர்களில் உரசல் ஏற்பட்டு ஒரு டேங்கரில் தீப்பற்றியது. அந்த தீ மளமளவென அடுத்தடுத்த 6 டேங்கர்களுக்கும் பரவி, கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதுகுறித்து, தகவலறிந்து, திருவள்ளூர், திரூர், கும்மிடிப்பூண்டி சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும்…

Read More

சென்னை: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருவள்ளூர் அருகே பெரியகுப்பம், வரதராஜன் நகர் பகுதியில் சரக்கு ரயிலில் டீசல் டேங்க் வெடித்து, தீ பரவியதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளன. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடியும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என செய்திகள் வருகின்றன. உடனடியாக மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படைகளை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக, பாதுகாப்புடன் வெளியேற்ற வேண்டும் எனவும், அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்திடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன். இது சாதாரண…

Read More

திருவள்ளூர்/ சென்னை: சென்​னை​யில் இருந்து பெட்​ரோல், டீசல் ஏற்​றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதி​காலை திரு​வள்​ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்​பட்​டது. இதில், 18 டேங்​கர்​கள் எரிந்து நாச​மாகின. இந்த விபத்தால், விரைவு ரயில், புறநகர் மின்​சார ரயில் சேவை கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. சென்னை துறை​முகத்​தில் இருந்து 2 இன்​ஜின்​கள் கொண்ட சரக்கு ரயில், நேற்று அதி​காலை 3 மணி அளவில் வாலாஜா சைடிங் நிலை​யத்​துக்கு புறப்​பட்​டது. தலா 70 ஆயிரம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட 45 டேங்கர்​களில் டீசலும், 5 டேங்கர்​களில் பெட்​ரோலும் நிரப்​பப்​பட்​டிருந்​தது. நேற்று அதி​காலை 4.55 மணி அளவில் திரு​வள்​ளூர் ரயில் நிலை​யத்தை கடந்து சென்​ற​போது, 2 இன்​ஜின்​கள், ஒரு டேங்கர் ஆகியவை திடீரென தனி​யாக பிரிந்​த​தாக கூறப்​படு​கிறது. இதனால், ரயில் நிலை தடு​மாறி, 18 டேங்கர்​கள் அடுத்​தடுத்து தடம்​புரண்​டன. பெட்​ரோல், டீசல் நிரப்​பிய டேங்கர்​கள் ஒன்​றோடு ஒன்று மோதி​ய​தில் திடீரென தீப்​பற்​றிக்​கொண்​டது.…

Read More

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் மீன்​பிடி துறை​முகத்​தில் இருந்து 500 விசைப்படகு​களில் 3 ஆயிரம் மீனவர்​கள் கடந்த 12-ம் தேதி கடலுக்​குச் சென்​றனர். ஈசாக் என்​பவரது விசைப்​படகில் சென்ற ரூதர், சண்​முகம், எடிசன், சக்​திவேல், ஜெகதீஷ், டல்​வின் ராஜ், அன்​பழகன் ஆகிய 7 மீனவர்​கள், நெடுந்​தீவு அருகே பாக் நீரிணை கடல் பகு​தி​யில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர். அப்​போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்​படை​யினர், எல்லை தாண்டி வந்​த​தாக கூறி, ராமேசுவரம் மீனவர்​கள் 7 பேரை கைது செய்​தனர். அவர்​களது விசைப்​படகை​யும் பறி​முதல் செய்​தனர். 7 பேரும் காங்​கேசன்​துறை கடற்​படை முகா​முக்​கு கொண்டு செல்லப்​பட்​டனர். பின்னர், ஊர்​காவல்​துறை நீதிப​தி உத்​தர​வின்​பேரில் யாழ்ப்​பாணம் சிறை​யில் நேற்று அடைக்கப்பட்டனர். அதேபோல, கச்​சத்​தீவு – நெடுந்​தீவு இடையே மரியசீரோன் என்​பவரது விசைப்​படகை…

Read More

சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் விஜய் தலைமையில் தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு தவெக சார்பில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளில் காவல் மரணங்களுக்கு ஆளான 24 பேரின் குடும்பத்தினர்கள் இதில் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இருந்து வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். ‘சாரி வேண்டாம், நீதி வேண்டும்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது விஜய் பேசியதாவது: அஜித்குமார் எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர். அந்த சாதாரண குடும்பத்துக்கு நடந்த கொடுமைக்கு முதல்வர் மன்னிப்பு கோரினார். அது தவறு அல்ல. ஆனால், திமுக ஆட்சியில், போலீஸ் விசாரணையின்போது 24 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த குடும்பங்களுக்கும் நிவாரணம் தர வேண்டும். சாத்தான்குளம் ஜெபராஜ்,…

Read More

இந்த மகிழ்ச்சியான ஒளியியல் மாயையுடன் உங்கள் கண்காணிப்பு திறன்களை சோதிக்கவும்! ஒரு வயதான பெண்மணி பின்னல் அமைதியான காட்சி பதினொரு புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்ட பூனைகளை மறைக்கிறது. வசதியான அறைக்குள் உள்ள அனைத்து உரோமம் பூனைகளையும் வெறும் 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? இந்த மறைக்கப்பட்ட தோழர்களைக் கண்டறிய உங்கள் கவனத்தை கூர்மைப்படுத்துங்கள் மற்றும் ஒவ்வொரு மூலை மற்றும் பித்தலாட்டத்தையும் ஆராயுங்கள். இங்கே உங்களுக்கு ஒரு வேடிக்கையான மற்றும் சற்று தந்திரமான சவால்! முதலில், இந்த படம் ஒரு வயதான பெண்மணியுடன் ஒரு ஸ்வெட்டரை பின்னும் வசதியான அறை போல் தோன்றலாம். ஆனால் அந்த அமைதியான காட்சி உங்களை முட்டாளாக்க விடாதீர்கள், அது ஒரு புத்திசாலித்தனமான ஒளியியல் மாயையை மறைக்கிறது.உங்கள் பணி? அறையில் பூனைகளின் சரியான எண்ணிக்கையைக் கண்டறிந்து, 15 வினாடிகளில் செய்யுங்கள்! எளிதானதாகத் தெரிகிறது? சரி, மீண்டும் சிந்தியுங்கள்.படத்தில் என்ன இருக்கிறது?பட கடன்: பிரைட்ட்சைட்காட்சி ஒரு சூடான, வசதியான அறையைக் காட்டுகிறது.…

Read More

சென்னை: ​முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் சென்னை பெருநகர போக்​கு​வரத்து ஆணைய கூட்​டம் விரை​வில் நடை​பெற உள்​ளது. இதில், சென்​னை​யில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து திட்​டங்​களுக்கு ஒப்​புதல் பெறப்பட உள்​ளது. நாட்​டில் போக்​கு​வரத்து வசதி​களை மேம்​படுத்​தும் வகை​யில், தேசிய நகர்ப்​புற போக்​கு​வரத்து கொள்​கையை மத்​திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு வெளி​யிட்​டது. இதன்​படி, ஒவ்​வொரு மாநிலத்​தி​லும் ஒருங்​கிணைந்த பெருநகர போக்​கு​வரத்து ஆணை​யம் ஏற்​படுத்த வேண்​டும் என அறி​வுறுத்​தப்​பட்​டது. அந்த வகை​யில், சென்னை ஒருங்​கிணைந்த பெருநகர போக்​கு​வரத்து ஆணை​யம் (‘கும்​டா’) கடந்த 2010-ம் ஆண்டு அமைக்​கப்​பட்​டது. எனினும், 2021-ம் ஆண்​டுக்கு பிறகே, தனி​யான நிர்​வாக அமைப்​புடன் இந்த அமைப்பு செயல்பட தொடங்​கியது. சென்னை பெருநகரின் தற்​போதைய எல்லை மட்​டுமல்​லாது, விரி​வாக்​கம் செய்ய உத்​தேசிக்​கப்​பட்​டுள்ள பகு​திக்​கும் சேர்த்​து, போக்​கு​வரத்து ஒருங்​கிணைப்பு திட்​டங்​களை இந்த ஆணை​யம் உரு​வாக்கி உள்​ளது. இதில், இணைப்பு சாலை, டபுள் டெக்​கர் உள்​ளிட்ட பேருந்து வசதி​களை செயல்​படுத்​துதல், வாகன நிறுத்​தம் உட்பட போக்​கு​ வரத்​துக்​கான…

Read More

சென்னை: சென்​னை, திரு​வள்​ளூர் உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களில் வரும் 16, 17-ம் தேதி​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​து உள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக தமிழகத்​தில் இன்​றும் (ஜூலை 14), நாளை​யும் ஓரிரு இடங்​களி​லும், 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சில இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். தமிழகத்​தில் நாளை நீல​கிரி, கோவை மாவட்​டங்​களி​லும், வரும் 16, 17-ம் தேதி​களில் சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, நீல​கிரி மாவட்​டங்​கள் மற்​றும் கோவை மாவட்​டத்​தின் மலைப் பகு​தி​களில் ஓரிரு இடங்​களி​லும் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. வரும் 18, 19-ம் தேதி​களில் நீல​கிரி மற்​றும் கோவை மாவட்ட மலைப் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.…

Read More

மதுரை: ​முரு​கப் பெரு​மானின் முதல்​படை வீடான சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் இன்று அதி​காலை கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. இதையொட்​டி, 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். முரு​கப் பெரு​மானின் அறு​படை வீடு​களில் முதல் வீடான திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் 14 ஆண்​டு​களுக்கு பிறகு இன்று கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. இதையொட்​டி, கடந்த சில மாதங்​களாக திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. உபய​தா​ரர் மூலம் ரூ.70 லட்​சத்​தில்ராஜகோபுரம் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. ரூ.2.44 கோடி​யில் ராஜகோபுரத்​தில் 7 தங்க கலசம், அம்​பாள் சந்​நிதி மற்​றும் கணபதி கோயி​லில் தலா ஒரு கலசம் என 9 கலசங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. திருப்​பணி​கள் நிறைவடைந்​ததை தொடர்ந்​து, கோயி​லின் வள்ளி தேவசேனா மண்​டபத்​தில் யாக​சாலை பூஜைகள் கடந்த 10-ம் தேதி தொடங்​கி, நேற்று முன்​தினம் வரை 5 கால பூஜைகள் நடை​பெற்​றன. இந்​நிலை​யில், நேற்று நடந்த 6, 7-ம் கால யாக​சாலை பூஜை​யில் உயர் நீதி​மன்ற நீதிபதி சுவாமி​நாதன், ஜோதிடர் கே.பி.​வித்​யாதரன் ஆகியோர் கலந்​து​…

Read More