குவாஹாட்டி: அசாம் ஐக்கிய சுதந்திர முன்னணி-இண்டிபென்டன்ட் (உல்பா-ஐ), அசாம் மாநிலத்துக்கு தனி நாடு அந்தஸ்து கோரி வருகிறது. மத்திய அரசால் தடை செய்யப் பட்ட இந்த அமைப்பின் கிழக்கு தலைமையகம் மியான்மர் எல்லையில் உள்ளது. இதன் மீது இந்திய ராணுவம் நேற்று அதிகாலையில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நயன் மெதி உட்பட 19 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 19 பேர் காயமடைந்ததாகவும் உல்பா-ஐ அமைப்பு நேற்று தெரிவித்தது. ஆனால் இந்திய ராணுவம் இதை மறுத்துள்ளது. இதுகுறித்து ராணுவ (குவா ஹாட்டி) மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறும்போது, “இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தவில்லை’’ என்றார். இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “உல்பா-ஐ அமைப்பினர் மீது அசாம் போலீஸார் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. இதுபோல அசாம் மண்ணில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படவில்லை. ராணுவம் தாக்குதல் நடத்தி இருந்தால்…
Author: admin
சென்னை: எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தியது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் ஹாக்கி கர்நாடகாவைச் சாய்த்தது. கடற்படை அணியின் சுஷில் தன்வார் 3 கோல்களையும் (3, 20, 34-வது நிமிடங்கள்), பிரசாந்த் ஒரு கோலையும் அடித்தனர். கர்நாடகா அணி தரப்பில் பாரத் மகாலிங்கப்பா (12-வது நிமிடம்), விஷ்வாஸ் (35-வது நிமிடம்) தலா ஒரு கோலடித்தனர். ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு (எச்யுடி), போபால் சாய் (என்சிஇ) அணிகள் மோதிய ஆட்டம் 4-4 என்ற கோல்கள் கணக்கில் டிராவில் முடிந்தது. எச்யுடி அணிக்காக பட்ராஸ் டிர்க்கி(3-வது நிமிடம்) ஒரு கோலும், சோமண்ணா 2 கோலும்(15, 41-வது நிமிடம்), பாலச்சந்தர் ஒரு கோலும்(44-வது நிமிடம்) அடித்தனர். என்சிஇ அணிக்காக முகமது ஜைத் கான்(20-வது நிமிடம்), மன்ஜீத்…
சென்னை: கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்கு தொகுதிகளை பெறுவதில் விசிக உறுதியாக இருப்பதாக கட்சி வட்டாரத்தினர் கூறுகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 2 தனித்தொகுதி, 1 பொதுத்தொகுதிக்காக கடுமையாக போராடியது. ஆனால், 2 தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கிய நிலையில், இரண்டிலும் சொந்த சின்னத் தில் போட்டியிட்டு மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தையும் பெற்றது. இந்த அங்கீகாரத்தை தக்க வைக்க வேண்டிய நிலையில் விசிக உள்ளது. இதற்காக குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்படியானால் இரட்டை இலக்கத் தொகுதியில் போட்டியிடுவது அவசியம். அந்த வகையில் விசிகவின் வளர்ச்சியை முன்வைத்து திமுகவிடம் தொகுதியை கேட்டுப் பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான அழுத்தங்களை முதல்வரை சந்திக்கும்போதும், திமுக மூத்த நிர்வாகிகள் மத்தியிலும்…
பாட்னா: வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் மேலும் கூறியுள்ளதாவது: இதுவரை, மாநிலத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன, ஒட்டுமொத்த அளவில் 39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இலக்கு நிச்சயமாக எட்டப்படும். இந்த சூழலில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2025-2030) ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதன் மூலம் இலக்கை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அடைய தனியார் துறை அதிலும் குறிப்பாக தொழில்துறை பிரிவுகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதிஷ் குமார் கூறியுள்ளார். பிஹார் மாநில தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதற்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையும்…
புதுடெல்லி: இந்திய தடகள வீரரும், ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரருமான அவினாஷ் சாப்ளே காயமடைந்துள்ளார். மொனாக்கோவில் தற்போது டயமண்ட் லீக் தடகள தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆடவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் பங்கேற்ற அவினாஷ் சாப்ளே தவறி கீழே விழுந்து காயமடைந்தார். வாட்டர் ஜம்ப் பகுதியில் அவர் குதிக்கும்போது கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கு மூட்டு, கால், தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரின் பயிற்சியாளர் அம்ரிஷ் குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “மூட்டுப் பகுதியில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார். ஓரிரு வாரங்களில் அவர் குணமடைந்து வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவார்” என்றார்.
வாஷிங்டன்: இந்தியாவால் தேடப்படும் முக்கிய நபர் உட்பட 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை அமெரிக்க புலனாய்வுத்துறை (எப்பிஐ) கைது செய்தது. இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள், ரவுடிகள் பலர் அமெரிக்கா மற்றும் கனடாவுக்குள் சட்டவிரோதமாக செல்லும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவர்கள் அங்கும் ஆயுதங்களை காட்டி மிரட்டுதல், ஆள்கடத்தல், சித்ரவதை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் முக்கியமான நபர் பவித்தர் சிங் பதாலா. இவர் பாபர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) என்ற தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர். பல தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய இவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தேடி வந்தது. இந்நிலையில் பவித்தர் சிங் பதாலா உட்பட 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எப்பிஐ) கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது. இவர்கள் சான் ஜோகுவின் மாகாணத்தில் ரவுடி கும்பல் போல் செயல்பட்டு ஆள் கடத்தல், சித்ரவதை செய்தல் போன்ற…
சென்னை: காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் மொழி திறன் தேர்ச்சியில் இருந்து மின் வாரியம் விலக்கு அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு பணியில் உள்ளவர்கள் தமிழ் மொழி அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. தற்போது டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழி தாள் இடம்பெற்றுள்ளது. அதில் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்தகட்ட தேர்வு நடைமுறைக்குச் செல்ல முடியும். ஆனால் டிஎன்பிஎஸ்சி-க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை சமர்பிக்க வேண்டும். தமிழக அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளதால், அனைத்து அரசு துறைகளிலும் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளும் உள்ள நிலையில் அவர்களால் தமிழ் மொழிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்க முடியும், ஆனால் நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாது, எனவே…
நாம் வழிநடத்தும் உட்கார்ந்த வாழ்க்கை முறைகள் பல்வேறு வாழ்க்கை முறை நோய்களுக்கு ஒரு காரணமாகும், அதில் கொழுப்பு கல்லீரல் பெருகிய முறையில் பொதுவானது. கல்லீரல் அதிகப்படியான கொழுப்பைக் குவிக்கும் போது, அது கொழுப்பு கல்லீரல் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்ப கட்ட தரங்கள் 1 மற்றும் 2 ஐ உள்ளடக்கிய இரண்டு முக்கிய தரங்களுக்கு ஒதுக்குவதன் மூலம் மருத்துவர்கள் வழக்கமாக இந்த நிலையின் தீவிரத்தை தீர்மானிக்கிறார்கள். ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படும்போது இரு நிபந்தனைகளும் அடிப்படை வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சிகிச்சையளிக்க முடியும். கொழுப்பு கல்லீரலின் வெவ்வேறு கட்டங்களை கடந்து செல்வோம், அதை எவ்வாறு மாற்றலாம் …கொழுப்பு கல்லீரலைப் புரிந்துகொள்வது: தரம் 1 மற்றும் தரம் 2 என்றால் என்னகொழுப்பு கல்லீரல் என்றால் என்னகல்லீரல் திசுக்களில் எடையால் 5-10% க்கும் அதிகமான கொழுப்பைக் கொண்டிருக்கும்போது கல்லீரல் ஸ்டீடோசிஸ் அல்லது கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் அதிகப்படியான மது அருந்துதல்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டம் சங்காரியா நகரைச் சேர்ந்தவர் தாராசந்த் அகர்வால் (71). இவருடன் பிறந்தவர்கள் 8 பேர். இதில் 4-வதாக பிறந்த அகர்வால் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்ப்பூர் வங்கியில் (இப்போது எஸ்பிஐ) துணைப் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார். 38 ஆண்டு பணிக் காலத்துக்குப் பிறகு கடந்த 2014-ல் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மனைவி உயிரிழந்ததால் அகர்வால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் அவருடைய பிள்ளைகள் ஆலோசனையின் பேரில் பகவத் கீதை உள்ளிட்ட நூல்களை படிக்கத் தொடங்கி உள்ளார். பின்னர், பட்டயக் கணக்காளர் (சிஏ) தேர்வை எழுதுமாறு அவருடைய பேத்தி கூறியுள்ளார். இதன்படி 2021-ம் ஆண்டு சிஏ தேர்வுக்காக பதிவு செய்துள்ளார். 2022-ம் ஆண்டு மே மாதம் பவுண்டேஷன் தேர்விலும் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இன்டர்மீடியட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் இறுதித் தேர்வு…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்கி, 36 தொகுதிகளுக்கு செல்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 2026 தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டங்களை அறிவித்து வருகிறது. இதனிடையே “மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் கடந்த ஜூலை 7-ம் தேதி முதல்கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை பழனிசாமி கோவையில் தொடங்கினார். தொகுதிவாரியாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில், செல்லும் வழிகளில், ஆங்காங்கே அதிக அளவில் ஒரே தொழிலை செய்யும் நெசவாளர்கள், விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில் செய்வோர் உள்ளிட்டோரை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார். சில தொகுதிகளில் 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைவருக்கும் தீர்வு கிடைக்கும் என உறுதியளித்து வருகிறார். சில தொகுதிகளில் சாலை வலம் சென்று, மக்களை சந்திக்கிறார். இவரது முதற்கட்ட பிரச்சாரம் வரும்…
