புதுடெல்லி: ஏர் இந்தியா விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார். கடந்த ஜூன் 12-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில விநாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானப் பயணிகள், ஊழியர்கள் 241 பேர் உயிரிழந்தனர். அத்துடன் விமானம் மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்ததில் அங்கிருந்த முதுகலை மாணவர்கள் உட்பட 19 பேர் இறந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் 11ஏ இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாார். அவருடைய சகோதரர் விமான விபத்தில் உயிரிழந்தார். விபத்தில் காயம் அடைந்த விஸ்வாஸ், அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார். பிரிட்டனில் வசிக்கும் விஸ்வாஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவருடைய குடும்பத்தினர் டாமன் அண்ட்…
Author: admin
லண்டன்: நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர். இதன் மூலம் முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸில் அவர் சாம்பியன் பட்டம் வென்றார். உலகின் முதல் நிலை வீரரான 23 வயது ஜன்னிக் சின்னர் மற்றும் இரண்டாம் நிலை வீரரான 22 வயது கார்லோஸ் அல்கராஸ் இடையிலான இந்த ஆட்டம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் சின்னரை அல்கராஸ் வீழ்த்தி இருந்தார். இந்நிலையில், இம்முறை லண்டனில் துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சின்னர் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஓபன் ஈராவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையை சின்னர் படைத்தார். அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற…
தமிழில், வல்லமை தாராயோ, கொல கொலயா முந்திரிக்கா, மூணே மூணு வார்த்தை, கேடி என்கிற கருப்பு துரை ஆகிய படங்களை இயக்கியவர் மதுமிதா. இவர் அபிஷேக் பச்சன் நடிப்பில் ‘காலிதர் லாபதா’ என்ற பெயரில் கேடி என்கிற கருப்புதுரை படத்தை, இந்தியில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படம் ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது. இதுபற்றி மதுமிதாவிடம் பேசிய போது, “தமிழில் நான் இயக்கிய கேடி என்கிற கருப்புதுரை படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. உறவுகளால் உதறப்பட்ட முதியவர் ஒருவருக்கும் வாழ்வின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு சிறுவனுக்குமான வாழ்க்கையை பேசிய படம் அது. இந்திக்காக வயதானவரை, 50 வயதுள்ளவராக மாற்றினோம். தமிழில் தலைக்கூத்தல் விஷயத்தை வைத்திருந்தோம். அவர்களின் கலாச்சாரப்படி வயதானவர்களைக் கும்பமேளா, அல்லது காசியில் தொலைத்துவிட்டு வந்து விடுவதாகச் சொன்னார்கள். அதனால் மாற்றங்களுடன் இயக்கினேன். அபிஷேக் பச்சனுடன் பணியாற்றியது சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. அடுத்து மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரிஸ் படத்தை இந்தியில்…
சென்னை: உயர்கல்வி தொடர்பாக ஆலோசனை வழங்கும் ‘டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர்’ அமைப்பின் சார்பில், மறைந்த கல்வியாளர் மு.அனந்த கிருஷ்ணன் 97-வது பிறந்தநாள் நினைவு சொற்பொழிவு மற்றும் கல்வி உதவித்தொகை விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 3 பழங்குடியின மாணவர்கள் உட்பட 4 பேருக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். தொடர்ந்து, ‘உயர்கல்வியில் மறுசீரமைப்பு தேவை’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மக்களின் தனி நபர் கல்வி, பொருளாதார வளர்ச்சியை பொருத்தது. உயர்கல்விதான் மக்களின் வளர்ச்சிக்கு வழிவகை செய்கிறது. ஆனால், நாட்டில் உயர்கல்வி மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுவிட்டது. அதை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். சுதந்திரம் பெற்றபோது, நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள், 496 கல்லூரிகள்தான் இருந்தன. தற்போது 1,362 பல்கலைக்கழகங்கள்,…
கறி இலைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு சரியான காம்போ ஆகும். இது ஒரு சக்திவாய்ந்த கருவியாகும், இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி வீழ்ச்சியைக் குறைக்கவும், உங்கள் பூட்டுகளில் பிரகாசத்தையும் மென்மையையும் சேர்க்க உதவும். ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, கறி இலைகள் மயிர்க்கால்களை வளர்க்கின்றன, அதே நேரத்தில் தேங்காய் எண்ணெய் ஈரப்பதமூட்டுகிறது மற்றும் உச்சந்தலையில் பாதுகாக்கிறது. இந்த இரண்டு பொருட்களையும் உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் இணைப்பதன் மூலம், நீங்கள் முடி துயரங்களுக்கு விடைபெற்று ஆரோக்கியமான, அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலுக்கு வணக்கம் சொல்லலாம். இந்த பண்டைய தீர்வு தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்திய வீடுகளில் தலைமுறைகளாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் அதன் செயல்திறன் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டுள்ளது, இது முடி சேதத்திற்கு நம்பகமான தீர்வாக அமைகிறது. கூந்தலுக்கு கறிவேப்பிலை இலைகளின் சக்திகறி இலைகளில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை, அவை மயிர்க்கால்களை வளர்க்கின்றன மற்றும் வளர்ச்சியை…
26 மில்லியன் ஆண்டுகளில் உலகம் முழுவதும்: யூரோமா இனங்களின் பரிணாமம் பட்டாம்பூச்சிகளைப் போலவே மூச்சடைக்கிறது உலகளாவிய குடிமக்களின் அமைதியான நம்பிக்கையுடன் அவர்கள் எங்களை கடந்துவிட்டனர், அவர்களின் எலுமிச்சை-ஹூட் இறக்கைகள் மனித வரலாற்றை விட நீண்ட பயணங்களின் கதைகளை கிசுகிசுக்கும். ஆனால் இந்த மென்மையான புல்-மஞ்சள் பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் பொதுவானவை என நிராகரிக்கப்படுகின்றன.உயிரியலாளர்களின் ஒரு சர்வதேச குழு ‘யூரோமா’ பட்டாம்பூச்சிகளின் பயணத்தை ஒன்றாக இணைத்துள்ளது, இந்த வெப்பமண்டல ஃபிளையர்கள் 26 மில்லியன் ஆண்டுகளில் உலகத்தை வட்டமிட்டன என்பதை வெளிப்படுத்துகிறது. அவர்கள் அதை காற்று மைல்கள், சட்-நவ்ஸ் அல்லது ஒரு நிலையான உடல் திட்டம் இல்லாமல் செய்தார்கள்.முக்கிய கண்டுபிடிப்புகள்: அமெரிக்க தோற்றம்: முந்தைய நம்பிக்கைகளுக்கு மாறாக, யூரேமா பட்டாம்பூச்சிகள் 26 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகளாவிய பரவலைத் தொடங்கி, ஆசியா அல்லது ஆபிரிக்கா அல்ல, அமெரிக்காவில் தோன்றியதுதீவு துள்ளல்: தீவுகள் முக்கியமான “பரிணாம முடுக்கிகளாக” செயல்பட்டன, பட்டாம்பூச்சிகள் விரைவாக பன்முகப்படுத்தவும், கண்டங்கள் முழுவதும் பரவவும்…
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கல்லூரி ஒன்றில், கல்வியியல் துறை் தலைவராக பணியாற்றியவர் சமிரா குமார் சாகு. இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து கல்லூரியின் புகார் குழுவில் மாணவி புகார் அளித்தார். இது குறித்து உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் அவர் நேற்று முன்தினம் தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் மாணவியை காப்பாற்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி புகார் குறித்து விசாரணை நடத்த உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சூர்யபன்ஷி சூரஜ் தெரிவித்தார்.
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் ஆட்டமிழந்ததை ஆக்ரோஷத்துடன் கத்திக் கொண்டாடினார் இந்திய வீரர் முகமது சிராஜ். இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை நேற்று தொடர்ந்து விளையாடியது. அப்போது களத்தில் பென் டக்கெட் – கிராவ்லி ஜோடி விளையாடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் சிராஜ் வீசிய பந்தை டக்கெட் அடிக்க முயல, அது பும்ராவின் கைகளில் தஞ்சம் புகுந்தது. 12 ரன்களில் டக்கெட் ஆட்டமிழந்ததை சிராஜ் ஆக்ரோஷமாக கத்தி கொண்டாடினார். டக்கெட்டின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் ஓடி வந்த சிராஜ், டக்கெட்டின் முகத்துக்கு நேராக கத்தி வெறித்தனமாக கொண்டாடினார். இதையடுத்து டக்கெட் களத்திலிருந்து அதிருப்தியுடன் வெளியேறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோலாகலமாக நடந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதனை முன்னிட்டு ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பில் ராஜகோபுரத்தில் 7 தங்க கலசம், அம்பாள் சன்னதியில் 1 தங்கக் கலசம், கணபதி கோயில் 1 கலசம் உள்பட 9 கலசங்கள் உள்பட 20 திருப்பணிகள் நடந்துள்ளன. உபயதாரர் மூலம் ரூ.70 லட்சத்தில் ராஜகோபுர திருப்பணிகள் நடந்துள்ளன. இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை பக்தர்கள் காணும் வகையில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டன. கோயில் வளாகத்தில் வள்ளி தேவசேனா மண்டபத்தில் 75 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 200 சிவச்சாரியார்கள்…
சென்னை: ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்த பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் உயிரிழந்தார். 4 கார்களும் சேதம் அடைந்தன. அரும்பாக்கம் 100 அடி சாலை, தவசு குட்டி பிரியாணி கடை வழியாக நேற்று காலை 6.10 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த வேலுமணி (58) என்பவர் ஓட்டினார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஸ்டீரிங்கிலேயே மயங்கி சாய்ந்தார். இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையின் இடதுபுறம் நடந்து சென்று கொண்டிருந்த சேப்பாக்கம், லால் முகமது தெருவைச் சேர்ந்த சசிகுமார் (63) என்பவர் மீது பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் மற்றொரு பாதசாரி மீதும் மோதியது. இதில்…
