Author: admin

திருநெல்வேலி: சில நடிகர்கள் மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள்போல் காட்டிக்கொள்கிறார்கள் என்று தவெக தலைவர் நடிகர் விஜய்யை மறைமுகமாக திமுக மகளிரணி செயலாளரும். திமுக எம்.பி.யுமான கனிமொழி குற்றம்சாட்டினார். திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளின் திமுக பாக முகவர்கள் கூட்டம் திருநெல்வேலி அருகே செங்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் தலைமை வகித்தார், செயலர் ஆவுடையப்பன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி, “திமுக பல போராட்டங்களைக் கடந்து இந்த நிலைக்கு வந்துள்ளது. டெல்லியில் இருப்போருக்கு சிம்ம சொப்பனமாகவும், பாஜகவின் அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடியவராகவும் தமிழக முதல்வர் இருக்கிறார். அவரை தலைவராக கொண்டுள்ள இயக்கத்தை நாம் பெற்று இருக்கிறோம். இந்த நாடே நம்மை பார்த்து பிரம்மிக்கக் கூடிய ஒரு போர் குணத்தோடு திமுக இருந்து கொண்டிருக்கிறது. ‘ஓரணியில்…

Read More

பலர் மலச்சிக்கல் மற்றும் வீக்கத்துடன் போராடுகிறார்கள், பெரும்பாலும் உயர் ஃபைபர் உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸால் தூண்டப்படுகிறார்கள். மருந்துகளை நம்புவதற்கு பதிலாக, கிவியில் ஒரு இயற்கை தீர்வைக் காணலாம். கிவி ஒரு சிறிய, உரோமம் பழம், இது நமது செரிமான அமைப்புக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளால் நிரம்பியுள்ளது. கிவி சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்) போன்ற பொதுவான பிரச்சினைகளுக்கு உதவும். கிவியில் உள்ள ஃபைபர், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் சிறப்பு என்சைம்கள் ஒன்றாக இணைந்து ஆரோக்கியமான செரிமானம் மற்றும் சீரான குடலை ஆதரிக்கின்றன.வாஷிங்டன் போஸ்ட்டின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு இரண்டு கிவிஸை சாப்பிடுவது குடல் அசைவுகளை ஒழுங்குபடுத்தவும் மலச்சிக்கல் அறிகுறிகளைத் தணிக்கவும் உதவுகிறது. கிவியின் தனித்துவமான நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நொதிகள் கலவையானது செரிமான ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கான மென்மையான மற்றும் பயனுள்ள வழியாகும்.மலச்சிக்கலுக்கு உதவும் கிவியின் ஊட்டச்சத்து சுயவிவரம்கிவி என்பது ஃபைபர், ஆக்டினிடெய்ன் மற்றும் பாலிபினால்களை உள்ளடக்கிய ஊட்டச்சத்து நிறைந்த…

Read More

வயது என்பது வெறும் எண் தான் என தனது கடைசி நாட்கள்வரை நிரூபித்துக் காட்டியவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. எப்போதும் பளிச்சென்ற அரிதாரம், அதிலும் குறிப்பாக ‘மை’ தீட்டப்பட்ட ஆயிரம் கதை பேசும் அந்தக் கண்கள், லிப்ஸ்டிக்கையும் தாண்டிய புன்னகையால் மிடுக்காக தெரியும் முகம் என்று வலம் வந்தார். பெயர், புகழ், பல உயரிய விருதுகள் என எல்லாம் சேர்ந்திருந்தாலும், ஒரு கலைஞனுக்கு தன்னால் முடியும் வரை கலையை நிகழ்த்திக் காட்டுவதில்தான் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும். ஒவ்வொரு நாள் கைதட்டும் கலைஞனுக்கு முதல் பாராட்டு போன்றுதான் இருக்கும். அந்த ஆத்ம திருப்திக்காக அண்மைக் காலம் வரை திரையில் வந்து கொண்டிருந்த சரோஜா தேவி திங்கள்கிழமை தனது 87 வயதில் மண்ணைவிட்டு மறைந்தார். ‘கலைஞனுக்கு ஏது மறைவு!’ என்பது உண்மை என்பதால் இனியும் நினைவுகளால் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் நம்மைப் பிரிந்த நாளில் அவரது நினைவுகளைப் போற்றுவது அவருக்கான…

Read More

கோவை: “விஜய் தற்போது வெளியில் வந்து மூன்று நிமிடங்கள் பேசியுள்ளார். அவரது நடவடிக்கைகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என மத்திய இணையமைச்சரும், தமிழக பாஜகவின் மூத்த தலைவருமான எல்.முருகன் தெரிவித்தார். மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துவிட்டது. முதல்வர் மற்றும் துணை முதல்வரைச் சுற்றியுள்ள நபர்களின் ஆட்சி ராஜ்ஜியம் தான் தமிழகத்தில் நடக்கிறது. டாஸ்மாக், மணல் கொள்ளை, பத்திரப் பதிவு, கனிம வளம் என அவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதி விடுதிகள் என பதிவிடும் முதல்வர், இதுவரை எந்த விடுதியையும் நேரில் சென்று பார்வையிடவில்லை. தமிழகத்தில் பல்வேறு குறைபாடுகளுடன் சமூக நல விடுதிகள் இயங்கி வருகின்றன. தவெக தலைவர் விஜய் தற்போது வெளியில் வந்து மூன்று நிமிடங்கள் பேசியுள்ளார். அவரது நடவடிக்கைகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.…

Read More

பல நூற்றாண்டுகளாக, மேட்சா ஜப்பானில் தேநீர் விட அதிகமாக மதிக்கப்படுகிறது. சிறப்பாக வளர்க்கப்பட்ட பச்சை தேயிலை இலைகளின் இந்த நேர்த்தியான தரையில் உள்ள தூள் உலகளாவிய விருப்பமாக மாறியுள்ளது -நல்ல காரணத்திற்காக. ஒரு அமைதியான பானமாக இருப்பதைத் தாண்டி, மேட்சா சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தோல்-அன்பான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது, இது தோல் பராமரிப்புக்கு ஒரு தனித்துவமான மூலப்பொருளாக அமைகிறது. DIY முகமூடிகள் முதல் லட்டுகள் வரை, மேட்சா கதிரியக்க, ஒளிரும் தோலுக்கு உங்கள் ரகசியமாக இருக்கலாம்.மேட்சா என்றால் என்ன, அது ஒளிரும் சருமத்தை எவ்வாறு ஆதரிக்கிறது?மேட்சா என்பது இளம் கேமல்லியா சினென்சிஸ் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு துடிப்பான பச்சை தூள். அதன் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை அதிகரிக்க, தாவரங்கள் அறுவடைக்கு வாரங்களுக்கு முன்பு நேரடி சூரிய ஒளியில் இருந்து நிழலாடுகின்றன, குளோரோபில் மற்றும் அமினோ அமிலங்களை மேம்படுத்துகின்றன. பின்னர் இலைகள் வேகவைத்து, உலர்த்தப்பட்டு, கல் தரையில் நன்றாக பொடியாக இருக்கும். வழக்கமான பச்சை…

Read More

புதுடெல்லி: ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள விவகாரத்தில் அரசு இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். கேரள நர்ஸ் நிமிஷாவின் கழுத்துக்கு தூக்குக் கயிறு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அவரைக் காப்பாற்ற மத்திய அரசின் தலையீட்டைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று ஆஜரான அட்டர்னி ஜெனரல் இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த ‘கைவிரிப்பு’, நிமிஷா தண்டனை நிறைவேற்றத்தை ஏறக்குறைய உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. அட்டர்னி ஜெனரல் ஆர்.வேங்கடரமணி நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கூறியது: ‘கேரள நர்ஸ் நிமிஷா பிரியா வழக்கில் இந்திய அரசாங்கம் எத்தனை தூரம் செல்ல இயலுமோ அதுவரை சென்று முயன்றுவிட்டது. உலகின் பிற நாடுகளைப்போல் அல்ல ஏமன். சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசி நிலைமையை இன்னும் சிக்கலானதாக மாற்ற நாங்கள்…

Read More

புதுச்சேரி: பாஜகவைச் சேர்ந்த ஜான்குமார் அமைச்சராக பதவியேற்றதை கண்டித்து இந்து முன்னணி, மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதோடு, பாஜகவையும் கடுமையாக விமர்சித்துள்ளது. புதுச்சேரி மாநில இந்து முன்னணி சார்பில் காமாட்சி அம்மன் கோயில் சொத்துகளை அபகரித்தவர்களிடம் இருந்து கோயில் சொத்துகளை மீட்க கோரியும், கோயில் சொத்துகளை அபகரித்த பாஜக எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்குவதை கண்டித்தும் சுதேசி மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சனில்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் பங்கேற்று, ஜான்குமாரை கண்டித்தும், அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து செய்தியாளர்களிடம் மாநில தலைவர் சனில்குமார் கூறுகையில், “புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் நிலத்தை அபகரித்த விவகாரத்தில் ஜான்குமார் சிக்கியிருக்கிறார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இவருக்கு அமைச்சர் பதவி வழங்கக்…

Read More

அதிகாலை நேரம் நீண்ட காலமாக உற்பத்தித்திறன், தெளிவு மற்றும் சாதனை உணர்வோடு தொடர்புடையது. பலருக்கு, ஒரு காலை நடை என்பது ஒரு நேசத்துக்குரிய சடங்காகும், இது முன்னோக்கி இருக்கும் நாளுக்கான தொனியை அமைக்கிறது. ஆனால் பெரும்பாலும் இயற்கையின் அமைதியில், விடியற்காலையில் வெளியேற மக்களைத் தூண்டுவது எது?ஒரு கண்கவர் ஆய்வு காலை நடப்பவர்களின் உந்துதல்கள் மற்றும் நடத்தைகள் குறித்து வெளிச்சம் போடுகிறது, அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மனநிலையைப் பற்றிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்துகிறது. காலை நடப்பவர்களின் உலகத்தை ஆராய்வதன் மூலம், இந்த எளிய மற்றும் சக்திவாய்ந்த நடைமுறையின் நன்மைகள் மற்றும் சந்தோஷங்களைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறலாம், மேலும் நமது அன்றாட நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கூட காணலாம். ஒரு காலை நடைப்பயணத்தில் ஹார்மோன்களின் பங்குசமூக ஊடக தளமான எக்ஸ் குறித்த நேர்மையான மற்றும் நுண்ணறிவான இடுகையில், தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனர் டாக்டர் ஏ. வெலுமானி, காலை நடைகளை எடுக்க மக்களை ஊக்குவிப்பதில்…

Read More

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 13 வரை மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மொத்தம் 98 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இமாச்சல் அரசு இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் மழை, வெள்ள பாதிப்புகளில் சிக்கி 98 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் 57 பேர் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகள் போன்ற பேரிடர் பாதிப்புகளில் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 41 பேர் மழை காரணமாக ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். இதில் மேக வெடிப்புகளால் 15 பேர், நீரில் மூழ்கி 9 பேர், திடீர் வெள்ளத்தில் 8 பேர், பாம்புக் கடியால் 4 பேர், நிலச்சரிவு மற்றும் தீ விபத்தில் தலா ஒருவர், மின்சார தாக்குதல் உள்ளிட்ட பிற காரணங்களால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பருவமழையில் மண்டி…

Read More

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், உயர் நீதிமன்ற பதிவாளரிடம் இருந்து மாவட்ட நீதிபதியின் விசாரணை அறிக்கை, வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரிப்பதற்காக தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவரை விசாரணைக்காக பல இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அஜித்குமார் உயிரிழந்தார். இதையடுத்து கோயில் பசு மடத்தில் வைத்து அஜித்குமாரை தனிப்படை போலீஸார் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தனிப்படை காவலர்கள் 5 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அஜித்குமார் சட்டவிரோத காவல் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்…

Read More