சென்னை: எம்சிசி – முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே 4-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தியது. இந்தியன் ரயில்வே அணி தரப்பில் குர்சாகிப்ஜித் சிங் (18-வது நிமிடம்), தர்ஷன் கவ்கர் (53-வது நிமிடம்), ஷேஷ கவுடா (56-வது நிமிடம்), சண்முகம் (57-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் 1-0 என்ற கோல் கணக்கில் சாய் என் சிஓஇ (போபால் ) அணியை வீழ்த்தியது.
Author: admin
‘திருடாதே’ படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் முதன்முதலில் நாயகியாக ஒப்பந்தமானார் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி, அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே தனது கனவுப்படமான ‘நாடோடி மன்னன்’ படத்தை முடித்து வெளியிடுவதில் எம்.ஜி.ஆர். தீவிரமாக இருந்தார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிகை பானுமதி நடித்து வந்தார். அவர் சுதந்திரமாக செயல்படக் கூடியவர். எம்.ஜி.ஆரும் அப்படியே’. சில கருத்து வேறுபாடுகள் காரணமாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் இருந்து பாதியில் பானுமதி விலகிக் கொள்ள, நாயகியானார் சரோஜாதேவி. அவர் வரும் காட்சிகள் வண்ணத்தில் இருக்கும். நாயகியாக நடித்த முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாரான எம்.ஜி.ஆரின் ஜோடி. ‘நாடோடி மன்னன்’ பிரம்மாண்ட வெற்றி பெற சரோஜாதேவி உச்சத்துக்கு சென்றார். ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றோருடன் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆருடன் அதிகமாக நடித்தவர் சரோஜாதேவி. இருவரும் 26 படங்களில்…
சேலம்: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரசு அதிகாரிகள் மூலம் வீடு வீடாகச் சென்று செல்போன் எண்களைப் பெற்று திமுக ஐடி- விங்குக்கு கொடுக்கப்படுகிறது, என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நெடுஞ்சாலை நகர் பகுதியில் புதிய கட்சி அலுவலகத்தை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தில், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எழுச்சி மக்கள் மத்தியில் காண முடிகிறது. அதிமுக ஆட்சியின் போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின், அந்த மனுக்களை பெட்டியில் போட்டு சீல் வைத்து எடுத்துச் சென்றார். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் அந்த மனுக்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.…
நேர்மையாக இருக்கட்டும், வாசிப்பது அனைவருக்கும் பிடித்த விஷயம் அல்ல. சில பதின்வயதினர் ஒரு நிகழ்ச்சியை அதிக அளவில் பார்ப்பார்கள், தங்கள் தொலைபேசிகளில் முடிவில்லாமல் உருட்டுவார்கள், அல்லது மணிக்கணக்கில் விளையாடுவார்கள். புத்தகங்கள்? மிக நீண்ட. மிகவும் சலிப்பு. மிகவும் மெதுவாக. அதுதான் பொதுவான கருத்து.ஆனால் இங்கே திருப்பம்: “வாசிப்பதை வெறுக்கும்” பெரும்பாலான பதின்ம வயதினர்கள் உண்மையில் கதைகளை வெறுக்க மாட்டார்கள். அவர்கள் இன்னும் சரியான புத்தகத்தை சந்திக்கவில்லை.உண்மை என்னவென்றால், எல்லா புத்தகங்களும் மெதுவாகவோ, குழப்பமாகவோ அல்லது மந்தமான விவரங்களுடன் அதிக சுமை அல்ல. சிலர் உங்களை முதல் பக்கத்திலிருந்து இழுக்கிறார்கள். அவர்கள் வேகமாக நகர்கிறார்கள், தொடர்புபடுத்தக்கூடியதாக உணர்கிறார்கள், மேலும் உங்களை மேலும் விரும்புவதை விட்டுவிடுகிறார்கள். தயக்கமின்றி வாசகர்களால் கூட கீழே வைக்க முடியாத புத்தகங்கள் இவை.நீங்கள் – அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் -அவர்கள் படிக்க விரும்பவில்லை என்றால், இந்த 8 தலைப்புகளில் ஒன்றை முயற்சிக்கவும். அவை உங்கள் மனதை மாற்றக்கூடும்.
திருவனந்தபுரம்: நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக நிபா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே குமரமபுத்தூர் பகுதியை சேர்ந்த 57 வயது நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவர், மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதையொட்டி மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து…
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள சரோஜாதேவி, தனது 87 -வது வயதில் நேற்று காலமானார். அவருடைய சினிமா பயணம் பற்றிய விவரம் வருமாறு: சரோஜாதேவி, 1938-ம் ஆண்டு ஜன.7-ம் தேதி மைசூரு அருகே சென்னபட்ணாவில் பிறந்தார். அவர் இயற்பெயர் ராதாதேவி. சினிமாவுக்காக சரோஜாதேவி ஆனார். இவர் தந்தை பைரப்பா போலீஸ் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி. இந்த தம்பதியின் 4வது மகளாக பிறந்த சரோஜாதேவி, தனது 17 வயதில், 1955-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘மகாகவி காளிதாசா’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஹொன்னப்ப பாகவதர் நாயகனாக நடித்த இந்தப்படம் தமிழில் ‘மகாகவி காளிதாஸ்’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. பின்னர் ஜெமினி கணேசனின் ‘திருமணம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி தமிழ் சினிமாவுக்கு வந்தார் சரோஜாதேவி. இதில் அவருடைய நடனத்தைப் பார்த்து ரசித்த…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை (29) போலீஸார் விசாரணையின்போது தாக்கி கொலை செய்தனர். இதையடுத்து ஜூலை 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன் குமார் ஆகியோருக்கு செல்போன் மூலம் ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதல்வர் உத்தரவுப்படி முதல்கட்டமாக ஜூலை 2-ம் தேதி அஜித்குமார் சகோதரருக்கு காரைக்குடி ஆவினில் தொழில் நுட்புநர் பணிக்கான ஆணை மற்றும் அவர்களது குடும்பத்துக்கு 3 சென்ட் இடத்துக்குரிய வீட்டு மனைக்கான ஆணை ஆகிய வற்றை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார். இதற்கிடையே தனக்கு ஆவின் நிர்வாகத்தில் வேலை வழங்கியதில் திருப்தி இல்லை. மதுரையில் ஏதேனும் ஓர் அரசு துறையில் பணி வழங்கியிருந்தால் நன்றாக இருக்கும். இலவச வீட்டு மனையிடமும் தேளி கிராமத்துக்கு அருகே அடிப்படை வசதி மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வழங்கியதால் பயனில்லை என அஜித்குமார் சகோதரர் அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் அஜித்…
வயது அல்லது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் சிறுநீரக கற்கள் இப்போது மிகவும் பொதுவானவை. சிறுநீரக கற்கள் வலி மற்றும் அச om கரியம் இரண்டையும் உருவாக்கும் கடினமான கனிம வைப்புகளை உருவாக்குகின்றன. சிறுநீரக கற்களின் முக்கிய காரணங்களையும், உங்களிடம் உள்ள ஆரம்ப அறிகுறிகளையும் உற்று நோக்கலாம்…சிறுநீரக கற்கள் என்றால் என்னசிறுநீரக கற்கள் சிறுநீரகங்களில் உருவாகும் கடினமான வெகுஜனமாகும், பொதுவாக கரையாத கால்சியம் சேர்மங்களைக் கொண்டிருக்கும். சிறுநீரக கற்களின் அளவு தானியத்தைப் போன்றது, கோல்ஃப் பந்து வரை இருக்கும்! சில சந்தர்ப்பங்களில், சிறுநீரக கற்கள் வலியை ஏற்படுத்தக்கூடும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது அறிகுறியற்றதாக இருக்கும், சில நேரங்களில் பல ஆண்டுகளாக.சிறுநீரக கற்களின் முக்கிய காரணங்கள்சிறுநீரக கற்களின் வளர்ச்சிக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. மரபணு, மோசமான உணவு தேர்வுகள் மற்றும் சில வாழ்க்கை முறை நிலைமைகள் இந்த கற்களை வளர்ப்பதற்கு மக்களை அதிக வாய்ப்புள்ளது. சிறுநீரக கல் வளர்ச்சிக்கான முக்கிய காரணங்கள் பின்வரும் காரணிகளை உள்ளடக்கியது:போதுமான…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த 1931, ஜூலை 13-ல் மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது டோக்ரா ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் இறந்தனர். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக ஜம்மு காஷ்மீரில் அனுசரிக்கப்பட்டு வந்தது. அன்று அரசு விடுமுறை நாளாகவும் இருந்தது. ஆனால் கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பொது விடுமுறை நாள் பட்டியலில் இருந்து இது நீக்கப்பட்டது. மேலும் தியாகிகள் கல்லறையில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறையில் அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் உமர் அப்துல்லாவை நேற்று காவலர்கள் தடுத்தனர். இதையடுத்து உமர் அப்துல்லா சுவர் ஏறிக் குதித்து சென்று கல்லறையில் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து உமர் அப்துல்லா கூறுகையில், ‘‘காஷ்மீரில் ஜூலை 13-ம் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படும் நிலையில் நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டேன். கல்லறையில்…
சென்னை: அறம் சார்ந்த என் அரசியல் பொது வாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது என வைகோவின் கருத்து குறித்து மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை வெளியிட்ட பதிவால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டியில், அண் மைக் காலமாகக் கட்சியின் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் இறுக்கமான முகத்துடன்தான் மல்லை சத்யா இருக்கிறார். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, மதிமுகவிலிருந்து வருகிறேன் என அவர் சொல்வதில்லை. மாமல்லபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் என்றுதான் சொல்கிறார். பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார் என கூறியிருந்தார் இந்த கருத்து மதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மல்லை சத்யா சமுக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: மதிமுகவில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இது நாள் வரை இருந்து வந்துள்ளேன். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை…
