டாக்டர் ச ura ரப் சேத்தி ஆரோக்கியமற்ற உணவுகள் காரணமாக இளம் பருவத்தினரில் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் (என்ஏஎஃப்எல்டி) ஆபத்தான உயர்வை எடுத்துக்காட்டுகிறார். பேஸ்ட்ரிகள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை உணவுகளை உட்கொள்வது கல்லீரல் கொழுப்பாக அதிகப்படியான பிரக்டோஸ் மாற்றத்திற்கு வழிவகுக்கிறது, இது NAFLD ஐ ஏற்படுத்தும். சிகிச்சையளிக்கப்படாத NAFLD சிரோசிஸ் உள்ளிட்ட கடுமையான கல்லீரல் பிரச்சினைகளுக்கு முன்னேறலாம், இது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே பெருகிய முறையில் பொதுவானதாகி வருகிறது. மோசமான உணவு, உட்கார்ந்த பழக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட நவீன வாழ்க்கை முறை காரணிகள் இந்த பிரச்சினையின் முக்கிய இயக்கிகள். கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் ச ura ரப் சேத்தி, இப்போது குழந்தைகளிடையே NAFLD இன் நிகழ்வு எவ்வாறு அதிகரித்து…
Author: admin
லக்னோ: உ.பி.யில் பறவைக் காய்ச்சல் அபாயம் இருப்பதால் மாநிலத்தின் அனைத்து துறைகளும் அதிகாரிகளும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை மேற்கொள்ள முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து உயிரியல் பூங்காக்கள், பறவைகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் பசு காப்பகங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இந்த வளாகங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அனைத்து விலங்குகள், பறவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஊட்டியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார். மாநில தகவல் ஆணையர்கள் பிரியகுமார், இளம்பரிதி, நடேசன் தலைமை வகித்தனர். முகாமில் தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் ஆணையர் பிரியகுமார் பேசியதாவது: தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு உள்ளது. முன்பு குறைவான அளவு மனுக்கள் மட்டுமே இச்சட்டத்தின் கீழ் பெறப்பட்டன. தற்போது பல்வேறு துறைகளிலிருந்து அதிக அளவில் மனுக்கள் பெறப்படுகி்ன்றன. மனுதாரர்களிடம் இருந்து வரும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பொது தகவல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் மனுக்கள் மீது பதில் அளிக்காத பொது தகவல் அதிகாரிகள் மீது நடடிக்கை மேற்கொள்ளவும், சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே மனுதாரர்…
புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரராக இருப்பவர் பிஸ்டல் சலீம். டெல்லியின் ஜாப்ராபாத்தை சேர்ந்த இவரை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் 26 வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 800 தோட்டாக்களுடன் டெல்லி போலீஸார் பிடித்தனர். ஆனால் சிறையிலிருந்து ஜாமீன் பெற்றவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். பிறகு வெளிநாடுகளில் இருந்தவாறு இந்தியாவுக்கு ஆயுதங்களை கடத்தி, டெல்லி, உ.பி., மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் சமூகவிரோதக் கும்பல்களுக்கு விற்பனை செய்துள்ளார். இவர் நேபாள எல்லையில் மறைந்திருப்பதாக டெல்லி போலீஸாருக்கு சில நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தேடலில் இறங்கிய டெல்லி போலீஸார் சலீமை கைது செய்து, நேற்று டெல்லி அழைத்து வந்துள்ளனர். பிஸ்டல் சலீம் துருக்கியில் தயாரிக்கப்பட்ட பல முக்கிய அம்சங்களை கொண்ட ஜிகானா பிஸ்டல்களை இந்தியாவுக்கு கடத்திய முதல் நபர் ஆவார். உ.பி.யின் அலிகருக்கு அருகில் உள்ள குர்ஜாவை சேர்ந்த ரிஸ்வான், குர்பான் என்ற இரண்டு சகோதரர்கள் சலீமுக்கு…
திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி 739 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யின் 32-வது பட்டமளிப்பு விழா வ.உ.சி. கலையரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழகம் மற்றும் அதன் 104 உறுப்புக் கல்லூரிகளில் படித்த 37,376 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 739 பேருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார். துணைவேந்தர் ந.சந்திரசேகர் வரவேற்றார். இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநர் அ.பி.டிம்ரி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், விழாவில் பங்கேற்கவில்லை. பல்கலை.யில் நடைபெற்ற கடந்த 3 பட்டமளிப்பு விழாக்களிலும் இணைவேந்தரான உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. துணைவேந்தரிடம் பட்டம் பெற்ற மாணவி ஜீன் ஜோசப். ஆளுநரை புறக்கணித்த மாணவி: பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற வந்திருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி வி.ஜீன் ஜோசப் ஆளுநரிடம்…
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக 11 ஆவணங்களில் ஒன்றை தேர்தல் ஆணையம் கேட்பது வாக்காளருக்கு சாதகமான அம்சம்தான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெறுகிறது. இதை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலா பாக்சி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடும்போது, “வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது இந்திய குடியுரிமைக்கு ஆதாரமாக ஆதாரை ஏற்க மறுக்கும் தேர்தல் ஆணையம், வேறு 11 ஆவணங்களை கேட்பது வாக்காளர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகும்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்யகாந்த்,…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் கேட்குமாறு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் சேதமடைந்தன. இதில் அமெரிக்க நிறுவன தயாரிப்பான எப்-16 உள்ளிட்ட போர் விமானங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப் படை தளபதி சமீபத்தில் கூறியிருந்தார். இதில் எப்-16 ரக விமானமும் அடங்கும். இந்நிலையில், தொலைக்காட்சி நிறுவனம் சார்பில், அமெரிக்க தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் (எப்ஓஐஏ) அந்நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையிடம் சில கேள்விகளை கேட்டிருந்தது. குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 ரக விமானங்கள் சேதமடைந்தது தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. அத்துடன் இதுபற்றி பாகிஸ்தான் அரசிடம் கேட்குமாறு…
மதுரை: பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்களை உயர் நீதிமன்றம் உத்தரவு எதுவும் பிறப்பிக்காமல் முடித்துவைத்தது. இதையடுத்து, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான தடை நீங்கியுள்ளது. மதுரையில் 2 இடங்களில் அதிமுக கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றவும், கொடிக் கம்பங்கள் வைப்பதாக இருந்தால் அரசிடம் அனுமதி பெற்று பட்டா இடங்களில் வைக்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை 2 நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இந்த உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற…
புதுடெல்லி: ஆகஸ்ட் 21-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கிறார். இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவுக்கு சென்றிருந்தார். அங்கு அதிபர் புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புக்குப் பிறகு அஜித் தோவல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார். இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது’’ என்றார். இந்நிலையில், வரும் 21-ம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவை சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது. இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறை (அமைச்சர்) ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாமக பொருளாளர் திலகபாமா போட்டியிட்டார். அப்போது, ஐபி 1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் வித்தியாசத்தில் திலகபாமாவை தோற்கடித்தார். தற்போது அந்த வித்தியாசத்தை வைத்து விஜய் கட்சி தம்பிகள் போஸ்டர் ஒட்டி ஐபி-க்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக-வினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் மூலம் மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வோ, இபிஎஸ் வருகை அடுத்த மாத இறுதியில்தான் என்பதால் எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கிறது. அதனால் இடையில் புகுந்து தவெக-வினர் தான் இப்போது தடாலடி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஓர் அதிரடியாக, கடந்த தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் ஐபி பெற்ற வாக்குவித்தியாசத்தைவிட இம்முறை ஒரு வாக்கு கூடுதல் வித்தியாசத்தில் ஆத்தூர் தொகுதியில் தவெக வாகை சூடும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக போஸ்டர்களை ஒட்டினார்கள். ‘ஆத்தூர் தொகுதியில்…