வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் இரு நாடுகள் இடையே போரை நிறுத்த சமரச முயற்சிகளை தொடங்கினார். எனினும் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் ரஷ்யா மீது 100% வரி விதிக்கப்படும். புதின் மீது நான் மிகவும் அதிருப்தியில் இருக்கிறேன். தான் சொல்லும் விஷயங்களை செய்யக்கூடிய நபராக அவரை நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் அழகாக பேசுவார். ஆனால் இரவில் மக்கள் மீது குண்டுகளை வீசுவார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனை ஆதரிக்கும் நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் மற்றும் பேட்டரிகளை அனுப்பும். இவ்வாறு அவர் கூறினார்.
Author: admin
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மூலவருக்கு புதிய பட்டாடை உடுத்தி, உற்சவர் மலையப்பரிடம் கணக்கு வழக்குகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்படைக்கிறது. ‘பரிமளம்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஆழ்வார் திருமஞ்சன சேவை, ஒவ்வொரு ஆண்டும் உகாதி, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆனிவார ஆஸ்தானம் ஆகிய 4 முக்கிய நாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும். இதையொட்டி நேற்று, பன்னீரில் குங்குமம், மஞ்சள், சந்தனம், பச்சை கற்பூரம் போன்றவை கலந்த வாசனை திரவியத்தால் கர்ப்பகிரகம், பலிபீடம், கொடிக்கம்பம், தங்க விமான கோபுரம், உப சன்னதிகள் என கோயிலின் அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டன. அதன் பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘தலைவன் தலைவி’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஜூலை 25-ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் கூறியதாவது: இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணமும் இந்தப் படத்துக்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஓர் உண்மை சம்பவத்திலிருந்து இந்த கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவுக்காகக் குலதெய்வ கோயிலுக்குச் சென்ற போது நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் ஆகாச வீரன் – பேரரசி. நேரில் பார்த்ததைப் படமாக எடுக்க முடியாது. ஆனால் இப்படி இருந்தால், எப்படி இருக்கும்? என்ற ஒரு கேள்விதான் இந்த கதாபாத்திரம். அதன் பிறகு இதை எழுதத் தொடங்கினேன். எழுத எழுத அது வேறொன்றாக மாற்றம் பெற்றது. அதை எழுதும் போது தான்…
மயிலாடுதுறை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை நேற்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கொள்ளிடம், சீர்காழி வழியாக மயிலாடுதுறை மாவட்டம் வந்தார். மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் முதல்வருக்கு திமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கொள்ளிடம் புறவழிச் சாலையில் சோதியக்குடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலையை திறந்து வைத்து, கட்சிக் கொடியைஏற்றி வைத்தார். பின்னர், சீர்காழி வழியாக திருவெண்காடு சென்று அங்குள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்தார். அதன்பின், அங்கிருந்து மயிலாடுதுறை வரும் வழியில் செம்பதனிருப்பு பகுதியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து, மயிலாடுதுறையில் பூம்புகார் சாலையில் இருந்து பட்டமங்கல தெரு, கச்சேரி சாலை வழியாக நகர திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றம் வரை சுமார் 3 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், திமுகவினர் திரண்டு நின்று முதல்வரை வரவேற்றனர். பொதுமக்கள்,…
புதுடெல்லி: உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது ஷோரூமை நேற்று திறந்தது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த ஷோரூமை திறந்து வைத்தார். இது இந்தியாவில் திறக்கப்பட்டுள்ள முதல் டெஸ்லா ஷோ ரூம் ஆகும். மும்பையை பொறுத்தவரை இந்தியாவின் நிதி மற்றும் வணிகத் தலைநகராக உள்ளது. மேலும், மும்பையில், உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுடன், மேம்பட்ட இவி சார்ஜிங் கட்டமைப்பும் உள்ளது. ஏற்கெனவே மின்சார வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக மும்பை உள்ளது. எனவே, டெஸ்லா தனது இந்தியா வர்த்தகத் திட்டத்தின் முதல் கட்டமாக மும்பையை தேர்வு செய்துள்ளது. மின்சாரத்தில் இயங்குவது, அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், மேம்பட்ட பாதுகாப்பு போன்றவை டெஸ்லா கார்களின் சிறப்புகளாக அறியப்படுகிறது. மேலும், டெஸ்லா கார்கள் அவற்றின் செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதற்காகவும் அறியப்படுகின்றன. இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் ஷோரூம் திறக்கப்பட்ட போதிலும் வரும் ஆகஸ்ட் மாதம்தான் கார் விற்பனை…
உங்கள் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் என அழைக்கப்படும் ஒரு மெழுகு பொருள் உள்ளது. ஆரோக்கியமான செல்களை உருவாக்க உங்கள் உடலுக்கு இது தேவைப்படுகிறது, ஆனால் அதிகப்படியான கொழுப்பு உங்கள் இதய நோய் அபாயத்தை உயர்த்தும். கொலஸ்ட்ரால் குறைப்புக்கான ஒரு எளிய (உண்மையில் அற்புதம், நீங்கள் நினைத்தால்) இயற்கையில் உள்ளது, அது பழங்கள் வழியாகும்! சில பழங்கள் ஆரோக்கியமான உணவுடன் சேர்க்கப்படும்போது, சிறந்த கொழுப்பைக் குறைக்கும் முகவர்களாக செயல்படுகின்றன. எப்படி என்று பார்ப்போம் …பழங்கள் கொழுப்பைக் குறைக்க எவ்வாறு உதவுகின்றனபழங்களின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தில் ஃபைபர், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளுடன் சேர்ந்து, இருதய நல்வாழ்வை ஆதரிக்க வேலை செய்கிறது. பழங்களில் கரையக்கூடிய ஃபைபர் உள்ளடக்கம், கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் முதன்மை காரணியாக செயல்படுகிறது. செரிமான அமைப்புக்குள் கரையக்கூடிய நார்ச்சத்து கோலஸ்ட்ரோலுடன் பிணைக்கிறது, மேலும் அதை உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. இதுபோன்ற 4 பழங்கள் இங்கே …சிட்ரஸ் பழங்கள்ஆரஞ்சு, திராட்சைப்பழங்கள், எலுமிச்சை போன்ற சிட்ரஸ்…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மும்பை தாக்குதலைப் (26/11) போலவே, பாகிஸ்தான் உளவு அமைப்பின் (ஐஎஸ்ஐ) உத்தரவின் பேரில், அந்நாட்டின் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா பஹல்காம் தாக்குதலுக்கான சதித் திட்டத்தை தீட்டி உள்ளது. லஷ்கர் கமாண்டர் சஜித் ஜுத், பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொண்டு இந்த தாக்குதலை நடத்தி உள்ளார். பாகிஸ்தான் சிறப்புப் படையின் முன்னாள் கமாண்டர் சுலைமான் என்பவர்தான் பஹல்காம் தாக்குதலை தலைமையேற்று நடத்தி உள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முரிட்கே பகுதியில் உள்ள லஷ்கர் மையத்தில் பயிற்சி பெற்ற சுலைமான், கடந்த 2022-ம் ஆண்டு எல்லையைக் கடந்து ஜம்மு வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 பேர் இந்தத்…
கிங்ஸ்டன்: 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 27 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என முழுமையாக வென்றது ஆஸ்திரேலிய அணி. மிட்செல் ஸ்டார்க் முதல் 15 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தியும், ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியும் சாதனை படைத்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க்கில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 225 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 143 ரன்களும் எடுத்தன. 82 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 29 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. கேமரூன் கிரீன் 42, பாட் கம்மின்ஸ் 5…
Last Updated : 16 Jul, 2025 07:13 AM Published : 16 Jul 2025 07:13 AM Last Updated : 16 Jul 2025 07:13 AM பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால். ஆக்ஷன் ஹீரோவான இவர், தமிழில் துப்பாக்கி, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்திலும் நடித்துள்ளார். இவர் இப்போது ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ என்ற ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவருடன் ஆண்ட்ரு கோஜி, நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் கேப்காமின் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டது. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!
சிவகங்கை: போலீஸார் மற்றும் திமுகவினர் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (29) போலீஸார் தாக்கியதில் கொல்லப்பட்டார். இதனிடையே போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அஜித்குமார் குடும்பத்தினரை மிரட்டி பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஏற்கெனவே அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார், மடப்புரத்தில் தனியார் மண்டபங்களில் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் தனித்தனியாக திமுகவினர் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரை துன்புறுத்தி பேரம் பேசினர். அதனை சிலர் வீடியோவும் எடுத்துள்ளனர். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்று கூறி இருந்தார். இந்நிலையில் அஜித்குமார் குடும்பத்தினரிடம் போலீஸார், அரசியல்வாதிகள் பேச்சு வார்த்தை நடத்தியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி யுள்ளது. அதில் போலீஸார், திமுக முக்கிய நிர்வாகி உள்ளிட்ட சிலர், மடப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அஜித்குமார் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசுகின்றனர். இதையறிந்த அஜித்குமாரின் நண்பர்கள், பூட்டியிருந்த மண்டபத்தை…
