இங்கிலாந்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக ஊழல்கள் குறித்த தனது கருத்துக்களுக்காக எலோன் மஸ்க் ஒரு பிரிட்டிஷ் அமைச்சர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார், தொழில்நுட்ப பில்லியனருக்கு இந்த விவகாரத்தில் அறிவு இல்லை என்று குற்றம் சாட்டினார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் குரல் ஆதரவாளரான மஸ்க், இங்கிலாந்து பிரதமரை குறிவைக்க தனது சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) ஐப் பயன்படுத்தினார் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அமைச்சரைப் பாதுகாத்தல் ஜெஸ் பிலிப்ஸ். ராய்ட்டர்ஸின்படி, ஸ்டார்மர் தனது பதவிக்காலத்தில் பொது வழக்குகள் இயக்குநராக இருந்த காலத்தில் சீர்ப்படுத்தும் கும்பல்களைத் தண்டிக்கத் தவறியதாக குற்றம் சாட்டியுள்ளார், மேலும் பிலிப்ஸை ஒரு என்று குறிப்பிட்டார் “கற்பழிப்பு இனப்படுகொலை மன்னிப்புக் கலைஞர். “மஸ்கின் கருத்துக்களுக்கு பாராட்டு மற்றும் கண்டனத்துடன், சர்ச்சை பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.பிலிப்ஸுக்கு எதிரான எலோன் மஸ்கின் கூற்றுக்கள்: “கற்பழிப்பு இனப்படுகொலை மன்னிப்புக் கலைஞர்”2008 முதல் 2013 வரை அரசு வழக்கு விசாரணைகளின் இயக்குநராக இருந்த…
Author: admin
ராணுவ நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சூழலில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ‘அக்ரன்’ என்ற பெயரில் இந்திய விமானப் படை சிறப்பு போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. இதில் ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து அண்மையில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பெருமளவில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை நேற்று அனைத்து…
சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா, க்ரோக் ஆகிய ஏஐ அசிஸ்டன்ட்கள் வரிசையில் தற்போது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது டீப்சீக் (DeepSeek). டீப்சீக் தொடங்கப்பட்டு 20 மாதங்களே ஆகின்றன. ஆனால் தனது புரட்சிகரமான AI அசிஸ்டன்ட் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், ஏஐ-க்கான புதிய அணுகுமுறையுடன் உலக சந்தையையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இதன் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கெனவே செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன. இந்த சூழலுக்கு நடுவே டீப்சீக்கின் வெற்றி அதன் நிறுவனர் லியாங் வென்ஃபெங்கை பெரும் புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. டீப்சீக்கின் எழுச்சி அமெரிக்க ‘டெக்’ ஜாம்பவான்களை வியக்க வைத்தது ஒருபுறமென்றால், சீனாவுக்கு வெளியே சென்று படிக்கவோ அல்லது பணிபுரியவோ செய்யாத ஒரு பொறியியல் பட்டதாரி இத்தகைய சாதனையை எவ்வாறு செய்தார் என்பதுதான் அவர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. தொடக்க பள்ளி ஆசிரியரின் மகனான லியாங் வென்ஃபெங், சீனாவின் குவாங்டாங் நகரின் வளர்ந்தவர். தனது இளங்கலை மற்றும் முதுகலைப்…
மத்திய அரசும் தமிழக அரசும் ஆளுக்கொரு பக்கம் மொழிப்போரை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழகத்தில் வேர்விட்டு வளர்ந்த தாய்த்தமிழ் பள்ளிகள் நிதிச் சுமையால் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கின்றன. 1993-ம் ஆண்டு வாக்கில், தமிழ்த்தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகுவின் முன்னெடுப்பால் தமிழகமெங்கும் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் உருவாகின. அப்படி உருவாகி நூற்றுக்கும் மேலாக பெருகிய அந்தப் பள்ளிகளில் இப்போது 17 பள்ளிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள் எல்லாம் பல்வேறு காரணங்களால் இழுத்து மூடப்பட்டுவிட்டன இதுகுறித்து நம்மிடம் பேசிய தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர் சிவ. காளிதாசன், “1993-ம் ஆண்டு சென்னை அம்பத்தூர் மேனாம்பேட்டில் ரூ. 1 மட்டும் நன்கொடை பெற்றுக்கொண்டு, தாய் குழந்தைக்கு பால் புகட்டுவது போன்ற படத்தை பெற்றோரிடம் தந்து, குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர துவங்கினோம். பின்பு அதை தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளையாக மாற்றி, அதே பகுதியில் 10…
நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். அதன்படி லக்னோ அணிக்காக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 33 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் மார்க்ரம் ஆட்டமிழந்தார். 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அவர் விளாசினார். அதன் பின்னர் லக்னோ அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. நிக்கோலஸ் பூரன் 9, அப்துல் சமத் 2, ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் 10 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்த லக்னோ அணியால் அதன் பின்னர் சீரான முறையில் ரன் சேர்க்க முடியவில்லை. மார்ஷ், 36 பந்துகளில் 45…
டெக்சாஸ்: ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மூலம் பெண் பிரபலங்கள் மட்டும் அடங்கிய குழு விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர். இதில் பெசோஸின் காதலியான லாரன் சான்செஸும் பயணித்தார். அவருடன் விமானியும் முன்னாள் பத்திரிகையாளருமான சான்செஸ், பாடகர் மற்றும் பாடலாசிரியர் கேட்டி பெர்ரி மற்றும் ‘சிபிஎஸ் மார்னிங்ஸ்’ இணை தொகுப்பாளர் கெயில் கிங், திரைப்பட தயாரிப்பாளர் கெரியான் ஃப்ளின், முன்னாள் நாசா பொறியாளர் ஆயிஷா போவ், விஞ்ஞானி அமண்டா ஆகியோர் விண்வெளிக்கு பயணித்தனர். இந்த நேரப்படி ஏப்.14 மாலை 7 மணி அளவில் இந்த விண்வெளி பயணம் மேற்கொள்ளப்பட்டது. அடுத்த 2 மாதங்களில் லாரன் சான்செஸை திருமணம் செய்ய உள்ளார் பெசோஸ். இந்த நிலையில் விண்வெளி பயணம் திட்டமிடப்பட்டது. மேற்கு டெக்சாஸில் இருந்து நியூ ஷெப்பர்ட் விண்கலன் மூலம் வெறும் சில நிமிடங்கள் மட்டுமே இந்த பயணம் திட்டமிடப்பட்டது. பயணத்தின் மொத்த நேரம் 10 நிமிடம் 21 விநாடிகள் என…
தேனி: சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக இன்று (ஏப்.2) கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆராட்டு (சுவாமி புனித நீராடல்) நிகழ்ச்சி வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று (ஏப்.1) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. திருவிழா கொடியேற்றத்துக்கான கயறு, குதிரை சின்னம் பொறிக்கப்பட்ட கொடி உள்ளிட்டவை குளங்கா ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் இருந்து அலங்கார ஊர்தியில் நேற்று மாலை சன்னிதானத்தை வந்தடைந்தது. இதனைத்தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கோயில் சுத்திகரிப்பு பூஜை நடைபெற்றது.பின்பு கொடிக்கு தந்திரி பிரம்மதத்தன் ராஜீவரு சிறப்பு பூஜைகள் நடத்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்க புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்பு தேங்காயில் நெய் தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை…
பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப். ‘புலே’ பட சர்ச்சை தொடர்பாக, அனுராக் கஷ்யாப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. அவரது கருத்துகள் பிராமண சமூகத்தினர் மத்தியில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக அனுராக் காஷ்யப் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இதனிடையே மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார் அனுராக் கஷ்யாப். இது தொடர்பாக, “கோபத்தில், ஒருவருக்கு பதிலளிக்கும் போது என் வரம்புகளை மறந்துவிட்டேன். முழு பிராமண சமூகத்தைப் பற்றியும் மோசமாகப் பேசிவிட்டேன். என் வாழ்க்கையில் பல நண்பர்கள் அந்த சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது. இன்று அவர்கள் அனைவரும் என்னால் காயப்பட்டுள்ளார்கள். என் குடும்பம் என்னால் காயப்படுத்தப்படுகிறது. நான் மதிக்கும் பல அறிவுஜீவிகள், என் கோபத்தாலும் என் பேச்சு முறையாலும் காயப்படுகிறார்கள். இப்படிச் சொன்னதன் மூலம், நானே என்…
மதுரை: சிபிஐ விசாரணை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் வழங்கி ரூ.2 கோடி இழப்பீடு ஏற்படுத்திய வழக்கில், அந்த வங்கியின் தலைமை மேலாளர் உள்பட 13 பேர் மீது சிபிஐ ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம், வங்கி தலைமை மேலாளர் பாலசுப்பிரமணியன், சண்முகவேல், ராமலட்சுமி, செண்பகமூர்த்தி, அம்மமுத்து உள்ளிட்ட எட்டு பேருக்கு தண்டனை விதித்து கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஐந்து பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தண்டனை பெற்ற பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட எட்டு பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: சிபிஐ…
சென்னை: நாட்டின் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான எல் அண்ட் டி பைனான்ஸ், 2024-25நிதியாண்டில், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.2,644 கோடியை ஈட்டியுள்ளது. இது, இதுவரை இல்லாத உயர்வு ஆகும். மேலும், முந்தைய ஆண்டைவிட 14% வளர்ச்சி ஆகும். மார்ச் 31, 2025 உடன் முடிந்த 4-வது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.636 கோடியை வரிக்குப் பிந்தைய லாபமாக ஈட்டியிருக்கிறது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 15% அதிகம் ஆகும். கடந்த 2023-24 நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 2024-25 நிதியாண்டில் சில்லரை கடன்கள் 19% உயர்ந்து, ரூ.95,180 கோடியாகி உள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குநரவைக் கூட்டம் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதில், 2024-25 நிதியாண்டுக்கான பங்காதாயமாக (டிவிடெண்ட்) பங்கு ஒன்றுக்கு ரூ.2.75- ஐ அறிவித்தது. இந்நிறுவனம் இதுவரை அறிவித்ததிலேயே இதுதான் அதிகபட்சம் ஆகும். டிவிடெண்ட் தொகை 30 நாட்களுக்குள் முதலீட்டாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.