திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராஜகோபாலசாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு நடத்தினர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று வெண்ணெய்த்தாழி திருவிழா நடைபெற்றது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற வைணவ தளங்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில், பங்குனி மாதத்தில் நடைபெறும் பங்குனி பெருவிழாவின் முக்கியத் திருவிழாவான வெண்ணெய்த்தாழி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நிகழண்டுக்கான வெண்ணெய்த்தாழி திருவிழா இன்று காலை நடைபெற்றது. அதையொட்டி காலை 7:30 மணி அளவில் ராஜகோபால சுவாமி வெண்ணெய் திருடும் கண்ணன் அலங்காரத்தில், வெள்ளி வெண்ணெய் குடத்தில் வெண்ணெய்யை அள்ளித் தின்னும் திருக்கோளத்தில் எழுந்தருவினார். அப்போது பக்தர்கள் சுவாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு செய்தனர். தொடர்ந்து வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் வளம் வந்து மேலராஜ வீதி, பந்தலடி வழியாக வெண்ணெய்த்தாழி மண்டபத்தை சுவாமி…
Author: admin
விஷ்ணு விஷால் – ஜுவலா கட்டா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பெண் குழந்தை பிறந்திருப்பது குறித்து விஷ்ணு விஷால், “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது ஆர்யன் அண்ணனாகிவிட்டார். இன்று எங்களுக்கு 4-வது திருமண நாளாகும். அதே நாளில் இந்த பரிசை நாங்கள் வரவேற்கிறோம். உங்கள் அனைவரின் அன்பும், ஆசீர்வாதமும் தேவை” என்று தெரிவித்துள்ளார். முதல் மனைவி ரஜினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். இருவருக்கும் ஆர்யன் என்ற பெயரில் மகன் இருப்பது நினைவுக் கூரத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஜுவலா கட்டாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் விஷ்ணு விஷால் We are blessed with a BABY GIRL.. Aryan is an elder brother now…Its our 4th wedding anniversary…
கட்சிக் கூட்டங்களுக்கு வருபவர்களுக்கு பிரியாணியுடன் குவாட்டரை மறைத்துக் கொடுத்த காலமெல்லாம் இப்போது மலையேறி விட்டது போலிருக்கிறது. அதனால் தான் திருக்கோவிலூரில் பிரியாணி விருந்துடன் பீர் பாட்டிலையும் பந்தியிலேயே பகிரங்கமாக பரிமாறி பகீர் கிளப்பி இருக்கிறார்கள். இந்தப் புரட்சியை செய்திருப்பது, “போதையை ஒழிப்போம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஆளும் கட்சிக்காரர்கள் என்பது இன்னுமோர் ‘சிறப்பு’. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றியங்களைச் சேர்ந்த இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 27-ம் தேதி நடைபெற்றது. ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஐயனார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூமாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். திருக்கோவிலூரை அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மதிய உணவு சகிதம் தடபுடலாக நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் ரிஷிவந்தியம் எம்எல்ஏ-வும், கள்ளக்குறிச்சி தெற்கு…
எம்-சாண்டு, பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000-த்தை குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிர்ணயி்க்கவும் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகள் குறைவான எண்ணிக்கையில் செயல்படுவதாலும், எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி விலை உயர்வாலும் கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன. இவற்றின் விலையைக் குறைக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறத்தின. இந்நிலையில் இதுகுறித்து முடிவு எடுப்பது தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று கூட்டம் நடைபெற்றது. அப்போது, கடந்த 25-ம் தேதி கல்குவாரி, கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள்…
மதுபாலா அழகின் சுருக்கமாக இருந்தார்.
70 வயதில், பெரும்பாலான நபர்கள் ஓய்வு பெறுவதற்கு தயாராகி வருகிறார்கள், தங்கள் தொழில்முறை வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார்கள், அல்லது அன்றாட வாழ்க்கையின் உடல் ரீதியான விகாரங்களிலிருந்து எளிதாக்குகிறார்கள். ஆனால் டான் பெட்டிட் அல்ல. நாசாவின் பழமையான முழுநேர விண்வெளி வீரராக, பெட்டிட் தனது ஏழாவது தசாப்தத்தில் விண்வெளியில் மிதந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) ஏழு மாத காலத்தை முடித்தார். ஏப்ரல் 20, 2025 அன்று அவர் பூமிக்கு திரும்பினார், அவரது 220 நாள் பணியின் முடிவைக் குறித்தது மட்டுமல்லாமல், அவரது மைல்கல் பிறந்தநாளுடன் ஒத்துப்போனது-ஒரு நாள் அவர் வளிமண்டலத்தின் வழியாக ஒரு தடைபட்ட ரஷ்ய சோயுஸ் காப்ஸ்யூலில் வீழ்ச்சியடைந்தார்.மீண்டும் பூமிக்கு வந்த பிறகு தனது முதல் பொது தோற்றத்தில், பெட்டிட் தனது அனுபவத்தைப் பற்றி ஒரு வெளிப்படையான மற்றும் விஞ்ஞான ரீதியாக சுவாரஸ்யமான வர்ணனையை வழங்கினார். ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திலிருந்து பேசிய அவர், விண்வெளியில் எடை…
இங்கிலாந்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக ஊழல்கள் குறித்த தனது கருத்துக்களுக்காக எலோன் மஸ்க் ஒரு பிரிட்டிஷ் அமைச்சர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார், தொழில்நுட்ப பில்லியனருக்கு இந்த விவகாரத்தில் அறிவு இல்லை என்று குற்றம் சாட்டினார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் குரல் ஆதரவாளரான மஸ்க், இங்கிலாந்து பிரதமரை குறிவைக்க தனது சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) ஐப் பயன்படுத்தினார் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அமைச்சரைப் பாதுகாத்தல் ஜெஸ் பிலிப்ஸ். ராய்ட்டர்ஸின்படி, ஸ்டார்மர் தனது பதவிக்காலத்தில் பொது வழக்குகள் இயக்குநராக இருந்த காலத்தில் சீர்ப்படுத்தும் கும்பல்களைத் தண்டிக்கத் தவறியதாக குற்றம் சாட்டியுள்ளார், மேலும் பிலிப்ஸை ஒரு என்று குறிப்பிட்டார் “கற்பழிப்பு இனப்படுகொலை மன்னிப்புக் கலைஞர். “மஸ்கின் கருத்துக்களுக்கு பாராட்டு மற்றும் கண்டனத்துடன், சர்ச்சை பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.பிலிப்ஸுக்கு எதிரான எலோன் மஸ்கின் கூற்றுக்கள்: “கற்பழிப்பு இனப்படுகொலை மன்னிப்புக் கலைஞர்”2008 முதல் 2013 வரை அரசு வழக்கு விசாரணைகளின் இயக்குநராக இருந்த…
ராணுவ நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சூழலில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ‘அக்ரன்’ என்ற பெயரில் இந்திய விமானப் படை சிறப்பு போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. இதில் ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து அண்மையில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பெருமளவில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை நேற்று அனைத்து…
சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா, க்ரோக் ஆகிய ஏஐ அசிஸ்டன்ட்கள் வரிசையில் தற்போது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது டீப்சீக் (DeepSeek). டீப்சீக் தொடங்கப்பட்டு 20 மாதங்களே ஆகின்றன. ஆனால் தனது புரட்சிகரமான AI அசிஸ்டன்ட் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், ஏஐ-க்கான புதிய அணுகுமுறையுடன் உலக சந்தையையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இதன் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கெனவே செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன. இந்த சூழலுக்கு நடுவே டீப்சீக்கின் வெற்றி அதன் நிறுவனர் லியாங் வென்ஃபெங்கை பெரும் புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. டீப்சீக்கின் எழுச்சி அமெரிக்க ‘டெக்’ ஜாம்பவான்களை வியக்க வைத்தது ஒருபுறமென்றால், சீனாவுக்கு வெளியே சென்று படிக்கவோ அல்லது பணிபுரியவோ செய்யாத ஒரு பொறியியல் பட்டதாரி இத்தகைய சாதனையை எவ்வாறு செய்தார் என்பதுதான் அவர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. தொடக்க பள்ளி ஆசிரியரின் மகனான லியாங் வென்ஃபெங், சீனாவின் குவாங்டாங் நகரின் வளர்ந்தவர். தனது இளங்கலை மற்றும் முதுகலைப்…
மத்திய அரசும் தமிழக அரசும் ஆளுக்கொரு பக்கம் மொழிப்போரை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழகத்தில் வேர்விட்டு வளர்ந்த தாய்த்தமிழ் பள்ளிகள் நிதிச் சுமையால் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கின்றன. 1993-ம் ஆண்டு வாக்கில், தமிழ்த்தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகுவின் முன்னெடுப்பால் தமிழகமெங்கும் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் உருவாகின. அப்படி உருவாகி நூற்றுக்கும் மேலாக பெருகிய அந்தப் பள்ளிகளில் இப்போது 17 பள்ளிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள் எல்லாம் பல்வேறு காரணங்களால் இழுத்து மூடப்பட்டுவிட்டன இதுகுறித்து நம்மிடம் பேசிய தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர் சிவ. காளிதாசன், “1993-ம் ஆண்டு சென்னை அம்பத்தூர் மேனாம்பேட்டில் ரூ. 1 மட்டும் நன்கொடை பெற்றுக்கொண்டு, தாய் குழந்தைக்கு பால் புகட்டுவது போன்ற படத்தை பெற்றோரிடம் தந்து, குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர துவங்கினோம். பின்பு அதை தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளையாக மாற்றி, அதே பகுதியில் 10…