Author: admin

புதுடெல்லி: முன்னாள் தடகள வீரரும், உலக சாம்பியனுமான உசைன் போல்ட் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள அவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், உசைன் போல்ட் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறார். செப்டம்பர் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை டெல்லி, மும்பையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதுகுறித்து உசைன் போல்ட் கூறும்போது, “இந்தியாவுக்கு செல்வதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறேன். இந்திய மக்கள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். எனக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்” என்றார். உசைன் போல்ட் இந்தியாவுக்கு 2-வது முறையாக வரவுள்ளார். அவர், ஏற்கெனவே 2014-ம் ஆண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பெங்களூரு சின்னசாமி…

Read More

சென்னை: மதத்தை வைத்து விஜய்யின் தாயை பற்றி விமர்சனம் செய்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு-வுக்கு, தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், “அன்று துப்பறிவாளர் ஹெச்.ராஜா செய்த வேலையை இன்று சட்டப்பேரவைத் தலைவர் செய்வது சரியா?” என்று வினவியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “விஜய்யின் அம்மா கிறிஸ்தவர். தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான். சிறுபான்மையினர்களின் வாக்கை உடைக்கத்தான் அவரை பாஜக இறக்கியிருக்கிறது.” என கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார். இதற்கு தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: ‘சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அனைவருக்குமான பேரவைத் தலைவராக இல்லாமல் திமுக பேச்சாளராகவே செயல்படுவது வழக்கம். ஆனால் இன்னும் கீழிறங்கி நம் வெற்றித் தலைவர் விஷயத்தில் பேரலை சேனல் சிறார்கள் போல் கட்டுக்கதைகளை எல்லாம் சொல்வது தகுமா? பேரவைத் தலைவரே, அந்தத் தனி…

Read More

துபாய்: ஐசிசி கிரிக்கெட் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. பரபரப்பான இந்த போட்டியில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசினார். மேலும், 2-வது இன்னிங்ஸிலும் 40 ரன்கள் சேர்த்தார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் (பேட்ஸ்மேன்) தரவரிசைப் பட்டியலில் சக நாட்டு வீரர் ஹாரி புரூக்கை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட், மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் 3-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஷுப்மன் கில் ஆகியோர் முறையே 5,…

Read More

மதுரை: வேடசந்தூர் சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயபால், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், வேடசந்தூர் தாலுகாவில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் குவாரிகள் நடைபெற்று வருகிறது. இந்த சட்டவிரோத குவாரிகளை மூடவும், இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை சட்டவிரோதமாக குவாரி நடத்தி வருவோரிடம் பணம் வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், சட்டவிரோத குவாரிகள் மூடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு, குவாரியின் முன் நுழைவாயில் பூட்டப்பட்டு, பின்வாசல் வழியாக குவாரி நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. திண்டுக்கல்…

Read More

லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ரிஷப் பந்த், கருண் நாயர் ஆட்டமிழந்த போதே இங்கிலாந்தின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்தார். இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து கடந்த வாரம் 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து, இந்திய அணிகள் தலா 387 ரன்கள் சேர்த்தன. 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 192 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து 22 ரன்கள்…

Read More

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 17) முதல் 22-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். தமிழகத்தில் இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடஙக்ளில் மழை பெய்யக்கூடும். 17-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 18-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி,…

Read More

(பட வரவு: இன்ஸ்டாகிராம்) உரிய கடன் வழங்காமல் உத்வேகம் தேடியதற்காக பிராடா குற்றவாளியா? இத்தாலிய சொகுசு பேஷன் நிறுவனமான மகாராஷ்டிராவின் கோலாப்பூருக்கு ஒரு உயர் மட்ட குழுவை அனுப்பியுள்ளது, இது கோலாபுரி சாப்பல்களின் பாரம்பரிய கைவினைகளை மதிப்பிடுகிறது. இந்த நடவடிக்கை பிராண்டின் வசந்தம்/கோடை 2026 சேகரிப்பில் உலகளாவிய பின்னடைவை அடுத்து வருகிறது, இதில் கோலாபுரிஸால் ஈர்க்கப்பட்ட செருப்பை அவற்றின் தோற்றம், வரலாறு அல்லது கைவினைத்திறன் குறித்து எந்த குறிப்பும் இல்லாமல் இடம்பெற்றது.பிராடாவின் முக்கிய தொழில்நுட்ப குழு உட்பட வருகை தரும் பிரதிநிதிகள் தற்போது கோலாபுரிஸின் பாரம்பரிய உற்பத்தி முறைகளைப் படித்து வருகின்றனர். கைவினைப்பொருட்களின் வரலாறு மற்றும் சிக்கல்களை நன்கு புரிந்துகொள்ள கைவினைஞர்கள், கூட்டுறவு தலைகள் மற்றும் உள்ளூர் பங்குதாரர்களுடன் மாலையை ஈடுபடுத்தும் குழு எதிர்பார்க்கப்படுகிறது.(பட வரவு: இன்ஸ்டாகிராம்)இருப்பினும், இது இரண்டு பகுதி வருகையின் முதல் கால் மட்டுமே. பிராடாவின் உலகளாவிய வணிகத் தலைவர், குளோபல் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் மற்றும் பிற மூத்த…

Read More

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளில் படிக்காமல் தனியார் மையங்கள் உதவியுடன் பயிற்சி பெறும் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டு 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஜூலை 17) நிறைவு பெறுகிறது. இதையடுத்து தனித்தேர்வர்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இடம்பெற்றுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.195 செலுத்த வேண்டும். இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 18, 19-ம் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Read More

சென்னை: எம்சிசி முருகப்பா கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, மத்திய நேரடி வரிகள் வாரிய அணியை வென்றது. இந்தப் போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி (ஐஎன்என்) 4-1 என்ற கோல் கணக்கில் மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) அணியை வீழ்த்தியது. கடற்படை அணி சார்பில் அஜிங்கியா ஜாதவ் 2 கோல்களும் (17, 35-வது நிமிடங்கள்), கே.செல்வராஜ் 2 கோல்களும் (33, 36-வது நிமிடங்கள்) அடித்தனர். மத்திய நேரடி வரிகள் வாரிய அணி சார்பில் மெஹ்கீத் சிங் ஒரு கோல் (23-வது நிமிடம்) அடித்தார். மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி (ஐஎன்ஏ) 2-1 என்ற கோல் கணக்கில் ஹாக்கி மகாராஷ்டிரா அணியை தோற்கடித்தது. இந்திய ராணுவ அணி சார்பில் பிரதீப் சிங் பிஷ்த் (29-வது நிமிடம்), நீரஜ்…

Read More

சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (ஜூலை 16) சந்தித்தார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினராக வரும் 25-ம் தேதி பதவியேற்க இருப்பது தொடர்பான ஆவணத்தைக் காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் என்னுடைய அருமை நண்பர் கமல்ஹாசனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில், “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

Read More