சென்னை: ஊரக உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா அனுப்பியுள்ள கடிதம்: நகர ஊரமைப்பு சட்ட விதிகளின்படி ஊரகப்பகுதிகளில் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைளும் விளக்கப்பட்டுள்ளன. தற்போது, ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வாயிலாக, கட்டிட அனுமதியை 3 வகைகளில் வழங்க வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சுயசான்றின் அடிப்படையில் 2,500 சதுரடி மனையில், 3 ஆயிரம் சதுரடி வரையில் பரப்புள்ள குடியிருப்பு கட்டுமானங்களை கட்டிக் கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது. கட்டிடத்தின் பரப்பு 10 ஆயிரம் சதுரடிக்குகீழ் இருந்தால் உள்ளாட்சி அமைப்புகளிடம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இக்கட்டிட வரைபடங்களின் ஆவணங்கள் உரிய அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். 10 ஆயிரம் சதுரடிக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு தொழில்நுட்ப…
Author: admin
ஒரு நாளில் நீங்கள் எத்தனை முறை செல்ல வேண்டும்? பதில் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும் நம் அனைவருக்கும் எங்கள் தாளங்கள் உள்ளன, சிலர் ஒரு நாளைக்கு பல முறை செல்கிறார்கள், மற்றவர்கள் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே. இரண்டு நபர்களும் ஒரே மாதிரியாக இல்லை, அது சரி. ஆனால் “இயல்பானது” திடீரென்று மாறும்போது, அல்லது அச om கரியம் ஏற்படும்போது, உங்கள் குடல் கவனம் செலுத்த உங்களுக்கு சமிக்ஞை செய்யலாம். இன்று மருத்துவ செய்திகளின்படி, ஆரோக்கியமான குடல் அதிர்வெண் பரவலாக உள்ளது -வாரத்திற்கு மூன்று மடங்கு முதல் ஒரு நாளைக்கு மூன்று முறை வரை இருக்கும் – இது உங்கள் நிலைத்தன்மையே மிகவும் முக்கியமானது.அதாவது, ஒவ்வொரு நாளும் வலி அல்லது திரிபு இல்லாமல் நீங்கள் தவறாமல் சென்றால், அது முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் நீங்கள் திடீரென்று தினசரி வயிற்றுப்போக்கு அல்லது கடினமான மலம் கொண்ட நீண்ட இடைவெளிகளுக்கு மாறினால் – அவை…
சென்னை: பொது இடங்கள், நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதன்ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதம் 5 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதில், உயிரி மருத்துவக் கழிவுகளை குவித்தல், அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டுவந்து கழிவுகளை கொட்டுவோர், குவித்து வைப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும்மசோதாவும் ஒன்று. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து சட்டம் அமலுக்கு வந்த நிலையில் இந்த சட்டத்திருத்தம் ஜூலை 8-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: இந்திய ஹாக்கி வீராங்கனை தீபிகாவுக்கு பெருமைமிக்க போலிகிராஸ் மேஜிஸ் ஸ்கில் விருது வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் தொடரில் அவர் சிறப்பாக விளையாடி ஃபீல்டு கோலை அடித்ததற்காக இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வீராங்கனை தீபிகா என்பது குறிப்பிடத்தக்கது. 21 வயதாகும் தீபிகா, கடந்த ஆண்டு நடைபெற்ற புரோ ஹாக்கி லீக் போட்டியின்போது நெதர்லாந்து அணிக்கெதிராக இந்த கோலை அடித்தார். உலக அளவிலான ஹாக்கி ரசிகர்கள், வாக்குகளை செலுத்தி இந்த விருதுக்கு வீரர், வீராங்கனையைத் தேர்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் பிரிவில் பெல்ஜியம் வீரர் விக்டர் வெக்னெஸ் இந்த விருதைப் பெற உள்ளார்.
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ள கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (ஜூலை 16) சந்தித்தார். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ளதை முன்னிட்டு வாழ்த்து பெற்றார். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.” என்று தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் தேதி கமல்ஹாசன் பதவியேற்க உள்ளதாக மக்கள் நீதி மய்யம் நேற்று (ஜூலை 15) அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி…
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டைகள், கொழுப்பின் உள்ளடக்கம் இருந்தபோதிலும் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை என்பதை ஜெஸ்ஸி அஞ்சாஸ்பே தெளிவுபடுத்துகிறார். சிறிய, அடர்த்தியான எல்.டி.எல் துகள்கள் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும் குளுக்கோஸ் டிசெகுலேஷன் முதன்மை அக்கறை என்று அவர் வலியுறுத்துகிறார். சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது இந்த காரணிகளைத் தணிப்பதற்கும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும், கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளிலிருந்து கவனத்தை மாற்றுவதற்கும் முக்கியமானது. முட்டைகள் தலைமுறைகளாக காலை உணவு பிரதானமாக இருந்தன. புரதம், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பிய முட்டை ஒரு ஊட்டச்சத்து சக்தி இல்லம், ஆனால் அவை உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கிறதா? சிறந்த விற்பனையான புத்தகங்கள் குளுக்கோஸ் புரட்சி மற்றும் குளுக்கோஸ் தெய்வ முறை ஆகியவற்றின் ஆசிரியரான பிரெஞ்சு உயிர் வேதியியலாளர் ஜெஸ்ஸி இஞ்சாஸ்பே, முட்டைகள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கிறதா என்பதை எடைபோட்டுள்ளது. ஊட்டச்சத்துக்கான சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைக்கு பெயர் பெற்ற இஞ்சாஸ்பே, இதய ஆரோக்கியத்தில் முட்டைகளின்…
சென்னை: சென்னையில் இண்டியம் சாப்ட்வேர் ஏஐடிஏ ரேங்கிங் டென்னிஸ் போட்டி வரும் 19-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெறும். ஆடவர், மகளிர் டென்னிஸ் போட்டி மட்டுமல்லாது, வீல்சேர் டென்னிஸ் போட்டியும் இந்த போட்டியுடன் இணைந்து நடத்தப்படும். போட்டியில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். வி.எம்.ரஞ்சித், ஓஜஸ் தேய்ஜோ உள்ளிட்டோர் போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். வீல்சேர் டென்னிஸ் போட்டியில் 26 பேர் பங்கேற்க உள்ளனர். போட்டிக்கான பரிசுத்தொகை ரூ.7 லட்சமாகும். தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை: “விமர்சனம் என்கின்ற பெயரில், நமக்கு விளம்பரத்தை எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டிருக்கிறார். அதற்காக நன்றி” என்று மயிலாடுதுறையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், இபிஎஸ் பிரச்சாரத்தை விமர்சித்த ஸ்டாலின், “திமுக ஆட்சியைப் பற்றி போலியாக ஒரு பிம்பத்தை உருவாக்க ‘சுந்தரா டிராவல்ஸ்’ மாதிரி ஒரு பஸ் எடுத்துகொண்டு கிளம்பிவிட்டார். அந்த பஸ்ஸிலிருந்து புகை வருவது மாதிரி இப்போது அவருடைய வாயிலிருந்து பொய்யும் அவதூறுமாக வந்துகொண்டே இருக்கிறது.” என்று கூறினார். மயிலாடுதுறையில் இன்று (ஜூலை 16) நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 48 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 113 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 271 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 54,461 பயனாளிகளுக்கு வழங்கினார். அதன்பின், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட…
டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜப்பான் ஓபன் சூப்பர் 750 பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் 21-11, 21-18 என்ற செட் கணக்கில் சீன வீரர் வாங் ஜெங் ஜிங்கை தோற்கடித்தார். இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிரக் ஷெட்டி ஜோடியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சாத்விக், சிராக் ஜோடி 21-18, 21-10 என்ற செட் கணக்கில் கொரியாவின் காங் மின் ஹுயுக், கிம் போங் ஜூ ஜோடியை வீழ்த்தியது.
சென்னை: விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். சென்னை மின்ட் தெருவில் வேத விநாயகர் கோயில் உள்ளது. கடந்த 1954-ம் ஆண்டும் தெய்வயாணை என்பவர் அறக்கட்டளை ஆரம்பித்து, மின்ட் தெருவில் அவருக்கு சொந்தமான இடத்தில் இந்தக் கோயிலை கட்டி நிர்வகித்து வந்தார். இந்நிலையில், அவர் காலத்துக்கு பிறகு கோயிலை பராமரிப்பதற்காக மகாலிங்கம் என்பவரை நியமித்தார். ஆனால், மகாலிங்கம் வயதான காரணத்தால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கோயில் பராமரிப்பு பொறுப்பை இந்திரகுமார் என்பவரிடம் ஒப்படைத்தார். மகாலிங்கம் காலத்துக்கு பிறகு, இந்திரகுமார் என்பவர் கோயிலை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. கோயிலை சுற்றி வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருந்தது. மேலும், அப்பகுதி மக்களும் விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தி வந்தனர். இந்த கோயில் சுற்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் பாழடைந்ததாக கூறி இந்திரகுமார், கட்டிடங்களை இடிப்பதற்கு முயற்சி செய்வதாகவும், கட்டிடங்களோடு சேர்ந்து, கோயிலையும் இடிக்க…
