மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், “நான் இந்தியாவின் மருமகள், என்னை இங்கேயே இருக்க அனுமதிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2023, ஜூலையில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர் சீமா ஹைதர். பாகிஸ்தானின் சிந்து மாகாணம், கராச்சி நகரை சேர்ந்த இவர் தனது இந்திய காதலர் சச்சின் மீனாவை திருமணம் செய்துகொள்வதற்காக பாகிஸ்தானை விட்டு வெளியேறினார். ஏற்கெனவே திருமணமான சீமா ஹைதர், 4 குழந்தைகளுக்கு தாய் ஆவார். இந்நிலையில் தனது 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதாக இந்தியாவுக்குள் நுழைந்தார். உ.பி.யின் கவுதம புத்தர் நகர் மாவட்டம், ரபுபுரா பகுதியில் தனது காதலர் சச்சின் மீனாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரை கடந்த 2023 ஜூலையில் அதிகாரிகள் பிடித்தனர். தற்போது உ.பி.யின் கிரேட்டர் நொய்டாவில் சச்சினுடன் சீமா வசித்து வருகிறார். இந்நிலையில் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ஏப்ரல் 27 முதல்…
Author: admin
இந்தியாவில் பசுமைப் புரட்சி வெற்றியடைந்ததில் வானொலியின் பங்கும் முக்கியமானது. அதிக மகசூல் தரும் நெல், கோதுமை ரகங்களைப் பயிரிடும் தேசிய அளவிலான திட்டம் 1966இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவற்றை எப்படிப் பயிரிடுவது, அதற்கான பருவம், அறுவடை போன்ற தகவல்கள் விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில் அகில இந்திய வானொலியின் மண்டல ஒலி பரப்பு நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்பட்டன. அந்தத் திட்டம் வெற்றியும் கண்டது. அரசின் வானொலி அறிவிப்பைப் பின்பற்றி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏடிடி-27 ரக நெல் அன்றைக்குப் பயிரிடப்பட்டு வெற்றிகரமாக மகசூல் கண்டதால் அந்த நெல் ரகத்தை ‘ரேடியோ நெல்’ என்றே அழைத்தார்கள். 1960 முதல் 1970 வரை கிராமப்புற வளர்ச்சியில் வானொலியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வானொலியைக் கேட்கும் ‘கிராமப்புற வானொலி மன்றங்கள்’ திட்டத்தை ‘யுனெஸ்கோ’ ஊக்குவித்தது. இந்தியாவைத் தொடர்ந்து கானா, தான்சானியா, தாய்லாந்து போன்ற நாடுகள் கிராமப்புற வானொலி மன்றத் திட்டத்தைப் பின்பற்றின.…
சென்னை: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்துதல் பணியின்போது தினமும் 24 தாள்களை மட்டும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை காட்டும் பாரபட்சமான நடவடிக்கையை மாற்ற வேண்டும். தற்போது 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு முதன்மை தேர்வாளரின் கீழ் 6 உதவி தேர்வாளர்கள் (AE) மற்றும் ஒவ்வொரு உதவி தேர்வாளருக்கும் ஒரு நாளைக்கு 24 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்ய வழங்கப்படுகின்றன. அதேநேரம் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஒவ்வொரு முதன்மை தேர்வாளருக்கு 10 உதவி தேர்வாளர்களும், ஒவ்வொரு உதவி தேர்வாளருக்கும் தினமும் 30 விடைத்தாள்களும் கொடுக்கப்படுகின்றன. மேலும், 12-ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும்…
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2028-ம் ஆண்டு சீசனில் ஆட்டங்களின் எண்ணிக்கையை 74-ல் இருந்து 94 ஆக அதிகரிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். 2028-ம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனை 94 போட்டிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து பிசிசிஐ தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதேவேளையில் புதிய அணிகளை சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2022-ம் ஆண்டு சீசனில் புதிதாக குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் அறிமுகமாகின. இதனால் ஐபிஎல் தொடர் 60 ஆட்டங்களில் இருந்து 74 ஆட்டங்களாக அதிகரித்தது. நடப்பு சீசனில் கூட போட்டிகளின் எண்ணிக்கையை 74-ல் இருந்து 84 ஆக அதிகரிக்கும் திட்டம் இருந்தது. ஆனால் அட்டவணை திட்டமிடலில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஒரே நாளில் 2 போட்டிகள் அதிகம் நடத்தப்படுவதை ஒளிபரப்பாளர்கள் விரும்பாததால் 84 போட்டிகளை நடத்தும் திட்டம் சாத்தியப்படவில்லை. எனினும்…
இஸ்லாமாபாத்: இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகள் என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் புதன்கிழமை நடந்த வெளிநாட்டுவாழ் பாகிஸ்தானியர்களின் மாநாட்டில் பேசிய அசிம், பாகிஸ்தான் எவ்வாறு உருவானது என்பதை உங்களின் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்று பாகிஸ்தானியர்களை வலிறுத்தினார். கூட்டத்தில் பேசிய ராணுவ தளபதி கூறுகையில், “வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நாம் இந்துக்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்று நமது முன்னோர்கள் நம்பினார்கள். நமது மதம் வேறு, பழக்க வழக்கங்கள் வேறு, மரபுகள் வேறு, நமது சிந்தனைகள், நோக்கங்கள் வேறு. இங்கிருந்துதான் இரு நாடுகள் கொள்கைகான அடித்தளம் அமைக்கப்பட்டது. நாம் இரண்டு வேறு நாடுகள், ஒரே நாடு அல்ல. நமது முன்னோர்கள் மகத்தான சாதனைகளைச் செய்துள்ளனர். மேலும் இந்த நாட்டை உருவாக்க நாம் நிறைய தியாகங்களைச் செய்துள்ளோம். இதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நமக்குத் தெரியும். எனதருமை சகோதர,…
திருவள்ளூர்: திருத்தணி திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று கமலத் தேர்த் திருவிழா, வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே திருவாலங்காடுவில் அமைந்துள்ளது வடாரண்யேஸ்வரர் கோயில். திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயில், சிவபெருமான் திருநடனமாடிய ஐந்து திருச்சபைகளில், முதற்சபையான ரத்தின சபையை கொண்டது. இந்த வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 11 -ம் தேதி வரை நடைபெற உள்ள இத்திருவிழாவில், நாள் தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில், வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மனுடன் அன்ன வாகனம், பூத வாகனம், நாக வாகனம், புலி மற்றும் யானை உள்ளிட்ட வாகனங்களில் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய திருவிழாவான…
விஜய்யுடன் இணைந்து பணிபுரிய முடியாமல் போனதற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். தனது அடுத்த படத்துக்காக விஜய் கதைகள் கேட்டுக் கொண்டிருக்கும்போது, பல்வேறு இயக்குநர்கள் கதைகள் கூறிவந்தார்கள். அதில் பலமுறை பேசப்பட்ட பெயர் கார்த்திக் சுப்பராஜ். ஆனால், விஜய் – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி இணைந்து பணிபுரியவே இல்லை. தற்போது ‘ரெட்ரோ’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் விஜய்யுடன் பணிபுரிய முடியாமல் போனதற்கான காரணத்தை கூறியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அதில், “விஜய் சாரை பலமுறை சந்தித்து கதை கூறியிருக்கிறேன். ‘ஜிகிர்தண்டா’ பார்த்துவிட்டு, ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க என்று பேசினார் விஜய் சார். அப்போதில் இருந்தே பலமுறை அவருக்கு கதைகள் கூறியிருக்கிறேன். முதலில் எனக்கு ஒரு கதையை நன்றாகச் சொல்ல தெரியாது. ரஜினி சாரையும் சந்தித்து நிறைய கதைகள் கூறியிருக்கிறேன். அவரிடம் மட்டும் ஏதோ ஒன்று உள்ளே இறங்கி நன்றாக சொல்லிவிடுவேன். விஜய் சாரிடம் கூறிய கதைகள் ஏதோ அவருக்குப் பிடிக்கவில்லை.…
சென்னை: ஆட்சேபனையற்ற நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பெல்ட் ஏரியா எனப்படும் புறநகர் பகுதிகள், தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில் வருமான வரம்பு உள்ளிட்ட விதிகளும் திருத்தப்பட்டுள்ளன. சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்கள், மதுரை, நெல்லை மாநகராட்சிகள், பல்வேறு நகராட்சிகள், மாவட்ட தலைநகரங்களில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த பிப்.10-ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறும்போது, சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’ என்று கூறப்படும் 32 கி.மீ. பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். இவ்வாறு ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு பகுதிகளில் 29,187…
‘‘கடைகளில் பொருட்களை வாங்கும் முன் கடைக்காரரிடம் அவரது மதம் என்ன என்று கேட்டு அனுமன் சலிசாவை கூறச் சொல்லுங்கள்’’ என மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கூறியுள்ளார். காஷ்மீரின் பஹல்மாமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளிடம் மதம் என்ன? என்று கேட்டு இஸ்லாமிக் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ‘கல்மா’ வை கூறும்படி கூறியுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள தபோலி நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே பேசியதாவது: காஷ்மீரில் இந்துக்களை சுட்டுக் கொல்வதற்கு முன் மதம் என்ன? என தீவிரவாதிகள் கேட்டுள்ளனர். அதேபோல் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு முன் கடைக்காரரிடம் அவரது மதம் என்ன? என இந்துக்கள் கேட்க வேண்டும். அவர்கள் இந்து என பொய் சொல்லலாம். அவரிடம் அனுமன் சலிசாவை கூறும்படி சொல்லுங்கள். அவருக்கு அனுமன் சலிசா தெரியவில்லை என்றால் அவரிடம் பொருட்கள் வாங்காதீர். முகலாய மன்னர் அவுரங்கசீப் தனது தந்தை மற்றும்…
சென்னை: புதிய சஸ்பென்சன், எல்இடி லைட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ராயல் என்பீல்ட் நிறுவனம் புதிய புல்லட் ‘ஹண்டர் 350’ மாடலை அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் கிளாசிக் 350, மீட்டியர் 350, ஹிமாலயன் போன்ற மாடல்கள் வாகன ஓட்டிகளிடம் கவனம் பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக ‘ஹண்டர் 350’ மாடல் 2022 ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதன் மேம்படுத்தப்பட்ட மாடல் வகை நேற்று முன்தினம் டெல்லி மற்றும் மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. டேப்பர் கிரே, ரிபல் ப்ளூ வகைகளுடன் புதிதாக டோக்கியோ பிளாக், லண்டன் ரெட், ரியோ வைட் ஆகிய நிறங்களில் 2025-ம் ஆண்டின் ‘ஹண்டர் 350’ அறிமுகமாகியுள்ளது. புதிய சஸ்பென்சன், எல்இடி லைட், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், வழிகாட்டும் டிரிப்பர் என பல்வேறு நவீன வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி யத்விந்தர் சிங் குலேரியா…