லண்டன்: வார இறுதியில் அயர்லாந்தில் தாக்கப்பட்ட ஒரு இந்திய மாணவர், இதன் விளைவாக அயர்லாந்தை விட்டு வெளியேறுவதாகவும், இந்தியாவில் இருந்து ஆன்லைனில் தனது போக்கை முடிப்பதாகவும் கூறினார்.அந்த நபர், தனது 20 வயதில், டப்ளினில் உள்ள ஃபேர்வியூ பூங்காவிலிருந்து உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தார். குழுவில் ஒருவர் தனது மெட்டல் வாட்டர் பாட்டிலை எடுத்து கண்ணுக்கு மேலே அடித்தார், இதனால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு எட்டு தையல் கிடைத்தது. அவர்கள் தாக்குதலை விசாரிப்பதையும் அவரது காயங்கள் “உயிருக்கு ஆபத்தானது” என்றும் கார்டா உறுதிப்படுத்தினார்.ஆகஸ்ட் 9 ஆம் தேதி டப்ளினில் ஒரு பஸ் நிறுத்தத்தில் தனது பணப்பையை எடுக்க முயன்ற ஏழு மற்றும் எட்டு வயதுடைய சிறுவர்களால் தனது 60 வயது தந்தையை துன்புறுத்தியதாக ஒரு இந்திய வம்சாவளி பெண் ரெடிட்டில் ஒரு…
Author: admin
புதுடெல்லி: காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “பாகிஸ்தானுக்கு வரவேண்டிய ஒரு சொட்டு நீரைக்கூட இந்தியா நிறுத்தி வைக்க முடியாது. தண்ணீரை நிறுத்த முயற்சித்தால், மறக்க முடியாத வகையில் பாகிஸ்தான் பாடம் கற்பிக்கும். சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் வரும் தனது உரிமைகளில் பாகிஸ்தான் சமரசம் செய்து கொள்ளாது” என்றார். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில், அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த ஹைதராபாத் எம்.பி ஒவைஸி கூறியதாவது: ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும் ஷெபாஸ் ஷெரீப் இது போல் முறையற்ற வகையில் பேசக் கூடாது. இதுபோன்ற பேச்சுக்கள் எல்லாம் இந்தியாவை பாதிக்காது. இந்தியாவிடம்…
சென்னை: போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிக்காக ரூ.276 கோடிக்கான ஒப்பந்தத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பாக கடந்த 13 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பாக சட்டவிரோதமாக நடைபாதை மற்றும் சாலையைமறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த கோரி தேன்மொழி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்: மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்…
மன அழுத்தம் என்பது நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகும், இது உங்கள் மனநிலையை மட்டுமல்ல, உங்கள் செரிமான ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. வேலை அழுத்தங்கள் முதல் வேகமான வாழ்க்கை முறைகள் வரை, மன அழுத்தம் குடல் பாக்டீரியாவின் மென்மையான சமநிலையை சீர்குலைக்கும், செரிமானத்தை மெதுவாக அல்லது துரிதப்படுத்தும், மேலும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்) அல்லது அமில ரிஃப்ளக்ஸ் போன்ற நிலைமைகளை கூட மோசமாக்கும். குடல் மற்றும் மூளை குடல்-மூளை அச்சு வழியாக நெருக்கமாக தொடர்பு கொள்கின்றன, அதாவது மனதில் உள்ள மன அழுத்தம் குடலில் உடல் ரீதியான பதில்களைத் தூண்டும். இந்த இணைப்பைப் புரிந்துகொள்வது செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு இரண்டையும் நிர்வகிக்க முக்கியமானது. நடைமுறை உத்திகளைக் கடைப்பிடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஆரோக்கியமான குடலை ஆதரிக்கவும் உதவும்.எப்படி குடல்-மூளை இணைப்பு செரிமானம் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதுஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங்கின் கூற்றுப்படி, செரிமான மற்றும் மன ஆரோக்கியத்தில் குடல்-மூளை…
புனே: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டன் நிகழ்ச்சியில் பேசும்போது, “ஒரு முறை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு முஸ்லிமை தாக்கினோம். அது மகிழ்ச்சியாக இருந்தது என சாவர்க்கர் நூலில் குறிப்பிட்டுள்ளார்” என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாவர்க்கர் வம்சாவளியைச் சேர்ந்த சத்யாகி சாவர்க்கர் ராகுல் காந்தி மீது புனே நகரில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், “மனுதாரர் நாதுராம் கோட்சேவின் வம்சாவளி ஆவார். எனவே மனுதாரரால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கூறி புனே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், பொன்னேரி – கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 19 மின்சார ரயில்களின் சேவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு ஆக.14, 16, 18 ஆகிய தேதிகளில் காலை 10.30, முற்பகல் 11.35 மணி, சென்னை சென்ட்ரல் -சூலூர்பேட்டைக்கு காலை 10.15, நண்பகல் 12.10, மதியம் 1.05, சூலூர்பேட்டை – சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1.15, பிற்பகல் 3.10, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.40, நண்பகல் 12.40, கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரைக்கு காலை 10.55, கும் மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரலுக்கு நண்பகல் 12.00, பிற்பகல் 2.30, 3.15, சூலூர்பேட்டை – நெல்லூருக்கு பிற்பகல் 1.15, நெல்லூர் – சூலூர்பேட்டைக்கு மாலை 6.45 மணிக்கு…
உங்கள் சொந்த தலைமுடியிலிருந்து தயாரிக்கப்பட்ட பேஸ்டுடன் உங்கள் பல் துலக்குவதை கற்பனை செய்து பாருங்கள், இது ஒரு நகைச்சுவையான DIY ஸ்டண்ட் அல்ல, ஆனால் பல் சேதத்தை சரிசெய்ய தீவிரமான, அறிவியல் ஆதரவு தீர்வாக. முடி, தோல் மற்றும் கம்பளி ஆகியவற்றில் காணப்படும் கடினமான புரதமான கெரட்டின், உமிழ்நீரில் உள்ள தாதுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது பல் பற்சிப்பி உண்மையில் பிரதிபலிக்கவும் மீண்டும் உருவாக்கவும் முடியும் என்பதை லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிப்புகள் சக மதிப்பாய்வு செய்யப்பட்டு மேம்பட்ட சுகாதாரப் பொருட்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், நாம் வழக்கமாக தரையில் இருந்து துடைக்கும் ஒரு பொருள் அல்லது தொட்டியில் டாஸ் செய்வது துவாரங்களைத் தடுப்பதற்கும், ஆரம்ப சிதைவை மாற்றியமைப்பதற்கும், அன்றாட உடைகள் மற்றும் கண்ணீரிலிருந்து பற்சிப்பியைப் பாதுகாப்பதற்கும் திறவுகோலைக் கொண்டிருக்கலாம். இன்னும் உற்சாகமாக, இந்த முறை தற்போது பல பல் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் நச்சு பிளாஸ்டிக் பிசின்களை மாற்றக்கூடும்,…
புதுடெல்லி: “காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்றுள்ளது சட்டவிரோதம் இல்லையா?” என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவை தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அளிக்கும்படி ராகுல் காந்தியிடம் கேட்டுள்ளது. இந்நிலையில், பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 1983-ம் ஆண்டுதான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெற்றுள்ளார். அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலிலேயே சோனியா காந்தி பெயர் இடம்பெற்றது. அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு…
சென்னை: மாநிலக் கல்விக் கொள்கையானது 21-ம் நூற்றாண்டின் சவால்களை கையாள்வதற்கேற்ப திறனுள்ள மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வழிகாட்டியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல்: மாநில கல்விக் கொள்கையின் தற்போதைய தேவை மற்றும் நோக்கம் என்ன? – முதல்முறையாக மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளோம். தற்போதைய நவீன காலகட்டத்தில் பல்வேறு மாற்றங்களை காணமுடிகிறது. அறிவியல் உட்பட அனைத்து துறைகளிலும் புதிய அம்சங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல், உலகளவிலும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் மாறிவருகின்றன. தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரோபோட்டிக்ஸ் போன்றவை அனைத்து துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நாம் இவ்வளவு காலம் செய்துவந்த விஷயங்களை மிக விரைவாகவும், திறம்படவும் செய்து சவாலாக திகழ்கின்றன. அதற்கேற்ப பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியானது அடுத்த 20 ஆண்டுகளுக்கு பின்னரும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். வளரும் தொழில்நுட்பங்கள், மாறிவரும்…
விழுப்புரம்: தனியார் பள்ளி வகுப்பறையில் திடீரென பிளஸ்-1 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. விழுப்புரம் மேல் தெருவைச் சேர்ந்தவர் குமார் மனைவி மகேஸ்வரி. கிராம உதவியாளர். இவரது மகன் மோகன்ராஜ்(16), திருவிக வீதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் தினமும் காலை 7 மணிக்கு நடைபெறும் சிறப்பு வகுப்பில் மாணவர் மோகன்ராஜ் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக திடீரென மயங்கி விழுந்த மோகன்ராஜ் மயங்கி கீழே விழுந்தார். தகவலறிந்து பள்ளிக்குச் சென்ற தாயார் மகேஸ்வரி, மகனை நேருஜி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் மாணவரைப் பரிசோதித்தபோது, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். புத்தக சுமை…