Author: admin

சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் திருத்துதல் பணிக்கு ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கிறிஸ்துவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18-ம் தேதியும், ஈஸ்டர் ஏப்ரல் 20-ம் தேதியும் கொண்டாடப்படவுள்ளன. இதற்கு இடைபட்ட ஏப்ரல் 19-ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெறவிருக்கிறது. இதனால் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையை உணர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இது ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறந்த முறையில் கொண்டாட உதவும். மேலும்,…

Read More

லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000+ ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் கே.எல்.ராகுல். செவ்வாய்க்கிழமை அன்று லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் படைத்தார். நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுல் விளையாடி வருகிறார். தனது 130-வது ஐபிஎல் இன்னிங்ஸில் 5,000+ ரன்களை அவர் எட்டினார். இதற்கு முன்பு 135 ஐபிஎல் இன்னிங்ஸில் 5,000+ ரன்களை எட்டியிருந்தார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். தற்போது வார்னர் சாதனையை ராகுல் முந்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000+ ரன்களை கடந்த 8-வது பேட்ஸ்மேனாக ராகுல் அறியப்படுகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 8,326 ரன்களுடன் கோலி முதலிடத்தில் உள்ளார். லக்னோ உடனான ஆட்டத்தில் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார் ராகுல். இதுவரை ஹைதராபாத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளில் ராகுல் விளையாடி உள்ளார். தற்போது டெல்லி அணிக்காக…

Read More

நேபிடா: பர்மிய புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு மியான்மர் ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கி சிறையில் அடைக்கப்பட்டார். மியான்மர் தற்போது உள்நாட்டு போரை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இங்கு கடந்த மாதம் 28-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 3,725 பேர் உயிரிழந்தனர். பாரம்பரிய கட்டிடங்கள் எல்லாம் இடிந்தன. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் விரைவில் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என ராணுவத் தலைவர் உறுதியளித்துள்ளர். இந்நிலையில் மியான்மரில் பர்மிய புத்தாண்டு திங்யான் கடந்த 13-ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. மியான்மரில் புத்தாண்டு விடுமுறையில் சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு, அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு…

Read More

தென்காசி: தென்காசியில் உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசியில் உள்ள உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் கடந்த ஓராண்டாக நடைபெற்ற திருப்பணி வேலைகள் நிறைவடைந்து, நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இக்கோயிலை கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னர் வழிபாட்டுடன் கடந்த 3-ம் தேதி குடமுழுக்கு விழா பூஜைகள் தொடங்கின. 4-ம் தேதி மாலையில் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 5-ம் தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் காலையில் விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜை, பரிவார யாகசாலை, கடம் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை 3 மணிக்கு…

Read More

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நானி நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ‘ரெட்ரோ’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய படங்கள் மே 1-ம் தேதி வெளியாக உள்ளன. இதன் இரண்டு படங்களையும் விளம்பரப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது படக்குழு. இதனிடையே, நானி படமொன்றை இயக்க கார்த்திக் சுப்பராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனை நானி அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் படம் தொடர்பாக நானி, “எனக்கு கார்த்திக் சுப்பராஜின் இயக்கம் ரொம்பவே பிடிக்கும். அவருடைய ‘ரெட்ரோ’ படமும் மே 1-ம் தேதி வருகிறது. இரண்டு படங்களுமே பெரும் வெற்றியடையும் என நம்புகிறேன். எனக்கு கார்த்திக் சுப்பராஜின் படங்கள் மற்றும் அவற்றை கையாளும் விதம் ரொம்பவே பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக சில கதைகளும் பேசி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Read More

சென்னை: ஆளுநருக்கு எதி​ரான வழக்​கில் கிடைத்​திருக்​கும் தீர்ப்பு என்​பது தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தால் மாநிலங்​களுக்கு பெற்​றுத்​தந்​திருக்க கூடிய மாபெரும் விடு​தலை என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றி அனுப்​பிய 10 சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் நிலு​வை​யில் வைத்​திருந்த நிலை​யில் அதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்​தது. இந்த வழக்​கில் மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவே​தி, பி.​வில்​சன் ஆகியோர் வழக்​காடி வெற்​றியை பெற்​றுத் தந்​தனர். இவர்​களுக்​கான பாராட்டு விழா சென்னை கிண்​டி​யில் நேற்று நடை​பெற்​றது. முதல்​வர் ஸ்டா​லின் தலைமை வகித்​து, வழக்​கறிஞர்​களுக்கு பாராட்டு தெரி​வித்​து, பொன்​னாடை அணி​வித்​து, செங்​கோல்​களை நினைவு பரி​சாக வழங்கி கவுர​வித்​தார். விழாவுக்கு வர இயலாத முகுல் ரோஹ்தகிக்​கும் முதல்​வர் வாழ்த்து தெரி​வித்​தார். தொடர்ந்து அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வரவேற்​புரை​யாற்றி முதல்​வர் ஸ்டா​லினுக்​கு, அரசி​யலமைப்பு சட்​டத்​தின் முகப்பு உரையை, நினைவு பரி​சாக வழங்​கி​னார்.…

Read More

குஜராத்தின் அகமதாபாத் மற்றும் சூரத் நகரில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தை சேர்ந்த 550-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர். இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களை கண்டுபிடித்து வெளியேற்றும் பணியில் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையாக குஜராத்தில் 550-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அகமதாபாத்தில் நேற்று அதிகாலை 3 மணி முதல் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குஜராத் காவல் துறையின் குற்றப்பிரிவு, சிறப்பு நடவடிக்கை குழு (எஸ்ஓஜி), ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு என பல்வேறு பிரிவுகள் ஒருங்கிணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டன. இதில் 450-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுமார் 400 பேர் சண்டோலா பகுதியில் பிடிபட்டனர். குஜராத் உள்துறை அமைச்சர், மாநில காவல் துறை இயக்குநர் மற்றும் அகமதாபாத் காவல் ஆணையர்…

Read More

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலக்கட்டத்திலும் வானொலி அதன் தனித்தன்மையை இழக்காமல் வலம் வந்து கொண்டிருக்கிறது. வானொலி மூலம் அறியும் செய்திகளுக்கு என்றே உலகம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருக்கிறார்கள். வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ ‘பிப்ரவரி 13’யை உலக வானொலி நாளாக 2011 இல் அறிவித்தது. 2012ஆம் ஆண்டு முதல் ‘உலக வானொலி நாள்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1946இல் ஐ.நா. வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 13, உலக வானொலி நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக வானொலி நாளில் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட கருப்பொருளில் விவாதங்களும் நிகழ்வுகளும் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. அந்த நாளில் உள்ளூர் வானொலி நிலையங்களை ஊக்குவிப்பது; பன்னாட்டு வானொலி நிலையங்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்துவது போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன. ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்ட வானொலி, பொழுதுபோக்கின் முகமாக மாறியதே அதன்…

Read More

சென்னை: 2026-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: நம்நாட்டில் ஆண்டுதோறும் கல்வி, கலை, மருத்துவம், பொது விவகாரங்கள், அறிவியல், இலக்கியம், விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2026-ம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் எனும் இணையதளத்தில் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாமல் அனைவரும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர். இந்த விருதுகளுக்கான பரிந்துரைகளை நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இணைய வழியில் அனுப்பலாம். விளம்பரத்துக்காக அல்லாமல் அந்தந்த துறைகளுக்கு…

Read More

ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பித்தது முதல் எத்தனை சிக்சர்கள், எத்தனை பவுண்டரிகள் என்பதையெல்லாம் பெருமை பொங்க காட்டி வருகிறது. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் சீரழிந்து வரும் கிரிக்கெட்டின் இன்னொரு இன்றியமையாத பங்கான ஃபீல்டிங் தவறுகளின் எண்ணிக்கையையும், கேட்ச்கள் விடப்பட்டதன் எண்ணிக்கையையும் காட்டினால் கூட அத்தொடருக்கு ஒரு நடுநிலைத் தன்மை கிடைத்து விடும். ஐபிஎல் தொடர்களில் விடப்படும் கேட்ச்கள் எண்ணிக்கை தொடருக்குத் தொடர் அதிகரித்து வந்தவண்ணமே உள்ளன. கிரிக் இன்போ தகவல்களின் படி 2025 சீசனில் 431 கேட்ச் வாய்ப்புகளில் 103 கேட்ச்கள் நழுவ விடப்பட்டு தரைத் தட்டியுள்ளன. அதாவது, 76% என்று கேட்சிங் திறமை குறைந்திருப்பதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ புள்ளி விவரம் சுட்டுகிறது. இந்த சீசனில் 2 மேட்ச்களில் 9 கேட்ச்கள் ட்ராப் செய்யப்பட்டுள்ளது, லீகின் தரமதிப்பைச் சரித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி இடையேயான போட்டி மற்றும் பஞ்சாப் கிங்ஸ்- சிஎஸ்கே மேட்ச் இரண்டிலும்தான் இந்த அதிகப்படியான கேட்ச் ட்ராப்கள் நடந்துள்ளன.…

Read More