சென்னை: மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் நவீன சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், போரில் காயமடைந்து நடக்க முடியாத ராணுவத்தினர் ஆகியோர் பயன்பெறும் வகையில் உலக தரத்தில், எடை குறைவான ‘ஒய் டி ஒன்’ என்ற நவீன சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் வடிவமைத்துள்ளனர். டிரிம்பிள் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் இதற்கான ஆராய்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ மருத்துவ பணிகள் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் அனுபம் இந்த நாற்காலியை அறிமுகப்படுத்தினார். அவர் பேசும்போது, ‘‘மாற்றுத்திறனாளிகள், போரில் கால்கள் பாதிக்கப்பட்ட ராணுவத்தினருக்கு ஐஐடி உருவாக்கியுள்ள இந்த நவீன சக்கர நாற்காலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஐஐடியில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக கிராமப்புற மக்கள், தொலைதூர பகுதியில் வசிப்போருக்கு பயன்பட…
Author: admin
சென்னை: சென்னையில் அக்டோபர் 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி(டபிள்யூடிஏ) நடைபெறவுள்ளது. அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த மகளிர் டென்னிஸ் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 32 வீராங்கனைகளும் (ஒற்றையர் பிரிவு), இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் பங்கேற்று விளையாட உள்ளனர். போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு 250 புள்ளிகள் வழங்கப்படும். சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ.2.40 கோடியாக உள்ளது. இந்நிலையில் போட்டி குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக அரசு இந்த ஆண்டு சென்னையில் டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டியை நடத்த ரூ.12 கோடியை ஒதுக்கியுள்ளது.…
சென்னை: ‘இந்துத்துவ சனாதன சக்திகளின் திட்டப்படி நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கும் என்.சி.இ.ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய கல்விக் கொள்கை (NEP) மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF) ஆகியவற்றின் கீழ் பள்ளிக் கல்விக்கான புதிய புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி தயாரித்துள்ளது. என்.சி.இ.ஆர்.டி (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் – NCERT ) வெளியிட்ட 7 ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தானிய ஆட்சி பற்றிய எந்தக் குறிப்பும் அளிக்கப்படவில்லை. இதுவரை இந்தப் புத்தகத்தில் முகலாயப் பேரரசு மற்றும் டெல்லி சுல்தானியர்கள் குறித்து சுருக்கமான பாடங்கள் இருந்தன. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியலுக்கான புதிய புத்தகத்தில் ஐந்து தலைப்புகளின் கீழ் 12 பாடங்கள் உள்ளன. அதன் முதல் தலைப்பு ‘இந்தியாவும் உலகமும்: நிலமும்…
திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் கிராமத்தில் திறந்தவெளியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் மற்றும் சேமிப்பு கிடங்கை, 10 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தி மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் உள்ளன. இதில், கரும்பு, நெல் மற்றும் பல்வேறு காய்கறிகள் சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், விவசாயிகள் பெரும்பாலும் நெற் பயிரை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இவ்வாறு பயிரிடப்படும் நெல் அறுவடைக்கு பிறகு தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் டிபிசி எனப்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகளில் பத்திரப்படுத்தி லாரிகள் மூலம் மொத்த சேமிப்பு கிடங்குக்கு அனுப்பப்படுகிறது. இதற்காக, கீரப்பாக்கம்…
லாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா வீழ்த்தினார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் லாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்றில் பிரக்ஞானந்தாவுடன், உலக சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்றவரான மேக்னஸ் கார்ல்சன் மோதினார். இந்த சுற்றில் 39-வது நகர்த்தலின் போது கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. இதன் மூலம் ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்தச் சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்டுசட்டோரோவ், ஜவோகிர் சிந்தரோவ் ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் கால் இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது.
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி, அங்கு நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு பேருந்து சேவைகளை தொடங்கிவைத்தார். திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட புதிய பேருந்து முனையத்தை மே 9-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பேருந்து முனையம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மாநில நகராட்சி நிர்வவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேருந்து முனையத்தில் நேற்று பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கி, அவர்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் ஆட்சியர் வே.சரவணன், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகர காவல் ஆணையர் என்.காமினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தது: மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து முனையத்தில் செய்யப்பட்டுள்ளது.…
கட்டுரை தினமும் மூன்று மற்றும் பல சிறிய உணவுகளை சாப்பிடுவதற்கான விவாதத்தை ஆராய்கிறது. மூன்று உணவுகள் கலாச்சார விதிமுறைகளுடன் ஒத்துப்போகின்றன மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய இரவு நேர உணவைத் தடுக்கலாம், சில ஆய்வுகள் அடிக்கடி, சிறிய உணவு இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தலாம், குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு. இறுதியில், சிறந்த உணவு அதிர்வெண் தனிப்பட்ட தேவைகள் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. ஒரு நாளில் உங்களுக்கு எத்தனை உணவு இருக்கிறது? 3, 4, அல்லது 6? ஆம், சில உணவுத் திட்டங்களில் நாள் முழுவதும் உணவை ஆறு சிறிய உணவுகளாகப் பிரிப்பது அடங்கும். இந்த அணுகுமுறை நன்மை பயக்கும், அல்லது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க முடியுமா? ஒரு நாளைக்கு மூன்று உணவுகளுக்கு மேல் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிப்பதா என்பதைப் பார்ப்போம். ஒரு நாளைக்கு மூன்று உணவு பாரம்பரியமாக, பெரும்பாலான மக்கள் ஒரு நாள்-நாள்…
சென்னை: ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதன் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. அதனை பயனர்கள் கிளைம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் திகழ்கிறது. இந்நிலையில், அந்நிறுவனம் தனது மொபைல், பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு கட்டணமின்றி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் மற்றும் Perplexity இடையிலான பார்ட்னர்ஷிப் மூலம் இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வெப் சேர்ச் சார்ந்து உரையாடல் பாணியிலான பதில்களை Perplexity வழங்கி வருகிறது. பயனர்களின் தேடலை வெறும் லிஸ்டிங் பாணியில் இல்லாமல் நேரடியாக, ஆழமாக ஆய்வு செய்யப்பட்ட வகையில் பதில்கள் இதில் கிடைக்கிறது. Perplexity-ன் அடிப்படை வெர்ஷன் அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக கிடைக்கிறது. அதே நேரத்தில் Perplexity புரோ பயன்பாடு மேம்பட்ட அம்சத்துடன் தகவல்களை தருகிறது. அதுவும் இந்த தகவல்கள் ரியல் டைமில் இருக்கும். இந்நிலையில்தான் Perplexity புரோவை…
சென்னை: கடலூரில் ரயில் மோதி 3 குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை தனியார் பள்ளி வேன் கடக்க முயன்றபோது, விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதியது. இதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சம்பவம் நடைபெற்ற இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க அனுமதி அளித்தும், மாவட்ட ஆட்சியரகம் ஒப்புதல் வழங்காததால் கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெறவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் விபத்து தொடர்பாக 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ரயில்வே வாரியத் தலைவர், தமிழக அரசின் தலைமைச் செயலர்,…
சென்னை: இந்திய அணியில் கருண் நாயருக்கு மாற்றாக நம்பிக்கை தரும் இளம் வீரர் சாய் சுதர்ஷனை ஆட வைக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா விருப்பம் தெரிவித்துள்ளார். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் இந்த தொடரில் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி, ரன் சேர்க்க தவறிய கருண் நாயருக்கு மாற்றாக சாய் சுதர்ஷனை விளையாட வைக்கலாம் என தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார். 8 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு கருண் நாயர் இந்திய அணியில் இந்த தொடரில் இடம்பிடித்தார். இந்த தொடரில் ஆறு இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 131 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். சாய் சுதர்ஷன் இந்த தொடரில்…
