ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ’டி.என்.ஏ’ திரைப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான படம் ‘டி.என்.ஏ’. ஜூன் 20-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படம் வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்டுவிட்டது. தற்போது ஜூலை 19-ம் தேதி ‘டி.என்.ஏ’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நிமிஷா சஜயன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், சேத்தன் உள்ளிட்ட பலர் அதர்வாவுடன் நடித்திருந்தார்கள். இதற்கு 5 புதிய இசையமைப்பாளர்கள் ஓவ்வொரு பாடலை உருவாக்கி இருந்தார்கள். ‘டி.என்.ஏ’ படத்தின் பின்னணி இசையினை ஜிப்ரான் அமைத்திருந்தார். திரையரங்குகளுக்கு வந்து படம் பார்த்த பலரும் இப்படத்தினைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. ஜூலை 19-ம் தேதி ஓடிடி வெளியீட்டுப் பிறகு இணையத்தில் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கையில்…
Author: admin
சென்னை: கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியை திட்டமிட்டு அவமதிப்பதா? என்றும் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் மது மற்றும் போதை வணிகத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட காரை பறித்து, வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து செல்லும் நிலையை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையாகவும், கடமை உணர்வுடனும் செயல்பட்டதற்காக ஒரு காவல் அதிகாரியின் வாகனத்தைப் பறித்து அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட சுந்தரேசன், விதிகளை மீறி செயல்பட்டதாக இதுவரை 23 பார்களை மூடி முத்திரையிட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 1200க்கும் கூடுதலான வழக்குகளை பதிவு செய்திருக்கும் சுந்தரேசன் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறைகளிலும் அடைத்துள்ளார். காவல்துறை உயரதிகாரிகள், ஆளும்கட்சி நிர்வாகிகளின் பரிந்துரையையும்…
குறைந்த கார்ப் உணவைப் பின்பற்றும் பலர் கேரட், பாப்கார்ன் மற்றும் தர்பூசணி போன்ற சத்தான உணவுகளை தவறாகத் தவிர்த்து, கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் என்று நினைத்து. இருப்பினும், இந்த உணவுகள் கார்ப்ஸில் குறைவாகவும், செரிமானம், எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. உங்கள் உணவில் குடிசை சீஸ், பச்சை பட்டாணி, குழந்தை சோளம் மற்றும் எடமாம் போன்ற குறைந்த கார்ப் விருப்பங்கள் உட்பட நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் தசை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். இந்த ஆரோக்கியமான உணவுகள் சுவை அல்லது ஊட்டச்சத்தை தியாகம் செய்யாமல் சீரான, ஆரோக்கியமான உணவை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு ஏற்றவை. 7 குறைந்த கார்ப் உணவுகள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்தது1. கேரட்கேரட் பெரும்பாலும் இயற்கையான இனிப்பு காரணமாக குறைந்த கார்ப் உணவுகளில் தவிர்க்கப்படுகிறது. இருப்பினும், அவை குறைந்த கார்ப் உணவுக்கு ஒரு சிறந்த காய்கறி.…
ஆகஸ்ட் வரை வானத்தை ஒளிரச் செய்வதற்கான வானக் காட்சி (படம்: எக்ஸ்/ கொலராடான்) ஆண்டு பெர்சீட் விண்கல் மழை ஜூலை 17 அன்று உதைக்கப்பட்டது, ஆகஸ்ட் 23 வரை தொடரும் என்று நாசா தெரிவித்துள்ளது. நீண்ட, வண்ணமயமான தடங்களை விட்டு வெளியேறும் பிரகாசமான, விரைவான விண்கறிகளுக்கு பெயர் பெற்ற பெர்செய்ட்ஸ் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வான நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.அது ஏன் நடக்கிறது பூமி எஞ்சியிருக்கும் குப்பைகளின் பாதை வழியாக நகரும்போது இந்த கண்கவர் காட்சி நடைபெறுகிறது வால்மீன் 109 பி/ஸ்விஃப்ட்-டட்டில். சிறிய துகள்கள் – மணல் ஒரு தானியத்தை விட பெரியவை அல்ல – பூமியின் வளிமண்டலத்தில் எரிகின்றன, இரவு வானத்தை ஒளிரச் செய்யும் ஒளியின் அற்புதமான கோடுகளை உருவாக்குகின்றன.அது எப்போது, எங்கே தெரியும் ஆகஸ்ட் 12 இரவு ஆகஸ்ட் 13 ஆம் தேதி அதிகாலையில் இந்த மழை உச்சமாக அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த நிலைமைகளின் கீழ், ஸ்கை வாட்சர்கள்…
நாசிக்: மகாராஷ்டிராவில் கார், பைக் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், டிண்டோரி நகருக்கு அருகே புதன்கிழமை நள்ளிரவு சாலையில் சென்று கொண்டிருந்த காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதையடுத்து இரு வாகனங்களும் அருகில் இருந்த கால்வாயில் விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து சம்வப இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்ற போலீஸாரும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 7 பேரை சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘பராசக்தி’. இதன் படப்பிடிப்புக்கு இடையே தான் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் ஏற்பட்ட சிக்கலால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனை முன்வைத்து பல்வேறு தகவல்களும் வெளிவரத் தொடங்கின. தற்போது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து நடிகர்களிடமும் தேதிகள் வாங்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இன்று தொடங்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சிவகார்த்திகேயன் சென்றிருக்கிறார். சுதா கொங்காரா இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது.
கோவை: ‘சுவெச் சர்வெக்ஷான்’ தரவரிசைப் பட்டியல் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில், தேசிய அளவில் 28-வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் கோவை மாநகராட்சி பிடித்துள்ளது. மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பில், கடந்த 2014-ம் ஆண்டு ‘தூய்மை பாரதம்’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உள்ளாட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது தொடர்பான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசின் சார்பில் ‘சுவெச் சர்வெக்ஷான்’ 2024-25-ம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்புப் பணிகள் குறித்த சர்வே நாடு முழுவதும் எடுக்கப்பட்டது. தொடர்ந்து அதன் முடிவுகள் இன்று (ஜூலை 17) வெளியிடப்பட்டன. சுவெச் சர்வெக்ஷான் 2024-25 தேசிய தூய்மை தரவரிசைப் பட்டியலில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுள்ள நகரங்களுக்கான பிரிவில், கோவை மாநகராட்சி தேசிய அளவில் 28-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடமும்…
உங்கள் சருமத்தை பிரகாசமாக்க இயற்கை வழிகளைத் தேடுகிறீர்களா? மஞ்சள், எலுமிச்சை சாறு, பப்பாளி, தேன், வெள்ளரி மற்றும் கற்றாழை போன்ற பொருட்கள் ஒளிரும், ஆரோக்கியமான சருமத்தை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்றவை. ஆக்ஸிஜனேற்றிகள், என்சைம்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த, இந்த பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகள் தோல் தொனியை குறைக்கவும், இருண்ட புள்ளிகளைக் குறைக்கவும், இன்னும் தோல் அமைப்பை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. வழக்கமான பயன்பாடு முகப்பரு, அவிழ்த்து துளைகளை குறைத்து, நீரேற்றத்தை மேம்படுத்தலாம். உருளைக்கிழங்கு சாறு, தக்காளி மற்றும் ஓட்மீல் போன்ற பொருட்கள் மென்மையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன, அவை எல்லா தோல் வகைகளுக்கும் ஏற்றதாக இருக்கும். ஒளிரும் தோலுக்கான இந்த இயற்கையான முக முகமூடிகள் கடுமையான இரசாயனங்களிலிருந்து விடுபடுகின்றன, வேதியியல் இல்லாத தோல் பராமரிப்பு வழக்கத்தை வழங்குகின்றன, மேலும் அவை மலிவு விலையில் உள்ளன. Diy தோல் பிரகாசம் மற்றும் வயதான எதிர்ப்பு நன்மைகளுக்கான முகமூடிகள்1. முகமூடியுக்கு மஞ்சள் மற்றும் எலுமிச்சை…
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்து பேஸ்புக்கில் மெட்டா வெளியிட்ட தானியங்கி மொழிபெயர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அண்மையில் பெங்களூருவில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் சரோஜா தேவியின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பான பதிவை முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் வெளியிட்டிருந்தது. அதில் மறைந்த நடிகை சரோஜா தேவியின் உடலுக்கு முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார்’ என்று கன்னடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த பதிவை தானியங்கி வசதி மூலம் மொழிபெயர்த்த மெட்டா, ‘கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று காலமானார்’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் சித்தராமையா. “மெட்டா தளங்களில் பதிவிடப்படும்…
சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 650 பூங்காக்களை ரூ.75 கோடியில், 3 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணி தனியாரிடம் வழங்கப்படடுள்ளது. சென்னை மாநகராட்சியில் 2021-ம் ஆண்டுக்கு முன்பு 704 பூங்காக்களும், 610 விளையாட்டு அரங்குகளும் இருந்தன. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.81 கோடியில் 204 பூங்காக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. ரூ.24 கோடியில் 37 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் தற்போது 908 பூங்காக்களும், 724 விளையாட்டு அரங்குகளும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரூ.8 கோடியில், 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2025- 26 நிதியாண்டில் ரூ.60 கோடியில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. 200-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் ரூ.30 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன. மாநகராட்சி பூங்காக்கள் இதற்கு முன்பு தனியார் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. 6 மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு ஒப்பந்தம் முடிந்த நிலையில், மீண்டும் டெண்டர் கோரப்பட்டு, தற்போது ரூ.75 கோடி செலவில், 650 பெரிய…
