தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர், திருமங்கையாழ்வார் நகர், தாங்கல் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி நேற்று தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள 102 குடும்பங்கள், திருநீர்மலை 31-வது வார்டு திருமங்கையாழ்வார்புரம், சர்வே எண் 234/2, 272 ஆகியவற்றில் உள்ள குடியிருப்புகள், பொழிச்சலூர் ஞானமணி நகர் சர்வே எண் 288/2ல் மறு குடியமர்வு செய்யப்பட்ட 98 குடும்பங்கள், திரிசூலம் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் ஆகியோருக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: ஒருபுறம் அரசு பட்டா கொடுத்து வருகிறது. மறுபுறம், தமிழகம் முழுவதும் பட்டா கேட்டு மீண்டும் மீண்டும் மக்கள் மனு கொடுத்து வருகின்றனர். அதிகாரிகளின் அலட்சியம், வருவாய்த் துறை ஆவணங்களில் காலத்துக்கேற்ப மாற்றங்கள் செய்யாததே இதற்கு காரணம். வருவாய்த் துறை…
Author: admin
ஒரு சமீபத்திய ஆய்வு, தயவின் செயல்களில் ஈடுபடுவது அறிவாற்றல் வீழ்ச்சியை கணிசமாக மெதுவாக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. ஆஸ்டின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாசசூசெட்ஸ் போஸ்டன் பல்கலைக்கழகம் வழக்கமான தன்னார்வத் தொண்டு அல்லது மற்றவர்களுக்கு உதவுவது அறிவாற்றல் வயதானதை 15-20%குறைக்கிறது என்று கண்டறிந்தனர். உங்கள் வயதில், உங்கள் மூளை மெதுவாக இருக்கும். இது சிக்கல் தீர்க்கும், கவனம் மற்றும் நினைவகம் போன்ற எளிய அன்றாட பணிகளை ஒரு சவால் செய்கிறது. எனவே, அறிவாற்றல் வீழ்ச்சியைத் தடுக்க முடியுமா? அல்லது அதை மெதுவாக்குகிறீர்களா? சரி, அறிவியலின் படி, ஆம், அது சாத்தியம். அறிவாற்றல் வீழ்ச்சியை நீங்கள் மெதுவாக்கலாம். இல்லை, அதை அடைய விலையுயர்ந்த கூடுதல் அல்லது சிகிச்சைகளுக்கு நீங்கள் செலவிட வேண்டியதில்லை. உண்மையில், இதற்கு கிட்டத்தட்ட பணம் தேவையில்லை. ஒரு எளிய தினசரி செயல் அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறைக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஆஸ்டின் மற்றும் மாசசூசெட்ஸ் போஸ்டன் பல்கலைக்கழகத்தில்…
புதுடெல்லி: வீடுதோறும் மூவர்ணக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: வீடுதோறும் மூவர்ணக்கொடி பிரச்சாரத்தின் கீழ் எனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினேன். பிரதமர் மோடி தலைமையில் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரம் இன்று தேசத்தை ஒற்றுமையின் இழையில் பிணைத்து, தேசபக்தியை வலுப்படுத்தும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் தியாகம், தவம் மற்றும் அர்ப்பணிப்பு மூலம் பெற்ற சுதந்திர இந்தியாவை மேம்படுத்த நாட்டின் 140 கோடி மக்களும் உறுதியாக உள்ளனர் என்பதை இந்தப் பிரச்சாரம் நிரூபிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அந்நகலை இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 10-ம் வகுப்பு துணை தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. அத்தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை ஆகஸ்ட் 14 (இன்று) பிற்பகல் முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்போது, தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப் பத்தின் இரு நகல்கள் எடுத்து ஆகஸ்ட் 18 மற்றும் 19-ம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக…
புதுடெல்லி: 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) அனுமதி வழங்கியுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அகமதாபாத்தில் போட்டியை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை பெறும் ஏலத்துக்கு விண்ணப்பிப்பதற்கு வரும் ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும். இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த அனுமதியை வழங்கி உள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு வழங்கும். காமன்வெல்த் விளையாட்டு இயக்குநர் டேரன் ஹால் சமீபத்தில் அகமதாபாத்தில் ஆய்து மேற்கு குஜராத் மாநில அரசுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இந்த மாத இறுதியில் பெரிய குழு ஒன்று அகமதாபாத் நகரத்தில் ஆய்வு செய்ய உள்ளது. 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப்…
சென்னை: ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 27.63 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் விருதுநகர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவாரூர், மதுரை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களிலும், சென்னையில் 2 மண்டலங்களிலும் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், சென்னையில் இதர 13 மண்டலங்களிலும், புதிதாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம், வேலூர் என மொத்தம் 7 மாவட்டங்களுக்கு இந்த திட்டம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்தை சென்னை ஷெனாய் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில், 12 வகையான நோய் பாதிப்புகளை தடுப்பதற்கு 11 வகையான…
பார்வை மாற்றங்கள் நீரிழிவு ஆண்கள் பொதுவாக அனுபவிக்கும் பொதுவான அறிகுறியாகும். நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் தங்கள் கண்களில் திரவ இயக்கத்தை அனுபவிக்கிறார்கள், அது அவர்களின் லென்ஸ்கள் சிதைக்கிறது, இதனால் மங்கலான பார்வையை உருவாக்குகிறது. நீரிழிவு ரெட்டினோபதியின் நிலை மங்கலான பார்வையில் இருந்து உயர் இரத்த சர்க்கரை அளவிற்கு நீட்டிக்கப்பட்ட வெளிப்பாடு மூலம் உருவாகிறது. இது நீரிழிவு மனிதர்களின் கால்களிலும் கைகளிலும் கூச்ச உணர்வுகளுடன் உணர்வின்மையை உருவாக்குகிறது. உயர் இரத்த சர்க்கரை அளவிற்கு நீடித்த வெளிப்பாட்டிலிருந்து உடல் நரம்பு சேதத்தை உருவாக்குகிறது. இந்த அறிகுறிகளிலிருந்து ஆரம்ப லேசான உணர்வுகள் முழுமையான உணர்வின்மையை ஏற்படுத்துவதற்கு முன்பு கடுமையான அச om கரியமாக மாறும். மங்கலான பார்வை மற்றும் உணர்வின் அறிகுறிகள் நீரிழிவு தொடர்பான நரம்பு மற்றும் உறுப்பு சேதத்தைக் குறிக்கின்றன, இதற்கு முறையான மேலாண்மை மற்றும் கூடுதல் சேதத்தைத் தடுப்பதற்கு உடனடி மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது.ஆதாரங்கள்:https://www.medicinenet.com/diabetes_simptoms_in_men/article.htmhttps://www.lybrate.com/topic/diabeteshttps://www.medicalnewstoday.com/articles/311173https://www.webmd.com/diabetes/understandandand–dieapetes-simptorshttps://www.nhs.uk/conditions/type-2-dieabetes/simptoms/https://www.healthle.com/health/diabeteshttps://www.cdc.gov/diabetes/signs-simptors/index.htmlமறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ…
ஹூஸ்டனில் உள்ள ஒரு இந்திய மூல மருத்துவர் அவருக்கு எதிரான மருத்துவ மோசடி குற்றச்சாட்டுகளை தீர்க்க million 2 மில்லியன் செலுத்த ஒப்புக்கொண்டார். ஹூஸ்டனைச் சேர்ந்த இந்திய மூலமான வலி மருத்துவ மருத்துவரான டாக்டர் அஜய் அகர்வால், அவருக்கு எதிரான மருத்துவ மோசடி குற்றச்சாட்டுகளைத் தீர்க்க million 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்த ஒப்புக் கொண்டார் என்று அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. 2021 மற்றும் 2023 க்கு இடையில், 63 வயதான மருத்துவர் மெடிகேர் மற்றும் தொழிலாளர் திணைக்களத்தின் இழப்பீட்டுத் திட்டங்கள் போன்ற கூட்டாட்சி நிதியுதவிக்கு நிதியளித்தார், அவர் ஒருபோதும் செய்யாத அறுவை சிகிச்சை உள்வைப்புகளுக்காக. டாக்டர் அகர்வால் ஒரு நடைமுறைக்கு ஆயிரக்கணக்கான டாலர்களைப் பெற்றார், ஆனால் நோயாளிகளுக்கு எளிய சாதனங்களைப் பெற்றார், அதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. மற்றும் ஒரு மருத்துவமனை அல்லது அறுவை சிகிச்சை மையம் அல்ல, அகர்வாலின் கிளினிக்கில் நடைபெறப் பயன்படுத்தப்படும் அனைத்து சாதன வேலைவாய்ப்புகளும்.…
புவனேஸ்வர்: ஒடிசா எஸ்டி, எஸ்சி மேம்பாட்டுத் துறை ஆணையர் மற்றும் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், “அரசியலமைப்பின் 341-வது பிரிவில் அறிவிக்கப்பட்டபடி, பட்டியலின சமூகத்தினரை ஆங்கிலத்தில் எஸ்சி எனவும் ஒடியாவில் ‘அனுசுசித ஜாதி’ எனவும் குறிப்பிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் ஆணையர் மற்றும் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “ஹரிஜன் என்ற சொல் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளிலும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு https:tnmedicalselection.net என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் கடந்த ஜூலை 30-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. கடந்த 4-ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது கடந்த 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 16-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாணவருக்கு… இதற்கிடையே, அகில இந்திய முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. நீட் தேர்வில் 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்று தமிழக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த திருநெல்வேலி மாணவர் எஸ்.சூர்ய நாராயணன், அகில இந்திய அளவில் 27-வது இடம் பெற்றிருந்தார். அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அவருக்கு…