Author: admin

பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘தி ராஜா சாப்’. மாருதி இயக்கியுள்ள ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை, பியூப்பிள் மீடியா பேக்டரி, டில்லியை சேர்ந்த ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. “ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் படத்தை முடித்து வெளியிடுவது, நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் வெளிப்படைத் தன்மை உள்பட பல்வேறு விஷயங்களில் பியூப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் ஒப்பந்தத்தை மீறிவிட்டது. இதனால் இந்தப் படத்துக்காக நாங்கள் முதலீடு செய்த ரூ.218 கோடியை 18 சதவிகித வட்டியுடன் தர உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளது. இதனால் ‘த ராஜா சாப்’ படம் திட்டமிட்டபடி வெளிவருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Read More

சொத்து வரி முறைகேடு வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதால், சட்ட சிக்கல் காரணமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடிக்கு மேயர் இந்திராணி உள்ளாகியுள்ளார். மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் திடீர் திருப்பமாக திமுக மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைதாகியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திராணி மேயராக இருந்தாலும், இதற்கு முன்பு அரசியலில் இல்லை. இதனால் தனது கணவர் வழிகாட்டுதலோடு மாநகராட்சி நிர்வாகத்தை நடத்தி வந்தார். கட்சி ரீதியாக பொன்.வசந்த் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாக தலையிட முடியாத சூழல் நிலவியது. எனினும், இந்திராணி மேயராக பணியை தொடர்ந்தார். தற்போது பொன்வசந்த் கைதானதால், தொடர்ந்து மேயராக செயல்படுவதில் இந்திராணி பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. தனிநபராக மாநகராட்சி நிர்வாகத்தையும், அரசியல் அனுபவம் கொண்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மூத்த கவுன்சிலர்கள், மாநகர கட்சி நிர்வாகிகளை அவர் எதிர்கொள்வது சிரமம். அவர் தனிப்பட்ட முறையில்…

Read More

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அபராதம் விதித்தல் தொடர்பாக விளக்கம் கேட்டு கோவை மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருவதற்கு தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத்துறை சார்ந்த நிறுவனத்தினர் செலுத்தி வரும் வரியினங்கள் மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி என இருபிரிவுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தொழில்துறையினர் கூறி வரும் நிலையில் சமீப காலமாக புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்கத்தின்(டான்சியா) துணை தலைவர் சுருளிவேல், ‘டாக்ட்’ மாவட்ட தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம்…

Read More

ஊட்டச்சத்து நிபுணர் 4 மாதங்களில் 25 கிலோவை இழந்த 10 வழிகளை வெளிப்படுத்துகிறார், ‘எடை குறைப்பது இன்னும் அதிகமாக இருக்கும் என்பதற்கான கடினமான வழியைக் கற்றுக்கொண்டேன் ….’

Read More

புதுடெல்லி: நாடு பிரிவினையைச் சந்தித்தபோது எண்ணற்ற மக்கள் கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேச பிரிவினை நிகழ்ந்த ஆகஸ்ட் 14ம் தேதியை, பிரிவினை துயரத்தின் நினைவு தினமாக நாடு அனுசரித்து வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “நமது வரலாற்றின் அந்த துயரமான அத்தியாயத்தில் எண்ணற்ற மக்கள் அனுபவித்த திடீர் வன்முறையையும் வலியையும் நினைவுகூரும் வகையில், இந்தியா #PartitionHorrorsRemembranceDay ஐ அனுசரிக்கிறது. அவர்களின் மன உறுதியை போற்றும் நாளாகவும் இது அமைகிறது. கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொள்வதற்கான அவர்களின் திறனும், அத்தகைய ஒரு சூழலிலும் புதிதாகத் தொடங்குவதற்கான அவர்களின் தேடலும் போற்றுதலுக்குரியவை. பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி, குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளனர். நமது நாட்டை ஒன்றிணைக்கும் நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான நமது நீடித்த பொறுப்பை இந்த நாள் நினைவூட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்…

Read More

தெலங்கானா மாநில அரசு தடை செய்துள்ள சட்ட விரோத ஆன்லைன் விளையாட்டு செயலிகளை விளம்பரப்படுத்திய விவகாரத்தில், பண மோசடி நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அந்த விளம்பரங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, ராணா, பிரகாஷ் ராஜ், லட்சுமி மன்சு, நித்தி அகர்வால் உள்பட 29 திரை பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. அவர்களுக்கு சம்மனும் அனுப்பி இருந்தது. பிரகாஷ் ராஜ், விஜய தேவர கொண்டா, ராணா ஆகியோர் ஏற்கெனவே விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர். இதன் தொடர்ச்சியாக நடிகை லட்சுமி மன்சு அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் வாக்குமூலங்களை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

Read More

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் சுதந்​திர தினத்​தன்று மது விற்​பனை செய்​தால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். இது தொடர்​பாக வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சுதந்​திர தினம் நாளை (ஆக.15) கொண்​டாடப்​படு​கிறது. அன்று மது விற்​பனை செய்யக்​கூ​டாது என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி தமிழ்​நாடு மது​பான சில்​லறை விற்​பனை விதி​கள் மற்​றும் தமிழ்​நாடு மதுபானம் விதி​கள் ஆகிய​வற்​றின் கீழ் சென்னை மாவட்​டத்​தில் உள்ள அனைத்து டாஸ்​மாக், மது​பான சில்​லறை விற்​பனை கடைகள் மற்​றும் பார்​கள், உரிமம் பெற்ற கிளப் பார்​கள், ஓட்​டல் பார்​கள் என அனைத்​தும் ஆக.15-ல் மூடப்பட வேண்​டும். அறி​விப்பை மீறி மது விற்​பனை செய்​தால், மது​பானம் விற்​பனை விதி​களின்​படி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என ஆட்சி​யர் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். இவ்​வாறு அதில்தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

அந்த ஐரோப்பா பயணம் நம்மில் பெரும்பாலோர் புக்மார்க்கு மற்றும் பகல் கனவு கண்டிருக்கிறீர்களா? உங்கள் திட்டங்களை பின்னுக்குத் தள்ளிய உங்கள் கவலைகளில் ஒன்று பாதுகாப்பு என்றால், அந்த கவலைகளை ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது. உங்கள் அடுத்த பயணத்தில் மன அமைதிக்கு வணக்கம் சொல்லலாம்! ஐஸ்லாந்தின் பனிப்பாறை முத்தமிடப்பட்ட அமைதியானது முதல் போர்ச்சுகலின் வெயிலில் நனைத்த வீதிகள் வரை, ஐரோப்பாவின் பாதுகாப்பான நாடுகள் பூஜ்ஜிய மன அழுத்தத்துடன் அழகிய காட்சிகளை வழங்குகின்றன. (தரவு பாண்டாக்களிலிருந்து பெறப்பட்ட தரவு)பாதுகாப்பு என்பது கதவுகளை பூட்டுவது அல்லது ஸ்கெட்ச் சந்து வழிகளைத் தவிர்ப்பது மட்டுமல்ல, இது ஒரு வாழ்க்கை முறை, ஒரு மனநிலை மற்றும் உண்மையில் நீங்கள் எங்கிருந்தாலும் முக்கியமானது, குறிப்பாக நீங்கள் பயணம் செய்யும் போது. எனவே, பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட உலகளாவிய அமைதி குறியீடு (ஜிபிஐ), சமூக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள் மற்றும்…

Read More

கனடாவின் டொரண்டோ நகரில் வசிக்கும் ரேடியோ ஜாக்கியான ஆர்ஜே சாய், ஒரே நேரத்தில், ‘பிரெய்ன்’, ‘ஷாம் தூம்’ ஆகிய 2 திரைப் படங்களைத் தயாரிக்கிறார். இதில் ‘பிரெய்ன்’ படத்தை, விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார். இவர், ‘தாதா 87’, ‘பவுடர் ‘, ‘ஹரா’ படங்களை இயக்கியவர். ‘ஷாம் தூம்’ படத்தை நவீன்குமார் இயக்குகிறார். இந்த அறிவிப்பை தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆக.12-ம் தேதி சாய் வெளியிட்டார். ஆர்ஜே சாய் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சார்பில் இந்தப் படங்களைத் தயாரிக்கும் ஆர்ஜே சாய், ‘ஷாம் தூம்’ படத்தின் கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார். ஆர்ஜே சாய் இதுகுறித்து அவர் கூறும்போது , “கனடாவில் வாழ்ந்தாலும் தமிழ் திரைத்துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பது என் லட்சியம். இந்தப் படங்கள் வாயிலாக என்னுடைய பயணத்தைத் தொடங்குகிறேன். சிறந்த கதைகளைக் கொண்ட படங்களையும் திறமையான இளைஞர்களையும் எனது நிறுவனம் ஊக்குவிக்கும். பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி…

Read More

சென்னை: உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதன் ஒருதலைப் பட்​ச​மாக செயல்​படு​வ​தாக கூறி உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு வழக்​கறிஞ​ரான வாஞ்​சி​நாதன், அவருக்கு எதி​ராக உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு புகார் அனுப்​பி​யிருந்​தார். இதையடுத்து நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்​வு, இது தொடர்​பாக உயர் நீதி​மன்​றத்​தில் வாஞ்​சி​நாதனை நேரில் வரவழைத்து விசா​ரணை நடத்​தியது. இந்​நிலை​யில், வாஞ்​சி​நாதனுக்கு எதி​ரான நடவடிக்​கைகளை கைவிடக் கோரி உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி கே.சந்​துரு தலை​மை​யில் ஓய்வு பெற்ற நீதிப​தி​கள் சிலர் கூட்​டாக அறிக்கை வெளி​யிட்​டனர். இதையடுத்​து, நீதி​மன்​றத்​தின் அன்​றாட நடவடிக்​கை​களில் முன்​னாள் நீதிப​தி​கள் தலை​யீடு செய்​யக் கூடாது என தடை விதிக்க கோரி வாராகி என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​த​வா, நீதிபதி சுந்​தர்​மோகன் அமர்​வில் இந்த மனு மீதான விசா​ரணை நேற்று நடந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் ஜி.எஸ்​.மணி ஆஜராகி வாதிட்​டார். இதையடுத்து நீதிப​தி​கள், “நீ​தித்​துறை…

Read More