சென்னை: விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.பொதுவாக விமானங்கள் ஓடுதளத்தில் குறிப்பிட்ட தூரம் விரைவாக ஓடி அதன் பின்னரே மேலே எழும்பும். அதேபோல, வானில் இருந்து தரையிறங்கும்போதும் ஓடுதளத்தில் இறங்கி சற்று தூரம் சென்ற பின்னரே குறிப்பிட்ட இடத்தை வந்தடையும். இந்த நிலையில், விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் புதிய தொழில்நுட்பத்தை (Vertical Take-off & Landing – VTOL) சென்னை ஐஐடி விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் பி.ஏ.ராமகிருஷ்ணா, இணை பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனதரா, ஆராய்ச்சியாளர் அனந்து பத்ரன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.
Author: admin
சென்னை: பொறியியல் மாணவர்கள் ஆன்லைனில் நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி படிக்க. அ்ண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் (ஏ.சி.டெக்) செயல்படும் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி தொடர்பான குறுகிய கால படிப்பு நவ. 26 முதல் டிச. 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
புதுடெல்லி: ஜப்பானின் டோக்கியோ நகரில் டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனுயா பிரசாத் 241.1 புள்ளிகளுடன் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான பிரஞ்சலி பிரசாந்த் துமல் 236.8 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஈரானின் மஹ்லா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ 8 சிவிங்கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவுக்கு 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று தலைநகர் கேபரோனிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோக்கோலோடி தேசியப் பூங்காவுக்கு திரவுபதி முர்மு, அதிபர் துமா கிடியான் ஆகியோர் சென்றனர். தேசியப் பூங்கா பகுதியில் இருவரும், பாதுகாப்பு வாகனத்தில் வலம் வந்தனர்.
திருப்பதி: ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து 9 நாட்கள் வரை, அதாவது நவம்பர் மாதம் 25-ம் தேதி வரை பத்மாவதி தாயார் தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதனையொட்டி, நேற்று வைகானச ஆகம விதிகளின்படி, கோயில் முழுவதும் மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம், பன்னீர் போன்றவற்றால் கருவறை உட்பட உப சன்னதிகள், கொடிக்கம்பம், பலிபீடம், விமான கோபுரம் என அனைத்து இடங்களிலும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஆகம வல்லுனர்கள் கோயிலை சுத்தம் செய்தனர். அதன் பின்னர் நைவேத்தியம் படைத்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் மதியம் 12 மணிக்கு மேல் தாயாரை தரிசனம் செய்ய அனுமதித்தனர்.
ஓடிடி தளத்தில் நவம்பர் 21-ம் தேதி ‘பைசன்’ வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் ‘பைசன்’. ‘டியூட்’ படத்துடன் வெளியானாலும், நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது உலகளவில் ரூ.80 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளது. இதனிடையே இப்படம் நவம்பர் 21-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தொடர்ந்து 40-வது நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் கோவை மாவட்டத்தில் சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது எஸ்ஐஆர் பணிகள் குறித்து முதல்வர் விசாரித்தபோது, “அதிமுக பிஎல்ஏ2-க்கள் யாருமே களத்துக்கே வருவதில்லை. நமது நிர்வாகிகள் மிக தீவிரமாக பணிகளை செய்து வருகிறார்கள்” என நிர்வாகிகள் தெரிவித்தனர்.அதன்பின், “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக-வே வென்றது. ஆனால், இந்த முறை நிச்சயம் அதிமுக-வை வீழ்த்தி திமுக வெற்றி பெற வேண்டும். அரசின் சாதனைகளை தொகுதி முழுக்க விளம்பரப்படுத்த வேண்டும். மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உதவித் தொகை பெற கட்சியினர் உதவ வேண்டும்” என்று மண்டலப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பந்தநல்லூரில் அமைக்கப்பட்ட சாலையால், வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டாலும் அதன் சட்ட விதிகள் மாற்றப்படாமல் உள்ளது. மத்திய அரசு, சமானிய வணிகர்கள் பாதுகாக்கக்கூடிய வகையில் அந்தச் சட்டத்தை எளிமை படுத்த வேண்டும்.தமிழகத்தில் எந்த மூலையில் வணிகர்கள் பாதிக்கப்பட்டாலும், பேரமைப்பும், தமிழக முதல்வரும் உறுதுணையாக இருக்கின்றாோம். வணிகர்கள் பாதிக்கப்பட்டால், அவருக்கு தகவல் தருவதற்காக எங்களுக்கு தனி செல்போன் எண்ணை வழங்கி உள்ளார். வணிகர்கள் மீது போலீஸார், இடையூர் ஏற்படுத்தாமல், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதேபோல் வணிகர்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறு விக்கிரமராஜா கூறியுள்ளார்.
புதிய வளர்சிதை மாற்ற மருந்துகள் சிகிச்சை தேர்வுகள் மற்றும் பொது எதிர்பார்ப்புகளை மறுவடிவமைப்பதால் எடை நிர்வாகத்தை ஆதரிக்கும் சிகிச்சைகளில் ஆர்வம் வேகமாக வளர்ந்துள்ளது. Orforglipron, ஒரு வாய்வழி GLP-1 ஏற்பி அகோனிஸ்ட், ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது, ஏனெனில் இது செமகுளுடைட் மற்றும் டைர்ஸ்படைடு போன்ற ஊசி விருப்பங்களுக்கு மாத்திரை அடிப்படையிலான மாற்றீட்டை வழங்குகிறது. பல தனிநபர்கள் தினசரி பயன்பாட்டிற்கு வாய்வழி மருந்துகளை விரும்புகிறார்கள், குறிப்பாக நீண்டகாலமாக கடைபிடிப்பது அவசியம், மேலும் இது ஒரு பயனுள்ள GLP-1 சிகிச்சையானது ஊசி இல்லாமல் எவ்வாறு செயல்பட முடியும் என்பது பற்றிய பரவலான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. ஆரம்ப கட்ட 3 தரவு எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற மேம்பாடுகளுக்கான ஊக்கமளிக்கும் முடிவுகளை காட்டுகிறது, உடல் பருமன் பராமரிப்புக்கான அணுகக்கூடிய மற்றும் நெகிழ்வான அணுகுமுறைகள் பற்றிய அறிவியல், மருத்துவம் மற்றும் நுகர்வோர் உரையாடல்களின் மையத்தில் orforglipron வைப்பது. அதன் வருகை எதிர்கால சிகிச்சைகள் எவ்வாறு…
இந்த நன்றி தெரிவிக்கும் போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) உள்ள விண்வெளி வீரர்கள், அப்பல்லோ காலத்தில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய வான்கோழி சாலட்டைத் தாண்டி சிறப்பு விடுமுறை உணவை அனுபவிப்பார்கள். வான்கோழியுடன், அவர்கள் மட்டி, சிப்பிகள், நண்டு இறைச்சி, காடை, புகைபிடித்த சால்மன் மற்றும் பிற பக்கங்களிலும் விருந்துகளையும் சாப்பிடுவார்கள்.டைட்டஸ்வில்லில் உள்ள அமெரிக்க விண்வெளி அருங்காட்சியகத்தின் இயக்குனர் மார்க் மார்க்வெட், பூமியில் இருந்து 250 மைல்களுக்கு அப்பால் தனிமையில் வாழும் குழு உறுப்பினர்களுக்கு இதுபோன்ற உணவுகள் ஆறுதலையும், வீட்டின் உணர்வையும் தருவதாகக் கூறினார். “நீங்கள் பாட்டியின் பச்சை-பீன் கேசரோல் மற்றும் சுவையான திணிப்பைப் பிரதிபலிக்க முயற்சிக்கிறீர்கள்,” என்று அவர் கூறினார். புளோரிடா டுடே மேற்கோள் காட்டியபடி, “உணவு அல்லது காஸ்ட்ரோனமி மக்களை திருப்திப்படுத்தும் விதத்தில் இது மனிதநேய உணர்வைக் கொண்டுவருகிறது” என்று மார்க்வெட் கூறினார்.நார்த்ரோப் க்ரம்மன் சிக்னஸ் எக்ஸ்எல் விண்கலத்தை ஏற்றிச் செல்லும் ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் மூலம்…
