Author: admin

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம். சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங்குக்கு வரும் தேவாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்). தனது நண்பனின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை துப்பறியத் தொடங்கும் தேவாவுக்கு மிகப் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனான சைமன் (நாகர்ஜுனா) பற்றியும், அவரது வலது கரமாக…

Read More

கடலூர்: கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் சிட்டி கிளீன் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் தற்காலிக தூய்மை பணியாளர்கள், தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 350-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மூன்று மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை இன்று (ஆக.14) காலையில் முற்றுகையிட்டு தற்காலிக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ரூ.240 என்ற அளவில் குறைந்த சம்பளமே வழங்குகிறார்கள் எனவும் அதையும் முறையாக வழங்காமல் அடிமை போல் நடத்துகிறார்கள். பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தாங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை கேட்டால் அவதூறாக திட்டுவதாகவும், சம்பளம் கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அனைத்து தற்காலிக தூய்மை…

Read More

பயணம் புதிய இடங்களை ஆராய்வதற்கும், வெவ்வேறு கலாச்சாரங்களை அனுபவிப்பதற்கும், நீடித்த நினைவுகளை உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு, இது ஒழுங்கற்ற உணவு நேரங்கள் மற்றும் செயல்பாட்டு மட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் முதல் மருந்துகளை நிர்வகித்தல் மற்றும் அறிமுகமில்லாத உணவுகளை கையாள்வது வரை தனித்துவமான சவால்களையும் கொண்டுவருகிறது. நீங்கள் தயாராக இல்லை என்றால் இந்த காரணிகள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை எளிதில் சீர்குலைக்கும். நல்ல செய்தி என்னவென்றால், ஸ்மார்ட் திட்டமிடல் மற்றும் சில எளிய முன்னெச்சரிக்கைகள் மூலம், நீங்கள் பாதுகாப்பாக பயணம் செய்யலாம் மற்றும் உங்கள் பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்கலாம். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) மற்றும் என்ஐஎச் இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்கவும், இரத்த சர்க்கரையை திறம்பட நிர்வகிக்கவும் பயணம் செய்வதற்கு முன் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இந்த 7 நீரிழிவு பாதுகாப்பு சோதனைகள் இல்லாமல்…

Read More

புதுடெல்லி: ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தீர்ப்பை வழங்கியது. அதில், “ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன்…

Read More

பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி, தமிழில் நேரம், ரிச்சி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் ‘மகாவீர்யர்’ என்ற பான் இந்தியா படத்தைத் தயாரித்து, நடித்தார். கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் ஷம்நாஸ், நிவின் பாலி, படத்தின் இயக்குநர் எப்ரிட் ஷைன் ஆகியோருக்கு எதிராக வைக்கம் நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஆக்ஷன் ஹீரோ பைஜூ 2′ என்ற படத்தின் வெளிநாட்டு உரிமைக்காக, ரூ.1.90 கோடி கொடுத்ததாகவும், தனக்குத் தெரியாமல் படத்தின் உரிமையை நிவின் பாலியும், எப்ரிட் ஷைனும் வேறு ஒருவருக்கு ரூ.5 கோடிக்கு விற்று விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிவின் பாலி, எப்ரிட் ஷைன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து நிவின் பாலி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி வி.ஜி.அருண், இந்த பண மோசடி வழக்கு…

Read More

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். முன்னதாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்துக்கு அதிமுக, சிபிஎம், தேமுதிக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 முடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார். அப்போது அவர், “தூய்மை பணியாளர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி கரிசனத்துடன் இருக்கிறார். தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது.தூய்மை பணியாளர்களின் நலவாரியம் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளது.” என்று கூறினார்.…

Read More

ஒரு நடப்பட்ட மீன்வளம் அழகாக இருப்பது மட்டுமல்லாமல், தொட்டியில் இயற்கையான சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது, இதனால் உங்கள் செல்லப்பிராணி மீனின் நல்வாழ்வை ஊக்குவிக்கிறது. அதை அமைத்து சரியான மீன்களைத் தேர்வுசெய்ய எளிய 10-படி வழிகாட்டியை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More

பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘தி ராஜா சாப்’. மாருதி இயக்கியுள்ள ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை, பியூப்பிள் மீடியா பேக்டரி, டில்லியை சேர்ந்த ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. “ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் படத்தை முடித்து வெளியிடுவது, நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் வெளிப்படைத் தன்மை உள்பட பல்வேறு விஷயங்களில் பியூப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் ஒப்பந்தத்தை மீறிவிட்டது. இதனால் இந்தப் படத்துக்காக நாங்கள் முதலீடு செய்த ரூ.218 கோடியை 18 சதவிகித வட்டியுடன் தர உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளது. இதனால் ‘த ராஜா சாப்’ படம் திட்டமிட்டபடி வெளிவருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Read More

சொத்து வரி முறைகேடு வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதால், சட்ட சிக்கல் காரணமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடிக்கு மேயர் இந்திராணி உள்ளாகியுள்ளார். மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் திடீர் திருப்பமாக திமுக மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைதாகியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திராணி மேயராக இருந்தாலும், இதற்கு முன்பு அரசியலில் இல்லை. இதனால் தனது கணவர் வழிகாட்டுதலோடு மாநகராட்சி நிர்வாகத்தை நடத்தி வந்தார். கட்சி ரீதியாக பொன்.வசந்த் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாக தலையிட முடியாத சூழல் நிலவியது. எனினும், இந்திராணி மேயராக பணியை தொடர்ந்தார். தற்போது பொன்வசந்த் கைதானதால், தொடர்ந்து மேயராக செயல்படுவதில் இந்திராணி பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. தனிநபராக மாநகராட்சி நிர்வாகத்தையும், அரசியல் அனுபவம் கொண்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மூத்த கவுன்சிலர்கள், மாநகர கட்சி நிர்வாகிகளை அவர் எதிர்கொள்வது சிரமம். அவர் தனிப்பட்ட முறையில்…

Read More

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அபராதம் விதித்தல் தொடர்பாக விளக்கம் கேட்டு கோவை மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருவதற்கு தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத்துறை சார்ந்த நிறுவனத்தினர் செலுத்தி வரும் வரியினங்கள் மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி என இருபிரிவுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தொழில்துறையினர் கூறி வரும் நிலையில் சமீப காலமாக புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்கத்தின்(டான்சியா) துணை தலைவர் சுருளிவேல், ‘டாக்ட்’ மாவட்ட தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம்…

Read More