சென்னை: தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி சிபிஐ(எம்) சார்பில் இன்று (வியாழக்கிழமை) மாலை சென்னையில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணி நிரந்தரம், தனியார்மய எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய தூய்மை பணியாளர்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வெவ்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இரவோடு இரவாக காவல்துறை நடத்திய இந்த ‘அப்புறப்படுத்துதல்’ முற்றிலும் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பானது மட்டுமல்ல, மனித உரிமை மீறலுமாகும். ஒரு ஜனநாயக நாட்டில் தங்களுடைய கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் போராடுகிற போது காவல்துறை, நீதிமன்றம், நிர்வாகம் இவற்றின் அணுகுமுறையும் அரசின் அணுகுமுறையும் எளிய மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்; சட்டத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். ஆனால், இந்த பிரச்சனையில் மேற்கண்ட அனைத்து அரசு அமைப்புகளும்…
Author: admin
உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி செய்ததைப் போலவே நீங்கள் அதே பருப்பு, சப்ஜி மற்றும் ரோட்டி ஆகியவற்றை சாப்பிட்டாலும், நவீன வாழ்க்கை முறைகள், பிஸியான கால அட்டவணைகள் மற்றும் உணவு தரத்தில் ஏற்படும் மாற்றங்கள் பல இந்தியர்கள் இன்னும் சோர்வாகவும், மனநிலையுடனும், அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சவுத்ரி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் இடுகையில் பகிர்ந்து கொண்டார், “எங்கள் நானிஸ் மற்றும் அப்படிஸுக்கு கூடுதல் தேவையில்லை, சரியானதா? ஆனால் நாங்கள் நிச்சயமாக செய்கிறோம். உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி செய்ததைப் போலவே நீங்கள் அதே பருப்பு, சப்ஜி மற்றும் ரோட்டி சாப்பிட்டாலும், நீங்கள் இன்னும் சோர்வாக இருக்கிறீர்கள், மனநிலை மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், ஆரோக்கியமானதல்ல என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.ஒரு பாரம்பரிய உணவைப் பின்பற்றினாலும், இன்றைய ஊட்டச்சத்து இடைவெளிகள் உணவில் இருந்து மட்டும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பெறுவது கடினம் என்று அவர் விளக்குகிறார்.…
கொடைக்கானலில் சாலையோரம் நிறுத்தப்பட்ட ஜீப்பை அகற்றாமல் சாலை அமைத்தது நகராட்சி மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சிய போக்கே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் (பேட்ஜ் ஒர்க்) பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில், சாலையோரம் நிறுத்தப்பட்ட ஜீப் அகற்றாமல் அப்படியே சாலை அமைக்கப்பட்டது. இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. சாலை அமைக்கும் பணிக்காக வந்த ஊழியர்கள், ஜீப்பின் உரிமையாளரை தேடியதாகக் கூறப்படுகிறது. அவர் கிடைக்காததால் வேறு வழியின்றி ஜீப்பை அகற்றாமல் சாலையை அமைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, சாலை அமைக்கும் பணி தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் அந்த ஜீப்பை…
மூல தக்காளி ஒரு சமையலறை பிரதானத்தை விட அதிகம்; அவை ஒரு ஊட்டச்சத்து அதிகார மையமாகும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பல வழிகளில் ஆதரிக்க முடியும். வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் லைகோபீன் போன்ற அத்தியாவசிய தாதுக்களால் நிரம்பியிருக்கும் மூல தக்காளி உடலுக்கு பரந்த அளவிலான நன்மைகளை வழங்குகிறது. வழக்கமான நுகர்வு இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலமும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமும், அவற்றின் ஃபைபர் உள்ளடக்கத்திற்கு நன்றி செலுத்துவதன் மூலமும், சில புற்றுநோய்கள் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கவும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க முடியும்.இரும்பு நிறைந்த 6 உணவுகள்உள் ஆரோக்கியத்திற்கு அப்பால், மூல தக்காளியில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்களும் சருமத்திற்கு பயனளிக்கின்றன, இது ஆரோக்கியமான பளபளப்பையும் வயதானவர்களின் போர் அறிகுறிகளையும் பராமரிக்க உதவுகிறது. அவற்றின் இயற்கையான நீரேற்றம் மற்றும் குறைந்த கலோரி சுயவிவரம் ஆகியவை ஊட்டச்சத்தை மேம்படுத்தும் போது எடையை பராமரிக்க…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம். சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங்குக்கு வரும் தேவாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்). தனது நண்பனின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை துப்பறியத் தொடங்கும் தேவாவுக்கு மிகப் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனான சைமன் (நாகர்ஜுனா) பற்றியும், அவரது வலது கரமாக…
கடலூர்: கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் சிட்டி கிளீன் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் தற்காலிக தூய்மை பணியாளர்கள், தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 350-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மூன்று மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை இன்று (ஆக.14) காலையில் முற்றுகையிட்டு தற்காலிக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ரூ.240 என்ற அளவில் குறைந்த சம்பளமே வழங்குகிறார்கள் எனவும் அதையும் முறையாக வழங்காமல் அடிமை போல் நடத்துகிறார்கள். பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தாங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை கேட்டால் அவதூறாக திட்டுவதாகவும், சம்பளம் கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அனைத்து தற்காலிக தூய்மை…
பயணம் புதிய இடங்களை ஆராய்வதற்கும், வெவ்வேறு கலாச்சாரங்களை அனுபவிப்பதற்கும், நீடித்த நினைவுகளை உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு, இது ஒழுங்கற்ற உணவு நேரங்கள் மற்றும் செயல்பாட்டு மட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் முதல் மருந்துகளை நிர்வகித்தல் மற்றும் அறிமுகமில்லாத உணவுகளை கையாள்வது வரை தனித்துவமான சவால்களையும் கொண்டுவருகிறது. நீங்கள் தயாராக இல்லை என்றால் இந்த காரணிகள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை எளிதில் சீர்குலைக்கும். நல்ல செய்தி என்னவென்றால், ஸ்மார்ட் திட்டமிடல் மற்றும் சில எளிய முன்னெச்சரிக்கைகள் மூலம், நீங்கள் பாதுகாப்பாக பயணம் செய்யலாம் மற்றும் உங்கள் பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்கலாம். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) மற்றும் என்ஐஎச் இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்கவும், இரத்த சர்க்கரையை திறம்பட நிர்வகிக்கவும் பயணம் செய்வதற்கு முன் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இந்த 7 நீரிழிவு பாதுகாப்பு சோதனைகள் இல்லாமல்…
புதுடெல்லி: ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தீர்ப்பை வழங்கியது. அதில், “ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன்…
பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி, தமிழில் நேரம், ரிச்சி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் ‘மகாவீர்யர்’ என்ற பான் இந்தியா படத்தைத் தயாரித்து, நடித்தார். கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் ஷம்நாஸ், நிவின் பாலி, படத்தின் இயக்குநர் எப்ரிட் ஷைன் ஆகியோருக்கு எதிராக வைக்கம் நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஆக்ஷன் ஹீரோ பைஜூ 2′ என்ற படத்தின் வெளிநாட்டு உரிமைக்காக, ரூ.1.90 கோடி கொடுத்ததாகவும், தனக்குத் தெரியாமல் படத்தின் உரிமையை நிவின் பாலியும், எப்ரிட் ஷைனும் வேறு ஒருவருக்கு ரூ.5 கோடிக்கு விற்று விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிவின் பாலி, எப்ரிட் ஷைன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து நிவின் பாலி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி வி.ஜி.அருண், இந்த பண மோசடி வழக்கு…
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். முன்னதாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்துக்கு அதிமுக, சிபிஎம், தேமுதிக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 முடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார். அப்போது அவர், “தூய்மை பணியாளர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி கரிசனத்துடன் இருக்கிறார். தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது.தூய்மை பணியாளர்களின் நலவாரியம் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளது.” என்று கூறினார்.…