Author: admin

பள்ளி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்கத் தவறியவர்கள், கோடை விடுமுறையில் அதை செய்து முடிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற திட்டத்தின் கீழ் 2024-25-ம் கல்வியாண்டில் ஜூன் மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு மேற்கொள்ளுதல், 5 முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது பயின்று வரும் மாணவர்கள் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருந்தால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்கள் அருகில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு முகாம்கள்…

Read More

சென்னை: இந்தியாவில் ரியல்மி 14T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இது மிட்-செக்மென்ட் ரேஞ்ச் விலை பிரிவு போனாக சந்தையில் வெளிவந்துள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. சமயங்களில் ப்ரீமியம் ரக போன்களையும் வெளியிடும். ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது இந்தியாவில் ரியல்மி 14T 5ஜி போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 14 சீரிஸ் போன்களில் ஒன்றாக வெளிவந்துள்ளது. கடந்த ஜனவரியில் ரியல்மி 14 புரோ+ போன் அறிமுகமானது. ரியல்மி 14T: சிறப்பு…

Read More

புதுடெல்லி: “ஒருவேளை நமக்கு பிரதமர் மோடி தேவை இல்லையென்றால், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை சொல்லுங்கள்” என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு இளையராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த அனைத்து பிரதமர்களின் பெயர்களையும் எழுதுங்கள். மவுன்ட்பேட்டன் ஆட்சிகாலத்தில் இருந்து அவர்கள் அனைவரும் தங்களுடைய ஆட்சிகாலத்தில் இந்தியாவுக்காக என்ன செய்தார்கள் என்று பாருங்கள். இன்னொரு பக்கம் பிரதமர் மோடிக்காக ஒரு பட்டியலையும் தயார் செய்யுங்கள். அப்போது வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள். 1988ஆம் ஆண்டு நான் முதல்முதலில் காசிக்கு சென்றபோது அது சிறுநீர் கழிக்கும் ஒரு இடம்போல காட்சியளிக்கும். ஆனால் இப்போது அது முற்றிலுமாக மாறிவிட்டது. இதை யார் செய்தது? கங்கை நதி மிகவும் சுத்தமான நீர். அதில் மக்கள் அசுத்தங்களை செய்து கொண்டிருந்தனர். அவர்தான் சரியான திட்டமிடலுடன் அதை சரிசெய்தார். இன்னும் அதற்கான வேலை நடந்து கொண்டு…

Read More

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்புடையவர்கள், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இதன்படி 121-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் நாட்டு மக்கள் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்தில் அனைத்து இந்தியர்களும் பங்கெடுத்து உள்ளனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பான படங்களை பார்க்கும்போது நாட்டு மக்கள் அனைவரின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. இந்த தாக்குதல் தீவிரவாதிகளின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துகிறது. காஷ்மீரில் அமைதி திரும்பி கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன. வரலாறு காணாத வேகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனநாயகம் ஆழமாக வேரூன்றத்…

Read More