பாட்னா: பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து வெளியேறுவது குறித்து தான் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ் அணி) தலைவரான சிராக் பாஸ்வான் மாநில அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அவரது கட்சியின் செயல்பாடும், அவரின் பேச்சும் அதை வெளிப்படுத்தின. விரைவில் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அவரது அரசியல் நகர்வு மாநிலம் சார்ந்து இருக்கலாம் என கருதப்பட்டது. இந்தச் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவரது கட்சி வெளியேறப் போவதாக தகவல் வெளியானது. தற்போது அதை சிராக் பாஸ்வான் மறுத்துள்ளார். “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்னை விலக்கி வைக்கும் நோக்கில் இது மாதிரியான தகவல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.…
Author: admin
சென்னை: பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு அமைச்சுப்பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி டெட் தேர்ச்சி பெற்ற 151 அமைச்சுப் பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலமாக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அவர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு பணி விடுவிப்பு செய்யும்போது பட்டதாரி ஆசிரியர் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவர்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பிற மாநில ஆவணங்களாக இருந்தால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இல்லை என்பதை உறுதி…
சென்னை: சென்னை மாநகரில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 20 ஆயிரம் பேரை நாய்கள் கடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவலால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், நாய்க்கடி சம்பவங்களை தடுக்க திட்டம் வகுத்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளனர். சென்னையில் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் ராட்வீலர் நாய்களும், தெருநாய்களும் சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களை கடித்துக் குதறிய சம்பவங்களையடுத்து, நாய்களை கட்டுப்படுத்தக் கோரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான ஆர்.எஸ். தமிழ்வேந்தன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘தெருக்களில் வாய்மூடி அணிவிக்காமல் அழைத்துச் செல்லப்படும் ராட்வீலர் போன்ற வளர்ப்பு நாய்களையும், ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் தெருநாய்களையும் பிடித்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சியின் முதன்மை கால்நடைத் துறை அதிகாரியான ஜெ.கமால்…
ஹைதராபாத்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு நல்கொண்டா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. தெலங்கானா மாநிலம், நல்கொண்டாவில் கடந்த 2013-ம் ஆண்டு, வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்த 12 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மொஹம்மி முகர்ணம் என்கிற 35 வயது நபர், வீட்டில் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரை கொலை செய்து, வீட்டின் அருகே உள்ள ஒரு கால்வாயில் வீசி சென்றுவிட்டார். அதன் பிறகு உடல் ஒரு ஏரிக்கரையில் ஒதுங்கியது. இதனை தொடர்ந்து, பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நல்கொண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்து நல்கொண்டா போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவ்வழக்கு சுமார் 12 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், நேற்று இவ்வழக்கை விசாரணை செய்த போக்சோ நீதிமன்ற நீதிபதி ரோஜா ரமணி, குற்றவாளி மொஹம்மி முகர்ணத்திற்கு தூக்கு தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும்…
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளான ஆக.17-ம் தேதி, தமிழர் எழுச்சி நாளாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருமாவளவனின் 63-வது பிறந்தநாளை சென்னை, காமராஜர் அரங்கில் ஆக.16-ம் தேதி (நாளை) கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக.16-ம் தேதி மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை விழா நடைபெறவுள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு ஸ்டீபன் ராயல் குழுவினரின் இசைப்பாய்ச்சல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு ஜாஹிர் உசேன் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, ‘மதச்சார் பின்மை காப்போம்’ தலைப்பில் கவியரங்கம் நடைபெறும். இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம்பன், தஞ்சை இனியன், அருண் பாரதி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்கேற்கின்றனர். விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வரவேற்புரையாற்றுகிறார். வாழ்த்தரங்கம் இரவு 11 மணிக்குத் தொடங்குகிறது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்…
புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் உயிரிழந்த மற்றும் நிரந்தரமாக புலம்பெயர்ந்த 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மாலா பாக்சி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: பிஹார் வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. அப்படியானால் இந்த தகவல் பூத் மட்டத்தில் தெரிவிக்காதது ஏன்? எனவே, நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் மற்றும் அவர்களை…
மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 25 வயதாகும் இடதுகை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் 2021 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முதல்தர கிரிக்கெட்டில் கோவா அணிக்காக 2022-ம் ஆண்டு அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர், முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான சானியா சந்தோக்கிற்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருதரப்பையும் சேர்ந்த மிகவும் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். ரவி காய் குடும்பம் ஹோட்டல் மற்றும் உணவுத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இன்டர் கான்டினென்டல் ஹோட்டல் மற்றும் ஐஸ்கிரீம் பிராண்டான புரூக்ளின் க்ரீமரியின் குறிப்பிடத்தக்க உரிமையைக் கொண்டுள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்றுள்ள சானியா சந்தோக், கால்நடை தொழில்நுட்பத்தில் பட்டயப்…
சென்னை ராயப்பேட்டையில் மேன்சன் நடத்தி வரும் தேவாவுக்கு (ரஜினிகாந்த்), தனது நண்பன் ராஜசேகர் (சத்யராஜ்), விசாகப்பட்டினத்தில் மரணமடைந்திருப்பது தெரிய வருகிறது. இறுதி அஞ்சலி செலுத்த அங்கு செல்லும் தேவாவுக்கு, ராஜசேகரின் மரணம், இயற்கையானதல்ல என்பது புரிகிறது. அதற்கு, கடத்தல் தொழில் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சைமனும் (நாகார்ஜுனா) அவனுடைய வலது கை, தயாளனும் (சவுபின் சாஹிர்) காரணமாக இருக்கிறார்கள். அவர்களைத் தேவா என்ன செய்கிறார்? தேவாவுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு, சைம னுக்கும் தேவாவுக்குமான முன் கணக்கு என்ன? என்பது கதை. ஒரு கமர்ஷியல், ஆக் ஷன் மசாலா படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ, அது அனைத்தையும் பக்காவாக கலந்து, தனது முந்தைய படங்களைப் போலவே ‘கூலி’யையும் கொடுத்திருக்கிறார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். லாஜிக்கைதூர வைத்துவிட்டு, அவர் படங்களில் வரும் ரசனையான பழைய ஹிட் பாடல்கள், மிரட்டலான சண்டைக் காட்சிகள், ஏராளமான துணை நடிகர்கள், முன் பின்னான கதை சொல்லல்…
சென்னை:உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலி்ன்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தவும், இந்த தி்ட்டங்கள் தொடர்பான அரசின் விளம்பரங்களில் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் போன்ற திமுக சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தடை கோரி அதிமுக வழக்கறிஞர் இனியன், வழக்கறிஞர் எம்.சத்யகுமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி…
டாக்டர் வில்லியம் லி புற்றுநோய் தடுப்பில் உணவுத் தேர்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார், சில உணவுகள் புற்றுநோய் உயிரணுக்களை பட்டினி கிடக்கும் என்பதை வலியுறுத்துகிறது. காபி, தேநீர், பிராசிகா காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் ஒமேகா -3 நிறைந்த கடல் உணவு ஆகியவை அவற்றின் அழற்சி எதிர்ப்பு மற்றும் இரத்த வழங்கல் வெட்டும் பண்புகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த உணவுகளை உணவில் இணைப்பது பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம். உலகளவில் மரணத்திற்கு புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாகும். 2020 ஆம் ஆண்டில், புற்றுநோய் கிட்டத்தட்ட 10 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுத்தது, இது ஆறு இறப்புகளில் ஒன்றாகும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல காரணிகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் அதே வேளையில், WHO கூறுகிறது, 30% மற்றும் 50% புற்றுநோய்கள் தடுக்கக்கூடியவை. புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறை மாற்றம், சரியான உணவுகளை சாப்பிடுவதாகும்.…